
சன் டீவியில் திரை மின்னல்கள் என்று ஒரு நிகழ்ச்சி. ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் இருந்து சில காட்சிகளைப் பார்க்க நேர்ந்தது. இந்தப் படத்தைப் பலரும் பலவிதமாகக் கலாய்த்துப் பார்த்திருக்கிறேன். சரி என்னதான் இருக்கிறது என்பதற்காக அந்தக் காட்சிகளைப் பார்த்துத் தொலைத்துவிட்டேன். .
கார்த்தியும் சந்தானமும் ரெண்டு மூணு வருஷமா கஷ்டப்பட்டு டிவி சானல் நடத்துகிறார்களாம். ஆனால் டீ குடிக்கக் கூடக் காசு இல்லையாம்.
அதெப்படி எட்டுக்குப் பத்து ரூம்ல ரெண்டு சேர்ல உக்காந்து சேனலை நடத்தறது? இது தெரியாமதான் முர்சொலி பிரதர்சு, ராஜேந்திரன் பிரதர்சு, பச்சமுத்து அன் சன்ஸு எல்லாரும் கோடிக்கணக்கா செலவு செஞ்சு டீவி நடத்தறாங்களா? அடக் கெரகமே.. அப்பறம் ஹீரோ கோஷ்டிக்கு அஞ்சு லட்ச ரூபாய் விளம்பரம் எடுத்தா பிரச்சனை தீர்ந்துடுமாம்..அந்த அஞ்சு லட்ச ரூபா வெளம்பரத்தையும் அஞ்சாயிரம் ரூபால எடுத்துடுவாங்களாம்…அதுக்காக மாடல் தேடி அலைகிறார்களாம்… அதுக்கப்பறம் என்னனு தெரியலை.. நிகழ்ச்சி முடிஞ்சுருச்சு..
ஆடியன்ஸு மூளையை இன்ஸல்ட் செய்யறதுக்கும் ஒரு அளவு வேணாமாடே..
“சார், டிவி சானல்க்கு பதிலா, சின்ன விளம்பர ஏஜென்சின்னு மாத்திக்கலாம் சார், கொஞ்சம் நம்பற மாதிரி இருக்கும்” னு ஸ்டோரி டிஸ்கஷன்ல ஒரு பக்கி கூடவா சொல்லியிருக்காது?
இந்தப் படத்தை யோசித்த, எழுதிய, பணம் போட்ட, நடித்த, உருவாக்கிய அத்தனை பிக்காலிப் பயல்களுக்கும் ஒர் பயங்கரமான எச்சரிக்கை.
உங்க அத்தனை பேர் கையயும் காலா நெனச்சுக் கும்பிட்டுக் கேட்டுக்கிறேன்….. தமிழ் சினிமாவை உட்ருங்கடா டேய்……