பரதேசி – Review

பரதேசி

First things first.

இந்த மாதிரி படங்களை எல்லாம், அசாமி, ஒடியா, கன்னடம் , மலையாளத்தில் எடுத்தால் படத்தை தேசிய விருதுக்கு நாமினேட் செய்து, அந்த இயக்குனரை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடி , மெய்னஸ்ட்ரீமில் இருந்து சுத்தமாக ஒதுக்கி வைத்து, பாக்கெட்டில் அஞ்சு ரூபா கூட இல்லாமல் சாக அடித்துப் பின்னர் ஒன்றுக்கும் உதவாத தாதாசாகிப் பால்கே விருது கொடுப்பதுதான் மரபு.

ஆனால், பாலா, பரதேசியைச் சொந்தமாகத் தயாரித்து, நல்ல லாபத்துக்கு விற்று அதிலிருந்து போயஸ் கார்டனில் ஒரு பங்களாவும் வாங்கியிருக்கிறாராம். இப்படிப்பட்ட பாலாவைத் தமிழ் ரசிகர்களாகிய நாம், கோலிவுட்டின் most wanted இயக்குனராக ஒரு பெடஸ்டலில் உட்கார்த்தி வைத்திருக்கிறோம்.

சந்தோஷம். We are on the right track.

பார்த்துத்தான் விடுவோமே என்று தியேட்டர் போனால், ஸ்டல்லா மாரீஸ் கல்லூரி கல்சுரல்ஸ் போல, தியேட்டர் முழுக்க கொத்துக் கொத்தாக இளசுகள்.

வழக்கமாக மணிரத்னம் , கௌதம் மேனன் , ரன்பீர்கபூர் படங்கள் மட்டுமே பார்க்கக் கிளம்பும் இந்த இளைஞர் / இளைஞிகள் கூட்டம், பாட்டு, ஆக்‌ஷன், சந்தானம், பவர்ஸ்டார் போன்ற சைட்டிஷ்கள் எதுவும் இல்லாத இந்த ‘மரண மொக்கை’ க்கு அட்வான்ஸ் புக்கிங் செய்து வந்ததோடு மட்டுமல்லாமல், வெண்திரையில் காட்சிகள் தோன்றித் தோன்றி மறையும் பொழுது, கீச் மூச் என்ற எந்தச் சத்தமும் இல்லாமல், சீட்டிலே பேயறைந்தாற்போல உறைந்து கிடப்பது, தமிழ்நாட்டில் மட்டுமே நிகழக்கூடிய ஒரு அற்புதம்.

இதெல்லாம் சாதாரண மேட்டர் தானே என்பது போல, பல நுட்பமான மேட்டர்களை அசால்ட்டாகச் செய்து கடந்து போகிறார் பாலா.

படத்தின் மிகப் பெரிய ப்ளஸ், வண்டி வண்டியாக வியாக்கியானங்கள் எழுதிக் குமிக்கும் அல்டாப்புப் பேர்வழிகளை எல்லாம் கழட்டி விட்டு, மண்மணம் கமழும் நாஞ்சில் நாடனைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டதாகும். சிறிது திசை திரும்பியிருந்தாலும் ஒரு மொக்கையான டாகுமெண்டரியாகப் போய்விட்டிருக்கக் கூடிய சித்திரத்தை நாஞ்சிலாரின் வசனங்கள் கவித்துவம் மிக்க படைப்பாக்குகிறது.

நிதானமாக உட்கார்ந்து யோசிக்கும் பொழுது நிறைய குறைகள் தென்படுகின்றன. ஆனால், அதெல்லாம் பிறகு.

ரசிகனாகப்பட்டவன், இது போன்ற ஒரு அற்புதக் கணத்தைக் அனுபவித்துக் கொண்டாடவேண்டும். மனசு புண்பட்டவர்கள் எல்லாம் ஒருவாரம் கழித்துக் கேஸ் போட்டுக்கொள்ளுங்கள். நானும் வருகிறேன், ஒத்து ஊத.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s