புத்தகக் காட்சி – 2013

புத்தகச் சந்தைக்குப் போய் புத்தகங்கள் வாங்கவேண்டும் என்கிற இச்சை குறைந்து கொண்டே வருகிறது. இணையத்தில் இதை விட எளிதாகச் செய்ய முடிவதே காரணம் என்று நினைக்கிறேன். மற்றொரு காரணம், பதிப்பகங்களை விடவும் புத்தக வியாபாரிகளின் ஆதிக்கமே அதிகம் இருப்பதால், முக்கால்வாசி அரங்குகளில் பெஸ்ட் செல்லர்கள் எனப்படும் கல்கி, கண்ணதாசன், கோட்டு கோபிநாத் இறையன்பு , சாண்டில்யன் பாலகுமாரன் புத்தகங்களே கண்ணில் படும் படி வைக்கப் படுகின்றன. கிட்டதட்ட எல்லா அரங்குகளும் ஒரே போலத்தான் இருக்கின்றன.

பரத் சுப்பிரமணியன்,பா.ராகவன், குகன் ( கேபிள் சங்கரின் பதிப்பாளர்), கிழக்கின் மருதன், குமுதத்தின் தளவாய் சுந்தரம், விருட்சம் அழகிய சிங்கர், காட்சிப்பிழை ‘ சுபகுணராஜன், சோம. வள்ளியப்பன் ஆகியோரைச் சந்தித்துப் பேச முடிந்தது. ஞாநி அறிமுகம் செய்து கொண்டு, அவரது கையெழுத்துடன் புத்தகங்களை வாங்கினேன். அருகில், அதியமான் இருந்தார்.

நக்கீரன் ஒரு மாடர்ன் மணிமேகலைப் பிரசுரம் என்றால், மதி நிலையம் ஒரு poor man’s கிழக்குப் பதிப்பகம் போலிருக்கிறது. முழு அரங்குமே ( புத்தகங்கள் உட்பட) கிழக்கின் abridged version போலத் தோன்றியது. ரஜினி புஸ்தகம் வாங்க நினைத்து, வாங்கவிலலை. அடுத்த முறை. கிழக்கிலும் நுழைய முடியவில்லை. நச நச வென்று கூட்டம்.

எதையாவது குறிப்பாகத் தேடுபவர்களுக்கு புத்தகச் சந்தை லாயக்கில்லை. மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது ஏதாவது மாட்டினால் சரி..

ஆழி ஸ்டாலில் பில் போட நின்று கொண்டிருந்த பொழுது, பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர், அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித் என்று அறிந்து, காமிராவில் சிறைப்பிடித்தேன்.

சாரு நிவேதிதா இல்லை. சீடர்கள் சூழ சாக்ரடீஸ் போல் வலம் வரும் எஸ்.ரா இல்லை. வாசலியே உட்கார்ந்து அதகளம் செய்யும் மனுஷ்யபுத்திரன் இல்லை. இலக்கியத்துக்கு டெம்ப்ரவரி லீவ் குடுத்துவிட்டு வசனம் எழுதும் ஜெயமோகனின் விசேஷங்கள் ஏதும் இல்லை. மொத்தத்தில் அதிக சுவாரசியம் இல்லாத முதல் விசிட்.

அடுத்த விசிட் அனேகமாக மனைவி மற்றும் மகளுடன். பார்ப்போம்.

வாங்கிய நூல்கள் :

1. நிழல்முற்றத்து நினைவுகள் – பெருமாள் முருகன். (பெருமாள் முருகன் பிடிக்கும். )
2. சம்பத் கதைகள் – தொகுப்பு : அழகியசிங்கர் ( அட்டகாசமான தொகுப்பு. சம்பத் ரொம்பப் பிடிக்கும்)
விருட்சம் – 91 ஆவது இதழ் ( சம்பத் கதைகள் தொகுப்புக்கு நன்றி சொல்வதற்காக…..)
3. காட்சிப்பிழை இதழ்கள் டிசம்பர் 2012, ஜனவரி 2013 மற்றும் அடுத்த ஆண்டிற்கான சந்தா ( ரொம்ப ஓவராகச் சீன் போடாத, என் லெவலுக்கு எறங்கி வரும் ஒரே தமிழ் சினிமா இதழ். )
4. தேர்ந்தெடுக்கப்பட்டச் சிறுகதைகள் – பிரபஞ்சன் ( ஆழி பதிப்பகம்) – ( இவரு most under rated personality of contemporary tamil literatrure. வாங்கியே ஆகணும். )
5. தமிழ் ஆழி மாத இதழ் – ஜனவரி 2013 – (ச்சும்மா…)
6. எ.ஆர்.ராதா, வாழ்வும் சிந்தனையும் – விந்தன் (தோழமை வெளியீடு) – ( ஒரு ப்ராஜெக்ட்டுக்காக )
7. எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள் – விந்தன் (தோழமை வெளியீடு) – ( ஒரு ப்ராஜெக்ட்டுக்காக )
8. Chevalier Dr.Sivaji Ganesan Felicitation Souvenir, 1995 – ( ஒரு ப்ராஜெக்ட்டுக்காக )
9. மனிதர் தேவர் நரகர், கட்டுரைகள் – பிரபஞ்சன் ( புதிய தலைமுறை வெளியீடு) – (பிரபஞ்சனின் புதிய கட்டுரைகளுக்காக….)
10. பழைய முன்றில் இதழ்கள் ( செப்டம்பர் 1994, மார்ச் 1994, ஜூன் 1994, ஜனவரி 1995) – என்ன இப்ப?
11. நகர்வலம் – ஞாநி – (ஞாநிக்காக )
12. ஓ பக்கங்கள் 2012 – ஞாநி – (போரடிக்கும் பொழுது, படித்து, பிளட் ப்ரஷரை ஏற்றிக்கொள்ளலாம் )
13. தமிழ்நாடு, நூற்றாண்டுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் – ஏ.கே.செட்டியார் – (ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்.)
14. A Madras Miscellany, People, Places & Potpurri ( 999 ஓவா… கொஞ்சம் சாஸ்திதான்.. இருந்தாலும், இதை வாங்காம விட முடியுமோ…)
15. Madhouse: True Stories of the Inmates of Hostel 4, IIT Bombay by Urmilla Deshpande & Bakul Desai ( தோஸ்து ஒர்த்தன் சொன்னாங்கறதுக்கோசரம்…)
15. Alchemy – The Tranquebar Book of Erotic Stories II ( படிச்சுப் பார்த்த prologue ல மயங்கி…)
16. The Rozabal Line – Ashwin Sanghi

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s