A Stinking Place Called India

“The Farm Crisis: Why have more than a lakh farmers ended their lives in India during the past decade” என்ற பொருளிலே, தி ஹிந்து நாளிதழின் ரூரல் எடிட்டரும், இந்த ஆண்டின் ( 2007 ) ரமோன் மக்சேசே விருது பெற்றவருமான பாலகும்மி சாய்நாத் பாராளுமன்றத்தில் ஒரு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சி, நேற்று இரவு 12 மணிக்கு , லோக்சபா டிவியிலே ஒளிபரப்பானது.

சமீபகாலமாக, பாராளுமனறம், பல்துறை வித்தகர்களைக் கொண்டு இது போன்ற சிறப்புச் சொற்பொழிவுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

பி.சாய்நாத், ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு முடித்து விட்டு, ப்ளிட்ஸ், தி டெய்லி போன்ற பத்திரிக்கைகளில், தன் இதழியல் பணியைத் துவங்கினார். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஃபெலோஷிப் மூலமாக, கிராமப்புறப் பொருளாதாரம் மற்றும் விவசாயிகளின் நிலைமை ஆராய்ச்சி மற்றும் ரிப்போர்ட்டிங் செய்யும் பணியை மேற்கொண்டார். கடந்த இருபது வருடங்களாக, வருடத்தில் 300க்கும் மேற்பட்ட நாட்களை, கிராமப்புறங்களில் செலவழித்து அங்கே ஏழ்மை மிகுந்து காணப்படும் பிரதேசங்களில் பயணம் செய்து அங்குள்ளவர்களின் நிலை பல கட்டுரைகளை டைம்ஸ் ஆஃப் இந்தியா , தி ஹிந்து போன்ற நாளிதழ்களில் எழுதியுள்ளார். இவர் எழுதி 1996 இலே வெளிவந்த Everybody Loves a Good Drought – Stories form India’s Poorest Districts ( வாசித்துக் கொண்டிருக்கிறேன் ) என்ற நூல், இந்திய மற்றும் உலக அளவில் பதிமூன்று விருதுகளைப் பெற்றிருக்கிறது.

லக்மே அழகிப் போட்டிகளைக் கவர் செய்ய, ஐநூற்றுக்கும் மேற்பட்ட ‘ஜெர்னெலிஸ்ஸ்ட்டுகள்’ தங்கள் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் எக்ஸ்ளூசிவ் புகைப்படத்துடன் வெளியிடத் துடிக்க, அதே சமயம், அழகிப் போட்டி நடக்கும் நகரங்களிலிருந்து சில நூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் விவசாயிகள் , வறுமை காரணமாகத் தற்கொலை செய்து கொள்வதன் பொருளாதார / அரசியல் / உளவியல் காரணங்களை, வெகுசன ஊடகங்கள் கண்டுகொள்ள மறுக்கும் நிலைமை பற்றி சாய்நாத்தின் பேச்சில் தென்படும் நாகரீகம் குறையாத நக்கலைக் கண்டு கொள்ள மொழியியலிலே பட்டம் பெற்றிருக்கத் தேவை இல்லை என்கிற நிதர்சனத்தை, இந்தக் கட்டுரையின் அடுத்த சில பகுதிகளிலே பார்த்துக் கொள்ளலாம்.

இப்போது நேராக மேட்டர்.

கிராமப்புற பொருளாதாரம், பழங்குடி இனங்கள், அவர்களின் வாழ்வாதாரங்கள், விவசாயம் போன்ற பல்வேறு காரணிகளைக் கொண்டு இயங்கும் சங்கதிகளைப் பற்றிய அடிப்படை அறிவு சிறிதும் இல்லாத எனக்கு, சாய்நாத் அவர்கள் கொடுத்த லெக்சரில் இருந்து விளங்கியவை இதுதான்.

– பின் தங்கிய மாவட்டங்களில் வசிக்கும் மிகக் கடுமையான வறுமையில் உழலும் தாழ்த்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடியினரைப் போன்ற இளிச்சவாயர்களை நாம் உலகில் எங்குமே பார்க்க முடியாது.

– கடந்த பத்து வருடங்களில் நடந்த தற்கொலைகளின் எண்ணிக்கை லட்சத்தைத் தொடும். இதுவும் துல்லியமான கணக்கு அல்ல. சொந்தமாக நிலம் இருந்து தற்கொலை செய்து கொண்டால் தான், அவர் அரசாங்கத்தின் கணக்கெடுப்புக்குள் வருவார். விவசாயிகளின் குடும்பத்தினரோ அல்லது நிலமில்லாத விவசாயக்கூலிகள் செய்து கொள்ளும் தற்கொலைகள் கணக்கில் வராது.

– தற்கொலைகளுக்கு முக்கியமான காரணம் கடன் தொல்லை. நான்கு ஆண்டுகளாக , லாபகரமாக விவசாயம் செய்ய , ரூபாய் ஒரு லட்சம் வரை கடன் சுமை ஏறி தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒரு ஆந்திர விவசாயியை நண்பர்கள் சரியான சமயத்தில், மருத்துவர்கள் உதவியுடன் காப்பாற்றி விட்டார்கள். நான்காண்டுகளாக சிறுகச் சிறுக அசல் மற்றும் வட்டியுடன் சேர்ந்திருந்த ஒரு லட்ச ரூபாய்க் கடன் சுமை, அவர் காப்பாற்றப்பட்ட நான்கு நாட்களில் , சடாரென்று ஒன்றரை லட்சமாக உயர்ந்தது. Thanks to The Fifth Most Privatised Health Care System in the World, India.

– 2004 இலே India Shining என்ற பெயரில், பொதுத்தேர்தலுக்காக ஊடகங்களில் விளம்பரம் செய்து, முந்தைய அரசு, மக்களிடம் செருப்படி வாங்கிய பிறகுதான், விவசாயிகளின் வாழ்வாதாரப்பிரச்சனை பற்றி லேசாக ஊடகங்களில் செய்திகளில் வரத்துவங்கியது. ஆந்திரத்தின் பின் தங்கிய மாவட்டங்களில் தற்கொலைகள் மிக அதிகமாக இருந்த காலகட்டத்தில் தான், எகானாமிக் டைம்ஸ் நாளிதழ், அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு CEO of the Year என்ற விருது கொடுத்து மகிழ்ந்தது.

– மானியம் இல்லாத விவசாயம் உலகில் எங்குமே கிடையாது. விவசாயத்தைப் பொறுத்தவரை மானியம் என்பது உலக மரபு. மானியம் அளிக்கப்படாத விவசாயத் தொழில் என்பது உலகத்தில் எங்கும் இல்லை. 3.9 பிலியன் டாலர் பருத்தி விவசாயத்துக்கு, அமெரிக்க அரசாங்கம் அளிக்கும் மானியம் 4.7 பிலியன் டாலர்கள்.

– விவசாயம் லாபகரமான தொழில் இல்லை என்பது உண்மை. ஆனால், அது நட்டத்தில் இயங்கவில்லை. நட்டத்தில் இயங்க வைக்கப்படுகிறது. சாய்நாத் வார்த்தைகளிலேயே சொல்வதானால், ‘agriculture in India is not unviable but being made unviable by imposition’

– ஒரே குடும்பத்தில், குறைந்த இடைவெளியில் அடுத்தடுத்து தற்கொலைகள் நடப்பது சகஜம்.

– ஒரு பின் தங்கிய மாவட்டத்தில், ஒரு விவசாயி , தன்னுடைய பெண் திருமணத்தின் போது கடன் கொடுத்தவர்களால் ( எட்டாயிரம் ரூபாய் ) அவமானப்படுத்தப் பட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தான், ஒரிசா போன்ற இடங்களில் இருந்து வந்திருந்திருத உறவினர்களை மீண்டும் வரவழைத்து திருமண ஏற்பாடுகள் செய்ய முடியாது என்பதால், இறந்தவரை அடக்கம் செய்து விட்ட கையோடு பெரியவர்கள் திருமணத்தையும் நடத்தி வைத்தார்கள். இந்தச் சம்பவம் நடந்த போது உடன் இருந்த சாய்நாத், வேலை முடிந்து தன்னுடைய இல்லத்துக்குத் திரும்பிய போது, ஒரு மல்டிநேஷனல் வங்கியில் இருந்து ‘ பென்ஸ் கார்’ வாங்கிக் கொள்ள லோன் ஆ·பர் அவருக்கு வந்திருந்தது. ஜஸ்ட் 6 சதவீத வட்டி. No collateral Required. இந்தச் சம்பவம் நடந்த இடத்துக்கு சில நூறு மைல்கள் தூரத்தில், தே நேரத்தில் உலகின் மிகக் காஸ்ட்லி திருமணம் ( லக்ஷ்மி மித்தல் இல்லத்திருமணம் ) நடந்தது.

– ட்சுனாமி தாக்கிய போது, பாதிக்கப்பட்ட நாடுகளில் ( இந்தியா , இலங்கை, இந்தோனேசியா ) இருந்த பங்கு சந்தைகளின் பர்ஃபாமன்ஸ் சட சடவென்று உயர்ந்தது. குழப்பமாக இருக்கிறதா? பங்குமார்கெட்டுக்கு, ட்சுனாமியினால் ஏற்பட்ட தேசியத் துயரத்தை விடவும், நிவாரணப்பணிகளை முன்னிட்டு உள்ளே வரவிருக்கும் ‘பணம்’ பற்றித்தானே மகிழ்ச்சி ஏற்படுவதுதானே நியாயம்?

– National Sample Survey அளித்த அறிக்கையின் படி, விவசாயத்தில் ஈடுபடுபவர்களில் நாற்பது விழுக்காட்டினர் உண்மையில் விவசாயம் செய்வதை விரும்பவில்லை. வேறு தொழிலுக்கு பெயர முயற்சி செய்கிறார்கள்.

– மகாராஷ்டிரத்தின் விதர்பா உள்ளிட்ட மாவட்டங்களில் சென்ற ஆண்டு பள்ளி இறுதி ஆண்டுத் தேர்விலே , தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையில் பெரிய சரிவு ஏற்பட்டது. இது பற்றிய விவாதம் எழுந்த போது, கல்வித்தரம், ஆசிரியர்கள் தரம் பற்றிப் பேசிய அரசாங்கப் பீடாதிபதிகள், ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள மறுத்து விட்டார்கள். அது, அந்த மாவட்டங்களில், தேர்வு நடப்பதற்கு மூன்று மாதங்கள் முன்பு வரை, தோராயமாக நாள் ஒன்றுக்கு பதினேழு மணிநேரங்கள் மின்வெட்டு இருந்தது. இது போல ஒரே ஒரு நாள், நரிமன் பாய்ண்ட் வட்டாரத்தில் மின் வெட்டு ஏற்பட்டால், மாநில அரசு கவிழ்ந்து விடும். முரண் நகை என்ன என்றால், மகாராஷ்டிரத்தில், மிக அதிகமாக மின் உற்பத்தி செய்யும் மாவட்டம், விதர்பா.

– வறுமைத் தற்கொலைகள் அதிகமாகி, ஊடகங்களில் பரவலாகச் செய்தி வந்ததும், அந்த இடங்களுக்குச் சென்று பார்வையிடச் செல்ல, பிரதமர் எடுத்துக் கொண்ட காலம், இரண்டு மாதங்கள். அதே சமயம் பங்கு மார்கெட்டில் பிரச்சனை என்றதும் , நிலைமையைச் சீர் செய்ய அங்கே செல்ல நிதி அமைச்சர் எடுத்துக் கொண்ட நேரம், வெறும் அரை மணி நேரம். இந்திய ஜனத்தொகையில் , பங்குமார்க்கெட்டில் ஈடுபட்டிருக்கும் மக்களின் சதவீதம் 1.8 %. விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களின் சதவீதம், 40 சதவீதத்துக்கும் மேலே.

– Indian Express, Telegraph போன்ற – பிசினஸ் பத்திரிக்கை அல்லாத – general interest தேசிய நாளிதழ்களில் வர்த்தகச் செய்திகளைக் கவர் செய்ய 12 அல்லது 13 நிருபர்கள் உண்டு. விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இங்கே விவசாயம்/ கிராமங்களைக் கவர் செய்ய ஒருத்தர் அல்லது இருவர் இருந்தால் அதிகம்.

– ஆந்திராவில் மென்பொருள் ஏற்றுமதித் தொழிலை விட அதிகமாகப் பணம் புழங்கும் துறை விதைகள் வியாபாரம். 1991 இலே கிலோ எட்டு ரூபாய்க்கு விற்ற விதை, இப்போது கிலோ இரண்டாயிரத்துச் சொச்சம். விற்பது வெளிநாட்டு நிறுவனம். சந்திரபாபு நாயுடு, தலையிட்டு அதை ஆயிரத்துச் சொச்சமாகக் குறைக்க வைத்திருக்கிறார்.

***********

பி.கு 1:

சாய்நாத் கொடுத்த லெக்சரில் இருந்த புள்ளிவிவரங்கள் ஜீரணிக்க முடியாததாக இருந்தது. அவை அனைத்தும், அரசு பொதுவிலே வைக்கும் தகவல்களில் இருந்தும், மக்களை நேரடியாகச் சந்தித்தும் பெறப்பட்டவையே. பல விஷயங்கள் நினைவில் இல்லை. இந்த நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை அன்று பகல் 12 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தொட்டதற்கெல்லாம் குற்ற உணர்ச்சி அதிகமாகி அவஸ்தைப் படுபவர்கள் பார்க்க வேண்டாம்.

பி.கு 2:

ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மேல், இழுக்காமல் உடனடியாகப் படித்து முடிக்கிற வழக்கம் கொண்டிருக்கும் எனக்கு, சாய்நாத் எழுதிய Everybody Loves a Good Drought – Stories form India’s Poorest Districts’ நூலை ஒரே மூச்சில் படிக்க இயலவில்லை. சரமாரியாக வந்து விழும் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களைச் சீரணம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. சில அத்தியாங்களைப் படிக்கையில் விரல்கள் நடுங்குகின்றன. இந்தியாவின் அச்சு அசலான ஏழைகளை அறிமுகப்படுத்தும் அந்த நூலின் தலைப்பைக் குறித்த சந்தேகம், முதல் சில பக்கங்களைப் படித்ததும் நீங்கியது. சாய்நாத் சந்திக்கும் ஒருவர் சொல்கிறார்,

” In this year’ drought, all i did was sub-contract one small dam. I bought a new scooter. If there’s a drought next year, I shall buy a new jeep.”

படித்து முடித்தவுடன், நூல் குறித்த அபிப்ராயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

பி.கு 3.

விவசாயிகளின் தற்கொலைகள் பற்றி சாய்நாத் எழுதி வந்த கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

பி.கு 4 :

இந்த கருத்துக்களையும் உள்ளடக்கி, சாய்நாத், இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் ( சென்னை ) நடத்திய நிகழ்ச்சியில், When rising inequalities threaten democracy என்ற பொருளில் , சென்றவாரம் ஒரு உரை நிகழ்த்தினார். உரை, ஒலி வடிவத்தில் இங்கே கிடைக்கும். 46 எம்பி சொச்சம் இருக்கும் கோப்பை இறக்கிக் கேட்பது சிரமம் தான். இருந்தாலும் கேளுங்கள்.

20 thoughts on “A Stinking Place Called India

  1. —ட்சுனாமி தாக்கிய போது, பாதிக்கப்பட்ட நாடுகளில் ( இந்தியா , இலங்கை, இந்தோனேசியா ) இருந்த பங்கு சந்தைகளின் பர்ஃபாமன்ஸ் சட சடவென்று உயர்ந்தது.—-

    சமீபத்தில் பார்த்த நிகழ்ச்சி + புரட்டும் புத்தகம்: Democracy Now! | Naomi Klein On The Rise of Disaster Capitalism

  2. சென்னை நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்து, போக முடியவில்லை (ஆனால் சில திரைப்படங்களுக்கு போக வேண்டுமென நினைத்து, அதன்படியே போகவும் முடிந்தது). ஒலிக்கோப்புக்கு நன்றி 🙂

    இது போன்ற சமாச்சாரங்களைப் பற்றி படித்த / கேட்ட பிறகு what next என்பதுதான் புரியாததாயிருக்கிறது. அதற்கு வசதியான விடைகள் – அடுத்த வேலை / வேளை சாப்பாடு, கவன ஈர்ப்பு நிகழ்வு, கேளிக்கை, தம் / தண்ணி, தற்போதைய தமிழ்ப்பதிவுலக சர்ச்சை, என்று நவீன உலகில் பல ஆப்ஷன்கள் இருப்பது நல்லதா இல்லையா என்றும் புரியவில்லை.

  3. Prakash,

    Sainath’s description and data are right. only his explantion for the farm crisis is disputable. he attributes all the problems to the liberalisation, privatisation and globalisation for the farm crisis. in fact, the opposite is true. but for LPG, our grwoth would have stagnated and without growth the govt could not have earned this huge tax revenue that could be used to fund agri and rural programes. if there was no LPG, things would have been even more worse.

    inflation is caused due to chronic fiscal deficts. this inflation translates into RISING input costs across the board, incl agriculture. (fertilisers, seeds, transport, etc). and interest rates is directly proportional to inflation rate. hence high rates of interest rates hurts farmers most.

    and the main problem is not lack of funding for health, education or agriculture. only the delivery mechanism is leaking and most corrupt. less than 10 % of the funds actually reach the targeted sections, while the rest is divided for adminsitrative expenses and plain theft by govt staff and their crony contractors. try to discuss with a agri staff or rural co-op society or a fertiliser shop owner in the mofussil.

    there is rampant absentieesim among govt doctors and teachers in rural areas with no loss of pay or jobs.

    all this adds to the misery of the rural poor.

    more later..

  4. Rs 31,500 cr PDS grain stolen in 3 yrs
    17 Sep, 2007, 0455 hrs IST, TNN

    NEW DELHI: In the last three years, Rs 31,585.98 crore worth of wheat and rice meant for the poorest of the poor was siphoned off from the public distribution system.

    Last year alone, Rs 11,336.98 crore worth of foodgrain that the government is supposed to distribute to the needy at subsidised prices found its way into the market illegally.

    Every year, India’s poor are cheated out of 53.3% of wheat and 39% of rice meant for them. With the exception of 11 states and Union Territories, there is largescale diversion of PDS grain across India. And, these 11 states and UTs seem to be faring better only because the others are so far ahead in the dirty business.

    In the case of wheat, except for 12 states, there’s massive pilferage of the grain all over the country. The situation is a tad better for rice, with 16 states having little or no diversion. Exceptions apart, the poor in India simply can’t trust the government to deliver them food supplies. The malaise cuts across party lines and categories like progressive, rich states and the poor, less developed ones.

    The North-East is in a class of its own. Of the eight states here, not a single grain of wheat supplied to six — Sikkim, Meghalaya, Manipur, Mizoram, Nagaland and Assam — reaches the targeted poor. Arunachal Pradesh can claim to be a little less corrupt as 96.2% of its PDS wheat gets diverted. Manipur takes the cake as 97.7% of its rice allocation is also siphoned off with Nagaland following close behind at 88.6% of rice being diverted.

    If political and policing troubles in the North-East can be blamed for such daylight robbery, other states have no alibi. In terms of loss to the exchequer, Uttar Pradesh fares the worst, followed by Left-ruled West Bengal and Madhya Pradesh.

    In 2006-07, Rs 3,289.71 crore worth of rice and wheat was stolen in UP. The corresponding figure in West Bengal was Rs 1,913.76 crore and in MP, Rs 1,038.69 crore. While the percentage of diversion may be lower than the NorthEast, the sheer volume of rice and wheat distributed in these states helps black-marketeers make a killing.

    economictimes

  5. Fund Schooling, Not Schools
    This is the 32nd installment of my weekly column for Mint, Thinking it Through.
    I read a news report a couple of days back that amazed me. It was about a small village named Maji in the Yunnan province of China. The nearest school lies across the Nujiang river. There is no bridge, though a steel cable runs across.

    How do the 500 children of this village get to school? The report states, “They fasten themselves to the cable with a metal carabiner and a rope and slide across the 200-metre wide canyon.” The youngest child, A Qia, is four years old, and makes the crossing by herself. A five-year-old named A Pu has been quoted as saying, “I used to dream of having a bridge, but then I learned that my dream was too expensive.”

    My column today is not about bridges—not the kind that go across rivers anyway. It is about education. I never had to cross a canyon using a rope and a metal carabiner to get to school, and if the prospect had come up in my privileged home when I was a kid, I would probably have asked my dad if the metal carabiner was chauffeur-driven. I always took education for granted, the same way I took food for granted, and did not have to worry about where my next meal would come from. Much of India is not so lucky.

    Poor people want education for their kids desperately and viscerally. They want their children to have a better life than they did, and they know education is the ticket. And for 60 years they have been cheated. The state has promised them quality education, has collected taxes for that purpose, and has failed.

    Studies on the state of education in this country confirm what we see around us. A 2005 study of government schools by Pratham, an NGO, found that 35% of schoolkids surveyed between the ages of seven and 14 failed a reading test involving a simple paragraph, and 41% of them could not subtract or divide. A 2006 study found that half the children who enrol in the first standard drop out before reaching the eighth. A 1999 government report stated that just 53% of the accredited public schools in rural North India were engaged in teaching during surprise visits on school days.

    The problem here is not one of funding. The government has thrown enormous amounts of money into education, and continues to do so. The problem here is of choice. Most poor parents across the country have no option but to send their kids to government schools, which, because of the way the incentives are aligned, are often dysfunctional.

    The way out of this is to put parents in charge of the money that is supposedly being spent on their children’s education. Parents have much more at stake than the state, and are better equipped to take the right decisions for their children. Milton Friedman first proposed a method of enabling this: education vouchers. Under this system, the state does not directly fund schools, but gives school vouchers to parents. Parents use the vouchers to send their kids to a school of their choice, and the school exchanges vouchers in return for cash from the government. As in any other sector, competition then ensures that schools lift their standards and minimize wastage.

    This will give optimum results if competition is allowed to flourish. Right now, it isn’t. A 2001 study by the Centre for Civil Society (CCS) found that it takes 14 licences from four authorities to open a private school in Delhi, a process that can either take years or much under-the-table money. Schools must conform to a number of unnecessary parameters such as government-trained teachers and playgrounds of a specified size. Also, bizarrely, private schools are not allowed to operate for a profit—while many work around this by setting up trusts and suchlike, others are simply scared away.

    But won’t private schools be expensive? That’s what I would have thought, given the posh urban schools where my friends and I were educated, but the reality is different. Entrepreneurs in the poorest parts of India, in slums and villages, have started cheap schools with bare bones facilities to fulfil what is obviously a raging demand. And studies have shown that, with survival at stake, these schools use money twice as efficiently as government ones.

    In 2005, James Tooley and Pauline Dixon did a study that found that 65% of schoolchildren in Hyderabad’s slums attended private schools instead of free government ones. And last year, CCS conducted a study (pdf link) that revealed that 14% of households in Delhi earning less than Rs5,000 per month chose to send their kids to a private school. Their studies showed that even the poorest of the poor, from maids to autorickshaw-drivers to peons, expressed their preferences clearly, even when they could barely afford it.

    There is one clear reason for the miserable state of education in this country: the state has funded schools, not schooling. For India’s sake, that must change.

    * * *

    I had covered much of this territory in my January Op-Ed in the Wall Street Journal Asia, Why India needs school vouchers. For more on school choice, check out Andrew Coulson’s paper, How Markets Affect Quality (pdf link).

    Also, my thanks to Shrek for pointing me via email to the China story. I’ve also received many insights about school choice from chatting with Raj Cherubal of CCS and my friend Gautam Bastian. I hope to continue those conversations.

  6. நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது

    இந்தியர்களான நாம், நேர்மை மற்றும் உண்மை போன்ற மிக முக்கிய குண நலன்களை, சுதந்திரத்திற்குப் பிறகு இழந்துள்ளோம். ஊழல் பெருகியுள்ளது. அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. வாக்களிக்கும் பொதுமக்கள் பணம் மற்றும் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு வாக்குகளை விற்கின்றனர். மக்களுக்க ஏற்ற அரசாங்கமே அமையும் என்பது பொது விதி.

    சோசியலிசக் கொள்கைகள், உயர்ந்த லட்சியம் உள்ள தலைவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. சித்தாந்தம் என்பது வேறு, நடைமுறை என்பது வேறு. “நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தானாலும் உண்டாகிறது” என்பது ஒரு பழமொழி.

    பணக்காரர்கள் மீது மிகக் கடுமையான வரி விதித்து அதை ஏழைகளுக்கு பயன்படும் வகையில் செலவு செய்ய முயன்ற சோசியலிஸக் காலங்களில் உச்சக்கட்டமாக 98 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டது (1971). மனிதனின் இயல்பான குணம் சுயநலம். தனக்கு ஒரு லாபம் அல்லது ஆதாயம் முழுமையாகக் கிடைத்தால் மட்டுமே ஒரு செயலை முழு மனதுடனும், ஊக்கத்துடனும் செய்வான். அச்செயலினால் கிடைக்கும் லாபத்தைப் பாதுகாக்க சட்டத்தை மீற முற்படுவான். அதனால் நேர்மை குறையும்.

    அதுதான் இங்கு நடந்தது. வருமான மற்றும் உற்பத்தி வரிகளை ஏய்க்க முற்பட்டனர் முதலாளிகள். அதிகாரிகள் அதற்குத் துணை போயினர். பெர்மிட், லைசன்சு தருவதற்கு லஞ்சம் கேட்டனர் அரசியல்வாதிகள். கடமையை செய்யாமல் உரிமையை மட்டும் கருத்தாக கேட்டனர் அமைப்பு சார்ந்த மற்றும் அரசாங்க அமைப்புகளைச் சார்ந்த தொழிலாளர்கள். லைசன்ஸ் மற்றும் கட்டுப்பாடுகளால் கடுமையான பற்றாக்குறை உண்டானது. சிமிண்டு இன்று எளிதாக கிடைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் சிமண்ட் உற்பத்தியில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததால் கடும் பற்றாக்குறை. கருப்பு மார்க்கெட், லஞ்சம், பதுக்கல், கடத்தல், இன்று கேட்க தமாஸாக இருக்கிறதா? பழையக் கருப்பு வெள்ளைப் படங்களில் வில்லன்கள் சிமிண்ட், சர்க்கரை மற்றும் பருத்தி நூல் பேல்களை பதுக்கி வைப்பர். கடத்துவார்கள்!

    கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தனியார் உற்பத்தி வேண்டிய அளவு பெருக தாரளமாக அனுமதிக்கப்பட்டவுடன் இன்று அந்த மாதிரியான தமாஸ் காட்சிகள் இல்லை. உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை மேம்படுத்தி விடலாம். ஆனால் இழந்த குணங்களை மீண்டும் உயிர்ப்பிக்க பல காலமும் பல தலைமுறைகளும் பிடிக்கும் போல் தெரிகிறது.

    சர்வ சாதாரணமாக நாம் அனைவரும் அரசாங்க விதிகளையும் சட்டங்களையும் மீறும் தன்மையைப் பெற்று விட்டோம். அளவுக்கு அதிகமான வருமான வரியை ஏமாற்ற ஆரம்பித்து இன்று அனைத்து வரிகளையும் ஏமாற்றுவதை ஒரு கலையாகக் கற்றுள்ளோம். சாலை விதிகள், மென்பொருள் மற்றும் சினிமா துறைகளின் காப்புரிமை விதிகளை மீறுகின்றோம். திருட்டு விசிடி, மென்பொருள்களையும் பயமின்றி கூச்சமின்று பயன்படுத்துகிறோம்.

    வேலை செய்யாமலேயே ஊதியம், தகுதி இல்லாமலும் மான்யம், இலவசங்களுக்காக தன்மானத்தையும் நேர்மையையும் இழந்துள்ளோம். பிச்சைக்காரப் புத்தி மிகவும் அதிகரித்துள்ளது. ஓசியில் கிடைச்சா பினாயிலைக் கூட குடிக்கத் தயாராக உள்ளோம். ஒரு LPG சிலிண்டருக்கு அரசாங்கம் நமக்கு ரூபாய் 200 மான்யமாக, இனாமாக தருவதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். குறைக்க முற்பட்டால் எதிர்க்கிறோம்…

    ————————-
    விலைவாசி ஏன் உயர்கிறது ?

    நமது ரூபாயின் வாங்கும் திறன், 1947 இருந்ததை விட இப்போது சுமார் 160 மடங்கு குறைந்துள்ளது. அதாவது 1947 இன் ஒரு ரூபாய் இன்று 160 ருபாய்க்கு சமம். இதற்கு முக்கிய காரணம், அரசு நோட்டடித்து செலவு செய்ய்வதே ஆகும்.

    சாதரணமாக பொருட்க்களுக்கான தேவை அதிகரிக்கும் போது அல்லது உற்பத்தி குறையும் போது, விலை ஏறுகிறது. மாற்றாக, புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு மிக அதிகமானால் பணவீக்கம் ஏற்படுகிறது ; அதாவது அரசாங்கம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து செலவு செய்யும் போதும் விலைவாசி ஏறும்.

    மத்திய பட்ஜட்டில் பல விதமான செலவுகளால், இப்போது ஆண்டுக்கு சுமார் 1.6 ல்ட்சம் கோடி துண்டு விழுகிறது. இதில், அரசாங்கம் ஒரு 70 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது. மிச்ச்திற்க்கு (சுமார் 90,000 கோடி ரூபாய்) நோட்டடித்து செல்வு செய்கிறது. பணவீக்க்ம் உருவாகி விலைவாசி ஏறுகிறது. மிக அதிகமான ரூபாய் நோட்டுகள் மிக குறைவன எண்ணிக்கையில் உள்ள பொருட்க்களை துரத்தும் போது பொருட்க்களின் விலை ஏறுகிறது. புதிதாக உற்ப்பத்தி செய்ய முடியாத பண்டங்களான நிலம், ரியல் எஸ்டேட் போன்றவை மிக அதிகமாக விலை ஏறுகிறது.

    வட்டி விகிதம், விலைவாசி உயர்வின் விகிததை ஒட்டியே மாறும். வட்டி என்பது, பணத்தின் வாடகையே. பணத்தின் மதிப்பு குறைய குறைய, வட்டி விகிதம் அதற்கேற்றாற் போல் உயரும். கந்து வட்டி விகிதம் பல மடங்கு அதிகரிக்க இதுவே காரணம்.

    1930களில் காந்தியடிகள் கதர் இயக்கத்திற்காக வங்கியிலிருந்து 5 சதவித வட்டிக்கு கடன் வாங்க முடிந்தது. அன்றய பணவீக்கமும், விலைவாசி உயர்வும் அப்படி இருந்தன. பற்றாகுறை பட்ஜெட்களின் விலைவாக 1950 முதல் 1990கல் வரை பணவீக்கமும். விலைவாசியும், வட்டிவிகிதமும் தொடர்ந்து ஏறின.

    ஊதியம் போதாதால், தொழிளாலர்கள் மற்றும் ஏழைகள் மிகவும் பாதிப்படைகிறார்கள். ஏழைகள், தங்கள் குழந்தைகளை தொழிலாளர்களாக அனுப்புகின்றனர். அதிக வட்டி விகிததில், கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலை. கூலி / சம்பள் உய்ரவு கேட்டு போராட வேண்டிய நிலை. அதனால் உற்பத்தி செலவு அதிகரித்து, விலைவாசி மேலும் உயர்கிறது. சம்பளம் போதாமல் அரசாங்க ஊழியர்கள் லஞ்சம் வாங்க முற்படுகின்றனர்.

    ஜெர்மனி போன்ற நாடுகள் பணவீக்கதை மிகவும் கட்டுபடுத்தி விலைவாசியை ஒரே அளவில் வைத்துள்ள்ன. அதனால் அங்கு சுபிட்சம் பொங்குகிறது. இங்கோ வறுமை வாட்டுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்ல்லை.

    அரசின் வெட்டி செலவுகளுக்காக, பொது மக்கள் விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியை சுமக்க வேண்டியுள்ளது. ஆனால் அடிப்படை பொருளாதார அறிவு இல்லாத இடதுசாரிகளோ தொழில் அதிபர்களையும், முதலாளிகளையும் காரணமாக சொல்கின்றனர்.

    லார்டு கீய்யினஸ் சொன்னது : “..ஒரு நாட்டின் ஒழுக்கதையும், உயர்ந்த குணத்தைய்யும் அழிப்பதற்க்கு சிறந்த வழி என்ன்வென்றால், அந்நாட்டின் நாணய மதிப்பை வெகுவாக சீரழிப்பது மூலம்….” ; நாம் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இதை என்று உணர்வோம் ?

    http://nellikkani.blogspot.com/

  7. பிரகாஷ்,

    1. நாடாளுமன்றத்தில் அடிதடிகள் மட்டும்தான் நாளிதழ்களில் வருகின்றன. இது போன்ற உருப்படியான விவாதங்களும் நடப்பது தெரிகிறது.

    2. நாட்டின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப சாய்நாத் போன்றவர்கள் இன்னும் பல நூறு வர வேண்டும்.

    3. இன்றைக்கும் பங்குச் சந்தைக் குறியீடு 17,000த்தைத் தொட்டு விட்டதற்கும் 20/20 வெற்றிக்கும் கொண்டாட்டச் செய்திகள்தான் நாளிதழ்களை ஆக்கிரமித்துள்ளன.

    தனியார் மயமாக்கத்தின் சாதனைதான் இந்த ஊடகத்துறை. அரசு சார் நாடாளுமன்றத் தொலைக்காட்சியைத் தவிர இதைப் பற்றி பிற செய்திகளில் காட்டினார்களா?

    அன்புடன்,
    மா சிவகுமார்

  8. P.Sainath is a long time rural desk editor of The Hindu, a private newspaper. P.S became famous thru his coloumns in the Hindu. We all knew about DD’s coverage until 1990s when it never reported adverse items against govt. competition reformed DD better.

  9. As Athiyaman mentioned, the corruption and not lack of funds is the main problem. You can allocate the entire budget for rural poor and still they will poor because most of the funds will be eaten by the politicians and administrators. I am equally outraged by the status of poor, but what can be done when the administrators and politicians are corrupt to the core? The key issue is people’s indifference to corruption among politicians and administrators.

  10. இங்கே விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி பிரகாஷ்

    **

    தாமதமாகப் புரிந்து கொண்டாலும் உண்மையைப் புரிந்து கொண்டதில் மகிழ்ச்சியே. இதுதான் நிதர்சனம். இந்தியாவில் உண்மை நிலையை அறிய நமக்கு எந்த புத்தகங்களுமோ அல்லது சாய்நாத்களோ தேவை இல்லை.

    ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் நின்று நிதானிதது நம்மைச் சுற்றி உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தாலே போதும்.

    ***

    விவசாயிகளுக்கு மானியம் அவசியம் என்பது அறிவாளிகளாக அறியப்படும் பலருக்கு தெரிவது இல்லை.

    ***

    பெரும்பாலான பத்திரிக்கைகள் நடிகைகளின் தொப்புளின் வழியாகவே உலகத்தை பார்க்க விரும்புகிறது. என்ன செய்ய

  11. நன்றி : திரு. பிரகாஷ்

    சாய்நாத் அவர்கள் கடந்த 19ந்தேதி சென்னைக்கு வந்திருந்த பொழுது, அந்த கூட்டத்திற்கு அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்ற நினைத்திருந்தேன். வேலை காரணமாக, அன்றைக்கு கலந்து கொள்ள முடியவில்லை.

    பிரகாஷ் அவர்களின் பதிவில், அந்த கூட்டம் தொடர்பான செய்திகள், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் சாரத்தையும் படித்த பொழுது, மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், அதை மறுபதிவிடுகிறேன்.

    பிரகாஷ் அவருடைய பதிவில், சில இணைப்புகளை தந்துள்ளார். அதை என்பதிவில் எடுத்து போடும் போழுது, நமக்கு டெக்னிக்கல் அறிவு குறைச்சல் என்பதால், அப்படியே காப்பி, பேஸ்ட் செய்துள்ளேன். அந்த லிங்க் வேண்டும் என நினைப்பவர்கள் அவருடைய பதிவிற்கு சென்று பார்த்துக்கொள்ளுங்கள். விரைவில் யாருடைய உதவியின் மூலம் அந்த அறிவையும், கற்றுக்கொள்கிறேன். நன்றி.

    ******

  12. /////aRivippu
    July 5th, 2007

    சில தவிர்க்க இயலாத சூழ்நிலைகளால், இந்த வலைப்பதிவு, சில காலம், அதாவது குறைந்தது ஐந்தாறு மாதங்கள்…
    ( ஒரு நம்பிக்கைதான் 🙂 ) இற்றைப்படுத்தப் பட மாட்டாது.

    பிற பதிவுகளைப் படிக்கவும் வாய்ப்பில்லை என்பதால், பின்னூட்டப் பெட்டிகள் மூலமாக நண்பர்களுடன் ‘டச்’ வைத்துக்கொள்ளுவதற்கும், தமிழ் இணையத்தில் புழங்குவதற்கும் வாய்ப்பில்லாமல் போகிறது.

    யாராவது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு, பதில் வரத் தாமதமானால் , ஸாரி.

    தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களுக்கு நன்றி.

    அன்புடன்
    பிரகாஷ்/////////
    என்ன விளையாட்டு இது? 30 நாள் தான்லீவா? கபால்னு கனமான பதிவு போட்டுட்டீங்க.. படிச்சு மனசு கனத்து போச்சு….
    -விபின்

  13. வறுமைக்கு காரணமும், விளைவுகளும்

    செல்வசெழிபிற்க்கு அருகமையில், கடுமையான வறுமையய் காணும் பெரும்பாலான, மனிதநேயங்கொண்டவர்கள் இந்த முரண்பாட்டிற்க்கு காரணம் முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளே என்ற தவறான முடிவுக்கு வருகின்றனர்.

    இரண்டாம் உலக்ப்போரில் முற்றிலும் அழிந்த ஜெர்மனியில், 1945ல் வறுமை, பசி, வேலையில்லா திண்டடம் மிக அதிகமாக இருந்தது. சந்தை பொருளாராத கொள்கைகளை, கடும் எதிர்பிற்கிடையில் அமல் படுதிய பின் பத்தே ஆண்டுகளில் ஜெர்மனி மீண்டும் தலை நிமிர்ந்தது. “ஜெர்மன் மிராக்கில்” என்று இன்றும் போற்றப்படுகிரது.

    1947இல், நம்மைவிட மிகவும் கீழ் நிலையில் இருந்த மலேசயா, சிங்கப்பூர், தைவான், தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளும் சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை பின்பற்றி இன்று நம் நாட்டை விட பல மடங்கு சுபிட்சமாக உள்ளன. சைனாவும் முதலாளித்துவ பாதைக்கு வந்து வேகமாக வளம் பெற்று வருகிரது.

    1991ல், நாம் திவால் நிலையில் இருந்தோம். அரசு, தங்கத்தை அடமானம் வைத்து இறக்குமதிக்கான் டாலர்களை பெற வேண்டிய நிலை உருவானது. அதன் பிறகு, சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை அமல் படுத்தியதன் விளைவாக, இன்று மீண்டு வருகிரோம். அந்நிய செலவாணிக்காக் ஐ.எம்.எfஇடம் கை ஏந்த வேண்டிய நிலை இன்று இல்லை. பல கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு மேல் எழும்ப முடிந்தது. தொழில் துறையின் வளர்சியால் புதிய வேலை வாய்ப்புகளும், அரசுக்கு பெரிய அளவில் வரி வசுலும் உருவாகிரது. அதை வைத்து அரசு, பல நலத்திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. ராணுவதிற்க்காக வருடம் சுமார் 93,000 கோடி ரூபாய் செலவிடுவது நமக்கு மிக அதிகமான சுமை. இது போன்ற பல சுமைகளை விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியாக நாம் அனைவரும், குறிப்பாக ஏழைகளும் சுமக்க வேண்டியுள்ளது.

    இன்னும் வெகு தூரம் போக வேண்டியதுள்ளது. எழ்மை ஒழிப்பு, விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்ற அடிபடை வசதிகாளுக்காக அரசு பல லச்சம் கோடி ரூபாய்கள் செலவிட்டாலும், அதில் பெரும்பாண்மையான தொகை அரசு எந்திரத்தாலும், அரசியல்வாதிகளாளும் திருடப் படுகிரது. அரசு மான்ய தொகை, பணக்கார விவசாயிகளுக்கே பெரும்பாலும் சேர்கிரது. உண்மையான ஏழைகளுக்கு இவை கிடைக்கும்படி செய்ய, ஊழல்மயமான நம் அரசு எந்திரத்தை சீர் படுத்த வேண்டும். அதுவே நமக்கு முதல் வேலையாகும். அதை செய்யாமல், வறுமைக்கு காரணமாக முதலாளித்துவ பொருளாராதார் கொள்கைகளை காரணமாக காட்டுதல் தவறு.

  14. VoW : நான் கூட நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை. பத்ரி பதிவில் இருந்த ஒலிப்பதிவைத்தான் கேட்டேன்.

    மா.சி : பாராளுமன்றத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஊடகங்கள் பிற ‘முக்கியநிகழ்வுகளில்’ கவனம் செலுத்தும் போது, இது போன்ற ஒன்றுக்கும் உதவாத விஷயங்களில் ஆர்வம் காண்பிக்குமா?

    ஹிந்துவில் மட்டும் ஒரு விரிவான கவரேஜ் பார்த்தேன். ஒலி ஒளி ஊடகங்கள்? மூச்…

  15. அதியமான் : நீங்கள் அளித்த விஷயங்களைப் படித்தேன். க்ளோபலைசேசன், free markets போன்ற விஷயங்கள் மட்டுமே, விவசாயிகளின் இந்த நிலைக்குக் காரணம் என்று – நீங்கள் சொல்வது போல – நான் நினைக்கவில்லை. சாய்நாத் வைக்கும் பல காரணங்களில் அதுவும் ஒன்று.

    விவசாயிகளுக்கு வேண்டியதைச் செய்கிறோம் ஆனால் அதை நடுவிலே இருப்பவர்கள் ஸ்வாஹா செய்து விடுகிறார்கள் என்பது உங்கள் குற்றசாட்டு. இருக்கலாம். அந்த ‘அவர்கள்’ சிட்டியிலே இருப்பவர்கள் மீது கையை வைக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். இன்றைய தேதியிலே, ஒரு விவசாயியை, ‘ உன் நிலம் வளர்ச்சிப் பணிக்காகத் தேவைப் படுகிறது ‘ என்று சொல்லி துரத்தி விட முடியும். ஆனால் நகரத்தில் இருப்பவர்களுக்கு அந்த நிலையாமைத் தன்மை இல்லை.

    பல இடங்களில், நாம் சம்பாதிக்கிறோம், வளர்ந்திருக்கிறோம், என்று குறிப்பிடுகிறீர்கள். அந்த ‘நாம்’ இற்குள்ளே ஏழை விவசாயிகள் அடங்கவில்லை.

    சாய்நாத்தின் புத்தகத்தைப் வாசித்து முடித்ததும், விரிவாக எழுதுகிறேன். பின்னூட்டத்துக்கு நன்றி.

    கல்வெட்டு : சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தேன். ஸ்கைஸ்க்ரேப்பர்கள் கண்ணை மறைத்தன. இனி இல்லை 🙂 . பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் நன்றி.

    சாக்ரடீஸ், விபின், பரத் : நன்றி.

  16. ///பல இடங்களில், நாம் சம்பாதிக்கிறோம், வளர்ந்திருக்கிறோம், என்று குறிப்பிடுகிறீர்கள். அந்த ‘நாம்’ இற்குள்ளே ஏழை விவசாயிகள் அடங்கவில்லை.///

    true. but if we haven’t grown atleast this much prosperous, the condition of rural poor would have been even more worse, as without tax revenue, the govt cannot do much for anyone.

    even in urban areas, land is acuired indicreiminately for road expansions, airports, etc. the problem is that right to property is not a fundamental right in India, unlike in the West. the govt there cannot arbitarily acquire land there like here. the right to property was abolished by ‘socialistic’ govts for the ostensible reason of helping the poor and landless and for helping in smoother ‘nationalisation’ of private industries and banks. actually the reverse happened. land fragmented rendereing small and marginal farming uneconomic and this absridgement of the basic right enables our govts to grab the land property without proper compensation or demeocratic hearings, as it is in thr west.

    10,000 crores already spent on Rural employment guarnetee scheme has not produced much results. most of the money, which was raised by taxing the populce and by borrowing, was eaten by govt staff and their crony contractors. enormous amount of bogus muster rolls, bogus ration cards, direct diversion of funds continue to exist…

  17. இப்போது சேது சமுத்திர பிரச்சனையில் இருப்பதால் இதைப்பற்றி விரிவாக எழுத முடியாது. ஆனால் பிரகாஷ், நாம் எங்காவது பார்த்தால், அந்த புத்தகமும், மிஸ்ஸியம்மா சி.டியும் இரவலுக்கு. சமீபத்தில் ரகுராமன் [ரகுநந்தன்!!] எழுதிய Games Indians Play லேண்ட்மார்க்கில் புரட்ட நேர்ந்தது. சமயமிருப்பின் அதையும் வாசியுங்கள், இதற்கு ஈடான விஷயங்கள் அதிலும் இருக்கும். தொடர்ச்சியாக சம்பந்தா சம்பந்தமில்லாமல் படித்து வருவதால் ஒரு மாதிரி குன்சான freaknomics வகையறா patternகளை பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு, பொருளாதாரமும் கடனட்டைகளும் வளர்ந்ததால் தான் தோல் பொருட்கள் வியாபாரம் செய்பவர்களின் cost of production உயர்ந்திருக்கிறது. ஒரு பயணத்தில் தான் இந்த insight கிடைத்தது. பொருளாதாரம் வளர்ந்திருப்பதால் செலவு செய்தல் அவசியமாகிறது. செல்விற்கு கடனட்டைகள் தேவை. அதனால், நேற்று வரை வெறுமனே மூன்று ஸ்லீவ்கள் வைத்திருந்த பர்ஸ் எல்லாம், இன்றைக்கு 6-10 ஸ்லீவ்கள் கொண்டிருக்கின்றன. அதிக ஸ்லீவ்கள் அதிக நேரம் தேவை + உற்பத்தி செலவு அதிகரிக்கும். இது ஒரு தொடக்கம் தான். பல புள்ளிவிவரங்களை அடிப்படையாக வைத்து இந்தியாவுக்கான ப்ரீக்னாமிக்ஸ் மாறி மாறி எழுதலாம் என்று தோன்றுகிறது.

    பாலா,

    நவோமி கெள்ய்னின் No Logo படித்து பார்த்தீர்களேயானால் அவர் சொல்லும் விஷயம் புரியும். டிஸ்ஸேஸ்டர் கேப்டலிசத்தின் இன்னொரு பகுதி தான் சேது சமுத்திர திட்டமும், நர்மதா அணைக்கட்டு திட்டமும்.

  18. 150-year dream for 150-year old ships
    By Swaminathan S. Anklesaria Aiyar

    Religion and history do not mix well. I shrug my shoulders at those opposing the Sethusamunda-ram canal because it will damage the remains of the bridge that Ram’s army used in the Ramayana.

    Now, i too oppose the canal, but on economic and environmental grounds. Its rationale is more political than economic. It will become one more public sector white elephant.

    The Palk Straits, between Tamil Nadu and Sri Lanka, are so shallow that only small boats can pass through. So, east-west coastal ships have to go around Sri Lanka. So do ships from Europe and Africa to the east coast.

    Sethusamundaram will be a furrow dredged in the sea-bed of the Straits, deep enough to accommodate ships of 20,000 DWT. The canal will save ships both distance (saving fuel) and time (saving daily charges for chartering ships). So, it should be able to charge ships for passage, like the Suez and Panama Canals. This revenue is supposed to make the project economic.

    The project is a political gift for Tamil Nadu. It will hugely help Tuticorin port, which today can receive ships only from the west, and not the east. It will improve the viability of existing and planned minor ports in the state. Hence, Tamils call the canal a 150-year dream about to come true (it was first proposed around 1850).

    Dreams are costless, but canals are not. Project documents claim that the canal will save ships 36 hours of time and 570 nautical miles of distance. But a recent study by Jacob John in Economic and Political Weekly exposes these claims as highly exaggerated. Up to 70% of the traffic through the canal is projected to come from Europe and Africa. And John estimates that the time saving from Europe to Kolkata will be only eight hours, and the distance saving 215 nautical miles. From Africa to Kolkata, the time taken will actually increase by 3.5 hours (being piloted through the canal is a slow process), and distance reduced will be only 70 nautical miles.

    John calculates that ships could lose up to $4,992 per passage if they are charged the tariff laid down in project documents. In which case ships will find it cheaper to go round Sri Lanka. If the government cuts the proposed tariff to attract traffic, John estimates that the project’s rate of return could fall to an uneconomic 2.5%. I expect that the project will also suffer cost overruns in capital and maintenance dredging, and hence be in the red.

    The canal is supposed to be ready by November 2008, not far off. So why has the project not been able to sign up potential users? The finance minister has appealed to private shipping companies to participate in a project that will benefit them, yet no shipping company has come forward. The economics of the canal look much too dicey.

    The Suez and Panama Canals save ships thousands of miles, and that makes them profitable. Sethusamundaram is not remotely comparable. It is designed for small ships (the project documents talk of 20,000 DWT), whereas the Panama Canal takes ships of up to 65,000 DWT and Suez takes ships up to 150,000 DWT.

    The Suez and Panama canals were dug through land corridors, and once dug stayed dug – they did not face sand inundation from the sea. However, Sethusamundaram will be a furrow in the sea-bed, at the constant mercy of currents bearing sand.

    The government’s environmental assessment has cleared the project on ecological grounds. Yet, much of that assessment was not about sand incursion, but about fears of possible damage to coral reefs, coastal erosion, oil spills, and changes in ocean salinity and temperature. Besides, the ecological studies were done from the Indian side of the Palk Straits, and not the Sri Lankan side, and so are technically incomplete.

    My own major fear is not so much that the project will ruin the environment, but that the environment will ruin the project. I fear that ocean currents will keep dumping fresh sand in the furrow of the canal. The Palk Straits are shallow not by accident but because sand-bearing currents have made them so. Combating the full force of nature is perilous, expensive and sometimes impossible.

    The project envisages maintenance dredging of two million cubic metres per year, infinitely more than required by the Suez and Panama canals. Jacob suspects (and so do i) that actual maintenance dredging will far exceed project projections, rendering the canal uneconomic. An extreme event (like the 2005 tsunami) could dump enough sand to close down the canal.

    Finally, global shipping is shifting to ever-larger vessels. Bulk carriers and tankers often exceed 200,000 DWT, and those under 60,000 DWT are being phased out as uneconomic. Old general cargo vessels have been replaced by container ships, which started small but now exceed 35,000 DWT, and may soon touch 75,000 DWT. Such vessels cannot use the canal.

    So, Sethusamundaram will be unsuitable for the large vessels of the 21st century. It is a 150-year old idea for 150-year old ships. That may be its epitaph.

    http://www.swaminomics.org/

Leave a comment