Why I didn’t like paruthi veeran

முன் குறிப்பு : ஸாரி மூக்கரே 🙂

1. நான் பருத்தி வீரனைப் பார்த்தது படம் வெளிவந்து நாற்பது நாள் கழித்து. நல்ல காட்சிகள் அனைத்தையும் சின்னத்திரையில் பார்த்து செரித்துவிட்ட பின், படத்தில் சொல்லும் படியாக வேறு ஒன்றுமே இல்லை.

2. முத்தழகின் அப்பா கழுவச்சேர்வை. படத்தின் பிரதான கதாபாத்திரமான இந்த ஆள், ஒரு குழப்பக்கேஸ். சின்ன வயசு முத்தழகை, முத்தம் கொடுத்து கலாட்டா செய்த பருத்தி வீரனை விசாரிக்கப் போகும் போதே, துணைக்கு பொணந்தின்னியை அழைத்துக் கொண்டு போவது -அதுவும் பருத்தி வீரன் வீராப்புடன் முத்தம் தந்ததை ஒத்துக் சொல்லும் போது, அவனுக்கு உரிமை இருக்கிறது என்று சேம் சைட் கோல் அடிக்கும் பொணந்தின்னியை – , தன் மகள் முத்தழகு , பருத்திவீரனுடன் சுற்றுகிறாள் என்று அரசல் புரசலாகக் காதில் விழுந்தும், அதை கண்ணால் பார்க்கிற வரை பொறுத்திருந்து மகளைப் போட்டு மொத்துவது, கையாலாகாமல் மனைவியை அடிப்பது என்கிற மாதிரியான கோழையான குணசித்திரம், கடைசிக் காட்சியில், பருத்திவீரனைப் போட்டுத் தள்ளிரு என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. படம் நெடுக, கத்தி குத்து, அரிவாள் வெட்டு என்று சரமாரியாக வருவதால், யார் அரிவாள் எடுத்தாலும் பார்க்கிறவர் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்திருப்பாரோ இயக்குனர்?

3. படத்திலெயே ஒரிஜினலாக படைப்பு முத்தழகு. குரல், உடல்மொழி, பார்வை, வசன உச்சரிப்பு என்று ஒழுக்கமாக வரும் முத்தழகை, கர்நாடக சங்கீதப் பாடலை – அதுவும் ராக ஆலாபனைகளுடன் – பாடவைத்தது ஒரு முரண்.

4. கடைசி அரைமணிநேரத்தை தவிர்த்து விட்டுப் பார்த்தால், இது ஒரு முழுக்க முழுக்க காமெடிப் படம். இது போன்ற திசைதிருப்பல்-திரைக்கதை அமைப்பு, எனக்குப் பிடிக்காது.

5. கிளைமாக்ஸ் காட்சி. காலங்காலமாக, நாயகனைப் பழிவாங்க, நாயகனின் தங்கையையோ, அல்லது காதலியையோ துன்புறுத்துவது ( கொலை / பாலியல் வன்முறை ) வழக்கம். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கில்லை என்கிற போது கொஞ்சம் கடுப்பாகத்தான் இருக்கிறது. படம் முழுக்க, வீரம் வெளிப்படும் கதாபாத்திரமான முத்தழகை, அடிவாங்கத் தெம்பு வேணாமா என்று கோழிக்கறியை அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொள்ளும் முத்தழகை, கடைசியிலே,சுவற்றில் இருக்கும் ஆணியால் அடிபட வைத்து, நினைவு தப்பும் போது நாலுபேர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவது போன்ற போங்கு வேறு எதுவும் இல்லை. – சுவற்றில் அந்த ஆணி மட்டும் இல்லை என்றால், அவள் அந்த நான்கு பேரை வெட்டி சாய்த்திருப்பாள் என்பது போலத்தான், நமக்கு முத்தழகு படம் முழுக்கத் தோன்றுகிறாள் – அவள் அப்படிப்பட்ட தண்டனையைப் பெற வேண்டிய நியாயம் ஏதும் திரைக்கதையில் இல்லை. முற்போக்கு என்று பேர் பண்ணும் பல படங்களில், இது போல -வசதிக்காக பெண்ணைக் காவு கொடுக்கும் – சிக்கல்கள் உண்டு. இது பற்றி பிறகு விரிவாக

6. குறத்தி இனப்பெண்ணை, மேல்சாதியைச் சேர்ந்தவர்கள் கொடூரமாகக் கொலை செய்வதற்கு முன்பு, அந்தப் பெண்ணையும் – தன் வியாபாரத்துக்கு இடைஞ்சலாக இருப்பவர்களைக் – கொடூரமாகக் கொலைசெய்பவளாகக் காண்பித்து, திரைக்கதையை ‘பேலன்ஸ்’ செய்வது.

இக்குறைகளைத் தாண்டி, பருத்தி வீரன், நுட்பத்திலும், உருவாக்கிய விதத்திலும், நடிகர்களின் தேர்ந்த நடிப்பிலும் பல உயரங்களைத் தொட்டிருக்கிறது என்பதை உண்ர்ந்திருக்கிறேன். முன் தீர்மானங்கள் இல்லாமல், திரையரங்குக்குள் சென்று உட்கார்னவர்களை, கட்டிப்போடும் விதமாகக் கதையைச் சொல்வதும், அதற்காக, பலரும் தொடத்தயங்கும், கதை, பின்புலம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கும், அனுபவமில்லாத நடிகர்களைத் தெரிவு செய்து சொல்லிக் கொடுத்து நடிக்க வைக்க ஒரு துணிச்சல் வேண்டும். அதற்காக அமீருக்கு ஒரு பூச்செண்டு.

13 thoughts on “Why I didn’t like paruthi veeran

  1. பிரகாஷ்,

    டைட்டில் வச்சுட்டு படம் எடுத்தீங்களா 😉

  2. இந்தப் படத்துல நம்ம ரசனை ஒத்து போகுது.

    உங்க இடுகைக்கு ஏன் ஆங்கிலத் தலைப்பு வைக்கிறீங்கன்னு புரில? SEO? font பிரச்சினை? பின்னூட்டமும் firefoxல் தெரிய மாட்டேன் என்கிறது 😦

  3. நற நற…..:-)

    பாயிண்ட் 1 மற்றும் 4 க்கு நான் ஒன்றும் சொல்ல ஏலாது. அது உம்ம ப்ராப்ளம்.

    பாயிண்ட் 3 – அதே. சூப்பர். முத்தழகு அம்சம்.

    பாயிண்ட் 2 – எல்லா பயபுள்ளையும் பெத்ததுங்ககிட்ட கொழைதான். விதிவிலக்கே இல்லை. கழுவச்சேர்வை புரியணுமிண்ணா பெத்து வளத்தாதான் புரியும்.
    மொட்டை பசங்களுங்கு புரியுமா..?? 🙂 😉

    பாயிண்ட் 4 – நிழல்கள் பிரசன்னா ஏற்கனவே எழுதிய விஷயம். சும்மா பருத்திவீரன் மைனர் விளையாட்டை தண்டிக்கிறேன் பேர்வழின்னு டைரடக்கர் ரொம்ப prude மாதிரி அந்த பொண்ணை போட்டுத்தள்ளிட்டாரு. அதே சமயம், வேற யாராவது வெட்ற மாதிரியோ, கற்பழிக்கிற மாதிரியோ இருந்திருந்தா, படத்தின் முடிவில ஜனங்க சொல்ர “த்ஸொ..த்ஸோ” கொஞ்சம் கொறஞ்சிருக்கும். இவ்ளோ அழுகாச்சி வந்திருக்காது. எனவே அக்ரீட். வியாபாரத்தனமான காம்ப்ரமைஸ்.

    பாயிண்ட் 6 – நீங்க சொல்ற வரைக்கும் இதுல ஜாதி விஷயம் நான் யோசிக்கவே இல்லை. அரிவாள்/ வன்முறை வசப்பட்ட அந்த சாராய அம்மணி, அதாலேயே சாகிறார் என்றுதான் நினைத்தேன். in fact, அந்த ஜாதி விட்டு ஜாதி கல்யாணம்தான் சாதி வெறி பிடித்த கழுவச்சேர்வைக்கு பருத்திவீரனை தன் மகளிடமிருந்து விலக்கி வைக்கவும், முடிவில் அவளை பறிகொடுக்கவும் காரணமாக இருக்கிறது.

    நான் நிறைய கழுவச் சேர்வைகளை பார்த்திருக்கிறேன். 🙂
    😉

    போனாப்போவுது. ஒரு கேள்வி. சோப்ளாங்கி படமெல்லாம் பாத்துட்டு பேசாம இருக்கீங்க. ஒரு நல்ல படத்துல இவ்ளோ நோண்டணுமா..?? 😦

  4. எந்த ஒரு நல்ல விஷயத்துலயும் குத்தம் கண்டுபிடிக்கறது ரொம்ப சுலபந்தான்… அதுக்காக இப்படியா !! படிச்சவுடனே “கொஞ்சம் ஓவர்” தான்னு தோனுச்சு.

    மூக்கு சுந்தர் நான் கேக்கனும்னு நெனச்சத கேட்டுட்டதால வேற மாதிரியா என் உண்ர்ச்சிய வெளிப்படுத்திருக்கேன்.

  5. பிரகாஷ்,

    சிவாஜி எப்போ ரிலீசாகுது? டிக்கெட் வாங்க ஏற்பாடு பண்ணியாச்சா? 🙂

    -மதி

  6. Bossu, Neenga dhaan Gilli.in Prakashaa ?

    Romba cliched imagery, cliched techniques padathula irukku – accepted. But adhey samayam, over the last 5-6 years tight-aaga kadhai ottum thirmai, tamil directorskitta kitta kandippa increase aagiyulladhu. But I am a bit of a sucker for these well executed ooru-kadhaigal with aruvaa pasanga, since I am from those parts and have had school mates like that. Off the top of my head, well executed Porul movies Virumandi > Kaadhal > Paruthi Veeran > Veyyil.

    Sorry about the Tanglish – yet to learn how to type in tamizh.

  7. //போனாப்போவுது. ஒரு கேள்வி. சோப்ளாங்கி படமெல்லாம் பாத்துட்டு பேசாம இருக்கீங்க. ஒரு நல்ல படத்துல இவ்ளோ நோண்டணுமா..?? //

    நமக்கு புடிச்சவங்ககிட்டதான் உரிமையா சண்டை போட முடியும் 🙂

  8. ரத்தன் : சுந்தர்க்கு சொன்ன அதே பதில் தான் உங்களுக்கும்.,,

    மதி : எப்ப ரீலீஸ்னே ஐடியா இல்லை… ஆளாளுக்கு ஒரு தேதி சொல்றாங்க… ரீலிஸ் தேதி தெரிஞ்சதும், அந்தத் தேதியிலே இந்த பதிவை தெறந்தே வெச்சிக்கங்க 🙂

  9. நான் பாதி பருத்திவீரன் பார்த்திருக்கிறேன். பார்த்தவரை பிடிக்கவில்லை. யாருக்கும் (படமெடுக்கிற யாருக்கும்) either உண்மையான கிராமம் தெரியவேயில்லை அல்லது இப்படி எடுத்தாத்தான் காசு பார்க்கலாம்னு அருவாள தூக்குறாங்க-ன்னு நினைக்கிறேன். முழுப் படமும் பார்த்து முடித்ததும் போஸ்ட் போடறேன்.

Leave a comment