சென்னை புத்தகக் காட்சி – 2011

எல்லாரும் டிவிட்டரில பதிவு போடலாம், ஆனா,நான்,  பதிவிலே டிவிட்டர் போடக்கூடதா?

Round I

புஸ்தகங்கள் மன வாசலைத் திறக்கின்றன. அதே சமயம். பர்ஸ் வாயைப் பிளக்கின்றன. மவனே லிஸ்ட் போடாம உள்ளே நுழையாதே. #note2self

  இம்மி கூட மாறாத அதே ஃபார்மேட். நடைபாதை புஸ்தகங்கள். வழியெங்கும் விளம்பரத் தட்டி. மசாலா கடலை. பேனரில் குமுதம். பிரசன்னாவின் daily updates.

  ப்ளாட்ஃபாரத்தில் புஷ்டியான தஞ்சை பிரகாஷ் 20 ரூபாய்க்கும், ரஷ்மி பன்சாலும் ( connect the dots ) சிக்கினார்கள். காவ்யா வெளியீடுகள் இறைபடுகின்றன.

  பல ஸ்டால்களில் அதே சரக்கு. ஒருவேளை பஸ்ஸுன்னு நினைத்து டைம் மெஷினில் ஏறிட்டனோன்னு சந்தேகத்துடன் மொபைலைப் பார்த்தால், 2011 தான்.

  ரூபாவிலே chai chai கேட்டால், westland இலே மட்டும் தான் கிடைக்குமாம். இங்கிலீஸ் கடைகளிலே, எல்லா புஸ்தகமும் எல்லாக் கடையிலும் கிடைக்காதா? #டவுட்டு

  இருக்கப் பட்டவர்கள் நாஞ்சில் நாடனுக்கு அவார்ட் குடுத்தார்கள். நான் அவர் 2 புஸ்தகம் காசு கொடுத்து வாங்கி ரிவார்ட் குடுத்தேன். #பாஸ்பெரிசாஃபெயில்பெரிசா

  புத்தகக் காட்சிக்குள்ளே ஒரு மினி புத்தகக் காட்சி.கிழக்கு. 3, 4 ஸ்டால்களை மொத்தமாக ப்ளாக் செய்துவிட்டார்கள் போலிருக்கிறது.

  ஸ்பெக்டரம் சர்ச்சை வாங்கினேன். வாசித்தேன். வணிகத்தின் technicalities ஐ இத்தனைச் சிறப்பாக தமிழில் வாசித்ததில்லை. அந்த ரீதியில் இது ஒரு பெஞ்ச்மார்க்.

  ஸ்பெக்டரம் ஊழல் என்பதை ஸ்பெக்ட்ரம் சர்ச்சை என்று ‘லைட்டாக’ சுருக்க, தில்லு வேணும். நூலாசிரியருக்கு இருந்திருக்கிறது.

  உயிர்மையில் இருந்த சுஜாதா இப்பொழுது கிழக்கில். 6961 போணி. கணேஷ் x வசந்த் க்கு விடிவுகாலம் வரலை. நாகப்பட்டணம் நீலா வீதி குமரி இன்னும் இருக்காளா?

  #VAO guide கிழக்கில் 99 ரூ. விகடனில் இருநூத்திச் சில்லறை. இந்த டைப் புத்தகங்களில் பழக்கப்பட்டவர் சொன்னது, விகடன் தான் பெட்டர் என்று.

  அமலாபால் மாதிரி ஃப்ரெஷ்ஷாக வந்து இறங்கியிருக்கும் உலோகத்தை தொட்டுத்தடவி விலகினேன்.

  உயிர்மையில் நுழைய முடியாக்கூட்டம். சளசளவென்று டாஸ்மாக் எஃபக்ட். முகுந்த் நாகராஜனின் அலகிலா விளையாட்டைத் தேட முடியவில்லை. K அலைவரிசை மட்டும்.

  புத்தகத்தின் தோற்றம், பதிப்பகத்தின் பெயர், பேப்பர் தரம் பற்றி நீங்கள் கவலைப்படாதவர் என்றால், சுஜாதா புக் வாங்கச் சிறந்த பதிப்பகம் விசா.

  கொரியர் கம்பெனியின் ஸ்டால் ஒன்று என்னத்துக்கோ இருக்கிறது. என்னதான் மார்க்கெட்டிங் பட்ஜட் இருக்கிறதுன்னாலும், அதுக்கு ஒரு அளவு இல்லையா?

  அதே போல தூர்தர்ஷன் ஸ்டாலும். பழைய நிகழ்ச்சிகளின் சிடிக்கள். யே ஜோ ஹை ஜிந்தகி இருக்கா என்றால், மன்மத அம்பை ரிவர்சில் பார்த்தது போல முழித்தார்.

  புதிய தலைமுறை பழைய இதழ்களை சல்லிசாக விற்கிறார்கள். மொத்தமாக வாங்கி, எடைக்குப் போட்டால், இருமடங்கு துட்டு கிடைக்கும்.அத்தனை மலிவு.

   Round II

   இன்றைக்கும் கூட்டம் வெகு கம்மி. நிதானமாக எல்லா அரங்குகளையும் பார்த்து வாங்க முடிந்தது. #second-round

   வைரமுத்துவின் புதுபுக்கை ஆசையாக எடுத்துப் பார்த்துவிட்டு வைத்தேன். 600 ரூவாய்க்கு பாட்டுபுஸ்தகம் வாங்கிக் கொண்டு போனால், சம்சாரம் எதால் அடிக்கும்? அதாலேயே.

   அரைடிராயர் போட்ட வெடிகுண்டு ஒன்றை கிழக்குச் சந்தில் பார்த்தேன். விமலாதித்த மாமல்லன். உயிர்மையில் வாங்கிய அவரது நூலில் கையெழுத்து வாங்கினேன்.

   புதுசாகக் ‘காட்சிப்பிழை திரை- திரைப்பட ஆய்விதழ்‘ என்றொரு இருமாத இதழ். முற்போக்கு சினிமா இதழுக்கான சர்வலட்சணமும் பொருந்திய இதழ். ரூ.15.

   சுஜாதா, அ.முத்துலிங்கம், இரா.முருகன் இருக்கும் ஷெல்ஃப் வரிசையில் வைக்க வேண்டி, சுகா வின் ‘தாயார் சன்னிதி’ எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.

   நாஞ்சில்நாடனை சந்திந்து வாழ்த்துச் சொல்ல முடிந்தது. அந்த சாப்பாடு புஸ்தகம் எப்ப வருமென்றால், போனமுறை போலவே, இந்த முறையும் அடுத்தமுறை என்றார்.

   ரொம்ப யோசனைக்குப் பிறகு திசைகாட்டிப் பறவை வாங்கினேன். பாதி வாசித்துவிட்டேன். #worth-every-penny-paid

    இந்த வருஷ புஸ்தகச் சடங்கு ஓவர். வாங்கின புஸ்தகங்கள் பற்றிய விவரிப்புகள், எனக்கு ஓய்வு நேரமும் , உங்களுக்கு கெட்ட நேரமும் இருந்தால் இங்கே வரும்.

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s