ஆடியன்சின் எதிர்பார்ப்புக்கு ஏற்றது போல, அவர்களுக்குப் பிடித்த மாதிரி படம் எடுத்து வெற்றி பெறுவது ஒரு வகை. ட்ரெண்டு பற்றியெல்லாம் கவலைப் படாமல் தன்னிஷ்டம் போலப் படம் எடுத்து, பார்ப்பவர்களை ரசிக்க வைப்பது மற்றொரு வகை.
வெங்கட் பிரபுவின் படங்கள் இதிலே இரண்டாவது ரகம்.
சரோஜா.
வெங்கட் பிரபுவின் முதல் வெற்றி தற்செயலானது அல்ல என்பதை இப்படம் அழுத்தமாக நிரூபித்திருக்கிறது.
ஒரிசாவில் இருந்து சரக்கேற்றிக் கொண்டு கிளம்பும் மித்தல் கெமிக்கல்ஸ்ஸின் டேங்கர் லாரி, ஹைவே யில் விபத்துக்குள்ளாக, அதனால், அந்த வழியாக இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மாட்ச் பார்க்க, ஹைதராபாத் செல்லும் நாலு பேர் கொண்ட நண்பர் குழு, மாற்று பாதை மூலமாக ஹைதராபாத் செல்ல முயலும் போது, கோடீசுவரர் பிரகாஷ்ராஜின் மகளைக் கடத்தி வைத்துப் பணம் பறிக்க முயலும் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.
தமிழ்ச் சினிமா பார்க்கும் வழக்கம் கொண்டவர்கள், இறுதியிலே என்ன நடந்தது என்பதை ஊகித்துக் கொள்வார்கள்.
வினோதமான சைன்ஸ் பிராஜெக்ட்டுகளை மகளுக்குச் செய்து தரும் ஜெகபதிபாபு ( எஸ்.பி.சரண்) தான் குழுவிலேயே சீனியர். அவரது தம்பி காதல் தியாகி ராம்பாபு (வைபவ்), சீரியல் ஆர்ட்டிஸ்ட் அஜய்ராஜ் ( மிர்ச்சி ஷிவா), சமயசந்தர்ப்பமில்லாமல் சதா ஜோக்கடிக்கும் கணேஷ் ( பிரேம்ஜி)ஆகிய நால்வர் கூட்டணி படம் முழுக்க செய்யும் செய்யும் அட்டகாசங்கள், அரங்கை அதிர வைக்கின்றன.
இந்த நண்பர்கள், பாலியகாலத்தில் கமர்க்கட்டை காக்காகடி கடித்து, செபியா டோனில், ‘அறியாத வயசு… புரியாத மனசு’ என்று தொண்டை அடைக்கப் பாடிய நண்பர்கள் அல்ல. பிற்காலத்தில், தொழில் நிமித்தம் சந்தித்து , ஒன்றாக டென்னிஸ் விளையாடி, பியர் குடித்த நண்பர்களாக இருக்ககூடும். ஒருத்தரை ஒருத்தர் சார் என்று (தான்) விளிக்கும் நட்பு. எக்கச்சக்கமான சந்தர்ப்பங்களில் மட்டும் ‘டேய்’.
பிற படங்களில் சொதப்பும் பிரேம்ஜி, தமையன் கைகளில் ஜொலிக்கிறார். ‘ இக்கட்டான சூழ்நிலையில், மனைவியின் புகைப்படத்தைப் பார்த்து செண்டிமெண்டாக புலம்பும் சரணிடம், ‘ யாரு சார் இந்த ஃபிகர்?” என்று கேட்கும் இடம் 10000 வாலா சரம். படத்தில், எல்லாரையும் தூக்கிச் சாப்பிடுபவர், எஸ்.பி.சரண். சும்மா சொல்லக்கூடாது. பின்னுகிறார். நாலுபேரும் மானாவாரியாகக் கலாய்க்கிறார்கள், தங்களையும், பாரதிராஜாவையும் 🙂 அரங்கில் சதா சிரிப்பலை.
சாதா கதை, சாமர்த்தியமான திரைக்கதை. விறுவிறுப்பான எடிட்டிங். பத்திக்கிற மாதிரி ஒளிப்பதிவு. இந்தப்பக்கம் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. அந்தப்பக்கம் நிதிதாவில் கலக்கலான டான்ஸ். எந்தவிதமான இண்டலெக்சுவல் பாவனையும் கிடையாது. இதுதான் சரோஜாவின் ஃபார்முலா.
நிச்சயமா பார்க்கலாம்.
அப்படிங்கிறீங்க.. பார்த்துட்டா போச்சு..
சூப்பர் விமர்சனம். நன்றி பிரகாஷ்
aha.. expectation adhigarichuruchey..first lucky then neenga.. indhapadamelaam indha pakkam varadhey 😦
சாதா படங்களையெல்லாம் சிட்னியில் போடுபவர்கள் சரோஜா போல சரக்குகளை மட்டும் போட மாட்டாங்க. டிவிடிக்கு காத்திருக்கணும்.
கலக்கல் விமர்சனம். வெங்கட் பிரபு மேல் எனக்கு எப்போதுமே கனிவு இருக்கும், இந்த இளைஞருக்கு நல்ல வாய்ப்புக்கள் வரவில்லையே என்று. காலம் கடந்து கனிந்திருக்கிறார்.
/ஒரிசாவில் இருந்து சரக்கேற்றிக் கொண்டு கிளம்பும் மித்தல் கெமிக்கல்ஸ்ஸின் டேங்கர் லாரி, ஹைவே யில் விபத்துக்குள்ளாக, அதனால், அந்த வழியாக இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மாட்ச் பார்க்க, ஹைதராபாத் செல்லும் நாலு பேர் கொண்ட நண்பர் குழு, மாற்று பாதை மூலமாக ஹைதராபாத் செல்ல முயலும் போது, கோடீசுவரர் பிரகாஷ்ராஜின் மகளைக் கடத்தி வைத்துப் பணம் பறிக்க முயலும் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.
தமிழ்ச் சினிமா பார்க்கும் வழக்கம் கொண்டவர்கள், இறுதியிலே என்ன நடந்தது என்பதை ஊகித்துக் கொள்வார்கள்.
வினோதமான சைன்ஸ் பிராஜெக்ட்டுகளை மகளுக்குச் செய்து தரும் ஜெகபதிபாபு ( எஸ்.பி.சரண்) தான் குழுவிலேயே சீனியர். அவரது தம்பி காதல் தியாகி ராம்பாபு (வைபவ்), சீரியல் ஆர்ட்டிஸ்ட் அஜய்ராஜ் ( மிர்ச்சி ஷிவா), சமயசந்தர்ப்பமில்லாமல் சதா ஜோக்கடிக்கும் கணேஷ் ( பிரேம்ஜி)ஆகிய நால்வர் கூட்டணி படம் முழுக்க செய்யும் செய்யும் அட்டகாசங்கள், அரங்கை அதிர வைக்கின்றன. /
நாலு நண்பர்கள் & பாதை தடைப்படுதல் என்று சொல்லும்போது, இன்னொரு படம் ஞாபகம் வந்தது (நானும் ஈரான் படம் பார்க்கிறேன் ;-))
Men at work
//சூப்பர் விமர்சனம். நன்றி பிரகாஷ்//
repeetu!!!
//சாதா படங்களையெல்லாம் சிட்னியில் போடுபவர்கள் சரோஜா போல சரக்குகளை மட்டும் போட மாட்டாங்க. டிவிடிக்கு காத்திருக்கணும்.// Same here in Dubai.
After a long time your post coming with a movie review which says ‘goodmovie’. (dont know If i am right) the last one is ‘adipoli’ for CH28. 🙂