Wish I had written

மறக்கமுடியுமா?
——————–

மூணாம்வகுப்பிலே
மூக்குத்தோண்டியதை
மறக்கமுடியுமா?

வீடுபெருக்கும்
முனியம்மாவைப் பார்த்து
விஸில் அடித்ததை
மறக்கமுடியுமா?

ஆத்தங்கரையிலே
அல்வா அவுக் அவுக்கின்னு தின்னு
பேதியாகி கோரைப்புல்லு பின்னாடி
குந்தினதை மறக்கமுடியுமா?

ஏழாம் கிளாசு வாத்தி
இங்கிபிலீஸ¤ கத்துத்தந்தக்கா,
எலந்தைப்பழம் தின்னதை
மறக்கமுடியுமா?

சினிமா போய்
இரவிலே சைக்கிளிலே
நிலவிலே திரும்பி வந்ததை
மறக்கமுடியுமா?

இப்போது,
எட்டாத தொலைவிலே
ரிச்மண்டிலே
மண்டிபோட்டு
கம்பியூட்டரிலே
மாங்குமாங்கு
தேங்கா ஸைஸிலே
ஜாவா எழுதினாலும்
இஸ்மயில் பாவா
மூணாம் வகுப்பிலே
மூக்கணாம்ப்பட்டி முனிசிபல் ஸ்கோலிலே
மூக்குத் தோண்டியதையும்
முனியம்மாவையும்
மறக்கமுடியுமா?

அதனால், தீர்மானத்துக்கு வந்தாச்சு.
லே ஆப்போ லேத் வர்க்கோ
ரிச் மண்டு ஜாப்பை விட்டுவிட்டு
மூன்றாம் வகுப்பிலே எலந்தைப்பழம் தின்னு
திரும்ப இங்கிபிலீசு படிக்க
பாபாக்கு ஹாயா விஸில் அடிக்க
கோரைப்புல் கிராமத்துக்குக்
கோவணம் கட்டப் போகிறேன்.

முனுசாமி! முனியம்மா!!
வட் எவர் யு டூ, கிவ் இட் அப்.
பிளீஸ் ரிட்டர்ன் பக் டு
யுவோர் பழைய பாத்திரம்.

ஜாவாவே உன் உப்பு வாய்க்கு
ஒரு மூட்டை அல்வா.

கண்டினியூட்டி ஸாட்!
டேக் டென் டு த பவர் இன்பினிட்டி!
ஆக்ஸன் பிளீஸ்!!

உள்ளிவாயன் பெருங்காயடப்பா.

[நன்றி : பழைய காப்பிக் கடை]

6 thoughts on “Wish I had written

  1. எங்கய்யா ரங்க்பாஷ்ஷ்யம்..??

    ( சாரி..கொஞ்சம் மப்பு..ரொம்ப நாளைகப்புறம் உம்ம எழுத்தை பாத்தேனா…ஆ….ஆடிப் போயிட்டேன்..)

  2. ரிச்மண்ட், வர்ஜீனியாவிலா இருக்கிறீர்கள்? சந்தித்த மாதிரி தெரியவில்லை. மடல் அனுப்புங்கள், சந்திக்கலாம்.

  3. ரிச்மண்டா? அது எங்கே இருக்கிறது? எனக்கொண்ணும் தெரியாது…. இந்த கவுஜை யை எழுதினது நான் இல்லை. உள்ளிவாயன் என்கிற அன்பர், நான் சும்மா சுட்டு இங்கே போட்டுகிட்டேன்

  4. அடப்பாவிங்களா
    சாந்த சொரூபன் தகர டப்பாவும் உள்ளிவாயன் பெருங்காயடப்பாவும் ஒண்ணுங்களாடா
    மூக்கு அன்னிக்கிருந்து இன்னிக்குவரைக்கும் சுத்தமா கொக்குக்கு ஒத்தகாலு முயலுக்கு மூணுகாலுன்னே நிக்குது.
    உக்காருப்பா. இன்னிக்காச்சும் உன்மை உறங்காமே எழுந்திரிக்காதா?

Leave a comment