ஆகவே, இசைஞானி அவர்களே,

Image Source : http://nishusworld.blogspot.in/
Image Source : http://nishusworld.blogspot.in/

தலைமுறைகள் படத்தைப் பார்த்துவிட்டு ஒரு அன்பர், படத்துக்கு இசை அமைத்திருந்த இளையராஜாவை, இந்த மாதிரியான ஒரு ஆஸ்கார் ரேஞ்சு படத்துக்கு இப்படியா பருப்பில்லாமல், சாரி, பொறுப்பில்லாமல் இசை அமைப்பீர்கள் என்று அதட்டியதோடு மட்டுமல்லாமல், “Please, take some rest ilayaraja sir, i am waiting for you” என்று present continous tense இலே பழியாகக் காத்துக்கிடக்கிறார்.

ஆகவே, இசைஞானி அவர்களே,

அடுத்த படத்திலாவது, கீபோர்டு, கிட்டார், வயலின், தபலா ஆகிய இசைக்கருவிகளுடன், பொறுப்பு என்ற இசைக்கருவியையும் ஆர்க்கெஸ்ட்ராவில் சேர்த்துக் கொண்டு இசை அமைத்து தமிழ்ச்சினிமா இசையை வீனஸ், மார்ஸ், ஜூபிடர் ப்ளுட்டோ கிரகங்களுக்குக் கொண்டு செல்ல ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் நண்பரையும் அவரது *லைக்கர்களையும்* மன உளைச்சலிலிருந்து காப்பாற்றி அருளவும்.

ஏன்னா, இதுக்கெல்லாம் இன்சூரன்ஸ் கவரேஜ் கிடையாதாம்.

ஏர்டெல் சூப்பர் சிங்கரும் மிசுகினும்….

இளையராஜா ரவுண்டு என்பதால் ரெண்டு நாளாக ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நேற்றைய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மிஷ்கின் வந்திருந்தார். பாவனா ஜாலியாக வரவேற்றுப் பேச, மகாபா ஆனந்த் மட்டும் மம்மியை கண்ட மந்திரி மாதிரி பம்மினார். பேசும் பொழுது கொஞ்சம் அதிகப்படியான பயபக்தி. ஓ.நா.ஆ.கு படத்தை critically acclaimed என்று பாவனா குறிப்பிட, மிஷ்கின் சட்டென்று குறுக்கிட்டு

” அதல்லாம் இல்லை, அப்பறம் இது ஜோல்னாப் பையர்களுக்கான படம்னு நினைச்சுக்கப் போறாங்க… இது ஒரு சாதாரணமான திரில்லர் படம் .. என்ன குத்துப்பாட்டு மட்டும் கிடையாது”

என்றார்.

மிஷ்கின்,இந்த ஞானம் உங்களுக்கு கொஞ்சம் முன்னாலேயே வந்திருக்கலாம். அடுத்த படத்துல கொஞ்சம் பாத்துகிடுங்க, ப்ளீஸ்

ஆமாம். நிகழ்ச்சி நடக்கையிலே, இளையராஜா மீதான தன்னோட பக்தி, காதல் பத்தியெல்லாம் நிறையப் பேசினார். அப்படிப் பேசறப்ப சீனியண்ணன் எக்ஸ்பிரஷன் எல்லாம் பார்க்கணுமே…செம காமெடி. இருக்காதா பின்னே?

ஏங்கி ஏங்கி நான் கேட்பது…. உன்னைத்தானடா..

“ஏங்கி ஏங்கி நான் கேட்பது…. உன்னைத்தானடா..
தூங்கிப் போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா….
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா
தேங்கி போன ஒரு நதியென இன்று நானடா
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே
தன்னந்தனி காட்டில் இன்று காண வாடா..

இது நா. முத்துக்குமார்

NeethaanE en pon vasantham – Review

சமீப காலத்தில் , மிக மிக நுட்பமான உணர்வுகளை, இத்தனை நுணுக்கமாக திரையில் பிரதிபலித்து நான் பார்க்கவில்லை.

எப்படி, ஒரு dayscholar மாணவனுக்கு, என்ன எடுத்துச் சொன்னாலும், இன்ப, துன்பங்கள் கொண்ட ஹாஸ்டல் வாழ்க்கையின் மகத்துவம் புரியாதோ, அதே போல

காதல், எதிர்பாலருடனான நெருக்கமான platonic நட்பு, பிறர் காதலுக்குத் துணை போதல், ரெஜிஸ்ட்ரார் ஆஃபீசில் சாட்சிக் கையெழுத்துப் போடுதல், போலீஸ் ஸ்டேஷன் வாசம், துயரம் முற்றி மெக்டவல் சரக்குகளில் தஞ்சம் புகல் போன்ற

மாணவ வாழ்க்கையின் மிக சுவாரசியமான விஷயங்களை கண்டு கொள்ளாமல், படிப்பு வேலை என்று இன்ன பிறவற்றில் கவனம் செலுத்தி, சம்பாதித்து, பின்னர் ஒரகடத்தில் ஃப்ளாட்டு வாங்கி ( gated community, internation school அருகில்) செட்டில் ஆகியிருக்கும் first bench கோய்ந்தசாமிகளுக்கு இந்தப் படம் புரியாது.

‘ஃபேமிலி மெம்பர்ஸ்’ நிறைந்த செயற்கையான சில குடும்பக் காட்சிகள் தவிர்த்து, அத்தனை காட்சிகளும் கிட்டதட்ட செதுக்கி செதுக்கிச் செய்யப்பட்டவை. ( வழக்கமான அப்பர் மிடில்கிளாஸ் வாடை வீசும் சில தவிர்த்து ) வசனங்களும் , பாடல் பொருத்தியிருக்கும் இடங்களும் அட்டகாசம். ஜீவாவின் மூணாவது அட்டெம்ப்ட் ( பத்து வயசில் தொடங்கி, நாலுமுறை வெவ்வேறு காரணங்களுக்காகப் பிரிந்து பிரிந்து இறுதியில் சேர்வதுதான் மொத்தக் கதையுமே) நடக்கும் அந்தக் கடலோர கிராமத்தில் , சமந்தா சண்டை போட்டுப் பேசும் வசனங்கள் அனைத்தும்… sheer brilliance என்பார்களே அந்த இரகம்…

ஜிவாவிற்குத் திருமணம் நிச்சயம் ஆன பிறகு, நடு இரவில் அவரைப் பார்க்க சமந்தா வர, இனி செய்ய ஒன்றுமில்லை என்ற பாவனையில் தத்தமது காதலை, இருவரும் நினைத்துப் பார்க்க, ஒரு விதமான extreme மனநிலையில், பிரிந்த பிறகான தங்கள் வாழ்க்கை பற்றி இருவரும் பேசிக் கொள்ள, அதன் அபத்தங்கள் ஒரு சிறு மௌனத்தைக் கொண்டு வர, அந்த மௌனத்தைக் கிழித்துக் கொண்டு , திடீரென்று , ” சற்று முன்பு பார்த்த நேரம் மாறிப் போக… “என்று Ramya Nsk பீரிட்டுக் கிளம்பி முதல் சரணத்துடன் அடங்க, மற்றொரு சிறு மௌனம் சூழ…..இப்படிச் செல்லும் அந்தக் மொத்தக் காட்சியும் முழு சிம்ஃபனி.

எல்லாம் முடிந்து சமந்தா கிளம்பும் அந்த நேரத்தில், ஜீவா..தன் கார் சாவியை சமந்தாவிடம் கொடுத்து ஓட்டச் சொல்லும் காட்சி… க்ளாஸ்….. ஜீவாவின் கேரக்டரைசேஷனுக்கான சிக்நேச்சர் அது… அந்த விட்டேத்தித்தனம்.. அந்த சுயநலம், லைட்டான ஆண் திமிர்… ரத்தமும் சதையுமான ஒரு நிஜமான கதாபாத்திரம்..

நம்பவே முடியலை….அடேய் கௌதம் மேனன்.. நீ அவ்ளோ பெரிய அப்பாடக்கரா…..

மற்றபடி, போரடிக்குது.. ரீரிகார்டிங் செரியில்லை, ஒண்ணுமே புரியலை, மொக்கை என்று சவுண்டு குடுக்கும் யூத்துகள், யூத்துகள் மாதிரி ஷோ காட்டும் பெருசுகள் அனைவருக்கும் சொல்லிக் கொள்வது..

கொஞ்சம் தள்ளிப் போய் வெளையாடுங்க… பந்து, மேல பட்ரப் போவது….

verdict : நாளை ஒன்ஸ்மோர் பாக்கப் போறேன்……

நீஎபொவ

Facebook, Comment section, Private Messaging, Mail, Twitter, போன்றவற்றில் எல்லாம் துண்டு துண்டாக பதிந்த அபிப்ராயங்களை இங்கே மொத்தமாக சேர்த்து வைக்கிறேன், பின்னால எதுக்காச்சும் பயன்படும் என்பதற்காக.

—————————————————————————————————

@voice_on_wings

ரவி,

//நெஜமாவே காதலிச்சாங்களான்னு சந்தேகம் வருது. அப்பப்போ பிரிவதற்கான காரணங்களும் வலுவா இல்ல, பிறகு இணைவதற்கான காரணங்களும் வலுவா இல்ல. இனிமே கூட ஒரு மொக்கை காரணத்துக்காக பிரிந்து விடக்கூடியவங்களாதான் எனக்கு தென்படறாங்க, இரண்டு கேரக்டர்சும். //

நீங்க நம்பினாலும், நம்பாமப் போனாலும், நிஜக் காதல் இதை விட மரண மொக்கையா இருக்கும். சந்தேகமே வேணாம். சமந்தா போன்ற Consolation Factor கூட நிஜ வாழ்க்கையில் கிடையாது 🙂 ( கிட்டதட்ட, ஒரு சினிமா சிபிஐ ஆபீசருக்கும், நிஜ சிபிஐ ஆபீசருக்கும் இடையிலான வித்தியாசம்.) அந்த ரியலிஸத்துக்காக மட்டுமே எனக்குப் பிடிச்சது. இந்த மாதிரி காரக்டர்களை பார்த்துப் பழகினவங்களுக்கு ரொம்ப ஈசியா படம் புரியும் / புடிக்கும் ங்ற அந்த Exclusiveness தான் படத்துகிட்ட இன்னும் ஈர்க்குது.

எனக்கு ஏன் பிடிச்சதுன்னா ( ஏற்கனவே வேற எடங்களிலே சொன்னதுதான்.. )சுருக்கமா..

1. நீண்டநாள் காதலிச்சுத் திருமணம் செஞ்ச நிறையப் பேரோட கதை கிட்டதட்ட இதே போலத்தான் இருக்கும்.
2. love at first sight காதலை, உணர்ச்சி பூர்வமான க்ளைமாஸுடன் பார்த்துப் பழகின நமக்கு, twist & turn இல்லாத கதை, செரிக்க கஷ்டமா இருக்கும். ரெண்டாவது ரீல்லயே போரடிக்கும்.
3. இந்தப் படம் பிடிக்காதவங்களுக்கு, இதிலேர்ந்து எடுத்துக்க ஒண்ணுமே இல்லை. ஆனா, பிடிச்சவங்களுக்கு இதை விட ஒஸ்தியான சரக்கு வேற ஏதும் இல்லை.
4. சமந்தா.
5. எங்க இருக்கணும். எங்க அமுக்கி வாசிக்கணும், எந்த இடத்துல சைலண்ட் ஆக இருக்கணும், எந்த இடத்துல , எந்த வசனத்தின் முடிவிலே, என்ன வார்த்தையுடன் பாடல் துவங்கணும் முடிவு செஞ்சு, அட்டகாசமா துணை நின்ற ராஜா.

மேனனோட முக்கியமான மிஸ்டேக், முதல் வார ஆடியன்ஸோட level of engagement ஐ கண்டுக்காம விட்டதுதான். While remaining brutally honest to the script and its characters, GVM made the movie inaccessible to the younger lot that expected a VTV 2 from him.

( http://www.twitlonger.com/show/kfhogr )

—————————————————————————————————

search ல nepv ன்னு தேடும்போதுதான், நாம தனியாள் இல்லே, நம்ம ஏங்கிள்லயும் யோசிக்கிறவன் நெறைய பேர் இருக்கான்னு தெரிய வருது. ரொம்ப மகிழ்ச்சி
( Twitter – https://twitter.com/icarusprakash/status/282809791787712512)

—————————————————————————————————

120 ரூபாய் செலவு செய்து அகன்ற திரை, அட்டகாசமான சர்ர்ரவுண்ட் சிஸ்டத்தில் மீண்டும் பார்த்து டொர்ரண்ட் தீட்டு கழித்தேன். கொஞ்சம் பிரமிப்பு அடங்கினாலும், படைப்பின் மீதான மரியாதை சற்றேனும் குறையவில்லை.

80 களின் தென் சென்னை அர்பன் மிடில் க்ளாஸ் பற்றி நீளமானதொரு நடைச்சித்திரம் தீட்டினால், அதற்கு பேக்ரவுண்டாக வைக்க, NEPV எத்தனை பொருத்தமாக இருக்கும் என்பதை குறித்து ஒரு வியாசம் எழுதவேண்டும், நேரங்கிடைக்கும் பொழுது.

இப்போதைக்கு இது மட்டும்.

போனவருஷம் சாரலுக்கு
குற்றாலம் போய்
கைப்பேனா மறந்து
கால்செருப்பு தொலைந்து
வரும் வழியில் கண்டெடுத்த
கல்வெள்ளிக் கொலுசொன்று
கற்பனையில் வரைந்த
பொற்பாதச் சித்திரத்தை
கலைக்க முடியவில்லையே இன்னும்

நன்றி – விக்கிரமாதித்யன்

( Facebook – http://www.facebook.com/icarusprakash/posts/10151201160988403 )

—————————————————————————————————

இதுல வர எல்லாரையும், ஐ மீன் *எல்லாரையும்* எனக்குத் தெரியும். பக்கத்துலேந்து பார்த்திருக்கேன். ஆனா வேற வேற வருஷத்துல, வேற வேற பேர்ல.

“லவ்மேரேஜ் தான். ஆனா சின்ன வயசுலேந்தே ஒருத்தர ஒருத்தர் நல்லாத் தெரியும்” னு சொல்ற ஜோடிகளை கேட்டுப் பாருங்க. அவங்கள்ள முக்காவாசிப் பேரோட நிஜமான கதை, இம்மி பிசகாமல் இப்படித்தான் இருக்கும். நாம, twist & turn நிரம்பி இருக்கிற , விறுவிறுப்பான உணர்ச்சி பூர்வமான, ஆனா எந்த லாஜிக்கும் இல்லாத love at first sight கதைங்களையே பார்த்துப் பழகிட்டோம். இதை சீரணிக்க கொஞ்சம் சிரமமா இருக்கும்.

இந்தப் படம் பிடிக்காதவங்களுக்கு, இதிலேர்ந்து எடுத்துக்க ஒண்ணுமே இல்லை. ஆனா, பிடிச்சவங்களுக்கு இதை விட ஒஸ்தியான சரக்கு வேற ஏதும் இல்லை. VTV படத்துடன் என்னாலே கனக்ட் பண்ணிக்க முடியலை. எனக்கு நிறைய உதவி இயக்குனர்களைத் தெரியும். ஆனா, அந்தப் படத்து சொம்பு மாதிரி அல்ட்டாப்பு பேர்வழி மாதிரி ஒருத்தனைக் கூட எனக்குத் தெரியாது. ஒரு வேளை இருக்கலாம். ஆனால் எனக்கு அறிமுகம் இல்லை. ஆனால், வருண், மாதிரி கோவத்துல பொண்ணுன்னு கூட பார்க்காம WTF ன்னு கேக்கற செல்ஃபிஷ் பசங்களையும் ( நித்யா, ஐ *நீட்* யு – note : லவ் யூ இல்லே நீட் யூ), பிடிச்ச பையனுக்காக பைத்தியம் மாதிரி சுத்தி வர, ஆனா நியாயம்னு வரப்ப, ” போடா ம**று, and don’t insult my intelligence வெட்டிக்கிட்டு போற பெண்களயும் , ஸ்கூல்லயும், ட்யூஷன் செண்டர்களிலும் நெறைய பாத்திருக்கேன். இந்தப் படம் அவ்ளோ ரியல்…. அதனாலேதான் வெளிய வரமுடியலை… நல்லவேளை வீக்கெண்ட் இல்லே கிழிஞ்சிருக்கும்..

( FB Comment – http://www.facebook.com/icarusprakash/posts/10151200015208403?comment_id=24783026&offset=0&total_comments=30)

—————————————————————————————————

//மொக்கையான ரீரெக்கார்டிங்.. இளையராஜா ம்யூசிக் செட்டாகலை //

பொங்கல் எப்படி இருக்கு சொல்லுன்னு கேட்டா, மொளகு சீரகத்தை எண்ணிகிட்டு இருப்பீங்களாடா? மிளகு சீரகம் சரியான அளவுல இல்லைன்னா, பொங்கலை வாயில வைக்க வழங்காது தெரியுமா? இந்தப் படம் சில க்ரூப்புகளுக்கு சுத்தமா பிடிக்காமப் போறதுக்கு சான்ஸ் இருக்கு. ஆனா, படம் பிடிச்சிருந்து, இன்வால்வ் ஆயிட்டா, இசை எங்க இருக்கு, எங்க இல்லை, ஒளிப்பதிவு எப்படி இருக்குன்னல்லாம் யோசிக்கத் தோணாது.

//போர்//

நமக்குத் தெரியாத, நமக்கு அறிமுகமே இல்லாத விஷயங்களை எல்லாம், படத்துல பார்த்து ரசிக்கிறோம். பிதாமகன் சித்தனோட authenticity பத்தி உனக்குத் தெரியுமா? பொல்லாதவன் படத்துல காட்டற, பைக் திருடங்க பேக்ரவுண்டு நிசமாவே அதானா? யதார்த்தம் அப்படிங்கற ingredient கூட யிலே சில டோஸ் ட்ராமா கலந்தாதான், படம் பாக்கிறாப்ப்ல இருக்கும். ஆடியன்ஸ் உச்சுக் கொட்டுவான், அப்ளாஸ் கெடைக்கின். ஆனால், அந்த டிராமா கலக்காம எடுக்க ஒரு தைரியம் வேணும் ( இருவர் படத்தில், ஆனந்தனின் இயல்பான மரணம் போல). அந்த தைரியத்த மேனன் படத்திலே பாக்க முடியலையா? அக்ரீட். ரொம்ப சில பேருக்குத்தான் இந்தப் படம் புடிக்கும். என்ன பண்ண, ரொம்பச் சொன்னியேன்னு இன்செப்ஷன் ன்னு ஒரு படம் பார்த்தேன். தெண்ட கரமாந்தரம். ஆனா shawshank redemption ன்னு ஒரு DVD குடுத்தியே…அட்டகாசம். சான்ஸே இல்லை… அது போல சிலருக்கு சிலது புடிக்கும், சில படங்களோட கனக்ட் பண்ணிக்க முடியாது.. வாழ்க்கையே, இந்தப் பொண்ணு சொல்றாப்பல, we are meant to be க்கும் we are not meant to be க்கும் நடுவிலே தான் இருக்கு. மற்றவை நேரில்.

( Gmail Conversation )

—————————————————————————————————

//Where was the f-bomb? Can’t really recall it now.//

Manappad

Varun : what the fcuk (beep) do you want?

Two lines later,

Nithya : athellam 4 varshathukku munnala. Ippa oru *mayirum* (beep) ille.

A middle class south madras guy moving from **thaa to Wtf in a period of 6 years as opposed to ‘going-to-australia-for-school-vacation’ type samantha uttering a not-so-mild expletive in deep frustration is something not to be missed.

– ( Baradwaj Rangan’s post – http://baradwajrangan.wordpress.com/2012/12/17/neethane-en-ponvasantham-3455434576-7835/#comments)

————————————————————————————————–

வேற எங்கயாச்சும் எழுதினா, அது இங்கே ஒட்டப்படும். இது ஒரு draft மாதிரி. ஆகவே comments closed.

டிஸ்கவரி புத்தகப் பேலசிலே ரெண்டு மணிநேரம்……

தினமும் அலுவலகத்துக்குப் போய் வருகிற வழிதான் என்றாலும், இன்றைக்குத் தான் Discovery Book Palace பக்கம் ஒதுங்கினேன். ஒரு விடுமுறை அல்லாத வார நாளின் பிற்பகல் பொழுதில், ஒரு தமிழ்ப் புத்தகக் கடை என்ன மாதிரி மோன நிலையில் இருக்குமோ அப்படியே இருந்தது.

பலான புத்தகம் அளவுக்கு ரகசியமாக அச்சடித்து , ரகசியமான விநியோகம் செய்யப்படும் காட்சிப் பிழை இதழின் கரண்ட் மற்றும் பழைய இதழ்கள் கிடைத்தன. அப்படியே நீண்ட நாட்களாக தேடிக் கொண்டு இருந்த ஆர்.ஆர்.சீனிவாசன் தொகுத்த , ‘ஜான் ஆபிரகாம் – ஒரு கலகக்காரனின் திரைக்கதை’. ஜெயமோகன், ஜான் குறித்து எழுதியவற்றையும் சேர்த்து, இரண்டாம் பதிப்பை ‘பால்ன்ஸ்’ செய்திருக்கிறார்களா என்று பார்த்தேன். இல்லை. தனி செக்ஷனாகவே போடுமளவுக்கு சினிமா இலக்கியம் வளர்ந்திருக்கிறது. ஆனால் அதில் பேர் பாதி, நக்கீரன் க்ரூப்பில் இருந்து வெளியாகும் நடிகையின் கதை, நடிக நடிகையரின் பேட்டிகள் போன்ற, சஞ்சிகைகளில் இருந்து உருவி ஆக்கப் பட்ட நூல்களே. சராசரி விலை நூறு.

நக்கீரன் ( என்று நினைக்கிறேன்) இதழில் வெளிவந்த கிசுகிசுக்களை மட்டும் தொகுத்து புத்தகம் ஆக்கியிருந்தனர். புத்தகத்தின் பெயரும் கிசுகிசு. நாளை பின்னே, யாராவது கிசுகிசு இலக்கியம் என்று மதுரை காமராசரிலோ அல்லது எஸாரெம் பல்கலையிலோ, பிஎச்சுடி செய்தால், ஆராய்ச்சியாளர் தொடர்பு கொள்ள சிரமமாக இருக்குமோ என்னமோ என்று மறக்காமல் தன் ஈமெயில் முகவரியையும் ஆசிரியர் கொடுத்திருந்தார். ஆனால், ‘ முதல் படத்திலேயே அரைக்கோடி சம்பளம் பெற்ற நான்கெழுத்து நடிகையுடன் நாலு நாட்கள் ஒயாமல் ‘டிஸ்கஷன்’ செய்த மதுரைப் பக்கத்தில் இருந்து வந்த , தாடி வைத்த வெற்றிப்பட இயக்குனர்’ உண்மையிலே யார் என்று தெரிந்து கொள்ள விரும்பும் ஆர்வலர்களின் ஈமெய்ல் விசாரிப்புகளை எப்படி ஹாண்டில் செய்கிறார் என்று தகவல் இல்லை.

சினிமா செக்ஷனின் ஒரு ‘ரோ’ முழுக்க, Cable Sankar எழுதிய நூல்கள். சினிமா கதை வசனம், சினிமா, சாப்பாடு விமர்சனம் எழுதுவார் என்று தெரியும். சிறுகதை நாவல் படைக்கும் அளவுக்கு முழுநீள இலக்கியவாதி என்று இன்றைக்குத் தான் தெரிந்து கொண்டேன்.

பாலா இயக்கும் பரதேசி படம் கேள்விப்பட்டதில் இருந்து / ட்ரெயிலரைப் பார்த்தில் இருந்து, அப்படத்துக்கு மூலமாக அமைந்த ( அல்லது அமைந்தது என்று சொல்லப் படுகிற) எரியும் பனிக்காடு நாவலைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அந்நாவல் பற்றி, வாசிக்கிற கேள்விப்படுகிற சங்கதிகள் எல்லாம், தேடிக் கண்டுபிடித்து, வாசிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டுவதாகவே இருக்கின்றன. இங்கும் கிடைக்கவில்லை.

Value for Money என்கிற பொருளாதாரத் தத்துவத்துக்கு ( ஜல்லி, ஜல்லி….) உதாரண புருஷியாக விளங்கும் சம்சாரம், வழக்கம் போல, “இந்த புஸ்தகத்துக்காங்க இவ்வளவு விலை?” என்று வியந்து, பின் அலமாரியில் அடுக்கி வைக்க முயன்ற பொழுது, மேல் அடுக்கில் இருந்த( டைம் கிடைத்தால் புரட்டிப் பார்க்கலாம் என்று வைத்திருந்த புத்தகங்களில் இருந்து ) ஒரு குண்டு புக் கவனத்தை ஈர்த்தது.

‘எரியும் பனிக்காடு’

ஆச்சர்யம். இதை எப்ப நான் வாங்கினேன் என்று திகைப்புடன் புரட்டினேன். முதல் பக்கத்திலேயே தெரிந்துவிட்டது. திருமணத்துக்கு அன்பளிப்பாக வந்தது. அளித்தவர், பின்னால் யுவகிருஷ்ணா என்று நாமகரணம் செய்து கொண்ட லக்கிலுக்.

திருமணத்தை, சந்தோஷமாக நினைவு கூர்வதற்கான காரணங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

நன்றி Yuva Krishna 🙂