ஹைபோன்…

நேற்றைக்கு ஒரு இரண்டு நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது ஐஃபோன் பற்றிப் பேச்சு வந்தது. வருடத்துக்கொரு வாரிசை வெளியீடு செய்யும் 1930 களின் குடும்ப இஸ்தர் போல, ஆப்பிள் நிறுவனமும் வருடா வருடம் புதிது புதிதாக ஐஃபோன் மாதிரிகள் கொண்டு வருகிறார்கள் அல்லவா, அது பற்றிய ஒரு அரட்டை.

மற்ற இருவர் போல, எனக்கு இந்த இசுமார்ட் ஃபோன்களில் அத்தனை பாண்டித்தியம் கிடையாது. ஆண்ட்ராய்ட், ஐஓஸ் என்று அடித்துக் கொண்டார்கள். என்ன என்னமோ தொழில்நுட்ப சமாசாரங்கள். சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த அரட்டை விவாதத்தில் நான் தெரிந்து கொண்ட முக்கியமான ஒரு விஷயம்,

– ஐஃபோன் 5 க்குப் பிறகு வந்திருப்பது 6 அல்ல, 5C & 5S. அதாவது, ஒன்று feature-rich மற்றது feature-lite.

ஆனால் இந்த C மற்றும் S இலே, எது சாதா, எது ஸ்பெஷல் சாதா என்று மட்டும் தெரியவில்லை.

பொதுவாக இந்த மாதிரி product variant தீர்மானிக்கும் பொழுது , எது ஒஸ்தி, எது மலிவிலை சரக்கு என்பதை பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொள்ளும் அளவுக்கு, உதாரணமாக , Economy – Deluxe – Super Deluxe அல்லது Basic – Premium என்று self explanatory ஆக நாமகரணம் செய்வதுதான் மரபு. ஆனால், வெறும் 5சி, 5எஸ் என்ற பெயர்களை மட்டுமே வைத்து, அந்த இரு மாடல்களுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்தை ஒரு கன்ஸ்யூமர் எப்படிப் புரிந்து கொள்ளுவான் என்று யோசிச்சுப் பார்த்தேன்…

இருந்த ரெண்டு முடியும் கொட்டிப் போச்சு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s