Check List :-)

இனி

* படிவங்களைப் பூர்த்தி செய்யும் பொழுது, மறக்காமல் married க்கு பக்கத்தில் இருக்கும் டப்பாவை ‘செக்’ செய்ய வேண்டும்.

* பூகம்பமே வந்தாலும், மார்ச் ஐந்து மே பத்து என்கிற தேதியை மறந்து தொலைக்கக்கூடாது.

* வேகமாக டெக்ஸ்ட் மெசேஜ் அடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

* மாத ஆரம்பத்திலேயே அஜந்தா பாக்கு ஃஓல்சேலில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். மறக்காமல் போட்டுக் கொள்ள வேண்டும்.

* புதிய உறவினர்கள் முன்பாக – முதல் தொண்ணூறு நாட்களுக்காவது – நிரந்தரமாக ஒரு புன்னகையை முகத்தில் ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

* தொலைக்காட்சி விளம்பரத்தில் சிவப்புக் கலரில் பதார்த்தத்தைப் பார்த்ததும், ‘ தெரியுமே , இது சிக்கன் மஞ்சூரியன்’ என்று சொல்லிவிடக்கூடாது.

* வெண்டைக்காயிலே ரசம் வைத்தாலும், ‘ ஆகா… தேவாம்ருதமாக இருக்கிறது’ என்று சொல்ல வேண்டும். ( ஜெயஸ்ரீ, நெஜமாவே வெண்டைக்காயிலே ரசம் வைக்க முடியுமா?)

* கிங்க்ஃபிஷரில் இருந்து ரெட்புல் அல்லது வர்ஜின் மேரிக்கு மாற வேண்டும்.

* சுரிதாருக்கும், சல்வார் கமீசுக்கும் என்ன வித்தியாசம் என்று கேனத்தமாகக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

* ஜிகினா சேர்த்த டிசைனர் புடவைகளைப் பார்த்தால் முகம் சுளிக்கக் கூடாது.

* பதிவுகளில் இருந்து சில இடுகைகளை நீக்க வேண்டும்.

* கொஞ்ச நாளைக்கு கில்லி கடவுச்சொல்லைத் தொலைத்து விட வேண்டும்.

அவ்வளவுதானா? இல்லே எதையாச்சும் விட்டுட்டேனா தெரியலையே…

31 thoughts on “Check List :-)

 1. 1. நிறைய பொய் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.
  2. கோபம் வந்தாலும் சிரிக்கத்தெரிய வேண்டும். அதாங்க இடுக்கன் வருங்கால் நகுக மாதிரி சினம் வருங்கால் நகுக.
  3. அப்படியே PMP, Prince மாதிரியான புஸ்தகத்தை படிச்சு முடிச்சுடனும்.
  4. துணிக்கடை, நகைக்கடை இருக்கும் தெருக்களை மறந்துவிட வேண்டும், அந்த வழியாகத்தான் போவனும்னா அதுக்கு மாற்று தெரிஞ்சிக்க வேணும்.

 2. பிப்ரவரி 18 ஐ மறக்காமல் இருக்கவேண்டும், நண்பர்களுடன் ஊர் சுற்றும் பழக்கம் இருந்தால் நிறுத்திவிட வேண்டும் அல்லது குறைத்துக்கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள்

 3. அடேங்கப்பா…
  இவ்வளவு மேட்டர் கீதா..! 😦

  இன்னும் ஏதனாச்சும் விட்டுபோய் இருந்தா சொல்லீடுங்கப்பா..! என்னைக்காச்சும் நமக்கு ஒதவும். அப்பாலிகா தேடிகின்னு இருக்க முடியாது! 🙂

  வாழ்த்துக்கள் தல!

 4. எங்க வீடு, உங்க வீடு என்கிற வித்தியாசத்தின் பூரணமான நெளிவு சுளிவுகளை தெரிந்து கொள்ள வேண்டும்

  சனி, ஞாயிறு வயிற்றினை காலியாக வைத்துக் கொண்டு விருந்துக்கு போக வேண்டும் [அடுத்த 90 நாட்கள் மட்டுமே]

  ரஜினி vs கமல், அஜீத்/விஜய்/விக்ரம் vs ஜெயம் ரவி/சிம்பு/தனுஷ்/சூர்யா யார் மீது பெட் கட்ட வேண்டும் என்று தெளிவாக தெரிந்திருந்தல் நலம்

  வர்ஜின் மேரி (வாங்க தலை, என்னோட பெருங்க்கூட்டத்துல ஜக்கியமாகுங்க), கிரிக்கெட்டர் ஸ்பெஷல், ஆரஞ்ச் சின்சினாட்டி தெரிதல் நலம்

  நமீதா/பாவனா/அசின் போஸ்டர்கள் வலைப்பதிவில் போடாமல் இருந்தால் நல்லது

  காலச்சுவடு, உயிர்மை இன்னபிற இருநூற்றி சொச்சம் சிற்றிதழ்கள், அவற்றின் சாராம்சங்கள், உங்களுடைய மெமரியிலிருந்து நிரந்தரமாக (தற்காலிகமாகன்னு சொல்லிட்டு அதை அடுத்த 30 வருஷத்துக்கு extend பண்ணிக்கலாம்) அழிக்கப்படும்.

  சிம்பு என்னமா டான்ஸ் பண்ண்றார்ப்பா. கோலங்கள் முடிய போகுதாமே, ராஜா முத்தையா ஹால்ல white goods கண்காட்சி, 29″ டிவி 25% டிஸ்கொண்ட்ல கிடைக்குதாமே போன்ற உரையாடல்கள் சகஜமாக பழகிக் கொள்ளவும்

  வேற சில விஷயங்கள், தனி மடலில் அல்லது செல்பேசியில். எழுதுனா என்னை புஷ்பா தங்கதுரை ரேஞ்சுக்கோ இல்லை போன தலைமுறை ஜம்பு இயக்குநர் கண்ணன் ரேஞ்சுக்கோ பார்க்கும் பிரச்சனைகள் இருப்பதால் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்

 5. ஆணாதிக்கப்பூனையை அவிழ்த்து விட்ட அன்பு அண்ணன் பிரகாஷருக்கு நன்னி. 🙂

 6. பிரகாஷ் : அதுவும் சரிதான் 🙂

  பத்மா : அந்தத் தேதிய மறக்க முடியுமா? :-).. அதுவுமில்லாம நான் ரொம்ப ஊர் சுத்தறவனும் இல்லை 🙂

 7. மோகன் தாசா : வெச்சுட்டீயே ஆப்பு. நல்லா இருங்கய்யா 🙂

  நாராய: விட்டுப் போன பாய்ண்ட்டுகளை எடுத்துக் குடுத்ததுக்கு நன்றி.

 8. // Gmail thinks your marriage is an hoax //

  கலை, அச்சச்சோ…. அவுட்லுக் வழியா அனுப்பினேன்… ஸ்பாமுக்குப் போயிடுச்சா… என்ன சோதனை இது (:

 9. நேத்து மெயில்ல பத்திரிகை பார்த்ததுமே தெரிஞ்சு போயிடுச்சு… தல தேறிட்டம்மான்னு! பொழச்சுப் போங்க! 🙂

 10. Caught this in our office blogs – kandippa udhavum!

  In the world of romance, one single rule applies to men:

  Make the woman happy. Do something she likes, and you get points.

  Do something she dislikes and points are subtracted.

  You don’t get any points for doing something she expects.

  Sorry, that’s the way the game is played.

  Here is a guide to the point system:

  SIMPLE DUTIES

  You make the bed (+1)

  You make the bed, but forget the decorative pillow (0)

  You throw the bedspread over rumpled sheets (-1)

  You go out to buy her what she wants (+5)In the rain (+8)But return
  with

  Beer (-5)

  You check out a suspicious noise at night (0)

  You check out a suspicious noise, and it is nothing (0)

  You check out a suspicious noise and it is something (+5)

  You pummel it with iron rod (+10)

  It’s her pet (-10)

  SOCIAL ENGAGEMENTS

  You stay by her side the entire party (0)

  You stay by her side for a while, then leave to chat with a college
  buddy

  (-2)

  Named Rita (-4)

  Rita is a dancer (-6)

  Rita is single and is really beautiful (-80)

  HER BIRTHDAY

  You forget her birthday (-50000)

  You take her out to dinner (0)

  You take her out to dinner and it’s not a sports bar (+1)

  Okay, it’s a sports bar (-2)

  And it’s all-you-can-eat night (-3)

  It’s a sports bar, it’s all-you-can-eat night, and your face is
  painted the

  colours of your favourite team (-10)

  A NIGHT OUT

  You take her to a movie (+2)

  You take her to a movie she likes (+4)

  You take her to a movie you hate (+6)

  You take her to a movie you like (-2)

  It’s called ‘DeathCop’ (-3)

  You lied and said it was a foreign film about orphans(-15)

  ENJOY THE ‘BIG’ QUESTION

  She asks, “Do I look fat?” (-5) [Yes, you LOSE points no matter WHAT]

  You hesitate in responding (-10)

  You reply, “Where?” (-35)

  Any other response (-20)

  COMMUNICATION

  When she wants to talk about a problem , you listen, displaying what
  looks

  like a concerned __expression (0)

  You listen, for over 30 minutes (+50)

  You listen for more than 30 minutes without looking at the TV (+500)

  She realizes this is because you have fallen asleep (-10000)

  Now what chance do you have???

  Pass it on to the poor fellows for info & to the gals for a good
  laugh !

 11. சில பேர்களை கல்யாணமென்ன…கன்னிவெடி கூட ஒன்றும் செய்ய முடியாது. நீர் அதில் அடக்கம். ( ரெண்டு சுழி – intentional)

  நண்பர்கள் 90 நாட்களுக்குள் மாற்றம் தெரிந்ததாக ஏதும் சொன்னால், அது ( கன்றுகுட்டியின் தாடையை வருடிக்க்கொடுப்பதுபோல ) நீங்களாக திருமதிக்கு கொடுக்கும் பாவலாதான். அவர்களுக்கும் உம்மைப் போலத்தான் – abnormal – என்றால் அது கூடத் தேவை இல்லை. ரொம்ப நெர்ருங்கிய நண்பி கிடைத்தா மாதிரி வாழ்க்கை சீராக ஓடி விடும்.

  சீனியர் சொன்னா நம்பணும்.

  ஜூனில் சந்திப்போம். என் வாக்கு பலிக்க வாழ்த்துக்கள். 🙂

  “மூக்கன் “

 12. முன்னோர் வாக்கு நமக்கு எப்போதும் தேவை.
  ….
  /சுரிதாருக்கும், சல்வார் கமீசுக்கும் என்ன வித்தியாசம் என்று கேனத்தமாகக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது./
  இரண்டும் வெவ்வேறா? நான் இரண்டும் ஒன்றல்லவா என்று நினைத்துக்கொண்டிருந்தேன். கடக்கவேண்டிய தூரம் வெகுதூரம் என்பது மட்டும் புரிகிறது :-).

 13. சில சமயம் என்ன பண்ணனும்னு பட்டியல்லாம் போட முடியாது. ஒண்ணும் புரியாது. Lets go with the flowன்னு போய்க்க வேண்டியது தான்!! எனினும்,
  வாழ்த்துக்கள்!

 14. வாழ்த்துக்கள் பிரதர்..

  முடிந்தால் ஒரு முப்பது நாளைக்கு தமிழ்மணத்தை மறந்திருக்கப் பாருங்கள்..

  ஆரம்பத்துலேயே இன்னொரு எதிரியை கண்ல காட்டிட்டீங்கன்னா அப்பால உங்களுக்குத்தான் கஷ்டம்..

 15. 1. அடிக்கடி I love you da னு சொல்லக்கூடாது (உண்மையோ பொய்யோ )
  2. “உனக்கு இவ்ளோ தெரியும்னு நான் நெனக்கல” – நு கண்டிப்பா சொல்லக்கூடாது

 16. கேள்வி கேட்காத பொண்டாட்டியும், கிழியாத டவுசரும் உலகவரலாற்றில் இருந்ததாக ஆதாரமில்லை.

  நிறைய பதில் சொல்ல தெரிந்துகொள்ளுங்கள். பதில் மாதிரி எதையாவது அட்லீஸ்ட் சொல்ல தெரிந்துகொள்ள வேண்டும்.

  தாவூ தீரும். டவுசர் கிழியும். வேறென்ன செய்யமுடியும்? 😦

 17. – மனைவியின் பிறந்த நாளை மறக்கக் கூடாது. ஒருமுறை மறந்தாலும், காலத்திற்க்கும் நினைவுப் படுத்துவார்கள். ஆனால் அவர்கள் உங்கள் பி. நாளை மறக்கலாம்.

  – ஹிந்திப் படம் பிடிக்கவில்லையென்றாலும் பார்க்க வேண்டும் (ஆறுதல்: ஒரு வருடத்தில் நமக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லும் தைரியம் வந்துவிடும்).

  – கொஞ்ச நாளைக்கு ‘ரொமாண்டிக்’ படங்களாகப் பார்க்க வேண்டிவரும். அதன் பின், கடைந்தெடுத்த முட்டாள்தனமான தமிழ் மசாலாப் படங்களும் ஆஸ்கர் ரேஞ்சுக்குப் பிடிக்கும்.

  – விளையாட்டுச் சானல்கள் பந்த்.

 18. இதென்ன சிறுபிள்ளைத் தனமா இருக்கு.. இதுக்குதானே நான் 10 கிளாஸ் எடுத்தேன்? எல்லாத்தையும் மனப்பாடம் பண்ணனும் – அவ்வளவுதான்.

 19. மறப்பதை விட ஆபத்து நாட்களை மாற்றி ஞாபகம் வைத்திருப்பது (மார்ச் 5/மே 10 )
  :-)))) .
  ..Ag

 20. ஹும்..ம்ம்.. அடுத்த வருஷம் இன்னேரம் எல்லாத்துக்கும் அட்வைஸ் கொடுக்கிற அளவுக்கு முன்னேறிடுவீங்க .. எல்லாம் வாழ்க்கை கற்றுத் தரும் அனுபவப் பாடங்கள்தான் .. தலைமுறை தலைமுறையாக வர்ரதுதானே…

  வாழ்த்துக்கள்

 21. பயப்படாதீர்கள்.எல்லாம் போகப் போகப் தெ(ளி)ரியும்.முதலில் எவை பிடிக்காது (உங்களுக்குப் பிடிக்காததை அல்ல) என்று தெரிந்து கொண்டு விலக்க வேண்டும்.பிடித்தை உங்களுக்கும் பிடிக்க பழகி கொள்ள வேண்டும். அசின்,பாவான படங்களை பார்த்தாலும்
  பார்க்காதது மாதிரி மூஞ்சியை வைத்துக் கொள்ள வேண்டும்.
  அடிக்கடி பாவன மன்னிப்பு கேட்க கூடாது. பாபா, தமிழ் மணம், கில்லி, வலைப்பதிவு – 90 நாட்களுக்கு விலக்கப்பட்ட சொற்கள் என்று விரதம் கடைபிடிக்க
  வேண்டும்.
  என் ஜாய் பிரதர், குளத்தில் குதித்தால் தானாக நீஞ்ச
  த் தெரிந்து விடும் 🙂

 22. சுரிதாருக்கும், சல்வார் கமீசுக்கும் என்ன வித்தியாசம் என்று கேனத்தமாகக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது./
  இரண்டும் வெவ்வேறா? நான் இரண்டும் ஒன்றல்லவா என்று நினைத்துக்கொண்டிருந்தேன். கடக்கவேண்டிய தூரம் வெகுதூரம் என்பது மட்டும் புரிகிறது :-).

  லத்தின் அமெரிக்கப் பெண்கள் எப்போது சல்வார் உடுத்த ஆரம்பித்தார்கள். நீங்கள் லத்தின் அமெரிக்க இலக்கிய
  காதலால் லத்தின் அமெரிக்கப் பெண்ணையே மணப்பேன்
  என்று உறுதி மொழி எடுத்துள்ளதாக டொராண்டோவிலிருந்து
  பட்சிகள் சொன்னவே :).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s