Thank you sir, for everything

செய்தியைக் கேட்டு, ஜீரணித்து, ஆசுவாசப் படுத்திக் கொண்டு யோசிச்சதிலே, ஒரு உண்மை பளிச்சுன்னு புலப்பட்டுச்சு.

எனக்கும், சுஜாதாவுக்கும் நடுவிலே இருந்தது, பரிபூரணமான எழுத்தாள – வாசக உறவு மட்டும் தான். அவர் பொதுவிலே விலே சொன்ன விஷயங்களைத் தாண்டி, அவரைப் பத்தி , வேறு எதுவும் எனக்குத் தெரியாது. இது போல ஒரு எழுத்தாளரின், முதுமை காரணமான மறைவுக்கு, இது வரைக்கும், இத்தனை தூரம் கலங்கியதில்லே. அதுவே சுஜாதா , எனக்கு ‘வெறும்’ எழுத்தாளராக மட்டுமே இருக்கலைங்கறதைச் சொல்லுது.

ஒரு தரம், நேர்ல பாத்து பேசியிருக்கேன். மூணு தரம் மின்னஞ்சல் மூலமாத் தொடர்பு கொண்டு பேசியிருக்கேன். மத்த தொடர்பெல்லாம் அவரோட படைப்புகள் மூலமாத்தான். அவரை நேர்ல பாத்து பேசறதை விடவும், அவரோட படைப்புகள் மூலமா, நிறையத் தெரிஞ்சுக்கலாங்கறது என் எண்ணம்.

சில சமயம், என்னை நானே கேட்டுக்கறதுண்டு, இன்டெரெஸ்டிங்கா எழுதறாரே அதனாலேதான், அவரைத் தொடர்ந்து வாசிக்கறனோ, தலைல தூக்கி வெச்சிகிட்டு ஆடறனோன்னு, ஆனா, அது உண்மை இல்லை.

பின்ன என்ன காரணமா இருக்கும்?

சீரியஸ் எழுத்து போரடிக்கற மாதிரியாத்தான் இருக்கணுங்கற மரபை உடைச்சு, என்ன மாதிரி, குமுதம் கல்கண்டு ஆசாமிங்களுக்கும் இலக்கிய வாசனை ஏற்படுத்தி, அவரையே ‘விமர்சனம்’ செய்யற லெவலுக்கு ஏத்தி விட்டதுனால இருக்குமோ?

அறிவுஜீவிகள் எல்லாம், தாங்கள் எந்த புத்தகங்களை வாசிக்கிறோம், என்ன மாதிரி இசையை ரசிக்கிறோம், எந்த படங்களைப் பார்க்கிறோம், என்கிற ட்ரேட் சீக்ரட்டை எல்லாம் ஒளிச்சு வெச்சு, தங்கள் லெவலை மெய்ண்ட்ய்ன் செய்த காலத்துல, எல்லாத்தையும் பளிச்சுன்னு, கணையாழிக் கடைசிப்பக்கம், நீர்க்குமிழின்னு போட்டு உடைச்சு, பல புதிய வாசல்களைத் திறந்து விட்டதுக்கா இருக்குமோ?

இந்த இளைஞர் கவனிக்கப்பட வேண்டியவர், பின்னாளில், பெரிய ஆளாக வருவார் ன்னு, சரியா முப்பத்து அஞ்சு ஆண்டுகளுக்கு முன்னாலே, கமலஹாசன் பத்தி சொன்னதுக்கா இருக்குமோ?

தோப்பில் முகமது மீரான், ஜெயமோகன், சுப்ரமணியராஜு, சுந்தர.ராமசாமி, வண்ணநிலவன் தொடங்கி, பல எழுத்தாளர்களை நெஞ்சுல தைக்கிற மாதிரி அறிமுகம் குடுத்து, ‘ என்னத் தவிர, இன்னும் பல பேரும் நல்லா எழுதறாங்க், போய்ப் படிங்க’ ன்னு சொன்னதாலே இருக்குமோ?

பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் உட்லண்ட்ஸிலே, போண்டா வடையுடன் சந்தித்திருந்தாலும், என்னை மட்டும் குறிப்பாக நினைவில் வைத்து எழுதுனதாலே இருக்குமோ?

ஆர்.எஸ்.மனோகரின் சரித்திர நாடகங்களுக்கும், மைலாப்பூர் தயிர்வடைகளுக்கு இடையில் தமிழ்நாடகங்கள் சிக்கிக் கொண்டு இருந்த காலகட்டத்துலே,’ டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு’ போன்ற off-beat நாடகங்களை கொடுத்ததற்காக இருக்குமோ?

தெரியலை…. எல்லாம் ஒரே ப்ளாங்க் ஆ இருக்கு…

எது எப்படியோ, வாழ்க்கையிலே உங்களை மறக்கவே முடியாதுங்க சார்…

உங்க ஸ்டைலிலேயே சொல்றதுன்னா,

நன்றி! யாவற்றுக்கும்,.

********

சுஜாதா குறித்து முன்பு எழுதியவை :

சுஜாதா இனி இல்லை (:-

‘Duplicate’ sujatha

வரைவின் மகளிர் from பாண்டவபுரம்

கடிதங்கள்

எக்ஸிஸ்டென்ஷியலிஸம் – சுஜாதா- சண்முகம் சிவலிங்கம்

Happy Birthday Sir….

16 thoughts on “Thank you sir, for everything

 1. விஷயத்தைக் கேள்விப்பட்டதும் உங்களத்தான் நினைச்சேன் பிரகாஷ். சின்ன வயதில் தேடித்தேடி வாசித்த நினைவுகள் வந்தன. கூடவே, நீங்க சொல்லியிருக்கிற

  //அறிவுஜீவிகள் எல்லாம், தாங்கள் எந்த புத்தகங்களை வாசிக்கிறோம், என்ன மாதிரி இசையை ரசிக்கிறோம், எந்த படங்களைப் பார்க்கிறோம், என்கிற ட்ரேட் சீக்ரட்டை எல்லாம் ஒளிச்சு வெச்சு, தங்கள் லெவலை மெய்ண்ட்ய்ன் செய்த காலத்துல, எல்லாத்தையும் பளிச்சுன்னு, கணையாழிக் கடைசிப்பக்கம், நீர்க்குமிழின்னு போட்டு உடைச்சு, பல புதிய வாசல்களைத் திறந்து விட்டதுக்கா இருக்குமோ?//

  பாயிண்டையும் நினைச்சுக்கிட்டேன்.

  அப்பதான் அவருடைய வாசகனாக அறிமுகமான உங்கள நினைச்சுக்கிட்டேன். felt bad (& for you)

  -மதி

 2. //ட்ரேட் சீக்ரட்டை எல்லாம் ஒளிச்சு வெச்சு, தங்கள் லெவலை மெய்ண்ட்ய்ன் செய்த காலத்துல, எல்லாத்தையும் பளிச்சுன்னு, கணையாழிக் கடைசிப்பக்கம், நீர்க்குமிழின்னு போட்டு உடைச்சு,//

  Exactly.

 3. //ஆர்.எஸ்.மனோகரின் சரித்திர நாடகங்களுக்கும், மைலாப்பூர் தயிர்வடைகளுக்கு இடையில் தமிழ்நாடகங்கள் சிக்கிக் கொண்டு இருந்த காலகட்டத்துலே,//

  If the offence/criticism not intended to Manohar/Others…then this message can be ignored…
  Otherwise, please refrain from such comments.

  Comment adipatharkku munnaal…saritharathai puratti paarunga aiya!!!

  ok, ponal povuthu, sujata irantha dukkathin pithatralai nenaithu vittu vidugiren….

 4. கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தலும், ரொம்ப பாரமாக எல்லாம் இல்லை. வயசானவர்னு தெரியும். ஹார்ட் ட்ரபிள் இருக்குன்னு தெரியும். ஜனவரி மாசம் ஐ.சி.யுல இருந்தது தெரியும். ஒரு வேளை அதனால் இருக்குமோ..??

  மனசால யோசிக்காதெ ..மூளையால யோசின்னு அவர் சொன்னதே அவர் மரணத்தை ஜீரணிப்பதற்கும் உபயோகமாக இருக்கிறது. நிஜ சுஜாதாவுக்கு என் அனுதாபங்கள்.

 5. //எத்தனை பேரை ஏறத்தாழ ஒரே மாதிரி பாதிச்சிருக்காரு மனுசன்!
  //

  அதே, அதே !!

  பிரகாஷ் எழுதியுள்ளவை அனைத்துமே, சுஜாதா சாரை என்றுமே மறக்க முடியாததற்குக் காரணமாக இருக்கப் போகின்றன 😦

  தேசிகனிடம் பேசினேன், மனிதர் உடைந்து போயிருக்கிறார்.

  எ.அ.பாலா

  http://balaji_ammu.blogspot.com/2008/02/419.html

 6. முதல்ல உங்களுக்கு ஒரு சாரி. (அப்புறமா வச்சுக்கிடலாம்).
  ரெண்டாவது சுஜாதா பத்தி.

  >>>அதுவே சுஜாதா , எனக்கு ‘வெறும்’ எழுத்தாளராக மட்டுமே இருக்கலைங்கறதைச் சொல்லுது.

  அதேதான். அவர் எனக்கு ஆசான் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஒரு நண்பனைப்போலத் தான். தன் அனைத்து நிறைகுறைகளுடனும். நல்ல கலைஞன் அப்படித்தான் இருக்கவேண்டும். முற்போக்கோ, பிற்போக்கோ, வலதோ இடதோ நடு செண்டரோ எல்லாம் இரண்டாம் பட்சம்.
  அருள்

 7. //தெரியலை…. எல்லாம் ஒரே ப்ளாங்க் ஆ இருக்கு…//

  same 😦

  may his soul rest in peace…

  வேறென்ன சொல்ல..

 8. //அதேதான். அவர் எனக்கு ஆசான் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஒரு நண்பனைப்போலத் தான். தன் அனைத்து நிறைகுறைகளுடனும். நல்ல கலைஞன் அப்படித்தான் இருக்கவேண்டும். முற்போக்கோ, பிற்போக்கோ, வலதோ இடதோ நடு செண்டரோ எல்லாம் இரண்டாம் பட்சம்.//

  அருள், உண்மை.

  சுஜாதா, எல்லாருக்குமான ஆசானாக இருந்திருக்க முடியாது. ஆனால், அனேகம் பேருக்கு, அப்படித் தோற்றம் தந்திருக்கிறார், என்னையும் சேர்த்து. முக்கியமான சில விஷயங்களை, பழையனூர் நீலிக்கதை, ஹோலோகிராம், நா.வானமாமலையின் நாட்டுப் பாடல்கள், நாகமண்டலா, காடுகுதிரே, அங்குஷ், அனந்தமூர்த்தி, சைன்ஸ் ஃபிக்ஷன், சம்ஸ்காரா, சிலிகான் சில்லுப்புரட்சி, வசனகவிதை, ஆஃக்ஸ்போர்ட் புக் ஆஃப் ஹ்யூமரஸ் ப்ரோஸ், திரைக்கதை உத்திகள், வெண்பா டெக்னிக் னு பல விஷயங்கள, அவரைத் தவிர, *எங்க கிட்ட* வந்து புரியற பாஷையிலே யாரும் சொன்னதே இல்லை.

  எனக்குப் பத்தாம் வகுப்பிலே கணக்குச் சொல்லிக் கொடுத்த ராமசுப்பு ( அந்தாள் மட்டும் இல்லேன்னா, இன்னைய தேதி நான் வெறும் பூச்சியம் தான்), இன்னைக்கும் அதே ரேஞ்சு சம்பளத்துக்கு, அதே காம்ப்ளக்ஸ் நம்பரும், டிரிக்னோமெட்ரியும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார், ஆனால், நான், எஜிகேசனல் க்வாலிபிகேசனில், செய்யற வேலையில், பேசற விஷயங்களில், பாங்க் பாலன்ஸில் கொஞ்சம் ஒஸ்தியாக இருக்கிறேன். அதனாலே, நான் ராமசுப்புவை விட பெரிய ஆள்னு நினைசேன்னா, என்னை விட ஒரு மடையன் இருக்க முடியாது ( கொஞ்சம் ஓவரா உணர்ச்சி வசப்படறனோ? 🙂 இருக்கட்டும், இந்த மாதிரி சமயத்துல கூட வசப்படலைன்னா, அந்த உணர்ச்சி இருந்தென்ன, இல்லாமப் போனா என்ன? :-))

  சுஜாதாவை அந்த ரேஞ்சுல வெச்சிப் பாக்கிறவங்க தான் அதிகம்னு தோணுது. கடந்த இருபத்து நான்கு மணி நேரத்திலே தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்து விழுந்த நூற்றுக்கணக்கான அஞ்சலிக் குறிப்புகள், நன்றிகள், வருத்தங்கள், கண்ணீர் ஆகியவை அதை உறுதிப்படுத்தறது போல இருக்கு.

  கடந்த இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளிடத்திலே சுஜாதா ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் வீரியம், மிக, மிக, மிக அதிகம். அது ஒரு ஆய்வுக்குரிய விஷயமும் கூட.

  கொஞ்சம் அமைதியான பிறகு, நிதானமாக எழுதிப் பார்க்கலாம்னு இருக்கேன்.

  ******

  பிகு : சாரி, ஏற்றுக் கொள்ளப்பட்டது 🙂

 9. //கொஞ்சம் அமைதியான பிறகு, நிதானமாக எழுதிப் பார்க்கலாம்னு இருக்கேன்.//

  That’s better.

  சுஜாதாவின் மறைவு ஒருநாள் வலைக்குறிப்பு அஞ்சலியில் அடங்கி விடக்கூடியதல்ல. ஒரே அலைவரிசை நண்பர்களுடன் உட்கார்ந்து 3-4 மணிநேரம் பேசி பகிர்ந்து கொள்ள வேண்டிய
  விஷயம்.

 10. //இந்த மாதிரி சமயத்துல கூட வசப்படலைன்னா, அந்த உணர்ச்சி இருந்தென்ன, இல்லாமப் போனா என்ன?//

  உண்மை !!! சுஜாதாவைப் பற்றி மிகவும் ஆக்ரோஷமாக எதிராக விமர்சித்தவர்கள் கூட அவரது மறைவினால் வெகுவாகக் கலங்கியிருக்கிறார்கள் என்பதே அவருடைய எழுத்துகளின் தாக்கத்தையும், எழுத்துக்களின் வழியே வெளித்தெரியாத நட்புகளை அவர் உருவாக்கியிருக்கிறார் எனும் உண்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

  ஒரு எழுத்தாளரின் மறைவையெல்லாம் வீடுகளில் விழுந்த மரணச் செய்தியாய் பாவித்ததை நேரடியாகப் பார்க்க முடிந்தது இப்போது தான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s