எந்திரன்

  ‘ம்ம்ம்… சரி, ஓகே… நாம பண்ணுவோம்னு’ ஒத்துகிட்ட தலைவருக்கும்
  இந்தப் படத்தை வேணாம்னு ஒதுக்கின சாரூக்கானுக்கும்
  இப்பேர்பட்ட ஒரு கற்பனாசக்தியை கொடுத்த ஷங்கரின் ஜீன்களுக்கும்
  அச்சிலே பார்த்த ஜீனோ வை பலமடங்கு வீரியத்துடன், ரஜினிகாந்த் ரூபத்தில் அசலாக நடமாடவிட்ட அமரர் சுஜாதாவுக்கும்
  எப்போதும் எளக்காரமாகப் பார்க்கும் ராசீவ் மசந்த், நிகத் காஸ்மி, ராஜாசென், தரன் ஆதர்ஷ், அனுபமா சோப்ரா போன்ற வடக்கத்திய விமர்சனக் கோஷ்டிகளையே அசரடித்த மெட்ராஸ்வாசிகளின் தன்னம்பிக்கைக்கும்
  அழகாய் வந்து , அமுக்கி வாசித்த பச்சன் மருமகளுக்கும்
  அங்கே இங்கே அலையாமல் யாரையும் பிடித்துத் தொங்காமல் உட்கார்ந்த இடத்திலேயே ஜஸ்ட் அறுபது ரூபாய்க்கு முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கட் வாங்க வழி செய்த ticketnew.com க்கும்
  முதல் பத்து நிமிடங்களுக்கு தியேட்டரையே அதகளம் செய்து, பின் முழுப்படத்தையும் அமைதியாக உட்கர்ந்து பார்த்த / பார்க்க விட்ட முன்சீட்டுக் கல்லூரி மாணவிகள் கோஷ்டிக்கும்
  மறந்துபோன பாஸ்வேர்டுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து கொடுத்த wordpress.com நிர்வாகத்துக்கும்.

நன்றி.