NeethaanE en pon vasantham – Review

சமீப காலத்தில் , மிக மிக நுட்பமான உணர்வுகளை, இத்தனை நுணுக்கமாக திரையில் பிரதிபலித்து நான் பார்க்கவில்லை.

எப்படி, ஒரு dayscholar மாணவனுக்கு, என்ன எடுத்துச் சொன்னாலும், இன்ப, துன்பங்கள் கொண்ட ஹாஸ்டல் வாழ்க்கையின் மகத்துவம் புரியாதோ, அதே போல

காதல், எதிர்பாலருடனான நெருக்கமான platonic நட்பு, பிறர் காதலுக்குத் துணை போதல், ரெஜிஸ்ட்ரார் ஆஃபீசில் சாட்சிக் கையெழுத்துப் போடுதல், போலீஸ் ஸ்டேஷன் வாசம், துயரம் முற்றி மெக்டவல் சரக்குகளில் தஞ்சம் புகல் போன்ற

மாணவ வாழ்க்கையின் மிக சுவாரசியமான விஷயங்களை கண்டு கொள்ளாமல், படிப்பு வேலை என்று இன்ன பிறவற்றில் கவனம் செலுத்தி, சம்பாதித்து, பின்னர் ஒரகடத்தில் ஃப்ளாட்டு வாங்கி ( gated community, internation school அருகில்) செட்டில் ஆகியிருக்கும் first bench கோய்ந்தசாமிகளுக்கு இந்தப் படம் புரியாது.

‘ஃபேமிலி மெம்பர்ஸ்’ நிறைந்த செயற்கையான சில குடும்பக் காட்சிகள் தவிர்த்து, அத்தனை காட்சிகளும் கிட்டதட்ட செதுக்கி செதுக்கிச் செய்யப்பட்டவை. ( வழக்கமான அப்பர் மிடில்கிளாஸ் வாடை வீசும் சில தவிர்த்து ) வசனங்களும் , பாடல் பொருத்தியிருக்கும் இடங்களும் அட்டகாசம். ஜீவாவின் மூணாவது அட்டெம்ப்ட் ( பத்து வயசில் தொடங்கி, நாலுமுறை வெவ்வேறு காரணங்களுக்காகப் பிரிந்து பிரிந்து இறுதியில் சேர்வதுதான் மொத்தக் கதையுமே) நடக்கும் அந்தக் கடலோர கிராமத்தில் , சமந்தா சண்டை போட்டுப் பேசும் வசனங்கள் அனைத்தும்… sheer brilliance என்பார்களே அந்த இரகம்…

ஜிவாவிற்குத் திருமணம் நிச்சயம் ஆன பிறகு, நடு இரவில் அவரைப் பார்க்க சமந்தா வர, இனி செய்ய ஒன்றுமில்லை என்ற பாவனையில் தத்தமது காதலை, இருவரும் நினைத்துப் பார்க்க, ஒரு விதமான extreme மனநிலையில், பிரிந்த பிறகான தங்கள் வாழ்க்கை பற்றி இருவரும் பேசிக் கொள்ள, அதன் அபத்தங்கள் ஒரு சிறு மௌனத்தைக் கொண்டு வர, அந்த மௌனத்தைக் கிழித்துக் கொண்டு , திடீரென்று , ” சற்று முன்பு பார்த்த நேரம் மாறிப் போக… “என்று Ramya Nsk பீரிட்டுக் கிளம்பி முதல் சரணத்துடன் அடங்க, மற்றொரு சிறு மௌனம் சூழ…..இப்படிச் செல்லும் அந்தக் மொத்தக் காட்சியும் முழு சிம்ஃபனி.

எல்லாம் முடிந்து சமந்தா கிளம்பும் அந்த நேரத்தில், ஜீவா..தன் கார் சாவியை சமந்தாவிடம் கொடுத்து ஓட்டச் சொல்லும் காட்சி… க்ளாஸ்….. ஜீவாவின் கேரக்டரைசேஷனுக்கான சிக்நேச்சர் அது… அந்த விட்டேத்தித்தனம்.. அந்த சுயநலம், லைட்டான ஆண் திமிர்… ரத்தமும் சதையுமான ஒரு நிஜமான கதாபாத்திரம்..

நம்பவே முடியலை….அடேய் கௌதம் மேனன்.. நீ அவ்ளோ பெரிய அப்பாடக்கரா…..

மற்றபடி, போரடிக்குது.. ரீரிகார்டிங் செரியில்லை, ஒண்ணுமே புரியலை, மொக்கை என்று சவுண்டு குடுக்கும் யூத்துகள், யூத்துகள் மாதிரி ஷோ காட்டும் பெருசுகள் அனைவருக்கும் சொல்லிக் கொள்வது..

கொஞ்சம் தள்ளிப் போய் வெளையாடுங்க… பந்து, மேல பட்ரப் போவது….

verdict : நாளை ஒன்ஸ்மோர் பாக்கப் போறேன்……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s