Dear Mr.Maniratnam….

ஹாசினி திரைப்பார்வையில் உங்க ஊட்டுக்காரம்மா சுஹாசினி சொன்னது….

கண்ணாமூச்சி ஏனடா திரைப்படம் , காதலிக்க நேரமில்லை படம் போல நகைச்சுவையாக இருக்கிறது


என் கேள்வி : கொஞ்சம் கூட யோசிக்காம இந்த மாதிரி சரமாரியா ‘குண்டு’ வீசறாங்களே…எப்படி சார் வீட்ல சமாளிக்கிறீங்க? 🙂

14 thoughts on “Dear Mr.Maniratnam….

 1. வலைப்பதிவுலகில் எல்லோருமே இந்த நிகழ்ச்சியின் பெயரை சரியாக கொடுப்பதில் என்ன பிரச்னை என புரியவில்லை. நிகழ்ச்சியின் பெயர் ‘ஹாசினி பேசும் படம்’
  அதாவது.. ஹாசினி படத்தைப் பற்றி பேசும் நிகழ்ச்சி 🙂

  நீங்க சொன்ன அந்த கண்றாவியை நானும் கண்ணாலப் பாத்தேன் (கல்யாணப்பரிசு – தங்கவேலு சரோஜா!). சுஹாசினி ஏன் தான் இப்படி பிஸ்தா மாதிரி பிஹேவ் பண்ணுகிறாரோ.
  என்னமோ தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போலவும், மத்தவுங்க எல்லாம் சும்மா என்பது போலவும். அதுவும் அவரின் உடைகள் – ஆபாசமா – அசிங்கமா எந்த வரையறைக்குள் சேர்ப்பது என தெரியவில்லை. இதற்கு சன் டிவியின் கால் மேல் கால் சுரேஷ்குமாரே தேவலை என்பேன்.

 2. ஹிஹி என்ன பண்றது தல! கல்யாணம் கட்டிக்கிட்டாச்சி வேறவழியில்லைன்னு சமாளிக்கிறாராயிருக்கும். நீங்க வேற அதைக் கிண்டுறீங்க!!!

 3. meet the parentsஓட தமிழாக்கமாமே. meet the parents நல்ல சூப்பர் காமெடி படம்.

  எல்லாரும் விதம் விதமா சொல்றாங்க, ஹாசினி பேசும் படத்தைப் பத்தி. நான் இன்னும் பார்க்கலைங்கிறது கொஞ்சம் நல்லா இல்லை. அவங்களோட உடையலங்காரம் இங்கே படா பேமஸ், ரெம்ப பாராட்டித்தான் சொல்றாங்க.

  ப்ரோக்ராமுக்குன்னு ஒரு உருவாக்குபவர் இருக்கமாட்டார்? எல்லோருமா சேர்ந்து சரிபார்த்து, முடிவு பண்ணிதானே எதையும் சொல்லுவாங்க?

  எப்பவுமே ஸ்க்ரீன்ப்ளே எழுதினவரைப் பத்தி யாருக்குமே ஞாபகமிருக்காது. ஸ்ரீப்ரியாவோட டைமிங்க் சென்ஸ் மற்றும் நகைச்சுவை உணர்வுங்கிறப்போ சிரிப்புதான் வருது.

  எங்கயாவது ஒரு வீடியோ க்ளிப் கிடைக்குமா (ஹாசினி பேசும் படம்)? தேடினேன் கிடைக்கவில்லை. எங்க வீட்ல தமிழ் சேனல் இல்லை.

 4. ஹாசினி பேசும் படத்துல அப்ப அப்ப- அதாவது அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தடவை “நாங்க படம் பண்ணும்போது…” அப்படீங்கற டயலாக்க மேடம் அடிக்கடி பயன்படுத்தறாங்க
  போதும்பா இவங்களோட நான் – மீ – ஐ பேச்சு

  Also, she expected Priya the director of Kannamoochi yenada to talk about her(Priya’s) stint as an assistant director with Maniratnam and family. But I guess Priya didn’t. So Haasini Medam தடாலங்கடியா “நாம இப்ப ஒரு புது நியாயத்தராசு வெக்கப்போறோம்.. நீங்க டைரக்டராகறதுக்கு முன்னாடி ஒரு சாதாரண டைரக்டரோடயும் [ஹாசினி ஹஸ்பெண்டாம்].. ஒரு சூப்பர் டைரக்டரோடயும் [ஹாசினி மேடமாம்..முடியலப்பா!] அசிஸ்டென்டா இருந்தீங்களே… அதப் பத்தி சொல்லுங்க..”ன்னாங்க… Too much I say.. give some importance to your guests, Ms Haasini… உங்களப்பத்தியே எவ்வளவு வாட்டி பேசுவீங்க?

  ஹாசினியோட ஸ்டைலிங் டெரிபிள். அவங்க வெஸ்டர்ன் அவுட்ஃபிட்ஸ் போடட்டும்.. coz she can carry it off well.. but அந்த மிக்ஸ் அண்ட் மேட்ச்- jewellery – colours etc konjam awful.. correct panna nalla irukkum

 5. நானும் ஆரம்பத்துல இந்த நிகழ்ச்சியை பாத்துக்கிட்டு இருந்தேன். என்னால மூனு வாரத்துக்கு மேல தாங்க முடில. இதுக்கு மதன்ஸ் திரைப்பார்வை எவ்வளவோ மேல்.
  நீங்க CNN IBN-ல ராஜிவ் மஸந்தோட திரைவிமர்சனம் நிகழ்ச்சி பாப்பீங்களா ? Much better show.

 6. ப்ளீஸ்….. மதன் ஸார் ஓவர் கமல் ஜால்ரா… “அது என்னன்னாக்கா” ன்னு ட்ரிப்ளிகேன் கோவில்-ல திண்ணைல உக்கார்ந்து வம்பு பேசற மாதிரி ரிவியூ பண்றார்.

  ராஜிவ் மசந்த் சூப்பர். “இந்த படத்துல பாதியிலயே உங்களுக்கு தூக்கம் வரலைன்னா நான் என் பேரை மாத்திக்கறேன்” ன்னு விமரிசனம் செய்யற கேட்டகரி. மும்பை மிரர் பத்திரிகை-ல எழுதற மாயங்க் ஷேகரும் நல்லா எழுதறார்.

  மாலதி ரங்கராஜன் – இந்த ‘ஸ்பைன்லெஸ்’ ரங்கராஜன் விட்டா பேக்ரவுண்ட்ல இருக்கற மரம் நல்லா நடிச்சது, நாய் நல்லா குரைச்சது -ன்னு எல்லாத்துக்கும் 10/10 குடுக்கற் தைரியசாலி அம்மையார்

  ஆனா ஜால்ராவுக்கெல்லாம் ஜால்ரா நம்ம காலித் முகம்மத் தான். ஷாருக்’கான்’, சல்மான்’கான்’, சைஃப்’கான்’, ஷபனா ‘ஆஸ்மீ’, ‘நஸீருத்தின்’ ஷா – இவங்களுக்கெல்லாம் 10 / 10.
  இன்னொரு உதாரணம். கபி குஷி கபி கம் -ங்கிற படத்துக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியாவுல ஃபைவ் ஸ்டார் குடுத்த மகாபுருஷர் அவர்.

 7. /Also, she expected Priya the director of Kannamoochi yenada to talk about her(Priya’s) stint as an assistant director with Maniratnam and family. But I guess Priya didn’t. So Haasini Medam //

  இல்லை… ரெண்டு மூணு தரம் நினைவு படுத்தின பிறகு, ப்ரியா ஒரு வழியா, சுஹாசினியை அக்னாலட்ஜ் பண்ணிட்டாங்க :-). செம காமெடி..

 8. சந்துரு : ராஜீவ் மசந்த் தானே? பாப்பேனே.. ராம்கோபால் வர்மா கே ஆக் பட விமர்சனத்துல முட்டையை தூக்கி காமிரா மேலே அடிச்சாரே மறக்கவே முடியாது :-).. ஆனா என்ன, வெச்சா குடுமி, அடிச்சா மொட்டைங்கற கேஸ்… சமயத்துல நமக்கு புடிச்ச படத்தை ‘வாரும்’ போது செம கடுப்பா இருக்கும்.

 9. ப்ளாகேஸ்வரி : மாலதி ரங்கராஜன் எல்லாம் ரிவ்யூவரே கிடையாது :-). படத்த்தை பார்த்துட்டு வந்து ஸ்டோரி பண்ற ரிப்போர்ட்டர். சமீபத்துல அவங்க சொந்தமா கருத்துச் சொன்னது கற்றது தமிழ் விமர்சனத்திலேதான்..

  சொன்ன மாதிரி காலீத் ரொம்ப biased. filmfare இல எழுதிட்டு இருந்த காலத்துலேந்து பார்த்துட்டு வரேன்.. ( அப்ப எடிட்டரா இருந்தார்னு நினைக்கிறேன்)

 10. இந்தக் கண்றாவிய எப்டி முழுசா பாக்கறீங்க?.. ஒரே name dropping and அலட்டல். ஒரு நாள் சம்பந்தமே இல்லாம scarlett johannson ஓட cinema queue ல நின்னேன். நான் director னு தெரிஞசதும் அவுங்க ரொம்ப பொறாமை பட்டாங்கன்னு உட்டாங்களே ஒரு கதை. தேவுடா!

 11. பாலா : முதல் வாரமே மேடத்தோட ‘பவிசு’ தெரிஞ்சுடுச்சு..அதனாலே பாக்கறதில்லை… இந்த படம் கொஞ்சம் வினோதமா இருந்துதே… என்னதான் சொல்றாங்கன்னு பாக்க உக்காந்தேன். அதுல வந்தது வினை 🙂

  சாம்பார் வடை : ரொம்ப interesting. அழைப்புக்கு நன்றி. ரெண்டொரு நாளிலே பதிவு போடறேன்.

 12. // ராம்கோபால் வர்மா கே ஆக் பட விமர்சனத்துல முட்டையை தூக்கி காமிரா மேலே அடிச்சாரே மறக்கவே முடியாது

  🙂 அந்த படத்த அப்படி விமர்சிக்காத ஆளுங்க கொஞ்சம் கம்மி தான்.

  பிளாக்கேஸ்வரி – தமிழ் டி வி சேனல்-ல இப்போதைக்கு திரை விமர்சனம் பண்ற ஒரே ஆளு மதன் தான் மேடம் (சன் டிவி ரத்னாவை எல்லாம் நாம் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வதாயில்லை.) படத்த பத்தி இருக்கும் குறைய ரொம்ப சாஃப்டா கையாளுவார், மத்தபடி பரவாயில்லை.

 13. ‘குண்டு’ வீசறாங்களே…எப்படி சார் வீட்ல சமாளிக்கிறீங்க?

  Get married, you will know how to 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s