16 Useful Tips for Entrepreneurs

மா.சிவக்குமார் எழுதிய பதிவின் தாக்கத்தில் மற்றும் அதன் தொடர்ச்சியாக….

– எல்லாப் பொருள் / மற்றும் சேவைகளுக்கும் தேவை என்ற ஒன்று இருக்க வேண்டும். அல்லது தேவையை உருவாக்கவாவது தெரிந்திருக்க வேண்டும். கூல் ஐடியா என்றால், உடனே வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பிவிடக்கூடாது. உதாரணமாக உங்களுக்குக் கிச்சிலிக்காய் ஊருகாய் பிடிக்கும், ஆனால், சென்னையில் எங்கும் கிடைக்கவில்லை என்றால், உடனே கிச்சிலிக்காய் ஊருகாய்க்கு சென்னையிலே மார்க்கெட் இருக்கிறது என்று இருந்த இடத்தில் இருந்தே முடிவுக்கு வந்து விடக் கூடாது. விசாரிச்சுப் பார்த்து, ஒர்க் அவுட் ஆகும் என்றால் மட்டுமே செய்ய வேண்டும்.

– என்ன வேணும் என்று கஸ்டமரைக் கேட்காதீர்கள். கேட்டாலும், அவர்கள் என்ன தேவை என்று சொல்கிறார்களோ அதைத் தராதீர்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அதைக் கொடுங்கள். ஹென்ரி ஃபோர்ட் ஒருமுறை சொன்னார், ‘ If I’d asked people what they wanted, they would have asked for a better horse. ‘. என்ன வேணும்னு கேட்டா கூகிள் நமக்கு ஜிடாக்கையும், ஜிமெயிலையும் தந்தாங்க? பயனர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து நாமாகச் செய்து கொடுத்தால், சந்தோஷமாக வாங்கிக் கொள்வார்கள்.

– நிறுவனத்துக்கு, அம்மா / அப்பா / சம்சாரம் / நாய்க்குட்டி பெயரை எல்லாம் வைக்காதீர்கள். நீங்க தனி, நிறுவனம் தனி. அப்படிப் பிரிச்சுத்தான் பார்க்கணும். அப்படி இல்லை என்றால், எவ்வளவு நஷ்டம் வந்தாலும் இழுத்து மூடத் தோன்றாது, செண்டிமெண்ட் காரணமாக.

– நிறுவனத்தை மொத்தமாகப் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்க மார்க்கெட்டிங் விற்பன்னராக இருந்து, தொழில் முனைவராக ஆகியிருந்தால், மார்க்கெட்டிங்க்குக்கு பட்ஜெட்ல அதிகமா ஒதுக்க கை துறுதுறுக்கும். செய்யாதீங்க. உற்பத்தி, தரக்கட்டுப்பாடு உள்ளிட்ட எல்லாத்துக்கும் சமமான முன்னுரிமை கொடுக்கத் தெரியணும். வேற ஒரு அலுவலகத்துல வேலை செய்யும் போது நிலைமை வேறயா இருந்திருக்கும். ப்ரொடக்ஷன் எக்கேடு கெட்டா எனக்கென்ன, எனக்கு வேணுங்கறதக் கொடுத்தாத்தான் சேல்ஸ் வேலை ஒழுங்கா நடக்கும்னு, துறைத் இன்சார்ஜ் என்கிற முறையிலே பாஸ் கிட்ட சண்டை போடலாம். இங்க அந்த சொகுசு கிடைக்காது.

– சொந்தக் காசு எது, கம்பெனி காசு எது என்பதில் தெளிவு வேண்டும். அலுவலக வாடகை குடுக்க, அம்மா நகையை அடகு வைக்கறதும் தப்பு. நண்பர்களோட பார்ல உக்காந்து கும்மாளம் அடிச்சுட்டு, அந்தக் பில்லை கம்பெனி கணக்கிலே சேர்க்கிறதும் தப்பு.

– வரவு செலவுக் கணக்குக்கு ஒழுங்கு முறையான சிஸ்டம் அவசியம். spreadsheet பயன் படுத்தாதீர்கள். அது சார்ட் போட மட்டுமே. எல்லாச் செலவுகளையும் planned / unplanned expediture என்ற வகையில் பிரிக்கிற மாதிரி வைத்துக் கொள்ளுங்கள்.

– தனிமனிதராக உங்களுக்கு இருக்கும் குணாதிசயங்களை நிறுவனத்தின் மீது ஏற்றிவிடக்கூடாது. அதாவது, வீட்டுக்கு ஃபர்னிச்சர் வாங்கும் போது, விலை அதிகமான ப்ராண்டட் பொருட்கள் தான் வாங்கித்தான் பழக்கம், என்றால், ஆபீசுக்கும் அதே போல, நாலாயிரம் ரூபாய் குடுத்து நாற்காலி வாங்கக் கூடாது.

– செலவினங்களைக் ப்ரொஜெக்ட் பண்ணும் போது தாராளமாகவும், விற்பனையை ப்ரொஜெக்ட் பண்ணும் போது சிக்கனமாகவும் இருங்கள்.

– நீங்க ஒரு டெக்னோக்ராட்டாக இருந்தால், நீங்க செய்கிற பொருளின் ப்ராஸஸ் சிக்கலாக இருக்கலாம். ஆனால், பயனரைச் சென்று அடைகிற பொருள், அதிக விளக்கம் தேவைப்படாத அளவுக்கு எளிமையாக இருக்க வேண்டும். செய்கிற சிக்கலான வழிமுறைகள் பற்றி , பயனர்களிடம் நீட்டி முழக்க வேண்டியதில்லை. அதனால் ஏற்படும் உபயோகத்தைப் பற்றிச் சொன்னாலே போதும். உதாரணமாக, ஒரு சிக்கலான அல்காரிதம் மூலமாக, அற்புதமான ஒரு நிரல் செய்திருக்கிறீகள் என்ற காரணத்துக்காக, ஒரு சாஃப்ட்வேரை யாரும் வாங்கவோ, உபயோகிக்கவோ மாட்டார்கள். ‘ இத வெச்சுகிட்டு நான் என்ன செய்யறது? ” என்ற கேள்விக்கு பதில் கிடைத்தால் தான் பப்பு வேகும்.

– எதை அமுக்கி வாசிக்க வேண்டும், எதை பீற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரியவேண்டும்.

– ஒரு வேலை செஞ்சுட்டு, தொழில் முனைவராக ஆகியிருந்தால், பழைய கொலீக்ஸ் எல்லாம் சந்தர்ப்பம் கிடைச்சா ‘ ஏண்டா இந்த வேண்டாத வேலை’ ன்னு வெறுப்பேத்துவாங்க. அதையே போட்டு உளப்பிட்டு இருந்தா, வேலை நடக்காது.

– ஒரே ஒரு ப்ராடக்ட் / ஒரே ஒரு சர்வீஸ் கம்பெனி வேலைக்கு ஆகாது. உதாரணத்துக்கு எஸ்டிடீ பூத் வெச்சா, கூடவே செல்போன் விற்பனை செய்யலாம். கணிணி சர்வீஸ் பண்ற தொழில் தொடங்கினா, யூபிஎஸ் ஏஜென்சி எடுத்து, விற்பனை செய்யலாம். ஷாம்பூ பாக்கெட் தயாரிச்சா, கூடவே, தேங்கா எண்ணையையும், அதே போல சாஷேயில் அடைச்சு விக்கலாம்.

– எதிர்பாராம நடக்கக் கூடிய விஷயங்களுக்கு என்று ஒரு contingency plan அவசியம். நாலு லட்ச ரூபாய்க்கு ஒரு ரிஸ்க் எடுத்தால், அதிலே பிரச்சனை வந்தா எப்படிச் சமாளிக்கிறதுன்னு நல்லா யோசிச்சு வெச்சுகிட்டு இறங்கணும். நட்டத்தில் மூடப்படுகிற பெரும்பான்மையான நிறுவனங்கள், இப்படி எதிர்பாராத சிக்கல்களால் மூடப்பட்டவைதான்.

– கஸ்டமரோ, முதலீட்டாளரோ , வேறு முக்கியமான யாரோ, வேகமா ‘ யெஸ்’ ன்னு சொன்னா, அதுக்கு நோ ன்னுதான் அர்த்தம். அப்படியே ‘எக்செலண்ட்’ ன்னு சொன்னா, குப்பை ன்னு அர்த்தம்.

– அலுவலகத்தில் நியமிக்கும் பெண்களிடம் கண்ணியமாகப் பழகுங்கள்.

– நிறுவனத்தின் ownership மீது அதிக அளவு ஈடுபாட்டுடன் இருக்காதீர்கள். தேவையான அளவுக்கு உதவி கிடைக்கும், ஆனால், கணிசமான அளவு பாத்தியதையை விட்டுத் தரவேண்டும் என்றால், தயக்கமில்லாமல் ஒத்துக் கொள்ளுங்கள்.

[ இதல்லாம் சொந்த அனுபவத்துலேந்து சொன்னது. இதை கடைபிடிக்கிறது மூலமா ஏற்பட கூடிய நஷ்டங்களுக்கு ஈடு தர முடியாது, ஆனால் லாபங்களில் பங்கு தந்தால் ஏற்றுக் கொள்ளப்படும் 🙂 ]

5 thoughts on “16 Useful Tips for Entrepreneurs

 1. சூப்பர்.

  17. தன் தொழிலைப் பற்றி அவ்வப்போது உங்கள் வலைப்பூவில் பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும்போதே இன்னம் கொஞ்சம் தெளிவு கிடைக்கலாம் அல்லது யாருக்காகவாவது உபயோகப்படலாம் 😉 ;-).

 2. பிராக்டிக்கலாகவும் உபயோகமாகவும் இருக்கும் டிப்ஸ். நன்றி

  உங்கள் bijines tag ல் வரும் பதிவுகளுக்கு பெரும் விசிறி நான். அடிக்கடி வருமாறு செய்யுங்களேன்!

 3. Its nice conslodation. I disagree that an entrepreneur only satisfies client and serves to his needs. He can make the clients to see new needs and create a new market. Thats how innovations come in to play. You dont have to fill a gap, but attimes can create one, and make people feel the necessary for it.You might have touched upon here, but it means only existing needs //பயனர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து நாமாகச் செய்து கொடுத்தால், சந்தோஷமாக வாங்கிக் கொள்வார்கள்.//

  2. If we can not be market or product or technical leader we can focus on niche market, serving a small population that thrives on that. i thought these two pints were missing.

 4. அருமையான யோசனைகள்.
  நம்ம பொருள் / கடை அப்டின்னா அது தரமானதாத் தான் இருக்கும் அப்டின்னு ஜனங்களுக்கு முழு நம்பிக்கை வர்ற மாதிரி பிராண்டிங்’கும் செய்யனும்.
  ஒரு வாடிக்கையாளர் நம்ம பொருளப் பத்தி அவரோட நண்பர்கள்கிட்ட பரிந்துரை செய்கிற மாதிரி “வைரல் மார்க்கெட்டிங்” முறைகளையும் கடைப்பிடிச்சா, சந்தையில சீக்கிரம் நம்ம பிரபலமாகிடலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s