கமலஹாசன் – விஸ்வரூபம் – DTH விவகாரம்

“…about the release date, I have postponed it for my convenience, because there isn’t enough time for DTH to propagate their things (sic). Some people don’t even know how to book it, when to have it or how to reach out, there are so many questions. There isn’t enough time to answer all those questions…”

… Kamal Hassan

இதுதான் மொத்த மேட்டரும்..

நன்றாக ஓடி பல நூறு கோடி ரூபாய்கள் ஈட்டிய ஒரு ப்ளாக்பஸ்டர் திரைப்படத்தை, ‘தமிழ்த் திரையுலகில்’ முதன் முறையாக, ‘இலவசமாகக்’ காட்டுவதற்கே, பல நாட்கள் முன்பிலிருந்தே , கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள ஏர்டைமில் விளம்பரம் செய்து, பாருங்க பாருங்க என்று மக்களை கெஞ்ச வேண்டியிருக்கு. இப்படி இருக்கும் பொழுது, இலவசமாகவே பார்த்துப் பழக்கப்பட்ட டீவியில் ஆயிரம் ரூபாய் என்ற உடன் எல்லாம் லைன் கட்டி நிற்பார்கள் ( சினிமா க்யூ போல) என்று நினைத்ததைப் போல மடத்தனம் வேறு இல்லை.

ஏனெனில், கலைக்கும் காமர்ஸுக்குமான ஆட்ட விதிகள் வெவ்வேறானவை. இதைத் தெரிந்து ஆடியிருந்தாரானால், இந்நேரம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு புக்கிங் ஆகியிருக்கும். வெறுப்பேற்றியவர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டியிருப்பார்.

1000 ரூபாய் என்று எப்படி முடிவு செய்தார்கள் தெரியவில்லை.

நுகர் கலாசாரத்தில், கன்ஸ்யூமருக்கு எது கட்டுபடியாகுமோ அதுதான் விலையே தவிர, உற்பத்தியாளர் நிர்ணயிப்பதல்ல. ரெண்டு ரூபாய்க்குச் சீப்படும் வாழைப்பழத்தை, என்ன டகால்டி செய்தும் 10 ரூபாய்க்கு விற்க முடியாது வண்டிச் சத்தம், சுமைக்கூலி என்று எந்த நியாயமான காரணம் இருந்தாலும் எடுபடாது.

இது புஸ்தகம் பதிப்பிக்கிற வேலை அல்ல, சுஜாதாவுக்கு ஒரு ரேட், பிடி சாமிக்கு ஒரு ரேட் என்று வைக்க. சினிமா. இங்கே எந்திரன் படத்துக்கும் தேவியிலே தரை டிக்கெட் 10 ரூபாய்தான்.. சொம்பு நடித்த போடா போடிக்கும் அதே 10 ருபாய்தான். கஸ்டமருக்கு இது தெரியாதா அல்லது ஐ… கமல் படம்… என்று 1000 ரூபா கட்டி ஏமாந்து போக நடப்ப்பது என்ன சஸ்ஸாரு நிரோதிதா கதையா? என்ன விளையாடுறீங்களா?

ஆனால்

கமலஹாசனின் இந்த முயற்சி வரலாற்றில் முக்கியமானது. நடந்து கொண்டிருப்பது மார்க்கெட்டிங் ஆசாமிகளுக்கான அபாரமான கேஸ் ஸ்டடி. படித்துப் புரிந்து கொள்ள வேண்டாமல், அதிர்ஷ்டவசமாக நம் கண்முன்னேயே நிகழ்கிறது.

ஆனால், இதை, எந்த ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’த்தனமும் இல்லாமல் , இன்னும் தகுந்த நிபுணர்களைச் சேர்த்துக் கொண்டு வெற்றிக்கான எல்லா விஷயங்களையும் உறுதி செய்து கொண்டு , ஒட்டுமொத்த உலகமும் வேடிக்கை பார்க்கும் இந்த முயற்சியை கில்லி மாதிரி சொல்லி அடிக்க வேண்டும்…

ஏன்னா

அப்பதான் நாங்க, கோச்சடையானுக்கு கரக்டா ஸ்கெட்ச்சு போட்டுத் தூக்க முடியும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s