Rehabilitation for Juveniles, Ideas Invited

சினிமா பார்த்து பல விஷயங்களைக் உணர்ந்து கொள்கிறோம். 18 வயதுக்கு உட்பட்டு இருக்கும் சிறார்கள், குற்றம் இழைத்தால், அவர்களைச் ஜெயிலுக்கு அனுப்பாமல், சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அனுப்புவார்கள் என்பதை சினிமா பார்த்து தான் தெரிந்து கொண்டேன், முன்னொரு காலத்தில்.

இது போன்ற சீர்திருத்தப் பள்ளிகளில் இருந்து வந்தவர்கள் வெளியே வந்து என்ன தொழில் செய்வார்கள், வேலைக்குச் செல்வார்களா அல்லது திரும்பவும் குற்றங்கள் இழைத்து ஜெயிலுக்குப் போவார்களா, இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு நடைமுறைச் சாத்தியங்கள் என்ன என்ன என்பதைப் பற்றி நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர், இது போன்ற புனரமைப்பு வேலைகளில் ஆர்வமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பவர். அரசு, பண உதவியுடன் கூடிய சில தொழிற்பயிற்சிகள் கொடுத்து வருகிறது, ஆனால், தோட்டவேலை, சோப்பு தயாரித்தல், புக் பைண்டிங், எம்பிராய்டரி என்று அவர்கள் அளிக்கும் பயிற்சிகள், இந்த காலத்தில், கஷ்டமில்லாத ஜீவனத்துக்கு வழி செய்யுமா என்று தெரியவில்லை. என்றார். நிறையப் பேசிக் கொண்டிருந்தோம். அதில் கிளைத்த சிந்தனையை, இதை வாசித்துக் கொண்டிருக்கும் மக்களிடம் ஒரு கேள்வியாக அவர் சார்பாக வைக்கிறேன்.

14- 18 வயதுக்குள்ளான சீர்திருத்தப் பள்ளி மாணவர்கள் ( ஆண், பெண், திருநங்கை என்று முப்பாலினரும் ) , வெளியே வந்து குறைந்த செலவில் பயிற்சி மேற்கொண்டு, வேலைக்குச் செல்லவோ அல்லது தொழில் செய்யவோ தோதான வழிகள் – இந்த காலத்துக்கு ஏற்ற – என்ன என்ன?

மனசிலே தோன்றுகிற எண்ணங்களை மறுமொழிப் பெட்டியிலோ, தனி மடலிலோ சொல்ல முடியுமா? தொடர்புடைய சுட்டிகள் கிடைத்தாலும் பயனுள்ளதாக இருக்கும்.

நண்பர்கள் சேர்ந்து செயல்பட இருக்கும் ஒரு புனரமைப்புத் திட்டத்துக்காக இந்த உதவி தேவைப் படுகிறது.

நன்றி.

6 thoughts on “Rehabilitation for Juveniles, Ideas Invited

 1. எனக்குத் தெரிந்த (வெள்ளைக்காரர்) ஒருவர் சூப்பர் டூப்பர் வேலையில் இருக்கிறார். சீர்திருத்தக் கல்விக்கூடங்களில் கணினி சொல்லிக் கொடுப்பது ஒரு obvious பரிந்துரையாக இருக்கும். ஆனால், சீர்திருத்தப் பள்ளி மாணவர்கள் competitiveஆன படிப்புகளுக்கு தயாராயிருப்பார்களா என்ற கேள்வி வரும். மனநிலை மாற்றுதல் (using a shrink and regular therapy sessions) ஒரு முக்கியமான் அம்சமாக கல்வித்திட்டத்தில் இருந்தால் எதுவும் சாத்தியமே. any job with responsibility (well monitored until that person can be trusted) which gets them regular appreciation will certainly work.
  Training them to do Administration jobs is one I can think of.
  Will mail you with a list later.

 2. சீர்திருத்தப்பள்ளிகளில் ஒரு inmateக்கு மாதந்தோறும் சாப்பாட்டிற்கு 300 ரூபாய் கூட ஒதுக்கப்படுவதில்லை என்று கேள்வி (அதாவது 40 வருடங்களாக இந்த தொகை மாற்றப்படவில்லை)…

  முதலில் இதை சீர்திருத்தனும் !!!!

  //well monitored until that person can be trusted//
  அங்கு இருக்கும் சிறுவர்களில் பலர், அடுத்தவர் செய்த குற்றத்திற்காக இருப்பவர்கள் என்று கூட கேள்விப்பட்டிருக்கிறேன்….

 3. கவனிக்கவே இல்லையே இந்தப் பதிவை….

  உடனடி வேலை வாய்ப்புக்கு என் யோசனை:
  வேற என்ன, கொஞ்சமே கொஞ்சம் ஆங்கில அறிவு(ப் பயிற்சியு)ம் மருத்துவத்துறை ஆவணவாக்கப் பயிற்சியும்தான். அல்லது இணையப்பக்க வடிவமைப்பு.

 4. I just read this post. I will send you a detailed plan that we use, and which are easy and very effective. Kids love these activities and you can try. email me if I can send it.

 5. “அங்கு இருக்கும் சிறுவர்களில் பலர், அடுத்தவர் செய்த குற்றத்திற்காக இருப்பவர்கள் என்று கூட கேள்விப்பட்டிருக்கிறேன்….”

  மனதைக் குத்தும் வரிகள்.அவர்களை நாம் நம்புவது இருக்கட்டும். நம்மை, நம் சமுதாயத்தை அவர்கள் நம்பணுமே!

 6. just engage in engneering dept as a craftsman like welder,fitter, mason,plumber and electrician
  if is not interest theory class just give practical work
  they will pickup

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s