ஞாநி க்கான மறுமொழி…

ஞாநியின், கிழக்குப் பதிப்பகத்தின் மீதான மறுமொழி குறித்து :

எனக்கு கிழக்கு நிறுவனத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை ( அவர்கள் பிரசுரம் செய்த ஏழெட்டு புத்தகங்களை வாஙகியது தவிர). அவர்களது நிர்வாகத்தில் என்ன பிரச்சனை என்று தெரியாது. தெரிந்து கொள்வதில் ஆர்வமும் இல்லை. “ஆக்சுவலா என்ன நடந்ததுன்னு ஒனக்கு ரொம்பத் தெரியுமா?” என்று பாதிக்கப்பட்டதாகச் சொல்லிக் கொள்ளும் யாராவது சண்டைக்கு வந்தால், அவர்களுக்கு என் பதில், ” எனக்குத் தெரியாது… என்ன வுட்ருங்க சார் ” என்பதே. சில பல காரணங்களுக்காக, முக்கியமான சில பலர் ‘காம்ப்’ மாறிவிட்டார்கள் என்பதே எனக்குச் சமீபத்தில் தான் தெரிய வந்தது.

அப்ப எதுவுமே தெரியாம என்னத்தக் கழட்ட வந்தாய் ன்னு கேக்கலாம்.

சொல்றேன்.

எல்லா நிறுவனங்களிலும், ஏகப்பட்ட கொடுக்கல் வாங்கல் உள்பட நிறைய பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். திருப்தி அடையாத கஸ்டமர், பவுன்ஸ் ஆகும் செக்குகள், பழைய பாக்கியை செட்டில் செய்தால் தான் சரக்கு அனுப்புவேன் என்று அடம்பிடிக்கும் சப்ளையர், எதிர்பாராத காலதாமதங்கள், அரசின் திடீர் முடிவுகளால், ஏற்படும் விலை உயர்வுகள், வங்கிகளின் வட்டி விகித மாற்றங்கள், ரெசெஷன், விற்பனை மந்தம், மாஸ் ரெசிக்னேஷன் என்று ஒவ்வொரு தொழிலிலும் அதற்கென்றே பிரத்தியேகமான சிக்கல்கள் இருக்கின்றன.

கிழக்கு உள்பட எல்லா நிறுவனங்களிலும் இந்தக் கதைதான் என்றாலும், பத்ரியை மட்டும் இந்த கும்மு கும்மறாங்களே ஏன் அப்படி என்பதிலே தான் என் இண்டரஸ்ட்.

சில விஷயங்கள் புரிந்தன.

1. பிற நிறுவனங்களில், இப்படிப்பட்ட பிரச்சனைகளை முறையாக அணுகுவதற்கு என்று சானல்கள் இருக்கும். அதன் வழியாகப் போனால் ஒழிய, சிக்கல்ளுக்குத் தீர்வு
கிடைக்காது. ஆனால் கிழக்கைப் பொறுத்தவரை, பிரச்சனை என்னவாக இருந்தாலும், ரெண்டு மூணு ட்வீட் , அல்லது ஃபேஸ்புக் பதிவு போட்டால் போதும் என்ற நிலை உண்டு. ( உதாரணமாக , தன் அதிருப்தியை, ஃபேஸ்புக் மறுமொழி மூலம் பதிந்த ஞாநி கூட, அதை கிழக்கு நிர்வாகத்துக்கு எழுத்து மூலம் தெரிவித்திருப்பாரா என்பது சந்தேகமே. தெரிவித்திருந்தார் என்றால் சாரி ) ஆனால், அந்த நிலை உருவாகக் கிழக்கே காரணம். இந்த over pampering of customers என்பது எப்போதுமே வில்லங்கம் தான்.[கடைக்குள் வந்த முதல் நாள் உபசரிப்பாக மோர் குடுத்தால், அடுத்த முறையும் கேட்பார்கள். மூன்றாவது முறை இல்லை என்றால், ‘ஆரம்பத்துல நல்லாதான் இருந்தது, இப்பல்லாம் இந்தக் கடை வேஸ்ட்டுப்பா’ என்பார்கள். கடை வியாபாரத்தின் முக்கிய அம்சங்களைக் ( தரம், விலை, சேவை இன்ன பிற) கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.மோர் குடுக்கவில்லை என்அதுதான் பெரிய குறையாக ஊரெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.] இந்தச் சிக்கலை flipkart அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

2. கிழக்கின் ஆரம்பகால வெற்றிக்குக் இந்த இணையப் பொதுவெளி பேருதவி புரிந்தன. மிக அதிக இணைய வாசகர்களிடம் சென்றடைந்த, பத்ரியின் வலைப்பதிவும், பதிப்பகத்தின் முக்கிய எழுத்தாளர்களின் வலைப்பதிவுகளும் , சோஷியல் மீடியாவின் முக்கியமான அம்சமாகிய multiplier effect மூலம் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தன. ஆனால், வில்லங்க மேட்டர்களும் இதே அளவுக்கு multiply ஆகும் என்பதுதான் ஆகப் பெரிய சிக்கல்.

2. நம் அனைவரும் இருக்கும் மிகப் பெரிய வசதி, தொழில் ரீதியிலான நம் ப்ரைவசி. அதாவது, நம்மில் ஒருவர், வேலையைச் சொதப்பிதயதற்காக மேனேஜரிடம் செருப்படி வாங்கினால், அது வெளியே தெரியாது. யாராவது, தாங்கள் செய்யும் பிசினஸில் கஸ்டமரை இழுத்தடித்தால், பொதுவெளியில் பெயர் நாறடிக்கப்படாது. பொதுவெளியில், ஒருவர், ஐஎஸை முத்திரை குத்திய பெண்ணியவாதியாகவும், அதேசமயம், வீட்டிலே wife beater ஆகவும் இருந்தாரானால், அவருடைய மனைவி பொதுவெளிக்கு வரும் வரை சிக்கல் ஏதும் இல்லை. அலுவலகத்தில் சுரண்டல் முதலாளியாகவும் , ஃபேஸ்புக்கில் பொதுவுடமைவாதமுமாக டபுள் ஆக்ட் கொடுத்தால், அது யாருக்கும் தெரியப் போவதில்லை. இவ்வளவு ஏன், பணமோசடி செய்து விட்டு, ரிமாண்டில் இருந்து விட்டு வந்தால் கூட, அது நாம் புழங்கும் இணைய வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

ஆனால், கிழக்கு நிறுவனத்தில் அது சான்ஸே இல்லை.

ஏனெனில்,

பதிப்பகத்தின் முதலாளிகள், அதில் எழுதுபவர்கள், ப்ரூஃப் ரீடர்கள், விற்பனையாளர்கள், சும்மா வேலையை விட்டவர்கள், சண்டை போட்டு வேலையை விட்டவர்கள்,
வேலையை விட்டுத அனுப்பப்பட்டவர்கள் , சான்ஸ் கிடைத்தால் எகிறலாம் என்று நினைப்பவர்கள், வாசகர்கள், முன்னாள் வாசகர்கள், அபிமானிகள், சுயசாதி அபிமானிகள், துவக்கம் தொட்டே கடுப்பில் இருப்பவர்கள், சித்தாந்த ரீதியாக எதிர்ப்பவர்கள், சும்மா ஜாலியாக எதிர்ப்பவர்கள், கொளுத்திப் போட்டு வேடிக்கை பார்ப்பவர்கள், ஜால்ரா போடுபவர்கள், புக்கு போடுவதாகச் சொல்லி ஏமாற்றப் பட்டவர்கள், ராயல்ட்டிச் செக்கு தாமதமாகப் பெற்றவர்கள், போட்டிப் பதிப்பகத்தார் என்று கிழக்குப் பதிப்பகத்துடன் நேர் / மறைமுக தொடர்பு கொண்டவர்கள் அத்தனை பேரும், ஒரே நெட்வொர்க்கில் , ஒருத்தருக்கு ஒருத்தர் நட்பு / பகை / சுமார் பழக்கத்துடன் இருந்தால் என்னவெல்லாம் கலாட்டா நடக்குமோ அதுவே இப்போது நடக்கிறது.

இதைக் கட்டுப்படுத்தவே முடியாது. யாராவது ( உண்மை உள்பட) எதையாவது எழுதிக் கொண்டேதான் இருப்பார்கள்.

the downside of social media.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s