கில்லி ஜோசியம் :-)

கொஞ்ச நேரம் கில்லியின் ‘போக்குவரத்துத்’ தகவல்களை நோண்டிக் கொண்டிருந்தேன். ஒண்ணுமில்லை… இந்த மாசம் யார் யார் எல்லாம் , எந்த எந்தப் பதிவுகளை விரும்பி வாசித்தார்கள் என்று தெரிந்து கொள்ளலாம் என்றுதான்…

ஒரு வியப்பு காத்திருந்தது…

scr1.jpg

இரண்டாவது இடத்தில் இருப்பது Star & Politicians Rasi Palan

இதிலே வியப்படைவதற்கு என்ன இருக்கிறது என்றால், இந்தப் பதிவை கில்லியிலே இட்டு ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. ரெண்டு நாட்கள் கடந்தாலே, ஆறின கஞ்சி ஆகிவிடுகிற இடத்தில், இந்தப் பதிவு மட்டும் எப்படி கடந்த சில மாதங்களாக முதல் இடத்தில் இருக்கிறது என்கிற கேள்விக்கும் உடனே விடை கிடைத்தது.

scr2.jpg

இந்த வருஷ ராசிபலன் விஷயங்களைத் தேடுபவர்களை எல்லாம், கூகிள் மகானுபாவர் இங்கே அனுப்பிக் கொண்டிருக்கிறார் என்று புரிந்தது..

இதிலே காமெடியான விஷயம் என்னன்னா,கில்லியிலே ஜோசியம் தான் பார்க்கிறார்களாக்கும் என்று நினைத்துக் கொண்டு தினசரி வரும் பின்னூட்டங்கள்.

நிறைய பின்னூட்டங்களை அனுமதிக்காமல் விட்டும், தவறுதலாக அனுமதிக்கப்பட்டு, ‘ கெடக்கட்டும் விடு’ என்று கண்டுக்காமல் விட்ட மறுமொழிகள் இவை.

SARALA D/O CHANDRASAGARAN on September 13th, 2007 at 8:37 am #
I WANT TO GET RASI PALAN 2007 FOR MITHUNAM RAASI AND PUNARPANAM NACHATHIRAM

thilaga on September 17th, 2007 at 4:52 am #
nan 1 feb 1978 4.35am (malaysia) piranten. en rasi thulam, natcatiram suwathi. enaku eppothu tirumanam nadakum? kathal tirumanama/? illai arange thirumanama?

Mrs. Simran on December 13th, 2007 at 1:23 pm #
I WANT TO GET RASI PALAN 2008 FOR MITHUNAM RAASI AND THULAM RAASI.THANK YOU

nagamani on December 26th, 2007 at 8:42 am #
I want to know my natchathiram, I was born on 19th September 1958. TQ

vikneswaran on January 6th, 2008 at 1:28 pm #
i wan to know my feuture n love marrige rasipalan

suthan on January 9th, 2008 at 2:00 pm #
naan meena rasi ,revathi nadasathiram. ennudaya palan enna?

shiva kumar on January 30th, 2008 at 9:46 am #
i want every day tell about my oricsopion

shiva kumar on January 30th, 2008 at 9:48 am #
naan thula raasi natchathiram theriyayhu en lif eppady irukkum enaku oru nalla theeru sollunga plese

நியாயமாக, நிச ராசிபலனுக்கும் இந்தப் பதிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பதிவைப் படித்தாலே புரியும். ஜோசியம் பார்க்கிறதிலே இவ்வளவு கண்மூடித்தனமான ஆர்வமா?

எங்கய்யா போகுது இந்தியா?

யாராவது ரெண்டு பேர் ஒன்றன் பின் ஒருவராக நின்றால், ஏதோ க்யூ நிற்கிறது என்று நினைத்து விசாரிக்காமல் கொள்ளாமல் பின்னாலே போய் நிற்கிற கூட்டம் போல, ராசிபலன் என்ற வார்த்தை இருந்ததால் , என்ன ஏது என்று விசாரிக்காமல், ராசிபலன் வேணும் என்று கமண்ட் ‘தட்டி’ விடும் ஜோசிய வெறியர்களைப் பார்த்து, சிரிப்பதா அழுவதா?

நீங்களே சொல்லுங்களேன்…

12 thoughts on “கில்லி ஜோசியம் :-)

 1. இதுக்கு ஏங்க அழுவுறீங்க 🙂 நல்லா comedyய enjoy பண்ணுங்க..தயவுசெய்து இது தொடர்பா இனி வர்ற மறுமொழிகளை அழிக்காம அதை ஒரு தனி இடுகையா கில்லியில் போடவும் 😉 ஆக, ராசி பலன் பத்தி எழுதினா நம்ம பதிவுக்கு வருகைகள் உறுதி 😉

 2. :-))))))))))
  ரொம்ப நேரமா சிரிச்சுக் கிட்டு இருக்கேன்.

  ..Ag

 3. ரவி : கொஞ்ச நேரத்துக்காவது சமூக அக்கறையோட செயல்படலாம்னு பார்த்தா விட மாட்டீங்களே 🙂

  அகிலா : நல்லவேளை.. இதுக்காச்சம் பயன்படுதே 🙂

 4. பாலாஜி : நானும் பொறுத்து பொறுத்துப் பார்த்து தாங்க முடியாம எழுதிட்டேன் 🙂

  சேவியர் : நன்றி.

 5. 1978ல பொறந்து இன்னமும் திருமணம் ஆகாத ஒரு பொண்ணோட மனசு என்ன பாடு படும். சில விஷயங்களில் வெறும் தன்னம்பிக்கை மட்டும் வெச்சு எதுவும் பண்ண முடியாது பிரகாஷ்.

  அதெல்லாம் சரி, இன்னமுமா முழுப்பதிவையும் படிச்சுட்டு பின்னுஉட்டம் பூடற கலாச்சாரம் இருக்குன்னு நம்பறிங்க ? 😉

 6. ”இந்த வருஷ ராசிபலன் விஷயங்களைத் தேடுபவர்களை எல்லாம், கூகிள் மகானுபாவர் இங்கே அனுப்பிக் கொண்டிருக்கிறார் என்று புரிந்தது”

  அந்த இடுகையை மட்டும் பார்த்து கில்லி ஒரு ஜோசியதளம் என்று நினைத்திருக்கிறார்கள் :).
  கிளி சோசியம் மாதிரி கில்லி ஜோசியம் என்றும் ஒன்று
  இருக்கலாம் அல்லவா :).இல்லை கிளி என்பதை ஆங்கிலத்தில் கில்லி என்று எழுதியிருக்கிறார்கள், என்று
  தோன்றியிருக்கலாம் :).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s