முதன் முதலாக…..

சைட் அடித்த அனுபவத்தைப் பற்றியோ அல்லது காதல் கடுதாசு கொடுத்த அனுபவம் பற்றியோ எழுதப்போகிறேன் என்று நினைத்து வந்தவர்கள் சற்று ஒதுங்குங்கள். இது வேற மேட்டர்.

**********

1986. ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ப்ரேயர் முடிந்ததும் ( Jesus loves me! this I know, For the Bible tells me so.. என்ற பாட்டைத் தான் பாடுவார்கள். யாருக்காவது இதன் முழு வடிவம் தெரியுமா? ). பிரின்சிபல் அறிவிப்பு செய்தார், ” இன்று நம் பள்ளிக்கு கம்ப்யூட்டர் வந்திருக்கிறது” என்று.

*******

பிரின்சிபல் அலுவலகத்துக்கு பக்கத்தில் இருந்த அறையில் தான் கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. கண்ணாடிக் கதவெல்லாம் போட்டு, ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் உள்ளே இருந்தார்கள். உணவு இடைவேளையின் போது உள்ளே எட்டிப் பார்த்தோம். அந்த வஸ்து குட்டியாக இருந்தது. பச்சை நிறத்தில் எண்கள், எழுத்துக்கள். கீபோர்ட், மானிட்டருடன் ஒட்டிக் கொண்டு, வினோதமாக இருந்தது. அது என்னவெல்லாம் செய்யும் என்று கேட்டறிந்த போது, சில காலம் முன்பு விக்ரம் படம் பார்த்ததில் கம்ப்யூட்டர் பற்றி மனதில் ஏற்பட்டிருந்த பிம்பம் சரிந்தது.

*******

மூன்று வருடங்களுக்குப் பிறகு, உயிரியியல் தொல்லையில் இருந்து தப்புவதற்காக , கணிப்பொறியியல் எடுத்ததில், இரண்டாம் நாள் லாபில் தான், கணிப்பொறியை கிட்டத்தில் பார்க்கக் கிடைத்தது. விடுமுறையில் , என்னைப்போல ஊர் சுற்றாமல், வேர்ட்ஸ்டார், லோடஸ், டிபேஸ் போன்ற போன்ற தில்லாலங்கடி சாஃப்ட்வேர்களைக் கற்றுத் தேர்ந்து, மறக்காமல் சான்றிதழ்களைக் கக்கத்திலேயே வைத்துக் கொண்டு சுற்றும் சி.பழனியப்பன் தான், இது இது இன்னது என்று பாலபாடம் நடத்தினவன். அப்போது வன் தகடு எல்லாம் கிடையாது. கணிப்பொறியில் சேமித்து வைக்கவெல்லாம் முடியாது. நான் ஸ்டிக் தவா போல இருக்கும் ஐந்தரை இஞ்ச் ஃப்ளாப்பி தகடு மூலமாகத்தான் ஆபரேடிங் சிஸ்டத்தை லோட் செய்து , வேலை செய்து விட்டு இன்னொரு நான் ஸ்டிக் தவாவிலே சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டில் பெரிய எண் எது என்று கண்டு பிடிப்பது, கூட்டல் கழித்தல் போன்ற கணக்குகளைப் போடுவது ஆகிய அல்ப சொல்ப வேலைக்கெல்லாம் எதுக்குக் கணிப்பொறி என்று தோன்றியது நிசம்.

********

கணிப்பொறி மேஜர் என்பதால், கல்லூரியில் தான் முதன் முதலாக எனக்கே எனெக்கு என்று கணிப்பொறி கிடைத்தது. முழுக்க முழுக்க யூனிக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம். சடார் சடார் என்று க்ராஷ் ஆகும் விண்டோஸ் இயங்குதளத்துடன் மல்லுகட்டும் போது, அந்த காலத்திலேயே, அதிலே இருந்த வசதிகளும், வேகமும், ஞாபகத்துக்கு வருகின்றது. கல்லூரிக்குப் பிறகு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. முதன் முதலாக வண்ணத்திரையைப் பார்த்ததும் அங்கேதான். AT 386 கணிப்பொறி அப்போதுதான் அறிமுகம் ஆனது.

*******

சென்னையில் அப்போது ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர் என்ற நிறுவனம் பிரபலமானது. மெர்க்கண்டைல் வங்கி விவகாரத்தில் அடிபடும் சிவசங்கரன் அவர்களின் நிறுவனம். Siva AT என்ற பெயரில் கணிப்பொறிகளை அசம்பிள் செய்து சென்னையைக் கலக்கிக் கொண்டிருந்தார்கள். துட்டு கொழுத்த நண்பன் ஒருவன், கணிப்பொறி வாங்க வேண்டும் என்று என்னையும் அழைத்துக் கொண்டு போனான். விசாரித்த போது, நிகர விலை, அறுபத்தைந்தாயிரத்துச் சொச்சம் என்றார்கள்.

வாங்கினான்.

******

கணிப்பொறி தொடர்பில்லாத வேலை என்பதால், டைம்ஷேரிங் அடிப்படையில் தான் , அலுவலகத்தில் கணிப்பொறி கிடைக்கும். வேலை செய்கிற அனைவருக்கும், ஆளுக்கொரு கணிப்பொறி வாங்கித் தர வேண்டிய அவசியம் இல்லாத வேலைச் சூழ்நிலை. தொலைத்தொடர்புத்துறை இணையச் சேவையை அறிமுகப்படுத்திய சில மாதங்களில், அலுவலகம் சார்பாக, க்யூவில் நின்று விண்ணப்பப் படிவம் வாங்கி, பூர்த்தி செய்து அனுப்பிவிட்டு காத்திருந்த போது, வாராது வ்ந்த மாமணி போல இணையம் வந்தது. நூறு மணி நேரத்துக்கு ஐந்தாயிரம் ரூபாய். அந்த வருடம் மார்ச் மாதத்தில்தான் முதன் முதலாக யாஹூ மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிக் கொண்டேன். icarus1972usATyahooDOTcom. இன்றும் உயிரோடிருக்கிறது. வருடம் 1997.

*****

இது மார்ச் 2007.

*****

4 thoughts on “முதன் முதலாக…..

  1. 1994-ல்தான் முதல் முதல் கணிப்பொறியைக் கையால் தொட்டது. முதல் பரிசமே ப்ரோக்ராம் எழுதுவதற்காக (ஹோம் வொர்க்). யுனிக்ஸ். அடுத்த வருடம் டிஸ்ஸெர்டேசன் – டிஜிடல் இமேஜ் ப்ராஸ்ஸிங்க். ஆராய்ச்சியின் அப்ஜெக்டிவ் – assessing the suitability of pixel based classifers for classifying microwaver remote sensing images. என்னோட கன்க்ளுஷன் – we need texture based classifiers…
    It was a steep curve for me, as always.

  2. btw, vax 11/780 machines theriyumaa? அதுலதான் முதல் Digital Image processing படிச்சது. அப்புறம், PCல DIPன்னா, graphics terminal and alphanumeric terminalனு தனித்தனியா உபயோகப் படுத்திதான் என்னோட டிஸ்ஸெர்ட்டேஸன். 🙂

  3. பள்ளிக்கூடத்தில் உயிரியல் படிச்சிட்டு,கல்லூரியில் தான் முதலில் பொட்டியைப் பார்த்தேன்.அதே Lotus 1-2-3
    :-)).’98 hotmail-இல் முதல் e-mail id.ம்ம்ம்…
    ..Ag

Leave a comment