Random Thoughts #1

காலத்தை வென்ற படைப்பு அப்படிங்கறதே ஒரு டுபாக்கூர் விஷயமாத்தான் தோணுது.

திரைப்படம் என்கிற கலை, நுட்பம், வணிகம் ஆகிய மூன்றும் பின்னிப் பிணைந்த creative ஆன விஷயம், எப்போதுமே contextual ஆகத்தானே இருக்கமுடியும்?

ஒரு படத்தை, அது வெளியான காலகட்டம், அதை முதல்நாள் முதல் காட்சியாகப் பார்ர்த்த ரசிகர்களின் social economic status, கணவனை டூட்டிக்கு அனுப்பிவிட்டு கிருஷ்ணவேணிலே நூன்ஷோ பார்த்த தாய்க்குலங்களின் விருப்பு வெறுப்புகள், அந்த காலகட்டத்திய மக்களின் அரசியல் மனச்சாய்வு, படத்தை உருவாக்கியவர்கள், பங்கு பெற்றவர்கள் குறித்து ஏற்கனவே உருவான பொதுப்பிம்பம், அப்போதிருந்த நகரத்துக்கும் கிராமத்துக்கும் நிலவிய பொதுவான இடைவெளி போன்ற , படத்தின் வெற்றிதோல்விக்குக் காரணமான மறைமுகமான விஷயங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நாப்பது வருஷத்துக்கு முன்னாலே வெளியான படத்துக்கு இப்போதைய relevance கண்டு பிடிக்க முயல்வது, கரும்பஞ்சாற்றுக்கசண்டில் (molasses) இல் இருந்து புதிதாகச் சாறு எடுக்க முயல்வதற்கு சமம். அப்படிச் செய்பவன் வேலைக்காகாதவன்.

ஆனால்,

அதே கரும்பஞ்சாற்றுக்கசண்டை எரிபொருளாகப் பயன்படுத்த்தி மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டு பிடித்தவன் புத்திசாலி.

மத்தியான வேளைலை காரக்குழம்பு, கூட்டு பொறியல் அப்பளம்னு பாத்தி கட்டி அடிச்சா, உண்ட மயக்கத்துல இப்படி எல்லாம் தோணும் போல”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s