எட்டத்தில் இருந்து பார்த்து, படிச்சுக் கேள்விப்பட்ட பலரை, ஃபேஸ்புக்கிலே கிட்டக்க போய்ப் பாத்து, அவங்க நட்பு வட்டம் எப்படி, அவங்க எதையெல்லாம் லைக் பண்றாங்க, எந்த எந்த குரூப்புலல்லாம் இருக்காங்க. அவங்களுக்குள்ள எப்படில்லாம் பேசிக்கறாய்ங்க என்கிறதல்லாம் வெச்சு, கூட்டிக் கழிச்சுப் பார்த்து, அவங்க ‘நெஜமாவே’ யாருன்னு புரிஞ்சுக்கும் போது,
“ஆண்டவா… இவங்களையெல்லாம் வெச்சுப் பாக்கும் போது, நாமல்லாம் எவ்ளோவோ பரவாயில்லை .. ரொம்ப தேங்கஸுப்பா உனக்கு” ன்னு ஒரு ஃபீலிங் வரும் பாருங்க… அந்த திருப்திக்கு ஈடு இணையே கிடையாது….
– வார இறுதியை எதிர்நோக்கிய , வேலையற்ற ஒரு வெள்ளிக்கிழமையின் பிற்பகல் பொழுது.