Random Thoughts #2

ஏக்கரா கணக்கில் விரிந்து கிடக்கும் நில்க்ரீஸில்,ஊறுகாய் அப்பளம் செக்ஷனில் மேய்ந்து கொண்டிருந்த பொழுது, ஒரு ( இளம்) அம்மா, நூடுல்ஸ் ஆராய்ந்து கொண்டிருந்தார். கூட ஒரு சின்னப் பையன் அம்மா, அம்மா… நூடுல்ஸ் நூடுல்ஸ் என்று அனத்திக் கொண்டிருந்தான்.

நூடுல்ஸ் என்றாலே மாகி என்று நினைப்பவர்கள், செலவு பார்க்காமல், வடபழனி பஸ் நிலையத்துக்கு எதிரில் இருக்கும் நீலகிரிச்சிறப்பங்காடிக்கு ஒரு விசிட் அடிக்கவும். சுமார் 30 – 35 பிராண்டில் நூடுல்ஸ் கிடைக்கின்றன. எல்லாம் லோக்கலில் தயாராகும் சீன, இலங்கை, இந்தியத் தயாரிப்புகள். ஹார்லிக்ஸ் ப்ராண்டில் கூட ஒன்று கிடைக்கிறது. விதம் விதமான வண்ணங்களில், அளவுகளில், சுவைகளில் இருந்த அப்பொட்டலங்கள் மீது விரலை ஓட்டிக் கொண்டிருந்தவர், ஹார்லிக்ஸ் என்ற பெயரைப் பார்ததும், அதைப் பாய்ந்து எடுத்தார்.

நூடுல்ஸ் மாதிரியான junk food ஐ மகனுக்கு வாங்கித் தர வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள குற்ற உணர்ச்சியை , ஹார்லிஸ் என்ற ‘ஆரோக்கியமான’ பிராண்டில் கரைத்துக் கொண்டார். நல்ல trade off.

சும்மா சொல்லக் கூடாது. Brand Extension என்கிற தத்துவத்தைக் கண்டுபிடித்தவன்.. ஒகே, ஓகே….. எடுத்துச் சொன்னவன், நிஜமாகவே ஒரு ஜீனியஸ்.

ஆனால், மேட்டர் இன்னும் முடியவில்லை.

பச்சைக் கலரில் இருந்த அந்த Horlicks Foodles பெரிய பாக்கட்டைப் பார்த்ததும், அந்தப் பொடியன் செம டென்ஷன் ஆகி,

” போம்மா, எனக்கு ஹார்லிஸ் வாசனையே புடிக்காதுன்னு உனக்குத் தெரியாதா?… இது வேணாம், மாகி மசாலாவே எடுத்துக்கோ’ என்று கூறி, பச்சைப் பாக்கெட்டைத் தூக்கிப் போட்டுவிட்டு, மஞ்சள் பாக்கெட்டை எடுத்துக் கூடையில் போட்டு விட்டு, சாக்லெட்டு செக்ஷன் பக்கம் நகர்ந்தான்.

நாம ஒழுங்கா வண்டியை ஓட்டினால் மட்டும் பத்தாது. எதிர்ல வருகிறவனும் ஒழுக்கமா ஓட்டினாதான் விபத்து நடக்காமல் இருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s