achamuNdu achamuNdu – review

அச்சமுண்டு அச்சமுண்டு

விமர்சனங்கள் எல்லாம், இது pedophilia பற்றிய படம் என்று வதந்தியைக் கிளப்பிவிட, வழக்கம் போல இல்லாமல், கொஞ்சம் சீரியஸாகவே பார்த்தேன்.

வழக்கமாக வில்லன், வளர்ந்த பெண்ணை வளைத்துப் போட முயற்சி செய்வான், இந்தப் படத்தில், வில்லன் குறிவைக்கும் பெண்ணுக்கு வயது பத்துக்கும் கீழே. அதைத் தவிர்த்து, இது ஒரு சாதாரண திரில்லர். அமைதியான குடும்பத்தில், முன்பின் தெரியாத ஒருவனால், புயல் வீசுகிறது. இறுதியில் ஹீரோ வெற்றி பெறுகிறார் என்கிற மாதிரியான வருடக்கணக்கில் அரைத்த அதே அடை மாவு.

குழந்தைகள் மீதான செக்ஷுவல் அப்யூஸ், மிகப் பெரும்பான்மையாக, அந்தக் குழந்தையின் குடும்பம, மற்றும் extended குடும்பத்தில் இருப்பவர்களால் தான் ஏற்படுகிறது என்கிற உண்மை, திரைக்கதையின் வசதிக்காக மறைக்கப்படுகிறது. வில்லனாக வரும் ஜான் ஷே, ஆசியப் பெண்கள் மீது மோகம் கொண்டவனாக இருந்து சினேகாவைக் குறிவைத்திருக்கலாம், தற்பால் நாட்டம் கொண்டவனாக இருந்து, மொழு மொழுவென்று இருக்கும் பிரசன்னாவைக் குறிவைத்திருக்கலாம். அல்லது ஒரு சாதாரணத் திருடனாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால், அவன், குழந்தைகள் மேல் மோகம் கொண்டவனாக இருக்கும் தற்செயல்தன்மை, திரைக்கதையை வீக் ஆக்குகிறது.

குழந்தையின் அப்பாவை pedophile ஆகவும், சினேகாவும், ஜான்ஷேவும் குழந்தையைக் காப்பாற்றுபவர்களாகவும் திரைக்கதை அமைத்திருந்தால், இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு. ( என்ன, கொஞ்சம் கேபியின் ’47 நாட்கள் வாடை’ அடிக்கும்) அமெரிக்காவில் வசித்தாலும், தமிழர்களுக்கு அந்த அளவு தைரியம் வராது போலும்.

கதைத் தேர்வுதான் சொதப்புகிறதே தவிர்த்து மேக்கிங் பிரமாதம். ஃப்ரேமுக்கு ஃப்ரேம், டெக்னிகலாக மிரட்டுகிறது. அலுவலக, வீட்டுச் சூழல் புதிதாக இருப்பதால், authentic ஆக இருக்கிறதா என்பதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் ரசிக்க முடிகிறது. பின்னணி இசைக்காக கார்த்திக்ராஜாவை நன்றாக வேலை வாங்கியிருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், எடிடிங், போஸ்டர் ஒட்டுதல், பாப்கார்ன் விநியோகம் என்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, டைட்டில் கார்டில் தம்பட்டம் அடித்துக் கொள்வது கோடம்பாக்கத்து வியாதி. அது போல அல்லாமல், அடுத்த முறையாவது, ஹாலிவுட் பின்னணியில் இருந்து வந்த இயக்குனர், வெளியில் இருந்து நல்ல சுவாரசியமான கதையைத் தேர்வு செய்து, திரைக்கதை எழுதி இயக்கினால், வெற்றி நிச்சயம்.

verdict : wish arun had chosen a different script.

11 thoughts on “achamuNdu achamuNdu – review

 1. படத்திலேயே மையக்கருவான குழந்தைகளின் பாலியல் பலாத்காரம்தான் வித்தியாசம்னு நெனச்சேன் 🙂 .. நீங்க சொன்ன மாதிரி வெளியாளாய் இல்லாமல் எதிர்பாராத குடும்ப நபர்னு வைச்சிருந்தா மனசில அறையுறமாதிரி நல்லா பதிந்திருக்கும்.. ஆனா கலாச்சார காவலர்களுக்கு யாரு பதில் சொல்றதுனு அருண் விட்டுட்டாரோ என்னமோ 😉

  சூழலின் authenticity எல்லாம் சரியாக இருந்தாலும் பலருக்கு ஒட்டாத ஒன்னா இருப்பாதாலயே எல்லோரலயும் லயிக்க முடியலனு பல நண்பர்கள் சொன்னாங்க..

 2. >>> தற்பால் நாட்டம் கொண்டவனாக இருந்து, மொழு மொழுவென்று இருக்கும் பிரசன்னாவைக் குறிவைத்திருக்கலாம் <<

  :-))))) அடுத்து டூயட் கேட்பீங்க போல 😉

 3. என்ன கதையை தேர்ந்தெடுப்பது என்று பார்வையாளரால் முன்வைக்க முடியுமா?

 4. @snapjudge : இளைஞர், தமிழர், சாஃப்ட்வேர் வேலை செய்தவர். அமெரிக்க வாசி என்கிற உடனே, ஆடியன்ஸுக்கு சட்டுனு ஒரு எதிர்பார்ப்பு வருமே, அதைப் பூர்த்தி செஞ்சாலே போதும். அதாவது, ஒரு தொடக்கத்துக்கு.

  @யாத்ரீகன் : நான் சரியாச் சொல்லலைன்னு நினைக்கிறேன். , வில்லன், குழந்தை மீது பாலியல் நோக்கம் கொண்டவனாக இல்லாமல், சினேகாவைக் குறிவைக்கிறவனாக இருந்திருந்தாலும் கூட, பிரசன்னா அந்தச் சிக்கலை எதிர்கொள்கிற விதம், இதே மாதிரிதானே இருந்திருக்கும்? அப்ப, வில்லனை child abuser ஆகக் காட்டியிருப்பது, வெத்து பந்தாவுக்காகத்தானே?

  இதைத்தான், தற்செயல் தன்மை என்று குறிப்பிட்டேன். நல்ல திரைக்கதைகளில் இது போன்ற ஓட்டை இருக்காது.

 5. //குழந்தையின் அப்பாவை pedophile ஆகவும், சினேகாவும், ஜான்ஷேவும் குழந்தையைக் காப்பாற்றுபவர்களாகவும் திரைக்கதை அமைத்திருந்தால்,//

  Heii! Thats what I thought too 🙂 This seems to be a Hitchcock style of ‘open’ suspense which needs lots of twists and turns like ‘Panic Room’.

  I liked Arun’s documentary about song making in Kollywood. That was hilarious and very fresh 🙂

 6. Pedophile சப்ஜெக்டே டாபூ , அதைத் தொட்டால் பொதுமானது என நினைத்திருக்கலாம்.

 7. ஓ… சரிதான் Pedophile எடுத்துட்டா சாதாரண வில்லன் – ஹிரோ கதை.. என்ன குத்துப்பாட்டு, பஞ்ச் டயலாக் இல்லை 🙂

 8. @snapjudge

  >> Arun’s documentary about song making in Kollywood.

  இது எங்கே கிடைக்கும்?

  :)) For some reason he did not put that video in his site. Anyways, the spoof is hilarious 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s