ஆதலால் காதல் செய்வீர்

சிலர் கிளப்பிவிட்டது போல அவ்வளவு மோசமெல்லாம் இல்லை.

சுசீந்திரன் நல்ல workmanship உள்ள ஒரு இயக்குனர். இக்காலகட்டத்தில் தியேட்டருக்குள் வரும் பதின் பருவத்தினரை எப்படி, எங்கே குறிபார்த்து அடித்தால் விழுவார்கள் என்பதை நன்றாக உணர்ந்து கொண்டவர். அதற்காக வெறுமனே ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமும் என்ற ஃபார்முலாவுக்குள் சிக்கிக் கொள்ளாமல், முதன்மைப் பாத்திரங்களுக்குள்ளான காதல், வயதின் பருவக்கோளாறு, தொடரும் சிக்கல் என்று கதையை மடைமாற்றி, சிறுசுகளை மட்டுமின்றி அவர்களின் பெற்றோரையும் ஒரே ஷாட்டில் கவர் செய்து விடுகிறார்.

நண்பர்கள் செட், அவர்களின் பரிபாஷைகள், விருப்பங்கள், மனநிலை, உடல்மொழி, எழுதிக் கொடுத்த வசனம் என்று தோன்றாத இயல்பான உரையாடல்கள் ஆகியவற்றின் சமகாலத்தன்மையும், authenticity யும் படத்தின் முதல் பாதியில் பார்வையாளர்களை அசர அடிக்கிறது. யோசிக்க முடியாதபடி, அவ்வப்போது துணைப்பாத்திரங்களின் witty oneliners, அரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி இருக்கையில் செட்டில் ஆக உதவி செய்கிறது. இந்த நகைச்சுவை + சீரியஸ் என்ற கலவை சரியான படிக்கு இருக்க ஒரு திறமை வேண்டும். அது சுசீந்திரனிடம் இருக்கிறது. ( இல்லாவிட்டால் ராதாமோகன் டிராமா போல ஆகிவிடும்)

காதல், தனிமை காரணமாக காதலர்களுக்குள் ஏற்படும் உடல் நெருக்கம், உறவு கொள்ளல், எதிர்பாரா கர்ப்பம், கருவைக் கலைக்க முடியாமை என்று திரைக்கதையில், மிகக் குறைந்த இடைவெளியில் நெருக்கடி மேல் நெருக்கடி ஏற்பட, அந்த இக்கட்டான நிலைமையில், முதன்மைக் கதாபாத்திரங்கள் அனைவருமே, தங்களுடைய நல்ல மற்றும் கெட்ட முகங்களை மிக இயல்பாக வெளிப்படுத்தி, நாம் பார்த்துக் கொண்டிருப்பது உண்மைச்சம்பவம் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றனர்.

ஒரு உதாரணம், தன் பெண்ணைத் தவறாகப் பேசுகிறார்கள் என்று உணர்ச்சிக் குவியலாக வெளியேறும் அப்பா, பிறகு எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல், மகளுக்குப் பிறந்த குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கிறார். குழந்தையை விட்டு விட்டு வெளியே சென்று ஒரு கணம் நிதானித்து பின் குழந்தையைத் திரும்பிப் பார்க்கும் இடத்தில், அந்தக் காட்சிகென தமிழ்சினிமா வரையறுத்து வைத்திருக்கும் customary BGM கூட இல்லை.

இப்படத்தில் காண்பிப்பது அப்படி ஒன்றும் ஊர் உலகத்தில் நடக்காத நிகழ்வில்லை. என்றாலும் சுசீந்திரன், சில விதிவிலக்குகளைக் ஹைலைட் செய்து, காதல் எதிர்ப்பு கலாசாரக் காவல் கோஷ்டிக்கு , லட்டு மாதிரி ஒரு வெற்றிப்பட உதாரணத்தை தட்டில் வைத்துக் கொடுத்ததை மட்டும் ஜீரணிக்க முடியவில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s