விஸ்வரூபம் – என் அறிவுக்கு எட்டிய சில விஷயங்கள்.

விஸ்வரூபம் – என் அறிவுக்கு எட்டிய சில விஷயங்கள்.

1. கமல் எப்போதுமே, திரைத்துறையில் நிகழும் disruptive technology சமாசாரங்களை, முழுமூச்சாக ஆதரித்து வந்திருக்கிறார். இதனால், வியாபாரிகளுக்கு ( தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர், விநியோகஸ்தர், மீடியேட்டர் உள்ளிட்டவர்கள்) எப்பொழுதுமே அவர் மீது ஒரு கடுப்பு உண்டு. ஏகப்பட்ட ஸ்டார்களும், தளபதிகளும் தினமும் முளைத்து வரும் இடத்தில் தன் விருப்பத்துக்கேற்ப படத்தை வெளியீடு செய்ய முடியாமல், DTH மூலம் வெளியிட்டு புரட்சி செய்ய நினைத்ததில், வியாபாரிகள் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்த்தனர்.

2. எதிர்பார்த்த அளவுக்கு DTH புக்கிங்க் நிகழ்ந்திருந்தால், வியாபாரிகள் கண்ணில் விரலை விட்டு ஆட்டியிருக்கலாம். ஆனால், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பாணியிலான DTH முயற்சி வெறும் ஒரு சில கோடிகள் மட்டுமே வசூல் செய்திருந்ததால், வேறு வழியின்றி வியாபாரிகள் சொல்லுக்குக் கட்டுப் படவேண்டியதாகப் போயிற்று. கமல் எதிர்பார்த்த 300 + தியேட்டர்கள் 25 ஆம் தேதிதான் கிடைக்கும் என்ற பட்சத்தில், அதற்கும் ஒத்துக் கொண்டு, DTH வெளியீட்டையும் ஒத்திவைத்தார்.

3. வியாபாரிகளுக்கு இதுவும் ‘ஜஸ்ட்’ ஒரு படம். பவர்ஸ்டார் மாதிரி ஒரு டூபாகூர் பார்ட்டியை வைத்து, 400% – 500% லாபம் ( அதுவும் பல பத்து கோடிகளில்) பார்க்க முடியும் என்கிற போது, தங்களை வெறுப்பேற்றிய கமல்ஹாசன் மீது ( அதுவும், இது, ஒரு ஆளவந்தான், ஹேராம் போல ஊத்திக் கொள்ளாது என்று எந்த உத்தரவாதமும் இல்லை) எந்தக் கரிசனமும் இல்லை.

4. இந்தப் படத்துக்குத் தடை விதித்தவர்கள் அரசு அதிகாரிகள் . இந்த முடிவை, முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் எடுத்திருக்க முடியாது. ஆகவே , கமலஹாசனுக்கு ஆதரவு காட்டினால், அது முதல்வரை எதிர்த்தது போல் தோற்றம் தரும் என்று நடிகர்கள் நினைத்தார்கள். Performing Artists, எந்தக் காலத்திலும் ஆட்சியாளனை அண்டிப் பிழைப்பு நடத்த வேண்டியிருக்கிறது. ஆகவே நடிகர்களும் அவரைக் கைவிட்டனர்.

5. முதல்வர், சில பழைய கணக்குத் தீர்க்க பழிவாங்குகிறா என்று உலவும் செய்திகள். இது நம்புவதற்கு எளிதாக இருந்தாலும், எனக்கு இது உண்மையாக இருக்கும் என்று தோன்றவில்லை. முந்தைய முதல்வர் வேண்டுமானால் ( வேறு வழியில்லாமல் family & extended family புடுங்கல் தாங்க முடியாமல்) இப்படிச் செய்திருக்கலாம். ஆனால், ஜெ. பார்வையில், இந்த இருபது கோடி, முப்பது கோடி பஞ்சாயத்தெல்லாம் ரொம்ப சில்லியாகத் தோன்றும்.

6. இஸ்லாமிய அமைப்புகள், படம் வெளியானால் கலாட்டா செய்வோம் என்று மிரட்டியதாலும், அதில், பலர் அவருடைய தோழமைக் கட்சிக்காரர்கள் என்பதாலும்,மீலாதுநபி பண்டிகை, குடியரசு தினம் என்று அடுத்தடுத்து வரும் நேரத்தில் எதுக்கு வம்பு என்ற நோக்கில் தான் , முதல்வர் தடைக்குச் சம்மதித்திருப்பார். மேலும், பிரச்சனையில் பாதிக்கப்பட இருப்பவர் கமல்ஹாசன். அவர் வந்து அப்பாய்ன்மெண்ட் கேட்கும் பொழுது, தானும் படத்தைப் பார்த்து, இசுலாமிய அமைப்பு நண்பர்களிடம் பேசி சமாதானம் செய்து வைக்கலாம் என்று நினைத்திருக்கலாம். பாதிக்கப்பட்ட பார்ட்ட்டியே லாஸ் ஏஞ்சல்ஸ்ல போய் உட்கார்ந்திகிட்டு நெட்டுல அறிக்கை விடுது, நமக்கென்ன போச்சு, வந்து கேக்கட்டும் அப்பறம் பாத்துக்கலாம் என்று டீலில் விட்டார். முதல்வர் அப்படிச் செய்யக் கூடியவர்.

7. படத்தைப் பார்த்த பல இசுலாமிய நண்பர்கள், திரைப்படத்தில் தமிழ் முஸ்லீம்கள் புண்படுத்தும் காட்சிகள் ஏதும் இல்லை என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கமல்ஹாசன், இசுலாமியர்களின் நண்பர் என்றோ, எதிரி என்றோ நினைக்கவில்லை. இது ஒரு வியாபாரப் படம் என்று நினைக்கிறார்கள். ஆந்திரா பார்டர் சென்று படம் பார்த்துவிட்டு வந்த ஒரு இசுலாமிய நண்பன் ஃபோனில் சொன்னது, ” முசுலீம்களை வில்லத்தனமாக் காட்டறது மனசுக்கு கஷ்டமாதான் இருந்தது. ஆனால், அது, கேவலமான ஒரு சர்தார்ஜி ஜோக்கைப் படிச்சுட்டு வருத்தப்படும் ஒரு சர்தார்ஜியை நிலைமயை போலத்தான்” என்றான். எங்களை எப்படிரா இப்படிச் சொல்லப் போச்சு ன்னு சண்டை பிடிக்கணும்னா யார்கிட்ட ஆரம்பிக்கணும்? கமல் கிட்டேயா? ஆமாம். ஏன்னா அவர்தான் கைக்கு ஈசியா கிடைக்கிறார்.

8. கலைக்கான விதிமுறைகளே வேற. இசுலாமிய அமைப்புகளை மட்டுமல்ல, எல்லா அமைப்பு, அமையாப்பு களையும் புண்படுத்தணும். நம்பிக்கைகளைக் கேள்வி கேக்கணும். விளிம்பு செண்டராகவும், செண்டர் ஓரத்துக்கும் நகரணும். ஒரு கார்ட்டூன் போட்டாக் கூட செருப்பால் அடிச்சாப்பல இருக்கணும். இதுதான் கலையின் முக்கியமான பணி. அண்ணன் அருள்செல்வன் ட்விட்டரில் சொன்னது இது : “upsetting idiots is the fundamental function of any self respecting art” – அடிச்சுப் பாடம் பண்ணவேண்டிய வார்த்தைகள். இந்த அடிப்படைகளைக் கணக்கிலே எடுத்துக் கொள்ளாமல், இதுல பாட்டு இல்லை. இதுல டான்ஸ் இல்லை. அதனாலே, இதை நிப்பாட்டு என்று எந்தப் புரிதலும் சொல்ற அமைப்புகள், கலை, இலக்கியம் ஆகியவற்றில், பிற மதத்தவர்களுக்கு நிகராக contribute செஞ்ச ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த ரெப்ரசண்டேடிவாக இருக்க முடியாது.

9. வருகிற விமர்சனங்களிலேர்ந்து பார்த்தால், இது, பார்க்க பிரமிப்பூட்டும் ஒரு சாதாரண திரில்லர் என்றே தெரிய வருகிறது. அல் கைதா என்று கதையை அமைத்தால்,ஆக்‌ஷனுக்கு பக்காவான ஸ்கோப் இருக்கிறது. தாலிபான் பற்றிய செய்திகளைப் படித்துப் பரிச்சயம் உள்ளவனுக்கு, பின்புலத்தைப் புரியவைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்று தெரிந்துதான் இப்படிச் செய்திருப்பார். இதே அளவுக்கு ஆக்‌ஷன் ஸ்கோப் உள்ள உல்ஃபா , போடோ, பாலஸ்தீனிய, தீவிரவாதம் பற்றி எல்லாம் கிழக்கு, புக்கு போடத்தான் சரிவரும், சினிமாவாச் சொன்னா ஒரு பயலுக்கும் புரியாது என்று நினைத்திருக்கலாம். ஏனெனில், கமல்ஹாசன், ஒரு படம் எடுத்து, யாரிடமும் எந்தப் பிரச்சனையும் செய்து கொள்ளாமல், படம் ஓடி லாபம் ஈட்டவேண்டும் என்று தான் நினைப்பார். பர்சனல் அஜெண்டா ( அப்படி ஒன்று இருந்தால்…) அதல்லாம் குறுக்கே வராது.

10. இந்த நாட்டில் ஒரு சிறுபான்மைச் சமூகத்தைத் சேர்ந்தவர்கள், ஒரு குழுவாகச் சேர்ந்து, தங்களுக்கு அநீதி நடக்கிறது என்று நினைத்து, அரசாங்கத்தை அணுகி, கிட்டதட்ட அனைத்துத் தரப்பினர் எதிர்ப்பையும் மீறி, தங்களுக்குச் சாதகமான ஒரு முடிவைப் பெற முடிகிற அளவுக்குச் தமிழகத்தில் சமூக நீதி நிலவுகிறது என்று மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், அந்த உரிமையை, அந்தஸ்தை, மிகவும் தவறாக, அதுவும் தங்கள் சமூகத்துக்கு எதிராகவே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஏனெனில்,

வில்லனுக்கு முஸ்லீம் பேரை வைக்காதே என்று கேட்டுத் தடையுத்தரவு வாங்கமுடியுமே, தவிர, ஹீரோவுக்கு முஸ்லீம் பேரை வெச்சுத்தான் ஆகணும் என்று உரிமை கோர முடியாது என்ற விஷயம் புரிந்து கொள்ளப்படவில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s