Few Things Newbie Bloggers Should Be Aware Of…

வலைப்பதிவு எழுதுவது , தமிழ் எழுத்துருக்கள் தரவிறக்கம் செய்வது, தமிழ்மணம், தேன்கூடு போன்றவற்றில் இணைத்துக் கொள்வது ஆகிய தொழில்நுட்பச் சங்கதிகளை விடவும், எழுதும் போது, உள்ளடக்கத்தைப் பொறுத்தவரையில், சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுவது அவசியம். மிகப் புதிதாக வலைப்பதிவர்களுக்கு, தன்னுடைய எழுத்தைப் பொதுவிலே வைக்கும் போது, அது ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் பற்றிய அறிவு இல்லாமல் போகலாம். இத்தனை நாள் தொடர்ந்து வலைப்பதிவு எழுதியதில் இருந்து நான் அறிந்து கொண்டவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

சில நாட்களுக்கு முன், நம்பர் ஒன் ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஒரு பெங்களூர் இளைஞர், தன் நிறுவனத்தில் நடந்த ஒரு சம்பவம் பற்றி தன் வலைப்பதிவில் எழுதினார். மிகக் குறைவான வாசகர் வட்டத்தைக் கொண்ட அவர் பதிவின் அந்த இடுகையை, ஒரு பிரபல ஆங்கில வலைப்பதிவுத் திரட்டி, காரமான தலைப்புக் கொடுத்து இணைத்து விட, விஷயம் பூதாகாரமானது. பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கொண்ட திரட்டியில் இணைக்கப்பட்ட அப்பதிவு, அந்த நம்பர் ஒன் ஐடி கம்பெனியின் உயரதிகாரிகளின் கண்ணில் பட்டுத் தொலைத்துவிட, அந்த இளைஞரை அழைத்து விசாரித்திருக்கிறார்கள். அந்த இளைஞர் அலறியடித்துக் கொண்டு, தன் பதிவை நீக்கிவிட்டு, அந்தத் திரட்டியில் இருந்து, தன் பதிவை நீக்கக் கோரியிருக்கிறார். தகவல் தொடர்பு இடைவெளியால், அது நினைத்த வேகத்தில் நடக்காமல் விஷயம் ரொம்ப சிக்கலாகிவிட்டது. [ விஷயத்தை ஊதிப் பெரிதாக்க வேண்டாம் என்று தொடர்புடைய சுட்டிகள், பெயர்கள் எதையும் இங்கே கொடுக்கவில்லை ]

பர்சனல் விஷயங்களைக் கொண்ட இடுகைகளை அதிக வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் அந்தத் திரட்டியும் இன்னும் கொஞ்சம் பொறுப்புணர்வுடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஒரு ஜாலியான புலம்பலை, ஒரு ஸ்காண்டல் ரேஞ்சுக்கு ஊதி விட்டு வேடிக்கை பார்க்கும் ஆட்களிடம் நம்முடைய பத்திரத்தன்மையை அடகு வைப்பதை விடவும் நாமே கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கலாம் இல்லையா?

இங்கே ஒரு கேள்வி எழலாம். அதென்ன எனக்கென்று கருத்துச் சுதந்திரம் இல்லையா? நான் நினைப்பவற்றை எழுதக் கூட எனக்கு அனுமதி இல்லையா என்று கேட்கலாம். கருத்துச் சுதந்திரம் தாராளமாக இருக்கிறது. கூடவே பொறுப்புணர்வும் இருந்தாகவேண்டும். எழுதிய பின் அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாத விஷயங்களை எழுதக்கூடாது. கோய்ந்தசாமி என்கிற ஒரு ஆசாமியின் வலைப்பதிவு, கோய்ந்தசாமி என்கிற நிஜ பர்சனாலிட்டியின் நீட்சிதானே தவிர, வலைப்பதிவில் கோய்ந்தசாமி திடும் என்று ராபின்ஹூட்டாக எல்லாம் மாறிவிட முடியாது. எம்டி அநியாயமாக திட்டும் போது அமைதியாக இருந்துவிட்டு மனசுக்குள்ளே ‘ போடா சொங்கி’ என்று திட்டுகிற டைப் நீங்கள் என்றால், அதாவது நேருக்கு நேர் அந்த எம்டியைக் கேட்கத் தைரியம் இல்லாதவர் என்றால், பின்னால் மனசுக்குள்ளே வஞ்சம் வைத்து வலைப்பதிவிலே உண்மையான விவரங்கள் கொடுத்துத் திட்டாதீர்கள். அது நேரிலே திட்டுவது போலத்தான். நேரிலே திட்டினால் உடனடியாக ஆப்பு. வலைப்பதிவில் திட்டினால், அது அவர் கண்ணில் படும் வரை லைஃப் அவ்வளவுதான்.

புதிய வலைப்பதிவர்கள் எந்த எந்த விதங்களில் கவனமாக இருக்க வேண்டும்?

– ‘இது என் சொந்த இடம். இங்கே நான் எழுதுவது – நானாக வேறு யாருக்கும் சொல்லாத போது – வேறு யாருக்கும் தெரியாது’ என்று ஒரு போதும் நினைக்க வேண்டாம். யாராவது கூகிள்லே தேடும் பொழுது, அந்த தேடுசொல், உங்கள் பதிவிலே இருந்துத் தொலைத்துவிட்டால், கூகிள் காட்டிக் கொடுத்து விடும். நீங்கள் அந்த பதிவை நீக்கிவிட்டாலும், Google Cache காட்டிக் கொடுத்து விடும். உங்களைத் தவிர வேறு யாரும் படிக்கக் கூடாது என்று நினைக்கிற சங்கதிகளை, உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதிப் போட்டு, நீங்களே அதை வாசித்து மகிழுங்கள். ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்கு மட்டும் என்றால், வலைப்பதிவை, ப்ரைவேட் இடமாக்கி, நீங்கள் விரும்புபவர்களுக்கு மட்டும் அனுமதி தாருங்கள். இதற்கான வசதி, ப்ளாக்ஸ்பாட்டிலும் இருக்கிறது, வேர்ட்பிரஸ்ஸிலும் இருக்கிறது.

– கூடுமான வரைக்கும் சொந்த விவரங்களை – நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர், பதவி, கணவன் / மனைவி பெயர்கள், இல்ல முகவரி – பதிவுகள் மூலமாகவோ அல்லது ப்ரொஃபைல் வழியாகவோ வெளிப்படுத்தாதீர்கள். அவசியம் ஏற்பட்டால் ஒழிய, நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடாதீர்கள். பிறரது கவனத்துக்கு கொண்டு வந்தே தீர வேண்டும் அல்லது பிறரை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று நினைக்கிற விஷயங்கள் – உதாரணமாக மல்டிநேஷனல் வங்கி ஒன்றுக்குச் சென்ற போது கசப்பான அனுபவம் ஏற்பட்டால் , அந்த அனுபவத்தைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் போது, உண்மையான விவரங்களை எழுதுவதில் தவறில்லை. அதாவது, நீங்கள் குற்றச்சாட்டாக வைக்கும் விஷயங்களை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் இருந்தாலோ, அல்லது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் தைரியமாகச் சந்திக்க முடியும் என்று நினைக்கும் பட்சத்திலோ உண்மையான விவரங்களை எழுதுவதில் தவறில்லை. ஆனால், ‘எங்க பிராஜக்ட் மேனேஜர் ஒரு ஜொள்ளுபார்ட்டி’ என்று, அவர் பெயர், கம்பெனி பெயர் எல்லாம் குறிப்பிட்டு எழுதாதீர்கள். கருத்துச் சுதந்திரத்தையும் இதையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். எங்கேயாவது அந்த பிராஜக்ட் மேனெஜர் கண்ணில் பட்டு பிரச்சனை ஏற்பட்டால், அதைச் சமாளிக்கத் தைரியம் இருந்தால் மட்டுமே எழுதுங்கள்.

– புனைப்பெயர் வைத்துக் கொண்டு எழுதுவதில் ஏதும் தவறு இல்லை. உதாரணமாக, பெரும்பாலான அரசு அதிகாரிகள், புனைப்பெயரில் தான், வலைப்பதிவு எழுதுகிறார்கள், பின்னூட்டமும் அளிக்கிறார்கள். சொந்தப் பெயரில் எழுதும் பொழுது மிகுந்த கவனம் தேவை. வலையில் அதிக நடமாட்டம் கொண்டவராக இருந்தால், உங்கள் பெயரைப் போட்டு கூகிளிலே தேடினால், உங்களைப் பற்றி நிறைய விவரங்கள் தெரியவரும், நீங்கள் எழுதியது, உங்களைப் பற்றி பிறர் எழுதியது மூலமாக. நீங்கள் சொந்தப் பெயரில் தொடர்ந்து வலைப்பதிவு எழுதுபவராக இருந்தால் உங்கள் பெயரை கூகிளிலே உள்ளிட்டுத் தேடினால், முதலில் வருவது உங்கள் வலைப்பதிவின் பெயர் / profile தான். வேண்டுமானால் சோதித்து பாருங்களேன். பத்ரி, பத்மா அரவிந்த், ஜெயஸ்ரீ கோவிந்தராஜன், பி.கே. சிவகுமார் . நிறைய ஹெச்.ஆர் அதிகாரிகள், இப்போது, வேலைக்கு ஆள் எடுக்குமுன், அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்த யுத்தியைப் பிரயோகிக்கிறார்கள். நீங்கள் கேரீயர் ஓரியண்ட்டட் ஆக இருந்தால், வலைப்பதிவுகளில் எழுதும் பொழுது கவனம் தேவை. எழுத வேண்டும், ஆனால் பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்தால் புனைபெயரில் எழுதுங்கள். கவனம், புனைப்பெயரில் எழுதினாலும், நீங்கள் வசிக்கும் இடத்தின், உங்கள் சேவையை வழங்குபவர்களின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் எழுதமுடியும்.

– இது பெண்களுக்கு : வலையுலகுக்கும் நிஜ உலகுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. நிஜ உலகில் அத்தனை வக்கிரங்களும் விகாரங்களும் இங்கும் உண்டு. அறிமுகம் இல்லாத வலைப்பதிவாளர்களிடம் புகைப்படங்கள், செல்ஃபோன் எண்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ப்ரொஃபைலில் புகைப்படம் போடாதீர்கள். photoshop என்று ஒரு அபாரமான செயல்நிரலி இருக்கிறது. 🙂 இது அடையாளம் தெரியாத உலகம், நம்மை யார் என்ன செய்து விட முடியும் என்று கேர்லஸ் ஆக இருக்காதீர்கள்.

கேர்லஸ் ஆக இருந்தால் என்ன ஆகும்?

தலை ஹேர்லஸ் ஆகிவிடும் 🙂 .

9 thoughts on “Few Things Newbie Bloggers Should Be Aware Of…

 1. Wonderful post. நானும் ஒரு வெறுப்பில் இந்த பதிவை போட்டுவிட்டு பிறகுதான் தெரிந்தது, நிறையபேர் சைலண்டாக படிக்கிறார்கள் என்று.
  You post is educational.

 2. அருமையான, தேவையான பதிவு பிரகாஷ்.

  கில்லியில் ஒரு மூலையில் ( read/write tamil உக்கு பக்கத்தில்) பின் அடித்து மாட்டிவிடுங்கள் 🙂

 3. //- இது பெண்களுக்கு : வலையுலகுக்கும் நிஜ உலகுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. நிஜ உலகில் அத்தனை வக்கிரங்களும் விகாரங்களும் இங்கும் உண்டு. அறிமுகம் இல்லாத வலைப்பதிவாளர்களிடம் புகைப்படங்கள், செல்ஃபோன் எண்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ப்ரொஃபைலில் புகைப்படம் போடாதீர்கள். //

  உண்மைதான் என்றாலும், “மூடிக்கோ, இல்லாட்டி கற்பழிச்சுடுவான், அப்புறம் அழாதே” என்பதற்குச் சமம்.

 4. //உங்களைத் தவிர வேறு யாரும் படிக்கக் கூடாது என்று நினைக்கிற சங்கதிகளை, உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதிப் போட்டு, நீங்களே அதை வாசித்து மகிழுங்கள். //

  :-)))

 5. பிரகாஷ்
  இங்கே (அமெரிக்காவில்) குடிமகன்களின்(citizen journalism) ஊடகம் பிரபலமாகிக்கொண்டிருக்கிறது. நிறைய விபத்துகள், பாலம் உடைந்து விழுதல் போன்றவை குடிமகன்களால் செல் பேசியில் உடனுக்குடன் புகைப்படம் எடுத்து தொலைகாட்சிகளுக்கு அனுப்ப படுகிறது. இதற்கு தொலைகாட்சிகள் பணம் தர தேவையில்லை. எதிர்பாராமல் நடக்கும் விபத்துகளை உடனுக்குடனே மக்களே படம் பிடிக்க முடிவது போல, நிருபர்களால் சம்பவம் நடக்கும் இடத்துக்கு செல்ல முடியாமல் படம் பிடிக்க முடிவதில்லை. அதே போல பதிவுகளும், குறிப்பாக அரசியல் பதிவுகள் நிறைய பேரால் விமர்சனம் செய்யப்படுகிறது.
  சொல்வதிலும் செய்வதிலும் உண்மையும், நாம் அதற்கான விளைவுகளை ஏற்றுக்கொள்ளவும் பழகினால் எந்த முன்னெச்சரிக்கையும் தேவையில்லை. ஆனால் சிலரால் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உண்டு என்பதென்னவோ உண்மைதான்.

 6. Moral of the story: Avoid blogging as far as possible or fill it with how to bake idli or cut your hair
  type of posts :).

 7. கேர்லஸ் ஆக இருந்தால் என்ன ஆகும்?

  தலை ஹேர்லஸ் ஆகிவிடும்

  Now I know why you ….. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s