சென்னை புத்தகக் காட்சி 2010 – முதல் பார்வை

* வாங்குவதற்கு முன்பு, விருப்பப் பட்டியல் போடுவதற்காக இன்று அவசர விஜயம். நாட்டு மக்களுக்கு நற்செய்தி சொல்ல டைம் இல்லை.

* சென்ற ஆண்டு, விகடனும் கிழக்கும் முகப்பிலும், தட்டிகளிலும் செய்திருந்த விளம்பர ஆக்கிரமிப்பை, இந்த ஆண்டு புதிய தலைமுறையும், குமுதமும் பங்கு போட்டுக் கொண்டு விட்டார்கள். முன்னவர்கள், இந்த ஆண்டு, adspend ஐக் குறைத்துக் கொண்டார்கள் போலிருக்கிறது. புத்திசாலித்தனமான முடிவு.

* கிழக்கின் முகிலும் முத்துக்குமாரும் எதிர்பட்டார்கள். முகிலின் சில்லாயிரம் பக்கங்கள் கொண்ட அந்தப்புர நூல் சனியன்றுதான் அரங்குக்கு வருகிறதாம். அத்தனை பக்கம் எழுதியதற்கு ஆள் இன்னேரம் உடம்பு ஓமப்பொடி சைசுக்கு ஆகியிருக்க வேண்டுமே. இல்லை. பூசீனாற்போல இருக்கிறார். சம்சார சாகரத்தில் குதிக்கப் போகிறாரோ என்னமோ? தெரியவில்லை. வாழ்த்துச் சொன்னேன், அதாவது, புத்தகத்துக்கு. பா.ரா பற்றி விசாரித்தேன். அரங்கில்தான் சுற்றிக் கொண்டிருக்கிறாராம். முதலாளி வந்திருக்கிறாராவென்று தெரியவில்லையாம்.

* பெரும்பாலான அரங்குகளில், சமையல் கலை தொடக்கம் சோதிடம் வரை, வாஸ்து தொடக்கம் இறால் பண்ணை வைப்பதெப்படி வரை நேருவின் சிந்தனைகள் தொடக்கம் சினிமாவின் சீரழிந்த பெண்கள் வரையிலும் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள். ஆன்மீகத்தில், கசமுசா வீடியோ புகழ் காஞ்சீபுரம் மேகநாத பாகவதர் தவிர்த்து அனைத்துச் சாமியார்களும் ஷெல்ஃபில் சிரிக்கிறார்கள், பத்து சதவீத தள்ளுபடிச் சிரிப்பு. சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டால், விலை சுமார் 10 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

* சிறுதொழில், வர்த்தகம் தொடர்பான புத்தகங்களைத் தேடினேன். அதிகம் இல்லை. இருந்த சிலதும், பட்டுப் பூச்சி வளர்ப்பு, வால்வு ரேடியோ ரிப்பேர் வகையறா தான். thanks to manimekalai prasuram. எட்டுக்கு எட்டடியில் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்த லேனாவிடம், பதிலுக்குச் சிரித்து விட்டு நகர்ந்தேன்.

* நான் கணக்கெடுத்த வரை, ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி மட்டும் 23 புத்தகங்கள். போட்டோவில் பார்த்த, lazygeek குருவின் சாயலில் ஒன்றிரண்டு அரங்குகளில், பெருமுடாஸ் டிஷர்ட் நபர் எதிர்ப்பட்டார். அவர்தாஅன என்று கேட்கத் தயக்கமாக இருந்தது.

* ‘புதிய தலைமுறை’ விஸ்தாரமான அரங்கு. லேட்ட்ஸ்ட் இதழ்களை மட்டும் மேஜையில் வைத்துச் சந்தா வுக்கு ஆள் பிடித்துக் கொண்டிருந்ததில், அரங்கின் ’empty’-ness அபசுரமாகத் தெரிகிறது. ஒரு ப்ளாஸ்மா அல்லது எல்சிடி டீவியை சுவரில் மாட்டி என்னமோ படங்காட்டிக் கொண்டிருந்தார்கள். பச்சை சுடிதார் போட்ட அக்கா ஒருவர், உள்ள வாங்க என்றார் புன்சிரிப்புடன். நான் சுஜாதா அல்லது ம.வே.சிவகுமாராக இருந்திருந்தால், ‘எதுக்கு உள்ள’ என்று கேட்டிருப்பேன். வெறும் சாதா என்பதால், ஒரு அசட்டுச் சிரிப்புடன் நகர்ந்துவிட்டேன். அந்தச் சுடிதாரின் உபசாரத்தை உதாசீனம் செய்ய நிறைய ‘வில் பவர்’ தேவை. எனக்கு இருந்தது.

* வானதி அரங்கிலே நுழைந்ததும், ஒரு மாமி, உடல் பொருள் ஆனந்தி எங்கே கிடைக்கும் என்று விற்பனையாளருடன் மல்லுகட்டிக் கொண்டிருந்தார். எதற்கும் இருக்கட்டுமே என்று திரும்பிப் பார்த்து, அவர் என் அம்மா இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு நகர்ந்தேன்.

* உயிர்மை அரங்கிலே, சுஜாதாவின் சூப்பர் ஹிட் நூல்களை ரீசைக்கிள் செய்து குண்டு குண்டு தொகுப்புகளாக அடுக்கி வைத்து பகல் கொள்ளை நடத்திக் கொண்டிருந்தார்கள். மேலும் பல நவீன, பின் நவீன அரசியல் வரலாற்று நூல்கள் , கண்ணைக் கவரும் விதத்தில். வாசலிலே, சாருநிவேதிதா இரண்டு நபர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். க்ராஸ் செய்யும் பொழுது சாருவிடம் ஸ்காட்ச் வாசம் வரவில்லை. சாதாரண பேண்ட் சட்டை மட்டுமே போட்டிருந்தார். சீமை சாராயமும், ஜீன்ஸும் கூட வாங்க வகையில்லாத அளவுக்கே ராயல்ட்டி தரும் பதிப்பகங்கள் ஒழிக.

* காலச்சுவடு. புத்தகங்கள் வகைப்பாட்டில், இது உயிர்மையின் ஆல்டர் ஈகோ, குறுந்தாடி கண்ணன், வாயிலை மறித்துக் கொண்டு, யாரிடமோ ‘பிசினஸ் லைக்காகப்’ பேசிக் கொண்டு இருந்தார். எச்சூஸ்மீ சொல்லி உள்ளே சென்று நோட்டமிட்டதில், ஹைப்பர் மார்ட்டுக்குள் நுழைந்த பெர்னாட்ஷா போல உணர்ந்தேன். எஸ்.ராம கிருஷ்ணன், ஜெயமோகன், சாரு நிவேதிதா, இன்ன பிற எலீட் வலைப்பதிவாளர்கள் இணையத்தில் அளிக்கும் இலவச இலக்கியச் சேவைக்கு மிகுதியாக , சமீபத்தில் பெண் குழந்தையைப் பெற்ற ஒரு லோகாயதவாதிக்கு இலக்கியம் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்து 13 மாதங்கள் ஆகிறது. என் பெண்ணுக்கு வயது 13 மாதங்கள். நகர்ந்தேன்.

* நியூ ஹொரைசான் மீடியாவின் அரங்குக்குள் நுழைந்தேன். கண்ணுக்குப் புலப்பட்டவர்கள் எல்லாம் தெரிந்தார்கள். ஆனால் தெரிந்தவர்கள் யாரும் கண்ணுக்குப் புலப்படவில்லை. பத்ரி, பா.ராகவன் மற்றும் கிழக்கு எழுத்தாளர்களால் இணையத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட நூல்கள் தவிர்த்தும் பல புதிய டைட்டில்கள். சுஜாதா நூல்களும் அடக்கம். வாங்க வில்லை.

* கிழக்கிலே நியூஸ்லெட்டர் என்று நியூஸ்பிரிண்ட்டில் அச்சடித்த ஒரு ஒல்லிப் பத்திரிக்கையைக் கொடுத்தார்கள். விலை ஜஸ்ட் ரெண்டே ரூபாய்.அட என்று ஆச்சர்யத்துடன் வாங்கிப் புரட்டினேன். உள்ளே, வெறும் விலைப்பட்டியல் மற்றும் கிழக்கின் விளம்பரங்கள். விலைப்பட்டியலையே விற்பனை செய்யும் பதிப்பகம் இந்த ப்ளானட்டில் அனேகமாகக் கிழக்கு மட்டும் தான். ஒரு வேளை சந்திரனிலே இருக்கலாம். ஏன், தண்ணீர் இருக்கிறது, புஸ்தகக் கடை இருக்காதா?

* ஏற்கனவே விருப்பப்பட்டியலிலே ராஜீவ் காந்தி கொலை வழக்கு புத்தகத்தை சென்ற வாரமே வாங்கிவிட்டிருந்தேன். அட்டகாசமான திரில்லர். கிழக்கின் முயற்சி & உழைப்புக்கு சலாம்.

* திருச்சி புத்தகக் கடை அல்லது அது போலவே பெயர் கொண்ட கடை வாசலில் ஹரன்பிரசன்னா. ஆனால் உள்ளே கிழக்கின் மினிமேக்ஸ் புத்தகங்கள், பிரதானமாகக் சமையல் புத்தகங்கள், வாழ்க்கை வரலாறுகள். சமையல் புத்தகங்கள் ஒவ்வொன்றிலும் தோராயமாக நாற்பது ஐட்டங்கள். கஞ்சா கருப்பு தவிர்த்த இன்ன பிறரது வாழ்க்கை வரலாறுகள். தயாரிப்பும் விலையும் கச்சிதம். பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுது கட்டுகட்டாகப் பறக்கிறது. இந்த மினிமேக்ஸ் க்கான டார்கெட் ஆடியன்ஸின் நான் இல்லை என்பது நிச்சயமாகத் தெரிந்ததால், எதுவும் வாங்காது வெளியே வந்து பிரசன்னாவுடன் மொக்கை போட்டேன். பிசியாக இருந்தார். நியூஸ்லெட்டர் பாத்தீங்களா என்றார். விமர்சனத்தை ‘மென்மையாகச்’ சொன்னேன். நான் சொன்னது எதுவும் தன் காதில் விழவில்லை என்றார். வினோதமாக, அது என் காதிலும் விழவில்லை.

* கடந்த சில வருடங்கள் போலவே, இந்த வருடமும் எனக்கு முதல் போணி சுஜாதா புத்தகங்களே. விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பித்தது. கிழக்கை விடவும் தாளின் தரமும், அச்சு நேர்த்தியும் மட்டுதான். இருந்தாலும், அஞ்சப்பர் பிரியாணியை பீங்கான் ப்ளெட்ட்டில் சாப்பிட்டால் என்ன, பேப்பர் ப்ளேட்டில் சாப்பிட்டால் என்ன?

* அரங்குகளில், புத்தகங்களை வித்தியாசமாக , விசிறி மடிப்பு போல அடுக்கி வைத்திருக்கிறார்கள். தள்ளிவிட்டு, விழும் அழகை ஹாண்டிகாமில் சிறைப்பிடித்தால், நல்ல ஷாட் கிடைக்கும். கூடவே உதையும். செய்யாதீர்கள்.

* வழக்கம் போலவே, இந்த ஆண்டும் பழைய புத்தகக் கடைகளை, சாலையின் எதிர்ப்புறத்தில் அமைத்திருக்கிறார்கள். பல நூல்கள் வாங்கினேன். முக்கியமானது, fundamentals of renewable energy என்கிற CSIR விஞ்ஞானி எழுதிய நூலும், நீண்ட நாட்களாகத் தேடிக் கொண்டிருந்த ‘starlight starbright’ என்கிற ராண்டார்கை எழுதின அற்புதமான சினிமா நூலும். விலை Rs. 20/- each. (நண்பர்களுக்கு குறிப்பு : இங்கே நூல்களை வாங்க நினைத்தால், இருட்டுவதற்குள் முடித்து விடுங்கள். சின்ன எமெர்ஜென்சி லைட் வெளிச்சத்தில் தேடுவது கடினம்).

* பதிப்பகங்கள் என்ன காரணம் சொன்னாலும், புத்தகங்களின் விலையேற்றம் கவலை அளிப்பதாக இருக்கிறது. 600 ரூபாய் புத்தகத்தை 10 பேருக்கு விற்பதற்கு பதிலாக 60 ரூபாய் விலை வைத்து 100 பேருக்கு விற்றுச் சமன் செய்து, கூடவே readership ஐயும் அதிகரித்து , வருடா வருடம் வளர்ச்சியையும் ( growth) அடையலாம் என்கிற, வியாபாரத்தின் அடிப்படை சித்தாந்தத்தை, யார் இவர்களுக்குச் சொல்லித் தரப்போகிறார்கள்?

* அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

21 thoughts on “சென்னை புத்தகக் காட்சி 2010 – முதல் பார்வை

 1. //போட்டோவில் பார்த்த, lazygeek குருவின் சாயலில் //

  அவரேதான். நீங்கள் கிழக்கு ஸ்டாலின் பக்கவாட்டு சந்துப்பக்கம் வந்திருந்தால் எங்களைச் சந்தித்திருக்கலாம். அங்குதான் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

 2. முழுமையான கவரேஜ்!

  உடல்பொருள் ஆனந்தி போன்றே கல்கியின் ஒரு புத்தகத்தினை சென்ற கண்காட்சியில் தேடிய ஞாபகம் வந்தது !

  பல இடங்களில் நிதானித்து சிரித்து தொடர்ந்தேன் 🙂 இன்னும் கவரேஜ் கண்டின்யூ ஆகும்தானே?! 🙂

 3. மெல்லிய நகைச்சுவையோடு போகிறபோக்கில் பதிப்பகங்களைப் பற்றிய விமர்சனத்தையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.

  இறுதியில் பழைய புத்தகக் கடையில் வாங்கியது பற்றிய குறிப்பும், விலையேற்றம் பற்றிய கருத்தும் நச்!

  புத்தாண்டு வாழ்த்துக்கள்

 4. ‘trade mark’ பதிவு..
  பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க முடிந்தது.
  புதுவருஷத்திலயாவது தொடர்ந்து எழுதுங்கப்பு!!
  புத்தாண்டு வாழ்த்துகள்!!!

 5. கிழக்கிலே நியூஸ்லெட்டர் என்று நியூஸ்பிரிண்ட்டில் அச்சடித்த ஒரு ஒல்லிப் பத்திரிக்கையைக் கொடுத்தார்கள்//// இலவசமாகத்தான் கொடுத்தார்கள்.

 6. NHM Book News எனப்படும் எங்களது விலைப்பட்டியல் (மட்டும் அல்ல, கூடவே சில கட்டுரைகளும் இருக்கும்!) இலவசமே. விலை ரூ. 2 என்று போட்டிருப்பதன் உள் அரசியல், அது பத்திரிகையாக வீடுகளுக்கு அனுப்பப்படும். ஆனாலும் விலை வசூலிக்கப்படாது. எனவே கவலை வேண்டாம். கிட்டத்தட்ட 20,000 பேர் வீடுகளுக்கு இந்தக் கண்காட்சிக்கு முன் சென்றுள்ளது (இலவசமாக!) இனி ஒவ்வொரு மாதமும் (இவ்வளவு குண்டாக இருக்காது, கொஞ்சம் முகில் போலத்தான் இருக்கும்) NHM செய்திகள், படங்கள் தாங்கி கஸ்டமர் வீடுகளுக்குச் செல்லும். விலை ரூ. 2 என்று இருக்கும்; ஆனால் கவலைப்படாதீர்கள், நீங்கள் பணம் ஏதும் கொடுக்கவேண்டாம்:-)

 7. Excellent narration made me to read completely…

  //பதிப்பகங்கள் என்ன காரணம் சொன்னாலும், புத்தகங்களின் விலையேற்றம் கவலை அளிப்பதாக இருக்கிறது. 600 ரூபாய் புத்தகத்தை 10 பேருக்கு விற்பதற்கு பதிலாக 60 ரூபாய் விலை வைத்து 100 பேருக்கு விற்றுச் சமன் செய்து, கூடவே readership ஐயும் அதிகரித்து , வருடா வருடம் வளர்ச்சியையும் ( growth) அடையலாம் என்கிற, வியாபாரத்தின் அடிப்படை சித்தாந்தத்தை, யார் இவர்களுக்குச் சொல்லித் தரப்போகிறார்கள்?//

  very true…and my purchasing trend is also like this!

  As I am out of Chennai, I may not be able to visit this time…

  Better luck next time!

 8. […] This post was mentioned on Twitter by Prakash, krgopalan. krgopalan said: RT @icarusprakash: புத்தாண்டின் முதல் பதிவு. 'புத்தகக் காட்சி – முதல் பார்வை' – http://bit.ly/6Wzlws. அனைவருக்கும் happy 2009. #bookfai … […]

 9. ///அத்தனை பக்கம் எழுதியதற்கு ஆள் இன்னேரம் உடம்பு ஓமப்பொடி சைசுக்கு ஆகியிருக்க வேண்டுமே. இல்லை. பூசீனாற்போல இருக்கிறார். சம்சார சாகரத்தில் குதிக்கப் போகிறாரோ என்னமோ?///

  பொண்ணு கிடைக்கவில்லை என்ற கவலையில் கொஞ்சம் குண்டாகிவிட்டேன்போல! 😉

 10. பா.ரா : ரொம்ப நேரம் உங்களைத் தேடினேன். பரவால்லை.. அடுத்த தரம் வரும் போது புடிச்சுடறேன்…

  ஆயில்யன் : நன்றி. அடுத்த விசிட் இன்னும் ரெண்டொரு நாளிலேயே உண்டு. ஆனா, எழுதுவேனான்னுதான் தெரியலை 🙂

  சார்லஸ் : நன்றி.

  பரத் : நன்றி. அடிக்கடி எழுத முயற்சி செய்கிறேன் 🙂

  பட்டாம்பூச்சி சூர்யா : வாழ்த்துக்கு நன்றி. ஆமாம். நியூஸ்லெட்டரை இலவ்சமாகத் தான் கொடுத்தார்கள்.

  பிரகாஷ் : நன்றி 🙂

  Mischief Editor : Thanks.

 11. முகில் : பாத்துங்க.. ரொம்ப ‘ஊதினாலும்’ பொண்ணு கிடைக்கறது கஷ்டம் 🙂

 12. பத்ரி : no offence meant.எனக்குக் கிடைத்த பிரதியில் நீங்கள் முதல் பக்கத்தில் எழுதிய தலையங்கம் / மடல் தவிர்த்து, புத்தக விலைப் பட்டியல் , புதிய வெளியீடுகளின் விளம்பரங்கள், கிழக்கு பாட்காஸ்ட்டின் விளம்பரம் , ஆர்டர் ஃபார்ம் மட்டுமே இருந்தன. அதைப் பார்த்ததுமே என்னடா இது என்று தோன்றியது. பிரசன்னாவிடமும் சொன்னேன்.

  க.காட்சி அனுபவங்களை சும்மா ஜாலியாக எழுதிய பொழுது இதையும் சேர்த்து அடிச்சு விட்டேன். ( ஒரு எஃபக்ட்டுக்காக) வரும் இதழ்களில் ‘உருப்படியான’ content இருக்கும் என்று தெரியும். எப்படின்னா, நீங்க ஐந்து வருடமாக கிழக்கின் பதிப்பாளர் என்றால், நான் ஐந்து வருடங்களாகக் கிழக்கின் வாசகன் 🙂 பாஸு பெரிசா ஃபெயிலு பெரிசா? 🙂

 13. நகைச்சுவை இழையோடும் Superb அலசல், மாதத்திற்கு 2 இடுகைகளாவது எழுதலாம் நீங்கள் !!!

 14. புத்தாண்டு வாழ்த்துகள் http://wp.me/PKkRf-2

  I Missed this book fair this year. I am attending this fair for past 10 years. I feel quite sad, but Thanks for the post I got lot of Info ……..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s