TNEB?….யூஸ்லெஸ் ஃபெல்லோஸ்…

A (slightly longish) comment I posted in response to a blog post by Badri, six years ago.

******************

பல ஆண்டுகளாக, எல்லா அடிப்படை வசதிகள் போலவே, மின்சாரமும்,அரசு வசம் தான் இருந்தது, இன்னமும் இருக்கிறது. இதன் அர்த்தம் என்ன என்றால், அரசு தான், மின்சார உற்பத்தி நிலையங்களை நிறுவி,நடத்தி, விநியோகம் செய்யும். தனியார் செய்ய இயலாது ( இதற்கு ஒரு விதி விலக்கு உண்டு. பெரிய ஆலைகள்,தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளலாம். captive power plant என்று அதற்குப் பெயர். இதிலேயும் சில கட்டுப்பாடுகள் உண்டு. உதாரணமாக, தங்களுக்குத் தேவையானது போக, மீதமுள்ள மின்சாரத்தை, பிறருக்கு விற்க முடியாது. அரசுக்கு மட்டும் தான் விற்க முடியும்).

பிறதுறைகளை, தனியாருக்குத்திறந்து விட்ட போது, மின்சாரத்துறையையும் திறந்து விட வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அப்போது, பல இந்திய/பன்னாட்டு/வெளிநாட்டு நிறுவனங்கள், மின்சாரத்துறையில் முதலீடு செய்ய ஓடி வந்தார்கள். ( அதிலேஒன்றுதான், என்ரான் நிறுவனத்தின், Dabhol Power Company). ஆனால், மின்சார உற்பத்தி நிலையத்தை ஒரு தனியார் நிறுவனம், நிறுவுவதற்கான விதிமுறைகள் மிகக் கடுமையாக இருந்தன. குறைந்த பட்சம், முப்பது அரசாங்க ஏஜென்சிகளில் ஒப்புதல் பெற வேண்டும். அனைத்து தகுதிகளைப் பெற்றிருந்தாலும், திட்டஅறிவிப்புக்கும், கட்டுவதற்கான முதல் செங்கலை எடுத்து வைப்பதற்குமான இடைவெளி குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளாவது இருக்கும். இந்த கடுமையைத் தாங்க முடியாமல், கழட்டிக் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் ஏராளம் ( இதிலே பிரபலமானது, cogentrix இன், மங்களூர் மின்சாரத்திட்டம்). தனியாருக்குத் திறந்து விட்டால் மட்டும் போதாது, விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்று 1998 இலே ஒரு சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதை அமுலாக்கம் செய்வதற்காக central electricity regulatory commission என்ற ஒரு ஏஜென்சியும் நிறுவப்பட்டது. இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர், அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் ( மறைந்த ) ரங்கராஜன் குமாரமங்கலம். ஒரு யூனிட்டுக்கான விலையை நிர்ணயிப்பது, அரசிடம் இருந்து escrow வசதி பெறுவது, தேவையான மூலப் பொருட்களைப் ( நிலக்கரி, எரிவாயு, நாஃப்தா, இன்னபிற ) பெறுவது, விநியோக சுதந்திரம் போன்றவற்றில் பெருமளவுக்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டன.

இந்திய மின்சாரத் துறையில், இது ஒரு ஹால்மார்க்கான விஷயம் ( இன்னமும் சீர்திருத்தம் வேண்டும் என்ற போது ) என்று உறுதியாக அடித்துச் சொல்லலாம்.

இந்த சீர்திருத்தத்தின் அடிப்படை நோக்கமே, மின்சார உற்பத்தியில் தனியாரை ஊக்குவிப்பதுதான். இதை பெருமளவில் பயன்படுத்திக் கொண்ட மாநிலங்கள், ஆந்திரம், மகாராஷ்டிரம், உத்தராஞ்சல், கர்நாடகம், ஒரிசா போன்ற மாநிலங்கள் தான்.

தமிழ்நாடு? யூஸ்லெஸ் ஃபெல்லோஸ்

ஆந்திரா எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். ஒரு வாகான இடத்தில் மின்சார நிலையத்தை நிறுவலாம் என்று முடிவு செய்த உடனே, ஆந்திர மின்சார நிறுவனம், தன் இஞ்சினியர்களை அனுப்பி, முதன்மைச்சோதனையைச் செய்யும். ஒத்து வரும் என்ற உடனே, அது செய்தியாக வெளியாகும். திட்டத்தில் பிற நாட்டு மின்சார தாதாக்களுக்கு எல்லாம் ஃபீலர்கள் செல்லும். அவர்கள், தங்கள் இந்திய அலுவலகத்தில் இருந்து (கவனத்திற்கு : அமெரிக்கா, ஐக்கிய குடியரசு, பிரான்ஸ் ஜெர்மனி நாடுகளில் இருக்கும் பெரும்பான்மையான மின்சாரக் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்திற்கும், குறிப்பாக கிழக்காசிய நாடுகளில், காலூன்றத் துடிக்கும் அனைவருக்கும், மும்பையிலோ, புதுதில்லியிலோ நிச்சயம் ஒரு அலுவலகம் இருக்கும் ) ஆட்களை அனுப்பி, ஒர்க் அவுட் ஆகுமா ஆகாதா என்று prefeasibility survey செய்து வைத்துக் கொள்வார்கள்.

அதாவது, திட்ட அறிவிக்கப்ட்டால், உடனடியாக டெண்டர் கோருவதற்காக. தேர்வு செய்யப்பட்ட உடனேயே, ஆந்திரத்தின் முதலமைச்சரையும், மின்சாரத்துறை அமைச்சரையும் சந்தித்து கைகுலுக்கி ஒப்பந்தம் ஒன்றை பரஸ்பரம் கையெழுத்திட்டுக் கொண்டு, போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள். அடுத்த நாள் எகனாமிக் டைம்ஸிலே போட்டோவுடன் செய்தி வரும். புதிய திட்டத்திலே, ஆந்திர அரசுக்குக் கொஞ்சம், நிதி நிறுவனங்களுக்குக் கொஞ்சம், தேவைப்பட்டா பிஎச்ஈஎல்லுக்குக் கொஞ்சம் பங்கு கொடுத்து விட்டு, சொன்ன தேதிக்கு, திட்டத்தை ஆரம்பித்து, சொன்ன தேதிக்கு முன்பாகவே முடித்து விடுவார்கள். வெவ்வேறு திட்டங்களுக்கு வெவ்வேறு மாதிரி என்றாலும், பொதுவாக இந்த வழியில் தான் நடக்கும்.

தமிழகத்தில் , 95 ஐந்திலே, இது போல, 9 சிறிய அனல்மின் திட்டங்கள் போடப்பட்டன ( 200 MW க்கு உட்பட்டது ). இவை fasttrack projects என்று அறிவிக்கப்பட்டன. ஏகப்பட்ட தடங்கல்கள். இவற்றில், பாதி திட்டங்கள், ஆரம்பித்த நிலையிலும், பாதி முடிக்கப்பட்ட நிலையிலும் இருக்கின்றன. புதிய திட்டங்கள் ஏதும் கிடையாது. ஆந்திர மாநிலத்திலே, மின்சார உற்பத்தியை பெருக்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். நம்மவர்கள், இருக்கிற மின் நிலையங்களை, ஒழுங்காக ஓட்டினாலே போதும் என்கிறார்கள். அவர்களுக்கு capacity expansion. நம்மவர்களுக்கு capacity utilization.

அத்தனை ஏன், பெரும்பான்மையான மாநிலங்களில், generation, distribution, transmission ஆகிய மூன்றிற்கும் தனித்தனியான அமைப்புகள் உண்டு ( நிறுவனம்/நிறுவனமல்லாதவை). கர்நாடக மாநிலத்திலே, மாவட்டத்துக்கு மாவட்டம், தனித்தனி மின்சார விநியோகக் கம்பெனிகள் உண்டு. அவை தங்கள் அளவிலே ஒரு profit centre ஆக இயங்குபவை.

இங்கே எல்லாம் TNEB. எல்லாம் மாயா

நம்மவர்களையும் குற்றம் சொல்லமுடியாது. கொடுக்கப்பட்ட வேலைகளையும் தாண்டி, தன்னிச்சையாக, ப்ரொஆக்டிவாக செயல்பட, உந்துசக்தி இங்கே இல்லை. மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் போன்ற அமைச்சர்கள் இங்கே இல்லை. economics is the study of incentives என்று freakonomist ( ஹிஹி ) சொல்லுவார். கடந்த ஆண்டு, உத்தரப் பிரதேச அரசும், ராஜஸ்தான் அரசும், நம்ம ஊர் நெய்வேலி லிக்னைட் கார்பரேஷனை அழைத்து, தங்கள் மாநிலத்திலும், ஒரு நிலக்கரி அனல்மின் நிலய திட்டத்தை வடிவமைத்து, நிறுவி நடத்தித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். என் .எல்.சியும், உற்சாகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதே போல, ஆற்காடு வீராசாமியோ. அல்லது முந்தைய ஆட்சியின் மின்சாரத்துறை அமைச்சரோ, வருகிற நிதியாண்டில், இத்தனை மெகாவாட் உற்பத்தி வேண்டும், அதற்காக ஒரு திட்டம் தயாரிக்கச் சொன்னால், சூப்பராகச் செய்வார்கள். சரியாக பத்து இடங்களைத் தேர்வு செய்து, அங்கே ஒரு மீடியம் சைஸ் ( 500 MW க்கு உள்ளாக ) மின் நிலையங்களை, தனியார் பங்கேற்புடன், இரண்டே வருடங்களில், முடிக்கலாம். ஆனால், இப்படி செய்தே ஆகவேண்டும் என்பதற்கு எந்த கட்டாயமுமில்லை. ஏனெனில், இன்சென்டிவ் ஸ்கீம் ( நான் துட்டைச் சொல்லவில்லை ) ஒழுங்காக இல்லை. இது அடிப்படைப் பிரச்சனை.

தமிழ்நாடு என்பது சென்னை மட்டுமில்லை. தொழில் முன்னேறம் கார் கம்பெனிகளாலும், கால்சென்டர்களாலும் மட்டும் வருவதில்லை. நம்ம ஊருக்கு வரும் அந்நிய முதலீடுக்கு காரணம், இங்குள்ள இளம் எஞ்சினியர்கள்,
ஆங்கிலம் பேசத் தெரிந்த பெண்கள், அமைதியான சூழல், நிலையான அரசியல் சூழ்நிலை, மிதமான தொழிற்சங்க சூழ்நிலை, துறைமுகத்தின் அருகாமை போன்ற காரணங்களினாலேதானே தவிர, ஆந்திரா, கர்நாடகம், மேற்கு வங்கம், உத்தராஞ்சல் போல, வெளிநாடுகளுக்குச் சென்று பவர் பாய்ண்ட் பிரசண்டேஷன் செய்து, குழையடித்து, கொண்டு வந்ததல்ல.

உள்கட்டமைப்பு வசதிகளிலே சுணக்கம் காட்டினால், இப்போது பெங்களூரை, போறவன் வரவனெல்லாம், தர்மடி போடுவது போல, நம் நிலைமையும் ஆகிவிடும்.

சாலை வசதிகள் பற்றியும் எழுதலாம். அது ஒரு தனி ராமாயணம். ஆனால் டைப்படிக்கக் கஷ்டமாக இருக்கிறது.

************

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s