kanthaswamy – kodumai da saami

கந்தசாமி

ஷங்கர் மாதிரி படங்காட்ட வேண்டும் என்று சுசிகணேசனும், புரடியூசர் தாணுவும் நினைத்ததிலே தப்பில்லை. ஆனால், கோடிகளை கொட்டி இறைத்தால் சூப்பர் ஹிட் படம் கொடுத்துவிடலாம் என்று நினைத்ததுதான் தப்பு.

அத்தனையும் வோட்கா என்று நினைத்து வெறுந்தண்ணியில் கலந்த சோடா.

கதை?

மூன்றரை மணிநேரம் உட்கார்ந்து பார்த்தும், சத்தியமாகப் புரியவில்லை. உண்மைத்தமிழன் அண்ணாச்சி, படம் பார்த்து, ப்ரேம் பை ப்ரேம், ஷாட் பை ஷாட் விவரித்து அனுபவித்து எழுதும் பொழுது, படித்துத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

ஒரு குண்ஸாகச் சொல்லணும் என்றால், இருப்பவர்களிடம் இருந்து கொள்ளையடித்து இல்லாதவர்களிடம் கொடுக்கும் ராபின்ஹூட் டைப் கதை.

சிபிஐயில் எஸ்பி ஆக இருக்கும் விக்ரம், இரவில் சேவல் மாதிரி முகமூடி , மேனரிசங்களுடன், சூப்பர் ஹீரோவாக, தாவுகிறார், ஓடுகிறார், சண்டை போடுகிறார். திருப்போரூரில் இருக்கும் கந்தசாமி கோயிலில் வேண்டுதலுக்காக மக்கள் பேப்பெரில் எழுதி வைக்கும் கோரிக்கைகளை, இவர் சுட்டுக் கொண்டு வந்து நிறைவேற்றுகிறார். அதற்குப் பணம்? சிபிஐயில் ரெய்டிலே கிடைக்கும் பணத்தை தான தர்மம் செய்கிறார். ஆனால், இந்த வேலைக்கு எதற்கு சூப்பர் ஹீரோ வேஷம் என்று புரியவில்லை. அவரிடம் அடி வாங்குபவர்கள் எல்லாம் வழக்கமாக விஜய் அஜீத் படங்களில் உதை வாங்குபவர்களே. இந்த வழக்கமான ஹீரோ வேலைக்கு எதற்கு பறக்கிறார், சேவல் மாதிரி கொக்கரிக்கிறார் என்று புரியவில்லை. ( அப்ப மத்ததெல்லாம் புரிஞ்சிருச்சாமா? – மனஸ் )

இந்த ராபின்ஹூட் வேலை செய்வதற்குத் தோதான ஃபிளாஷ்பேக், அவரைப் பிடிக்க ஒரு ஒரு டிஐஜி ( பிரபு) , உரித்த (சீக்கு வந்த) கோழி போல ஹீரோயின், நாலைந்து சீனுக்கு ஒருமுறை ஜிகுஜிகா பெயிண்ட் அடித்துப் வரிகள் புரிந்து தொலைக்காத பாட்டு, கொஞ்சம் ஹைடெக் திருட்டு, இறுதியிலே நீதி போதனை என்று அதே ஷங்கர் ஃபார்முலா. ஆனால் எடுத்த விதத்தில் அத்தனையும் சொதப்பல். இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகத் தொங்குகின்றன. தேவிஸ்ரீபிரசாத், பின்னணி இசை என்கிற பேரில் கொல்கிறார். நடுவே திடீரென்று வடிவேலுவின் படுமொக்கையான தனி காமெடி டிராக். திடுதிப்பென்று படத்தைப் பாதியில் நிறுத்தி, இருக்கிற ஃபுட்டேஜை எடிடிங்கில் ஒப்பேத்தியிருக்கிறார்கள் போலிருக்கிறது. கடைசிக் காட்சியில், விக்ரம் தோன்றுவது, மணிரத்னத்தின் ராவணா பட கெட்டப்பில்.

தாணு காசில், சுசிகணேசன் மஞ்சள் குளித்திருக்கிறார். இதிலே விக்ரம் நிலைமைதான் பரிதாபம். ஏழைகளையும் ஏழ்மையையும் மையப்படுத்தி காசு பண்ணும் வர்த்தகங்கள் உண்டு. கந்தசாமியும் கிட்டதட்ட அதே மாடல் பிசினஸ் தான். ஆனால், நல்லவேளையாக, படம் ஓடாது.

மசாலாப் படங்களுக்கு லாஜிக் தேவை இல்லை. ஆனால் internal logic என்ற ஒன்று தேவை. ரெய்டு செய்து கிடைக்கிற பணத்தை எல்லாம் சுண்டல் மாதிரி விநியோகம் செய்ய சாத்தியமே இல்லை என்கிற ( படத்தில் இருக்கும் பல ஒட்டைகளுள் ஒரே ஒரு ) ஓட்டையை, சுசிகணேசனின் கடைசி உதவி இயக்குனர் சுட்டிக் காட்டியிருந்தால் கூடப் போதும், படம் பிழைத்திருக்கும்.

படத்தில் பிடித்த ஒரே ஒரு விஷயம், ஷ்ரேயாவின் கிறங்கடிக்கும் பின்னணிக்குரல். யார் குரல் அது?

19 thoughts on “kanthaswamy – kodumai da saami

 1. ஆக விக்ரமுக்கு இன்னொரு ‘பீமா’வா? நூறு ரூபாயை (எங்க ஏரியாவுல) காப்பாற்றியதற்கு நன்றி நண்பா 🙂

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

 2. உரித்த (சீக்கு வந்த) கோழி போல ஹீரோயின்///

  கடுமையான கண்டனங்கள்.:D சைஸ் சீரோ கொண்டுவந்து ஷ்ரியா அசத்தி கொண்டிருந்தால் அதை பார்த்து சீக்கு என்கிறீர்கள் ! படம் பார்த்தவர்கள் அனைவரும் நிம்மதியடையும் ஒரே ஆஸ்பக்ட் ஷ்ரியா தான்.

 3. விக்ரம் விஜய் மாதிரி ஆளுங்கள்ளாம் எவ்வளவு உதை வாங்கினாலும் திருந்தவே மாட்டாங்க போலருக்கு. விஜய்யையாவது விட்டுடலாம் – எல்லாப்படங்களும் ஒரே மாதிரி வர்றதால. ஆனா பிதாமகன் மாதிரி படங்களைக் கொடுத்துட்டு இந்தமாதிரி படங்களைத் தர்ற விக்ரமை என்ன சொல்றதுன்னு தெரியலை.

  இவர்களுக்கு சூர்யா ஆயிரம் மடங்கு தேவலை.

  //ஷ்ரேயாவின் கிறங்கடிக்கும் பின்னணிக்குரல். யார் குரல் அது?//

  ஷ்ரேயா கோஷலைச் சொல்றீங்கன்னு நெனச்சுட்டு, என்ன கேள்வி இதுன்னு ஒரு நிமிஷம் குழம்பிப் போயிட்டேன்! 🙂 டெக்சதீஷ்ல டைட்டிலைத் திரும்பப் பாருங்க. பின்னணிக்குரல் பேரு போட்ருப்பாங்க. சவீதாவா இருக்கும்!

 4. படம் பார்த்து நொந்தசாமிக்கு என் அனுதாபங்கள்.

  • //ஷ்ரேயாவின் கிறங்கடிக்கும் பின்னணிக்குரல். யார் குரல் அது?//

   – I HOPE THAT IS RADIO MIRCHI – SUCHITRA

 5. Thala,
  Nalla review. oru 10-15 dollar michcham pidicheenga enakku 🙂 ivlo build up irukkumbodhe nenachen. padam sathiyamaa mokkaiyaa dhaan irukkum-nu.

 6. இதே ஃபார்முலா தானே “சிவாஜி” படம்? எப்படி அதே கதைக்கு வேற மேக்கப் பொட்டாலும் படம் ஹிட் ஆகும் ன்னு நினைக்கிறாங்க?

  ரொம்ப நாளா “ஷ்ரேயா” க்கு சரியான வார்த்தைத தேடிக்கொண்டிருந்தேன். “கோழி” என்பது எனக்கு திருப்தியா இருக்கு. (வெறும் கோழி தான்….சீக்குக் கோழியெல்லாம் சொல்ல மாட்டேன்…. பாவம் )

 7. Thanks for the review. I wasn’t keen about watching the movie as it had been a long time since this movie is being under production. Atleast from readying this I understood I should not even view the movie in a DVD!

  After pithamagan, kasi there are lot more expected from vikram. Its sad to know that he is also not trying to do anything great offlate!

 8. சிவராமன் : அம்பது ரூபாக்கு ஏசில 4 மணி நேரம் எவன் உக்கார விடுவான்? அவசியம் போங்க 🙂

  பிரகாஷ் : சைஸ் சீரோ-வா? சான்ஸே இல்லை, ரொம்ப கிட்டத்துல காமிச்சாங்களே? 🙂

  சுந்தர் : விக்ரம் முடிஞ்ச அளவுக்கு காப்பாத்திருக்கார். அதுக்கு மேல, அவரால ஒண்ணும் செஞ்சிருக்க முடியாதுன்னு நினைக்கிறேன். கதைத் தேர்வு மட்டும் சரியா இருந்தா நல்லா இருக்கும்.

  முரளி : எங்களுக்கு சான்ஸ் கிடைக்காமலா போயிரும்? 🙂

  ஸ்வாமிநாதன் : நிச்சயமா.

  ஷங்கர் : தாணு பாவம் 🙂

  ஷக்திபிரபா : கோழி ன்னு பாய்ஸ் சொல்லாம், கேர்ல்ஸ் சொல்லக் கூடாது 🙂 ( எங்கயோ கேள்விப்பட்ட பேரா இருக்கே உங்களுது )

  க்ருத்திகா : உண்மை. மொக்கை படத்துல கூட, டிவிடில பாக்கற அளவுக்கு, அங்க இங்க சுவாரசியமா சில விஷயங்கள் இருக்கும். ஆனா, அது கூட இதுல இல்லை.

 9. //சைஸ் சீரோ-வா? சான்ஸே இல்லை, ரொம்ப கிட்டத்துல காமிச்சாங்களே? :)//

  ஹாஹா… எந்த ஊரு குசும்பு இது… :))

 10. […] kanthaswamy – kodumai da saami « Prakash’s Chronicle 2.0 icarusprakash.wordpress.com/2009/08/21/kanthaswamy-kodumai-da-saami – view page – cached #Prakash’s Chronicle 2.0 RSS Feed Prakash's Chronicle 2.0 » kanthaswamy – kodumai da saami Comments Feed Prakash's Chronicle 2.0 Flash news : Icarus Prakash opens a new blog அக்கிரஹாரத்தில் கழுதையும், ஒரு எருமை மாடும். — From the page […]

 11. //ரெய்டு செய்து கிடைக்கிற பணத்தை எல்லாம் சுண்டல் மாதிரி விநியோகம் செய்ய சாத்தியமே இல்லை //
  அப்படியா

 12. நீங்க கொடுக்குற 100 காசுக்கு இவ்வளவு தாம்பா படம் காட்ட முடியும்.
  100 குடுத்துட்டு என்ன எதிர் பாக்குற நீ. இம்ம்ம்

 13. விக்ரமின் அந்த சேவல் பாடி லேங்குவேஜ் எனக்குப் பிடித்திருந்தது. அப்புறம் எம்பேரு மீனாகுமாரி என் ஊரு கன்யாகுமாரி என்கிற பாடல். இரண்டுமே படத்துக்கு அநாவசியம். ஆனால் இரண்டும்தான் குறிப்பிடும்படியானதாக எனக்குத் தோன்றுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s