மனுஷ்ய புத்திரன் – நீயா நானா

கே.டி.வி யிலே ‘குஸ்தி’ படம் போடும் பொழுது, அனுஷ்கா வந்து கதவைத் தட்டி அட்ரஸ் விசாரித்தாலும் அடுத்த வீட்டைப் பாரும்மா என்று சொல்லிவிடுவேன். ( சிவகார்த்திகேயன் மாதிரி பயல்கள் எப்படி டாப் ஹீரோக்கள் ஆகிறார்கள் என்று புரிகிறதா? ) ஆனால், மனுஷ்யபுத்திரன் கருத்துச் சொல்வதைக் கேட்டு நாளாயிற்றே என்று நீயா நானா பக்கம் ஒதுங்கியதில் ஒன்றும் தவறாகவில்லை. பிரபு, கார்த்திக், வடிவேலு படத்தை விட பிரமாதமான காமெடி. கூட கரு(த்து) பழனியப்பன். கேட்கவேண்டுமா?

சொந்த அனுபவத்தில் உணர்ந்து கொண்டவற்றை வைத்து உலகத்துக்கே தீர்ப்பு எழுதும் பங்கேற்பாளர்களையும், ஏற்கனவே கொதித்துக் கொண்டிருப்பவர்களின் உணர்ச்சிகளைக் கிளறிவிட்டு வார்த்தையைப் பிடுங்கும் கோட்டு கோப்பிநாத்தையும் விடுங்கள். எதற்காகவென்றே தெரியாமல் அடித்துக் கொண்ட கரு.பழனியப்பனும், ராக்ஸ்டார் மனுஷ்யபுத்திரனும் தான் உச்சகட்ட நகைச்சுவை அளித்தார்கள்.

சேரன் விவகாரத்திலே, காதலுக்கு எதிராக நின்ற காரணத்தால், அதே நிலையை maintain செய்தார் பழனியப்பன். தான், காதலுக்கு எதிரி அல்ல, ஆனால், காதல் திருமணங்கள் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெறவேண்டும் என்று சொல்லி, பெற்றவர்களின் உரிமை, காதலர்களின் கடமை என்று செண்டிமென்ட் கலந்து வார்த்தை விளையாட்டு செய்த கூடுதல் brownies பெற, எல்லா விவாத நிகழ்ச்சிகளிலும் ஒரு புரட்சி நாயகனாக இருந்து பழக்கப்பட்டு விட்ட புத்திரன் டென்ஷன் ஆனார்.

ம.பி சொன்ன கருத்துக்கள் மிக நியாயமானவை. ஆனால், அந்த நியாயத்தைப் புரிந்து கொள்ளத் தேவையான பக்குவம், அந்த ஆடியன்ஸிடம் இல்லை. மாறாக, பழனியப்பன், உணர்ச்சிப் பெருக்கெடுத்து நெக்குருகி, ஸ்க்ரிப்ட்டில் இல்லாத வசனங்களை எல்லாம் சேர்த்து, ஆஸ்கார் ரேஞ்சுக்கு அடித்து ஆடினார்.

ஆனால், உண்மையில் சர்ச்சைகளைக் கிளப்பி ஒய்ந்து போன சேரன் மகள் காதல் விவகாரத்தில், ம.பி, தொடர்ந்து சொன்ன, எழுதி வந்த கருத்துக்களுக்கு பதில் சொல்லத்தான், கருத்து பழனியப்பன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார் என்றே தோன்றியது.

ஆனால், டிஃபண்ட் செய்வதற்கான வாய்ப்பு புத்திரனுக்கு அளிக்கப்படவில்லை. இதன் ஆக்ரோஷமான பின்விளைவுகள் இன்று ஃபேஸ்புக்கில் தெரியும் என்று நினைக்கிறேன்.

ஆகவே மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s