சூது கவ்வும் – Fun Ride – 4/5

புதுசா கத்துகிட்டு சமைக்கத் துவங்கறவங்க, ரொம்ப சிம்பிளான தோசை, சட்னிக்கு கூட ஏதோ கல்யாண விருந்து மாதிரி ரொம்ப மெனக்கெட்டு, செம டீட்டெய்லா பாத்து பாத்து செய்வாங்க இல்லையா, அது மாதிரியன கேர்ஃபுல் மேக்கிங் தான் இந்தப் படம்.

பெருசா ஒண்ணும் இல்லை, பாக்கட் நாவல் மாதிரி ஒரு விறுவிறுப்பான குறுநாவலுக்கு எழுதப்பட்ட ஒரு linear திரைக்கதை.

செமையான கெட்டப்பில் படுவேகமாக உடைந்த ஆங்கிலத்தில் பேசும் விஜய் சேதுபதி தலைமைல நாலஞ்சு வெட்டிப் பசங்க, ஒரு கிட்நாப்பிங் ப்ளான், ஓவர் நேர்மையா இருந்து இம்சை கொட்டிக்கிற ஒரு அமைச்சர், அதுல எரிச்சல் ஆகிற முதல் அமைச்சர், அந்த அமைச்சர் பையனோட டபுள்கிராஸ், லைட் சஸ்பென்ஸோட ஒரு ஹீரோயின் ( இந்த சஸ்பென்ஸை, வளர்த்தாம, ரெண்டாவது ரீல்லயே போட்டு உடைச்சது புத்திசாலித்தனம்) , கடைசி வரைக்கும் வாயத் திறக்காத அந்த சைக்கோ இன்ஸ்பெக்டர், மாட்டிக்கொண்டு அவஸ்தைப் படும் பசங்களுக்கு உதவி செய்யும் தாதா டாக்டர், அந்த கடைசி ட்விஸ்ட்டு எல்லாம் சேர்ந்த ஒரு இனிய ஆச்சர்யக் கலவைதான் படம்.

ரொம்ப இயல்பான, மெலிதான நகைச்சுவை கலந்த வசனங்கள். இருக்கேன் இருக்கேன்னு அலறாத பிஜிஎம் இவை கூடுதல் பலங்கள். விஜய் சேதுபதி மற்றும் நண்பர்களாக வரும் அந்த மூவரும் செம இயல்பான நடிப்பு. எழுதிக் கொடுத்த டயலாக் பேசுகிறார்கள் என்கிற நினைப்பே வருவதில்லை. விஜய் சேதுபதியை, ஹீரோ என்று கூட சொல்லிவிட முடியாது.. அந்த அளவுக்கு அத்தனை பேருக்கும், சம அளவில் screen time.

எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடும் திரைப்படம், இண்டர்வலுக்குப் பிறகு லைட்டாக ஜெர்க் அடித்து, முடியும் தருவாயில் சீராகிறது.

படத்தின் மிகப் பிரமாதமான ஹைலைட், படத்துக்குக் க்ளைமாக்ஸே இல்லை என்பதுதான்.

யோசித்துப் பார்த்தால், ரசிகர்களுக்கு, இதற்கு முன்பாக இருந்தது ரெண்டே சாய்ஸ்தான். மூளையக் கழட்டி வெச்சுட்டுப் பாக்க வேண்டிய கலகலப்பு / கண்ணா லட்டு திங்க ஆசையா மாதிரியான mindless flicks. இல்லைன்னா, பரதேசி மாதிரி நல்ல மனநிலையையும், நேரத்தையும் கோரும் அதியுன்னதப் படைப்புகள்.

இந்த இரண்டுக்கும் நடுவிலே, (ஆடியன்ஸ் வரவேற்பு தவிர வேறு ) யாருடைய backing இல்லாமல், தாங்களாகவே புதுசாக ஒரு பாதையை கண்டு பிடித்து, அதிலே நின்று விளையாடி வரீசையாக ஹிட் அடிக்கும் புதியவர்களின் இன்னுமொரு அட்டகாசமான பவுண்டரி, சூது கவ்வும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s