‘வாழ்க்கை என்பது, அண்ணாநகர் மாதிரி. போகவேண்டிய இடத்துக்கான வழி குழப்பியடிக்கும். அச்சப்படத்தேவை இல்லை. ஏனெனில் எந்த சந்திலே புகுந்தாலும், இறுதியில் மெயின் ரோட் வந்து விடும்’
இது போல அவ்வப்போது உதிக்கும் தத்துவங்களைப் பகிர்ந்து கொள்ள அருகாமையில் ஆட்கள் இல்லாதபடியால், இருந்த ஆட்களும் இனிமே சகித்துக் கொள்ள முடியாது என்று போர்க்கொடி உயர்த்தியதால், வேறு வழியில்லாமல் இந்த வலைப்பதிவு.
எனக்கும் எழுத வரும் என்று நம்பிய காலங்களில், சிரத்தையுடன் எழுதி, கல்கியிலும், அவள் விகடனிலும், அமுதசுரபியிலும் தலா ஒரு கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது. எழுதுவதற்குத் மொழிவளம், கற்பனை ஆகியவற்றை மீறி, டிசிப்ளின் என்ற ஒரு வஸ்து இருக்கவேண்டும் என்று லேட்டாகத்தான் புரியவே, அந்தப் பக்கமெல்லாம் அதிகம் செல்வதில்லை.
6 வயதில் இருந்து சென்னை வாசம். சுத்தமான சென்னைக்காரன்.படித்த கணிணியியலுக்குத் தொடர்பில்லாத சொந்தத் தொழில்.
சினிமா பார்ப்பதிலும், புத்தகங்கள் படிப்பதிலும், தொழிலை விருத்தி செய்யும் முயற்சிகளிலுமாகக் கழியும் சாதாரண வாழ்க்கை.
‘அபவுட்டு’ பக்கத்திலே வேற என்ன எழுதணும்?
‘அபவுட்டு’ பக்கத்திலே வேற என்ன எழுதணும்?
உங்கக் குடும்ப படம் போடணும், நாய்(கள்) வளர்த்தா வளர்க்கும் நாய்(கள்) படம் போடணும் :).
முடிஞ்சா flickr பக்கங்களுக்கு லிங்க் தரணும் :).
‘இது போல அவ்வப்போது உதிக்கும் தத்துவங்களைப் பகிர்ந்து கொள்ள அருகாமையில் ஆட்கள் இல்லாதபடியால்’
a valid reason for getting married than for starting a blog:)
தன்னடக்கம் உங்களுக்கு ஜாஸ்தி தாங்க.
Ethu enna thamsu thalaiva