NHM Reader

இந்தப் புத்தகச் சந்தையில் வாங்கிய வஸ்துக்களில் ரொம்ப ரசித்துப் படித்தது, NHM Reader அரங்கில் கிடைத்த. அகேகே ( அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்) பாணியில் அமைந்த அந்தத் துண்டறிக்கைதான். ( புத்தகச் சந்தை கொள்முதல் முடித்து பஸ் நெரிசலில், படிக்க வாகாக இதுதான் கிடைத்தது. ரொம்ப வழவழவென்று வண்ணமயமாக இருந்ததால், பிற பிட்நோட்டீஸ்களைப் போலத் கசக்கித் தூக்கி எறிய மனமில்லாமல், பாக்கெட்டில் சொருகியிருந்தேன்)

ஒரு புதிய பொருள் அல்லது சேவைக்கு FAQ எழுதுதல் அத்தனை எளிதானது அல்ல. அதை வாங்க இருப்பவர்களின் demography, விருப்பு வெறுப்புகள் தெரியாத நிலையில் / அல்லது குத்துமதிப்பாக மட்டுமே தெரிந்த நிலையில், நாமாக ஊகித்து எழுதுதல் மிகவும் சிரமம்.

உதாரணமாக

* ரொம்ப அடிப்படையிலிருந்து எழுதினால் ( உதா : முதலில் கம்ப்யூட்டரை ஆன் செய்யவும்) , ” என்ன நம்மை மடையன் என்று நினைக்கிறானா?” என்று கோபம் வரும்.
* கொஞ்சம் அட்வான்ஸ்டாக எழுதினால் , பலருக்குத் தலையும் காலும் புரியாது.
* அனைவர் தேவைகளையும் உள்ளடக்கி எழுதினால், ரொம்ப வள வள என்று இருக்கும், ஒருத்தரும் படிக்க மாட்டார்கள்
* சரி, வகைக்கொரு மாதிரி எழுதினால் ( basic, advanced) எதை யாருக்குக் கொடுப்பது என்று தெரியாது.
* நாம் எது முக்கியமான பிரச்சனை என்று நினைக்கிறோமோ அது நிறையப் பேருக்கு ஒரு விஷயமாகவே இருக்காது.
* சிலருக்கு பலத்த பீடிகை தேவைப்படும். சிலர் , சரிதான் மேட்டருக்கு வாய்யா என்பார்கள்.

மேலும் ஒரு நல்ல அகேகே துண்டறிக்கை, மிகத் தெளிவாக, வாங்கியவர்களுக்கான ஒரு basic manual போலவும், அதே சமயம், வாங்க நினைப்பவர்களுக்கான sales brochure போலவும், ஒரே நேரத்தில் இரு விதங்களில் செயல்பட வேண்டும்.

NHM இன் அகேகே துண்டறிக்கை, இந்த அத்தனை குணங்களையும் கொண்டிருந்தது.

உரிமைத் துறப்பு & பிகு : இது NHM Reader என்கிற செயலிக்கான ரிவியூ அல்ல. NHM Writer ஐ ஒரு நாலைந்து முறை, பயன்படுத்த முயன்று, தோல்வி அடைந்து ஒதுக்கி வைத்துவிட்டேன். ( ஆல்வேஸ் ஈ கலப்பை). இந்த NHM Reader ஐஃபோன் அப்ளிகேஷனிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. இதைப் ஒரு publishing platform போல, மற்ற பதிப்பாளர்களும் பயன்படுத்தலாம் என்பதால் அறிகிறேன். நன்றாக எழுதும் , விரிவான வாசக தளம் கொண்ட அமெச்சூர் எழுத்தாளர்கள் பலர், vanity publishing போல ஸ்மார்ட்டாகப் பயன்படுத்தலாம். இது குறித்து, இன்னும் விரிவாக எழுதவேண்டும். Later.”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s