Movies, a meme

நாகார்ஜுனன், ஒரு அருமையான பதிவு எழுதியிருந்தார். அதை அவரது அனுமதி இல்லாமலேயே ஒரு மீம் ஆகச் செய்கிறேன். கோச்சுக்கமாட்டார் ன்னு நினைக்கிறேன் 🙂

அந்த இடுகைக்கான பின்னூட்டத்தை இங்கே அப்படியே எழுதுகிறேன். நான் குறிப்பிடும் நண்பர்களும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நினைக்கிறேன்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எட்டு வயதில். முதன் முதலில் பார்த்தது மந்தைவெளி கபாலீ டாக்கீஸில் , சங்கராபரணம்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா. சில வாரங்களுக்கு முன்பு.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
நேற்று இரவு டிவிடியில் முக்தா ராமசாமி இயக்கிய பொம்மலாட்டம் பார்த்தேன். ஒரு துறையில் அற்புதமான திறமை கொண்டிருக்கும் சோ, அரசியலரங்கில் ஏனிப்படி கோமாளியாகிப் போனார் என்பதுதான் உடனடி நினைப்பு.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
மௌலியின் ‘ மற்றவை நேரில்’, மகேந்திரனின் ‘மெட்டி, ஸ்ரீதர்ராஜனின் ‘ கண்சிவந்தால் மண் சிவக்கும்’
(பார்த்த மாத்திரத்தில் அவள் அப்படித்தான் படமும் தாக்கிற்றுதான் என்றாலும், ஸ்ரீபிரியா கதாபாத்திரம் மத்திய-தர-மக்களின்-பல்ஸ்-பிடித்துப்-பார்த்ததாகச்-சொல்லப்படும் பாலச்சந்தரின் பட பாத்திரம் போல கொஞ்சம் phony ஆக இருந்தது)

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
1996 இலே. கலைஞருக்கு ஆதரவாக தலைவர் ரஜினிகாந்த் குரல் கொடுத்தது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
மைடியர் குட்டிச்சாத்தானின் முப்பரிமாண சினிமா, அபூர்வ சகோதரர்களின் குள்ள அப்பு

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
வாசிப்பதுண்டு. ஆனால் பொதுவாகத் திருப்தி இல்லை. ஒரு பக்கம், சுவாரசியமான விஷயத்தை dry ஆக எழுதும் தியோடர் பாஸ்கரன் போன்றவர்கள். இன்னொரு பக்கம், frivolous ஆன விஷயத்துக்கு முக்கியத்துவம் தரும் ராண்டார்கை போன்றார்களின் சுவாரசியமான எழுத்து, இதற்கிடையில் மயிர்பிளக்க வைக்கும் சிற்றிதழ் எழுத்துகள், தகவல்கள் அதிகம் நிரம்பிய அறந்தை, அவ்வப்போது ஆயாசம் ஏற்படுத்தும் யமுனா ராஜேந்திரன், இந்தாள் தமிழ்ல எழுதித் தொலைக்க மாட்டாரோ என்று நினைக்கும் எம்.எஸ்.எஸ் பாண்டியன் போன்றவர்கள் எழுத்துக்களை மேய்வதுண்டு.

7.தமிழ்ச்சினிமா இசை?
இசை என்றால், தமிழனுக்கு தமிழ்ச் சினிமா இசைதானே? அதிலே ஏன் ஒரு கேள்விக்குறி.

இதை derogatory ஆகச் சொல்ல வில்லை. இசை நுட்பங்கள், வடிவங்கள், நவீனங்கள், இசை படைப்புகள் போன்றவற்றுக்கு, தமிழ்ச் சினிமா இசை அமைப்பாளர்கள் சிலர், குறிப்பாக இளையராஜா, எம்.எஸ்.வி போன்றோர் பங்களிப்பு செய்ததுக்கு ஈடாக, கவிதைக்கு பாரதியார் கூடச் செய்ததில்லை.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஆங்கிலம் உலக மொழி என்றால், பாப்புலரான ஹாலிவு சினிமா பார்ப்பதுண்டு. உலக சினிமா பார்ப்பதில்லை. இந்திய சினிமா பார்ப்பதுண்டு. எமெர்ஜென்ஸிக்குப் பின்னான நாட்களில் கன்னடத்தில் நல்ல படங்கள் வந்ததுண்டு.நாகபரணா, கிரிஷ்கர்நாட், சங்கர்நாக் போன்றவர்கள் எடுத்த படங்கள் விருப்பம்.கன்னடம் போல அல்லாமல், மலையாளத்தின் நல்ல படங்களுக்கு பொதுவாக அங்கீகாரம் கிடைத்துவிடுவதுண்டு. அவற்றையும் பார்ப்பேன். இந்தி மொழியிலும் அப்படியே. தங்களின் கலாசாரத்தை, நிலபரப்பை, உணவுப்பழக்க வழக்கங்களை, அரசியல் நிலைப்பாடுகளைப் பிரதிபலிக்கும் ஒரிய , வங்காள, அசாமிய மொழிப்படங்களைப்ப் பார்க்க விரும்புவேன். அதை லோக்சபா தொலைக்காட்சி நிறைவேற்றி வருகிறது. நாம் உலக மொழிப் படங்களைப் பார்க்கும் முன்பு, இந்திய மொழிப் படங்களை பார்க்கவேண்டும் என்று சொல்வேன். மாநிலங்களுக்கு இடையில் உள்ள வெளியைக் குறைப்பதில் திரைப்படங்கள் உதவி செய்யும் என்பது என் கருத்து. உதாரணமாக ஆந்திரா சாப்பாடு காரம் என்று தெரியும், ஆனால் ஜார்க்கண்ட் சாப்பாடு?

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை. இதுவரை இல்லை 🙂

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வளமாக இருக்கிறது. கலைப்படைப்புக்கு உதவி செய்யும் நுட்பத்தில் விலை மட்டுப்படும் பொழுது அங்கே ஜனநாயகம் தலை தூக்கும். நேர் நேர் நிரை நேர் போன்ற இலக்கண நுட்பம் எல்லாம் தேவை இல்லை, வெறும் போஸ்ட்கார்ட் போதும் புதுக்கவிதை எழுத என்று ஆனது போல. இந்த நிலைமை, குறைந்த செலவில் நிறைய நல்ல படங்களுக்கு வழி வகை செய்யும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
இதற்கு, ஒரு அரசு உயர் அதிகாரி , பிரஸ் மீட்டில் சொல்வது போல பதில் சொல்ல வேண்டும் என்றால், ” We appreciate your interest in this issue. There can, however, be no clear answer to such hypothetical questions.”

இவர்கள் தொடரவேண்டும் என்று நினைக்கிறேன்.

பரத்
பாஸ்டன் பாலாஜி
பா.ரா
லக்கிலுக்
சித்தார்த்

17 thoughts on “Movies, a meme

  1. Prakash,

    PRESENT SIR !!

    //இல்லை. இதுவரை இல்லை //

    உங்க தலைவர் மாதிரியே பதில் சொல்றீங்க :))

    //இசை என்றால், தமிழனுக்கு தமிழ்ச் சினிமா இசைதானே? அதிலே ஏன் ஒரு கேள்விக்குறி. //

    அதானே!!

  2. பிரகாஷ்,
    இந்தக் கேள்வி எல்லாம் எனக்கும் பிடிச்சிருக்கு…. நம்மளைக் கூப்பிடும் வரை காத்திருக்கப் போய், கற்காலப் பதிவர்னு எல்லாரும் ஒதுக்கிட்டாங்கன்னா கஷ்டம்னு இப்பவே சுட்டுக்கிறேன் 🙂

  3. //பார்த்த மாத்திரத்தில் அவள் அப்படித்தான் படமும் தாக்கிற்றுதான் என்றாலும், ஸ்ரீபிரியா கதாபாத்திரம் மத்திய-தர-மக்களின்-பல்ஸ்-பிடித்துப்-பார்த்ததாகச்-சொல்லப்படும் பாலச்சந்தரின் பட பாத்திரம் போல கொஞ்சம் phony ஆக இருந்தது//

    எனக்கும் கூட அப்படியே தோன்றியது. இன்னும் மேலே போய் தன் ஆணாதிக்க சிந்தனைகளை மஞ்சு பாத்திரத்தின் மூலம் சொன்னதாகக் கூட பட்டது.

  4. இந்தியாவின் எல்லா மாநில மொழி படங்களையும் பார்க்கவேண்டும். பல மொழிகளில் மிக சிறந்த படங்கள் வந்துள்ளன என்பது உண்மையே.

  5. Me too. One of my first movies were at Kapali cinema and another cinema in Luz. Cinema kottagai peru marandhu poche, it was near the Pillayar kovil.

  6. After trying to remember it for hours (nothing better to do with my time I guess), figured it out, its Kamadhenu theatre

  7. உயர்திரு பிரகாஷ் அவர்களுக்கு, விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற உற்ப்பினர் திரு.ரவிகுமார் அவர்கள் தளத்தில் என் பதிவை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

Leave a reply to barath Cancel reply