Kutrapathrikai – Film Review

குற்றப்பத்திரிகை – விமர்சனம்

பதினான்கு ஆண்டு வனவாசத்துக்குப் பிறகு இப்போது தான் வெளியே வருகிறது என்று டைட்டில் கார்டில் போடுகிறார்கள். அந்த காலத்தில் , 14 ஆண்டுகள் வனவாசமிருந்த தசரதபுத்திரன், தன்னுடனே இருந்த மனைவியை, உரிமையுடன் நெருப்பிலே குதிக்கச் சொன்னதிலாவது ஒரு லாஜிக் இருக்கிறது…ஆர்கே செல்வமணி என்ன நமக்கு மாமாவா இல்லை மாப்பிள்ளையா? சம்மந்தமே இல்லாமல் நாம் ஏன் அக்கினிப்பரீட்சையில் இறங்க வேண்டும்?

புரியலையா? படம் பாருங்க புரியும்.

ராஜீவ்காந்தி கொலை நடப்பதற்கு சில தினங்கள் முன்பு துவங்கும் கதை, கொலை செய்த சிவராசன் கும்பலை வளைத்துப் பிடிக்க முயலும் போது, அவர்கள் கூண்டோடு தற்கொலை செய்து கொள்ளும் வரை நீள்கிறது. பத்திரிக்கைகளில் இருந்த சேகரித்த செய்திகள், அரசல் புரசலான சேதிகள், புகைப்படங்கள் ஆகியவற்றைக் கொண்டே காட்சிகளை அமைத்திருக்கிறார். கதையில், சிவராசன், ஜெயலலிதா, கருணாநிதி, ராஜீவ் காந்தி என்று நிஜப்பெயர்களுடனே வருகிறர்கள். ரகுமான், ராம்கி, ரோஜா, ரம்யாகிருஷ்ணன் போன்ற கதாபாத்திரங்களை உள்ளே நுழைத்து கதையை நகர்த்துகிறார்.

சிவராசனாக மன்சூரலிகான், ஹரிபாபுவாக லிவிங்ஸ்டன், கர்த்திகேயனாக விஜயகுமார், ராஜீவ் காந்தியாக அனுபம் கேர் நடிக்கிறார்கள். மரகதம் சந்திரசெகர், அன்பரசு, முருகன், நளினி, பத்மா, தணு, கொடியக்கரை சண்முகம், சாந்தன்ம. ராபர்ட் பயஸ் , பேரறிவாளன் ஜாடையில் எலாம் சிலர் வந்து காணாமல் போகிறார்கள்.

தணிக்கைக் குழுவின் கைங்கர்யத்தில், படம் அங்கங்கே துண்டு துண்டாகத் தொங்குகிறது. பல இடங்களில் காட்சி ஒன்றாகவும், வசனம் வேறாகவும் இருக்கிறது. இலங்கை, ஈழம், புலி, விடுதலைப்புலி போன்ற வார்த்தைகள் எங்குமே தென்படவில்லை. இடைவேளைக்குப் பிறகு ( கொலை நடந்த பின்பு ) காட்சிகள் வசனங்களின்றி நகர்கிறது. நடுநடுவே, ராம்கி, ரகுமான் போன்றவர்களின் சொந்த வாழ்க்கை வேறு.

பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு படத்தைப் பார்க்கிற சுவாரசியத்துக்காகவே சென்றிருந்தேன். நல்ல தீனி. அனைவரும் மாருதி 800 காரிலேயே பயணம் செய்கிறார்கள். யாரிடமும் செல்போன் இல்லை. கிட்டதட்ட ஈஸ்ட்மென் வண்ணம். குண்டு வெடிப்புக் காட்சிகள் எல்லாம் பூண்டு வெடி வெடிப்பதைப் போன்ற எஃபக்ட் …. நல்ல காமெடியாக இருந்தது.

வடிவேலு போன்றவர்கள் ஹீரோவாக நடிக்கும் படத்திலேயே, இதை விட அதிகமான ப்ரொடக்ஷன் க்வாலிட்டி பார்த்த பின்பு, இப்படம் பல இடங்களில் வெறுப்பேற்றுகிறது.

ஒருவேளை, அப்போதே வெளிவந்திருந்தால், கொஞ்சம் கவனத்தை ஈர்த்திருக்கும்.

ஆனால் அது நம்ம பிரச்சனை இல்லையே? என்ன சொல்றீங்க?

6 thoughts on “Kutrapathrikai – Film Review

  1. For the same reasons, I thought I will venture this movie tonight. Thakka samayathil vandhu ennai kaapatriyadharku mikka nandri…

  2. அந்தக் காலகட்டத்தில் இந்தப் படம் வந்திருந்தால் பரபரப்புக்காகவே ஒடியிருக்குமோ என்னவோ? கூடவே செல்வமணியும் ராஜமுத்திரை, அதிரடிப்படை வகையறாக்களை எடுக்காமல் இது மாதிரிப் பரபரப்பான செய்திகளோடு படம் எடுத்து இன்னும் 5 வருஷம் பொழைப்பு நடத்தியிருப்பார்.

  3. ஆல் பேட் டைம் பார் செல்வமணி. படத்துல இவ்வளவு வருஷ்ம் கேஸ்ல இருக்கிற அளவுக்கு எதுவுமே இல்லியாம். பாக்கலாம் புலன் விசாரனை- 2 எப்படி வருதுன்னு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s