ஒரு கணக்கு வாத்தியாரும், ஒத்திசைவு ராமஸ்வாமியும்…

எனக்கு ஒரு கணக்கு வாத்தியார் இருந்தார். 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பாடம் எடுத்தார். உண்மையில் அவரிடம் பாடம் கற்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

அவ்வளவு அருமையாகப் பாடம் எடுப்பார். பிற வாத்தியார்களைப் போல ப்ரைவேட் டூயூஷன் எடுக்க மாட்டார். பிற வாத்தியார்களைப் போல பெண்களிடம் இரக்கம் காட்ட மாட்டார். பால் பேதம் இல்லாமல் பின்னி எடுப்பார். ஒரு டெரர். ஆனால் நல்லா பழந்தின்னு கொட்டை போட்ட அனைத்துப் பள்ளிக் கூடக் கணக்கு வாத்தியார்களும் ‘டெரராகத்தான்’ இருப்பார்கள் என்று லேட்டாகத்தான் தெரிந்தது.

நான் ரொம்ப ‘ஆவேரேஜ்’ மாணவன். எனக்குக் கணக்கு பிடிக்கும். ஆனால், பாடத்தின் எல்லாப் பகுதிகளும் பிடிக்காது. எனக்குப் பிடித்ததை மிக அதிகமாகப் போட்டுப் பழகியும், போரடிக்கிற சமாசாரத்தை ஒதுக்கி வைத்தும் விளையாடிக் கொண்டிருந்தேன். ஒன்பதில் கணக்கு வகுப்பு மட்டும் எடுத்தார். பத்தாவதில் எனக்கு அவர் எனக்கு வகுப்பு வாத்தியாராகவும் வந்தார்.

நான் படித்த பள்ளியில் அவர் ஒரு ஸ்டார். பள்ளியில் இருந்த அனைவரும் ( பிற வாத்தியார்கள் உள்பட) அவர் மீது பயம் கலந்த மரியாதை கொண்டிருந்தனர். இப்பொழுது, கே.பாலசந்தரைப் பார்த்ததும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும், சட்டாரென்று எழுந்து வணக்கம் போடுகிறார்களே, அதே போல. [ ஆனால், உண்மையில் கமல் ரஜினி, மற்றும் கேபி ஆகியவர்களுக்கு இடையிலான நிசமான மரியாதை நிலவரங்களும், அசல் மதிப்பீடுகளும் நமக்குத் தெரியாது என்பது வேறு விஷயம்]

இந்த கணக்கு / க்ளாஸ் வாத்தியாரிடம் இருந்த ஒரே சிக்கல், அவர், பிள்ளைகளை, அவர்கள் எடுக்கும் கணக்கு மதிப்பெண்களை வைத்துத்தான் மதிப்பீடு செய்வார். இது ஒரு நார்மலான விஷயம் தான். ஆனால், எனக்கு இது ஒரு சிக்கல். எந்தக் காரணத்துக்காக அவரிடம் போனாலும் அவர், நான் வழக்கமாக எடுக்கும் 65-70 மதிப்பெண்களை வைத்துத்தான் அவர், வெய்ட்டேஜ் குடுத்து முடிவு செய்வார்.

இது அவரைக் குறை சொல்வதற்காக அல்ல.

25 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த, தென்சென்னையின் ஓரளவுக்குப் பாப்புலரான ஒரு சிபிஎஸ்ஈ பள்ளியின், ஒரு ராக்ஸ்டார் கணக்கு வாத்தியாரிடம், மாணவர்களை அளவிட கணக்குப் பாடப் மதிப்பெண் தவிர வேறு என்ன பெரிய அளவுகோல் இருந்து விட முடியும்?. கணிதம், அறிவியலின் ராணி என்று வேறு சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். பதினோராம் வகுப்பிலே, அறிவியல் க்ரூப் கிடைக்காமல் போய், ஆர்ட்ஸ் க்ரூப் எடுக்க வேண்டுமானாலும், காமர்ஸ், அக்கவுண்டன்சி க்கு

கணிதத்தின் தயவு தேவை அல்லவா?

அப்பொழுது எங்கள் பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் துவங்கின. எங்கள் பள்ளி க்ரூப்புக்கு நகரிலே நாலைந்து கிளைகள் இருந்தன. சில போட்டிகளை, அனைத்து கிளைகளுக்கும் பொதுவாக நடத்துவார்கள். பள்ளி ஆண்டுவிழா வின் பொழுது, நடக்க இருந்த ஒரு தமிழ் வினாடி வினா நிகழ்ச்சிக்குப் பெயர் கொடுத்திருந்தேன். என்

வகுப்பிலே நிறையப் பேர், விருப்பம் தெரிவிக்கவும், அவர், ஷார்ட்லிஸ்ட் செய்ய, மிக எளிதாக, ‘நன்றாகப் படிக்கிற’ நல்ல ராங்க், குறிப்பாக கணிதத்தில் நல்ல மார்க் எடுக்கிற மாணவர்களைத் தேர்ந்தெடுத்தார். இப்படிச் செய்ததற்கு, அவர் பக்கம் சில நியாயங்கள் இருந்திருக்கிறது. ( என்று இப்பொழுது விளங்குகிறது). நன்றாகப் படிக்கிற மாணவன்,

கணிதத்திலும் நன்றாக மதிப்பெண் எடுத்திருப்ப்பான். நல்ல ரேங்க் எடுப்பவனாகவும் இருப்பான். அப்படிப்பட்ட மாணவனுக்கு, க்விஸ் காம்பெடிஷன் போன்ற ‘இடையூறுகளை’ எளிதாகச் சமாளித்து ராங்கும் தக்க வைத்துக் கொள்வான்.

ஆனால் நான்?

“முதலிலே நல்லா படிச்சு உருப்படற வழியப் பாரு. மத்ததெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம். போன monthly டெஸ்ட்டிலே கணக்குல மார்க் எவ்வளவு ? ”

“64 Sir”

“உனக்கெல்லாம் ஆர்ட்ஸ் , ஹிஸ்டரி க்ரூப் தான்….”

சரி என்று கேட்டுக் கொண்டு போகவும் மனமில்லை.

காரணம், அதற்கு முந்தைய வருடம் நடந்த போட்டியில் வெற்றி பெற்று, அதன் மூலமாக கிடைத்த சில பக்கத்து பெஞ்சு நட்புகளும், அதன் நினைவுகளும் தித்திப்பாக அடிமனசில் ஒட்டிக் கொண்டிருந்தன. ஆனால், இந்த அராசகத்தை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் இந்தக் கேஸ் எங்கு போனாலும் ஜெயிக்காது. வீட்டிலேயே கட்டி வைத்து உதைப்பார்கள். “முதல்ல படி. நல்ல மார்க் எடு. மத்தெல்லாம் பிறகு. ” . இதுதான் உலக நியதி.

ஆனால், எதிர்த்துச் சண்டை போடவும் தைரியம் இல்லை.

வாய்ப்புப் பறிபோனதின் ஆழ்மனக் கசப்பு என்னை விட்டு விலகவே இல்லை. அந்த க்விஸ்ஸில் எங்கள் வகுப்பு வெற்றி பெற்றதும்., அதன் மூலம் சில மித்ரத்ரோகிகளுக்குக் கிடைத்த தற்காலிக ஒளிவட்டமும், அந்தக் கசப்புணவர்வை அதிகரிக்கவே செய்தன. அந்த வாத்தியாரை வெறுப்பேற்றுவதற்காகவே நன்றாகப் படித்து, board exam இலே ஸ்கூலிலே கணக்கில் second topper ( 96%) ஆக வந்தேன். மார்க்‌ஷீட்டைப் பெற்றுக் கொண்டு அவரிடம் மதிப்பெண்ணைச் சொன்ன பொழுது என்ன விதமாக ரீயாக்ட் செய்தார் என்று நினைவில்லை. நான் பிறகு வேறு பள்ளியில் சேர்ந்து விட்டதால், சுததமாகத் தொடர்பு விட்டுப் போனாலும், அவர் இன்றளவும் அதே டெரர்ராக, நல்ல ஆசிரியராக, எந்த மாதிரி கணக்கையும் எந்த மடையனுக்கும் மண்டையில் ஏற்றிவிடும் திறமை கொண்டவராகத்தான் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.

பாடம் என்பது, ப்ளாக் போர்ட் முன்னால் நிற்கிற ஒருவரின், சிந்தனைக்கும் , புரிதலுக்கும், வரையறைக்கும் மட்டுமே உட்பட்டது / கட்டுப்பட்டது என்றும், அஞ்சால் மருந்து போலக் கல்வியானது, ( இல்லை இல்லை, ஒழுங்காக படித்து, அசைன்மெண்ட் முடித்து நல்ல மார்க் எடுப்பது மட்டுமே) அத்தனைச் சிக்கல்களுக்கும் ஒரு சர்வரோக
நிவாரணி என்றும் நம்பும் இது போன்ற சர்வாதிகாரிகளை நான் கிஞ்சித்தும் மதிப்பதில்லை. எதிரே வந்தாலும் ஒதுங்கிவிடுவேன். அவர்கள் இல்லாத வழியிலே நடப்பேன்.

அப்படியும் ஒரு சிலர், சில நண்பர்கள் மூலமாக எதிரே தென்பட்டுவிடுகிறார்கள். ஒத்திசைவு ராமசாமி என்ற பெயரிலே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s