இதப் பா(ர்)ரா…..

மேற்கண்ட கீச்சு தொடர்பாக.

எச்சரிக்கை!

* இது ஒரு யுனிவர்சல் உதாரணம் அல்ல.
* நான் பார்த்துத் தெரிந்து கொண்ட விஷயத்தைத் தெரிந்த விதமாக எழுதுகிறேன்.
* இது ஒரு குறைபட்ட புரிதலாகவும் இருக்கலாம்.
* மேற்கோளிட்ட டிவிட்டர் உரையாடலுக்குப் பொருத்தமான உதாரணத்தைத்தான் சொல்கிறேனா என்றும் தெரியவில்லை.


ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த சம்பவம் இது. [எனக்குத் தான் இது ‘சம்பவம்’, இதிலே வருகிற பிறருக்கு, இது ஒரு ருட்டீன்]

பா.ராகவனைப் பார்க்க போயிருந்தேன். அப்பொழுது, பா.ராகவன் இருந்து வந்த செட்டப் மிகவும் சிறியது. அது, கிழக்குப் பதிப்பகத்தின் ஆரம்ப நாட்கள். அந்த காலகட்டத்தில் பாராவை அடிக்கடிச் சந்திக்கச் செல்வதுண்டு. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை, எந்த வேலையும் இல்லாமல், சும்மா போய் மொக்கை போட்டு விட்டு வருவது வழக்கம். அப்படி ஒரு நாள் அவரைச் சந்திக்கச் சென்ற பொழுது, அங்கே ஒரு புத்தகத்துக்கான கவர் பேஜ் டிசைன் உருவாகிக் கொண்டிருந்தது. டிசைனை, லேஅவுட் ஆசாமி, கொண்டு வந்து காண்பிக்க, அதில் பாரா சில திருத்தங்கள் சொல்ல, அதை அவர் மறுக்க, சிலதை இவர் சொல்ல என்று சிற்சில காரசாரமாக விவாதங்களுடன் கவருக்கான டிசைனை உருவாக்குவதோடு, நடுநடுவே என்னுடன் காபிக்கு இடையே மொக்கை ( அநேகமாக ப்ளாக் / தமிழ்மணம் பாலிடிக்ஸ் / போலி டோண்டு மேட்டர் என்று ஞாபகம்) போட்டுக் கொண்டிருந்தார்.

எனக்கு மொக்கையை விடவும், பாரா டிசைனருடன் போட்டுக் கொண்டிருந்த சண்டை சுவாரசியமாக இருந்தது. ஏனெனில் கிட்டதட்ட அதே போன்ற சூழ்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் இருந்தேன்.

அந்த ஃப்ரீலான்ஸ் டிசைனருக்கும் ( ஏதோ வாரப்பத்திரிக்கையில் லேஅவுட் ஆர்ட்டிஸ்டாக இருந்தார் என்று நினைக்கிறேன்) பாராவுக்கும் நடந்த உரையாடல்களில் இருந்து, பாராவுக்கு, லே அவுட் சமாசாரத்துக்கான நவீனத் தொழில்நுட்பத்தில் ( Pagemaking, Photoshop இன்ன பிற) துளியும் அனுபவமில்லை என்று தெளிவாகத் தெரிந்தது. (அல்லது அதிலே அனுபவம் இருந்து, அதைக் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை). செம்மையாகக் கடுப்பேற்றுகிற மாதிரி சில கேள்விகளை – business requirement -க்கேட்டுக் கொண்டிருந்தார் அந்த டிசைனர் நிலைமையை நினைத்துப் பாவமாக இருந்தது. அவர் சில தொழில்நுட்ப சமாசாரங்களை விளக்க முற்பட, அதை பாரா விளங்கிக் கொள்ள முயற்சிக்கவே இல்லை. ஏறுக்கு மாறாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார். இது போன்ற client களிடம் ஒருமுறையாவது மாட்டிக் கொண்டவர்களுக்கு நான் சொல்வது இன்னும் எளிதாக விளங்கும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே சூழ்நிலையில்தான் நான். ஆனால், நான் பாராவை விடவும் கொஞ்சம் பெட்டரான பொசிஷனில் இருந்தேன்.

என் தொழிலிலும், மார்க்கெட்டிங்க்க்குத் தேவையான சில brochures, leaflets, pamphlets உருவாக்க, டிசைனர்களின் தயவு தேவை

எங்களுடையது மிகச் சிறிய செட்டப். பணக்காரக் கம்பெனிகள் போல, just bring in the best designer என்றெல்லாம் பணத்தை வாரியிறைத்து விட முடியாது. நம்ம ரேட்டுக்குக் கட்டுப்படியாகக் கூடிய சுமாரான டிசைனரைக் கூப்பிட்டு, பேரம் பேசி, நிறைய இன்புட்ஸ் கொடுத்து, காத்திருந்து, நைசாகத் தாஜா பண்ணி நமக்கான வேலையை முடித்துக் கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக, இந்த வேலையின் முக்கிய அம்சங்களான, டிசைன், கலர் காம்பினேஷன், காப்ஷன் எழுதுவது, காபிரைட்டிங், call to action , பேப்பர் தரம் போன்ற அனைத்திலும் ஓரளவுக்கு அறிவு இருக்க வேண்டும் ( அல்லது வளர்த்துக் கொள்ள வேண்டும்) இல்லை என்றால், vendors ஏமாற்றிவிடுவார்கள். வேலை நடக்கும் பொழுது நமக்கு ஒரு edge இருக்கும் இல்லையா?

ஒரு Marketing Campaign செய்வதாகத் திட்டமிட்டு இருந்தோம். மேலே சொன்ன அத்தனை அம்சங்களையும் கொஞ்சம் brush up செய்து கொண்டு, ரெண்டு மூணு ரெஃபரன்ஸ் மூலமாக சிலரை shortlist செய்து, portfolio எல்லாம் பார்த்து அலசி ஆராய்ந்து ஒரு நல்ல டிசைனரைத் தேர்ந்தெடுத்தோம். specs கொடுத்து, புளி போட்டு விளக்கி, சில முறை அவருடனே கணிணி பக்கத்தில் அமர்ந்து, ஐடியாக்கள் சொல்லி, நன்றாகக் collaborate செய்து, சில பல சிக்கல்களைக் கடந்து வேலையை முடித்துக் கொண்டோம்.

இந்த மாதிரி க்ரியேட்டிவ் வேலையில் பொதுவாக யாருக்குமே எப்பொழுதுமே திருப்தி இருக்காது. ப்ரிண்ட் ஆகி வந்த பின்பு கூட ஏதோ ஒரு சின்ன மாறுதல் செய்ய வேண்டும் என்பது போலவே தோன்றும். ஆனால், இந்த டிசைன் விவகாரத்தில் எனக்கு ஏற்கனவே ஓரளவுக்குப் பரிச்சயம் இருந்ததால், அதன் லிமிடேஷன்கள் எனக்குத் தெரியும். ஆகவே எனக்கு ஓரளவுக்குத் திருப்தி.

இது சரியான அணுகுமுறை தானே?

இல்லை.

ஏன் என்று பிற்பாடு புரியும்.

பாராவுடனான சந்திப்பு நடந்து சில நாட்கள் கழித்து மீண்டும் அவரைப் பார்க்கச் சென்றிருந்த பொழுது, அவர், ” புது புத்த்தகங்களுக்குச் சில ரேப்பர்லாம் ரெடியாயிருக்குய்யா, பாக்கறீரா?’ என்று வண்ண மயமான சில அட்டைகள மேசையில் விரித்துப் போட்டார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அத்தனையும் கொள்ளை அழகு.

பாரா வை விட பல மடங்கு அதிகம் செலவு செய்து, காரில் வந்திறங்கிய ஒரு உயர்தர டிசைனரை அமர்த்தி, ஓடியாடித் தேவையான விஷயங்களைக் கற்றுகொண்டு, உருவாக்கிய எங்கள் sales brochure டிசைன் , தொழில்நுட்ப அறிவு துளியும் இல்லாமல், உட்கார்ந்த இடத்தில் ஆளை வரவழைத்து வேலை வாங்கிச் செய்த பாராவின் கவர்பேஜ் டிசைன்கள் நூறு மடங்கு அழகாகவும் சிறப்பாகவும் இருந்தது.

டெக்னிகலாக நான் ஒரு பிஸ்தா என்று நினைத்திருந்தேன். பாரா மாதிரி ஒரு பரிபூர்ணமான non technical person ( அதாவது ஏழுட்டு வருடங்களுக்கு முன்பு ) என்னை அசால்ட்டாகக் கடந்து போனதை என்னால் சீரணிக்கவே முடியவில்லை.

நான் எங்கே சறுக்கினேன் என்று பார்க்கலாம்.

எனக்கு டிசைன் குறித்தும், அதற்கான சாஃப்ட்வேர்கள் குறித்தும் ஓரளவுக்கு அறிவு இருந்ததால், அந்த டிசைன் டீம், அந்த வேலையில் இருக்கும் லிமிடேஷன்களை ( சார், ஃபைல் எல்லாம் பெரிய பெரிய சைஸ் சார்… ப்ராசசர் தொங்குது.. நாளைக்குக் கண்டிப்பா முடிச்சுடுவோம் ) எல்லாம் எடுத்துரைத்து , ‘சாக்கு போக்கு சொல்கிறார்கள்’ என்ற ஃபீலிங்கே இல்லாமல் என்னைக் கன்வின்ஸ் செய்து விட முடிந்தது.

அதைப் புரிந்து கொள்கிற அளவுக்கு நமக்கு நுட்ப அறிவு இருக்கிறது என்பதை காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வதாக ஆனது. ( yeah.. i know.. .no problem…i can understand this….why don’t we try it this way, please by tomorrow at least….).

ஆனால், டிசைன் தொழில் நுட்ப அனுபவம் துளியும் இல்லாத பாராவுக்கு, அதில் உள்ள லிமிடேஷன் தெரியாது. ஒத்துக் கொள்ளவும் மாட்டார். இது சாத்தியம் இல்லை என்றால், ‘இதக் கூட பண்ண முடியலை…என்னய்யா நீ டிசைனர்’ என்பார். தனக்கு வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் அவர் காது ஏற்காது.(“சார், நீங்க சொல்றது எல்லாம் போட்டோஷாப்ல வராதுங்க..” “அப்படியா..அப்ப எதுல வருமோ அந்த சாஃப்ட்வேரைப் போய்க் கொண்டா”).

ஒரு நல்ல மேலாளருக்கு அழகு தனக்கு எது வேண்டும் என்ற தெளிவும், அதை சரியான ஆளை வைத்து முடிக்கத் தேவையான determination / ruthlessness உம் மட்டுமே. அந்த வேலைக்குத் தேவையான பிறவற்றை எளிதிலே acquire செய்து கொள்ளலாம். அதனால் தான் டாப் மேனேஜ்மெண்ட்லெவலில் நடக்கும் ‘ஆள் மாறாட்டங்கள் ( Top Level Appointments)’ , சாஃப்ட்வேரில் இருந்து பயோடெக், BFSI இலே இருந்து Renewable Energy, FMCG இலே இருந்து MicroFinance என்று ஏடாகூடமாக இருந்தாலும், நிறுவனங்கள் செழிப்பாக வளர்ந்து வருகின்றன. ( இதை இருக்கிற data வைக் கொண்டு ஈசியாக நிரூபிக்கலாம்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s