கைக்கு எட்டிய சிக்கன் பகோடா…..

மழை விட்டிருந்தது.

காலையில் இருந்து வீட்டிலேயே அடைந்து கிடந்தது என்னவோ போல் இருக்க, அரைக்கால் டவுசரை மேலும் சுருட்டிக் கொண்டு நடை நீச்சல் அடித்துத் தெரு முனைக்குச் சென்றேன். வழக்கமாக இரவு 11.00 மணி வரை திறந்திருக்கும் அய்யனார் ஸ்டோர்ஸ், நேற்று, எட்டரை மணிக்கெல்லாம் மூடப்பட்டு, கடை வாசலிலே, உரிமையாளர் , அவரது தம்பி, மேலும் இருவர் கும்பலாக நின்று கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

கையில், ஆளுக்கொரு இலை வைத்து, பக்கோடா போன்ற எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். என்னைப் பார்த்ததும்,

‘ அடடே வாங்க சார்… மழைனால கடைய சீக்கிரம் மூடிட்டோமே’

தன் தம்பியைப் பார்த்து, ‘ டேய், வீட்லேந்து சார்க்கு ஒரு கிங்ஸ் பாக்கட் எடுத்துட்டு ஓடியா’ என்றதும்,

நான், ” இல்ல இல்ல, ஸ்டாக் இருக்கு, வேண்டாங்க” என்றேன்.

உரிமையாளரின் தம்பி, கையில் இருந்த மந்தார இலையை நீட்டி, எடுத்துக்கங்க என்றார். இலையில் இருந்தது சிக்கன் பகோடா.

உடனே, கடை உரிமையாளர், தன் தம்பியை சட்டென்று கடிந்து கொண்டார்.” தம்பி, அவங்க அதல்லாம் சாப்ட மாட்டாய்ங்க.”, ” சார், அவனுக்குத் தெரியாது. நீங்க போங்க, ”

கைக்கு எட்டிய சிக்கன் வாய்க்கு எட்டாமல் போன கடுப்பை விட ஆச்சர்யமே மேலோங்கியெது.

நாங்கள் வசிக்கும் ஏரியாவிலே, சாதி, குலம் கோத்திரம் போன்ற விவகாரங்கள் எளிதிலே மற்றவர்களுக்குத் தெரிந்துவிடாது. அனைவருமே, அனைவரிடத்துலே ஒரு safe distance காப்பது வழக்கம். இவருக்கு மட்டும் எப்படி ‘ சாப்டுவாங்க’, சாப்பிடமாட்டங்க’ என்ற விவரங்கள் தெரிந்திருக்கும் என்று சஸ்பென்ஸ் தாங்கவில்லை.

கேட்டே விட்டேன்.

‘ என்ன சார், உங்க வீட்லந்து ஒரு வாட்டி கூட நம்ம கடைல முட்டை வாங்கினதே இல்லியே, அப்ப, நீங்க சைவம் தானே’

எத்தனை ரிலையன்ஸ் ஃப்ரஷ் , ஸ்பென்ஸர்ஸ் டெய்லி வந்தாலும், நம்ம அண்ணாச்சிக் கடைகளை இடம் பெயர்க்கவே முடியாது என்று சிலர் சொல்வதன் அர்த்தம் புரிந்தது.

12 thoughts on “கைக்கு எட்டிய சிக்கன் பகோடா…..

 1. //எத்தனை ரிலையன்ஸ் ஃப்ரஷ் , ஸ்பென்ஸர்ஸ் டெய்லி வந்தாலும், நம்ம அண்ணாச்சிக் கடைகளை இடம் பெயர்க்கவே முடியாது என்று சிலர் சொல்வதன் அர்த்தம் புரிந்தது//

  உண்மைதான்..ரிலையன்ஸ் ஃப்ரஷ்யில் செய்ற்கை புன்னகைதான் கிடைக்கும்..

  எங்க ஏரியா கடை அண்ணாச்சி கடையில விசேஷத்திற்கு சாமான் வாங்கினால் நமக்காக ஒரு சில விஷயங்களை பார்த்து செய்வார்..personalized customer service 🙂

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 2. ///நம்ம அண்ணாச்சிக் கடைகளை இடம் பெயர்க்கவே முடியாது என்று சிலர் சொல்வதன்///

  அந்த சிலரில் நீவிரும் ஒருவர் என்பதறிவோம் 🙂

 3. அருமையான பதிவு…
  அண்ணாச்சியைப் பற்றியதாலோ என்னவோ
  இன்னும் சுவையாக இருக்கு!

 4. செம பாயின்ட், சும்மா ’நச்’ன்னு அடிச்சீங்க 🙂

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

 5. இன்னும் கொஞ்ச நாள்ல அந்த அண்ணாச்சிகள் ரிலையன்ஸ் பிரஷ் அவுட்சோர்ஸிங் செய்திட்டு இருப்பாங்க. 🙂

 6. இந்த
  mega mall மாதிரி
  இல்லன்னாலும் ஒரு
  பங்க் கட rangeக்காவது வரணும்ன்னு
  நான்,
  ஒரு முட்டு சந்து ஓரமா
  புதுசா கட விரிச்சிருக்கேன்.

  http://vaarththai.wordpress.com/

  அப்டியே
  அந்தான்ட…இந்தான்ட‌
  போறசொல‌
  நம்ம கடையான்ட வந்து
  எட்டி பாருங்கோ… Senior

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s