தெகிடி

Thegidi | source: onlykollywod.com
Thegidi | source: onlykollywod.com

தெகிடி.

விமர்சனங்கள் படிக்கவில்லை. கதை தெரியாது. சும்மா போய் உட்கார்ந்தேன். இனிய ஆச்சர்யம்.

சுபா / ராஜேஷ்குமார் மாதநாவல் டைப்பிலே துப்பறியும் கதை. ஆனால் neat execution. நாயகன் , நாயகி சந்திக்கிற தருணங்கள், அவங்களுக்குள்ளான உரையாடல்கள் எல்லாம், close to reality என்பார்களே அந்த ரகம். “என்னடா காமிக்கிறீங்க எங்க கிராமங்களை?” ன்னு பாரதிராசா பொங்கிப் புறப்பட்டாரே முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், அந்த மாதிரி உள்ளதை உள்ளபடிச் சொல்வோம்னு சுவாரசியமான கதைகளோட நம்ம அக்கம் பக்கம் வீடுகளிலேயிருந்தெல்லாம் பசங்க கிளம்பி வராய்ங்க.. சந்தோஷமாக இருக்கிறது.

டைட்டிலின் வரைகலை தொடங்கி, இறுதியிலே ட்விஸ்ட்டுடன் கூடிய open ended climax வரை கொஞ்சம் கூடத் தொய்வில்லாமல் செமை வேகம்.

ஆனாலும் படத்திலே என்னமோ இடிக்கிறது. என்ன என்று மண்டையைக் குடைந்து கொண்டிருந்தேன்.

Casting.

போன வாரம் தொலைக்காட்சியிலே, முதல்முறையாக ஏ.ஆர்.முருகதாஸின் தெலுங்கு ரமணாவைப் பார்த்தேன். ஒரு மொழியில பார்த்த படத்தை , இன்னொரு மொழியில பார்க்கும் போது யார் யார் எந்த எந்த ரோலை செஞ்சிருப்பாங்கன்னு யூகிக்கிற விளையாட்டு எனக்குப் புடிக்கும். யூகிசேது ரோலிலே யார்னு ஆவலோட காத்திருந்தேன்.

பிரகாஷ்ராஜ்.

அடச்சே…ன்னு ஆயிடுச்சு.

தமிழ்ல அந்த முக்கியமான கான்ஸ்டபிள் காரக்டரை செஞ்ச யூகிசேதுவுக்கு ஒரு விசேஷத் தன்மை இருக்கு. அதாவது, அது வெறுமனே காமெடி கான்ஸ்டெபிள் ரோல்தான்னாலும், ஜனங்க ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. இல்லை, அவர்தான் க்ளைமாக்ஸ்ல கொலைகாரனை புத்திசாலித்தனமா யோசிச்சுக் கண்டுபுடிக்கிற காரக்டர்னாலும் கேள்வி கேக்காம ஜனங்க நம்புவாங்க. ஏன்னா அவரோட இமேஜ் அந்த மாதிரி. ( சின்னி ஜெயந்து, சார்லி ல்லாம் செட் ஆகமாட்டாங்க)

ஆனா தெலுங்குல, சிரஞ்சீவிக்கு சமமான வில்லனா பல படங்களிலே நடிச்ச பிரகாஷ்ராஜை, ஒரு சாதாரண கான்ஸ்டபிள் ரோலிலே காமிக்கும் ஆரம்பத்துலயே அந்தக் காரக்டர் மேல ஒரு எதிர்பார்ப்பு வந்துரும். ( அப்ப ஏதோ மேட்டர் இருக்கு..ன்னு அலர்ட் ஆய்டுவாங்க, சஸ்பென்ஸ் எலிமெண்ட் காலி. ) இது இயக்குனருக்கு பேஜாரான சூழல். ஏன்னா எதிர்பார்த்தது போலவே நடந்தாலும், ரசிகமகாஜனமானது, ” நாங்கதான் அப்பவே சொன்னோம்ல.. பிரகாஷ்ராஜ் தான் மெய்ன் கேரக்டருன்னு’ சொல்லும். அப்படி நடக்கலைன்னாலும், ” இந்த டொச்சு கேரக்டருக்கு என்ன hair க்கு பிரகாஷ்ராஜ் போல ஒரு பெரிய ஏக்டரைப் போட்டே’ ன்னு சட்டகாலரைப் புடிக்கும்.

தமிழ்ல், ஆரம்பத்தில் லூசு போல அறிமுகமாகி, படிப்படியாக பில்ட் அப் கொடுத்து, இறுதியிலே புத்திசாலித்தனம் நிறைந்த ஒரு காரக்டராக ஆகிறதுல இருக்கிற எதிர்பாராத தன்மையும், அந்த அனுபவமும் தெலுங்கில பாக்கிறவங்களுக்குக் கிடைச்சிருக்குமான்னு சந்தேகம்தான்.

ஆக எல்லா பாத்திரங்களுக்கும் பிரபல நடிகர்கள் போட்டுவிட்டால் படம் ‘பிரம்மாண்டமா’ வேணா இருக்கலாம். ஆனால் ‘சரியா’ இருக்கும்னு சொல்லமுடியாது.

தெகிடியும் இந்தத் தவறைச் செய்திருக்கிறது. ஆனா ரிவர்ஸில்.

தெகிடி மாதிரி ஒரு சுவாரசியமான திரில்லர் படத்திலே எனக்கு ‘இடிச்சது’ இந்த casting தான். படத்தோட முக்கியமான காரக்டர்களான புரபசர், அந்தக் குறுந்தாடி மேனேஜர், நண்பன் மூணுபேரும் அந்தப் பாத்திரத்தின் கனத்தைத் தாங்கச் சக்தி இல்லாதவர்கள். இவங்க மேல நாம நம்ம நேரத்தை invest பண்ணனுமான்னு கடைசி வரைக்கும் சந்தேகம் தான். அதுவும் அந்த நண்பன் காரக்டருக்கு புதுமுகம் தான் போட்டாகணும்னு இருந்தாலும் கூட நல்லா நடிக்கக் கூடிய ஒருத்தரைப் போட்ருக்கலாம். ரெஜிஸ்டரே ஆகலை. புரஃபசர், கிளைமாக்ஸ்ல பேசற நீளமான அந்த ‘எமோசனல் டைலாகு’ சுத்தமா ஒட்டவே இல்லை. ஒரு நல்ல பழக்கமான ஒரு குணச்சித்திர நடிகரைப் போட்ருந்தா அந்தக் காட்சி, கேரக்டர் ரெண்டும் அப்படியே எலிவேட் ஆயிருக்கும்.

பார்த்துட்டு வந்து, ரொம்ப நேரமா மனசுக்குள்ள அசை போடறேன் ஆனா, மேல சொன்ன அந்த மூணு முக்கியமான காரக்டர்களின் பெயரோ, முகமோ சுத்தமா ஞாபகத்துக்கே வரலை. தெகிடி நல்ல படம் என்பதைத் தாண்டி, படத்தைப் பற்றிப் பேச வேற எந்தப் பிடிமானமும் இல்லைங்கறதுதான் படத்தின் ஆகப் பெரிய குறை.

Leave a comment