இஞ்சினியரிங் காலேஜ் பசங்க…..

ஏண்டா… உங்க இஞ்சினியரிங் காலேஜ் பசங்க எவனும் சவுண்டு குடுக்காம கம்முன்னு இருக்கீங்களே எப்படிடா?

அட நீங்க வேற மாமா… எங்க ஹெச் ஓ டி கொண்டே புடுவார்… செமஸ்டர் நெருங்குது.. அசைன்மெண்ட், மாடல் டெஸ்ட்டுன்னு பெண்டு கழட்டறாங்க.. ஏற்கனவே ப்ளேஸ்மெண்ட் எல்லாம் சொதப்புது.. இந்த லெச்சணத்துல…

அவங்களும் காலேஜ் பசங்க தானேடா…

சொல்ல மாட்டீங்க பின்ன… ஆர்ட்ஸு காலேஜ் பசங்க மாதிரி குடுத்து வெச்சவனுங்க யாரு சொல்லுங்க.. ஒரு நாளைக்கு நாலு மணிநேரம் க்ளாஸு.. ஏதோ கொஞ்சம் அட்டடண்ஸு.. பாஸ் பண்ணா போறும்… படிச்சு முடிச்சதும், வாயிருக்கிறவன் மார்க்கெட்டிங்.. இங்கீலீஸ் நல்லா பேசத் தெரிஞ்சா கால்செண்டர்… அப்பன் சொத்து இருந்தா எம்பிஏ.. செட்டும் துட்டும் இருந்தா பிசினஸ்… எங்க நிலைமையைச் சொல்லு… இப்பல்லாம், எஞ்சினியரிங்க் கம்பெனி வேலை வெளம்பரத்துலயே, டிப்ளமா படிச்சவன் மட்டும் அப்ளை பண்ணு.. அதிகமா படிச்சசவன் கிட்ட வராதேங்கறான்

படிப்புங்கறது வெறும் பணம் , வேலை சம்மத்தப்பட்டது மட்டும் இல்லைடா.. காலேஜ் லைஃபுலே படிப்பைத்தாண்டி கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு.

அதல்லாம் இல்லீங்க மாமா. தமிழ்நாட்டு எஞ்சினீயரிங் கல்லூரி மாணவர்கள் ஒரு தனி species. இவங்களுக்கு ( அதாவது என்னையும் சேத்து) இண்டர்னல் மார்க், communication skills, சாஃப்ட் ஸ்கில் டெவெலப்மெண்ட், personality grooming இதெல்லாம் முக்கியம். நாட்டை ஷேப் பண்ற வேலை எல்லாம் ஆர்ட்ஸ் / சைன்ஸ், லா காலேஜ் பசங்க பாத்துக்குவாங்க. நாங்க, படிச்சு முடிச்சு நல்ல கம்பெனில வேலைக்கு சேர்ந்து, ஆபீஸ் நேரத்துல, டிவிட்டர்ல புரட்சி பண்ணி ஆதரவு குடுப்போம்.

ஆனா, லைஃபு நீ நினைக்கிற அளவுக்கு ஈசி இல்லடா மகனே. law of nature ன்னு ஒண்ணு இருக்கு தெரியுமா?

ஒண்ணும் பண்றதுக்கு இல்லை மாமா. நிறைய கடந்து போச்சு. போன பேட்சுல ஒருத்தன் ப்ளேஸ்மெண்ட் கிடைச்சும் வேலை கிடைக்காம தற்கொலை பண்ணிகிட்டான். 20 வருசத்துக்கு முன்னால நீங்க படிச்ச சூழ்நிலை வேற.

இப்போதைக்கு,. curriculum ல இல்லாம, நாங்க ஆர்வமா செய்யற ஒரே விஷயம் என்ன தெரியுமா? ஆஸ்டல்ல துணி தோய்க்கிறது மட்டும் தான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s