‘Duplicate’ sujatha

இரண்டு வருடங்களுக்கு முன்பு, சுஜாதா, கற்றதும் பெற்றதும் தொடரில்,இருத்தலியம் பற்றி சில குறிப்புகள் எழுதினார். ரவி ஸ்ரீனிவாஸ் அதன் மீது தன் கடுமையான விமர்சனத்தை வைக்க, பின்னூட்டப் பெட்டியிலே விவாதங்கள் சக்கை போடு போட்டன. அந்த விமர்சனத்தை, ரவிஸ்ரீனிவாஸ், ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பலரும் கேட்டுக் கொண்டனர். ஒரு வேளை, அக்கடிதம், சுஜாதாவின் பார்வைக்குக் கிடைத்திருந்தால், தொடரின் அடுத்த பகுதியில் ஒரு விளக்கம் தர முனைந்திருந்தால் எப்படி எழுதியிருப்பார் என்று கற்பனையாக ஒரு மறுமொழி எழுதியிருந்தேன். [ iamsorry என்ற புனைப்பெயரில்]. அது இங்கே

************

//ஒருவேளை ஏதாவது அதிசயங்கள் நேர்ந்தால், அடுத்த வார க.பெ.யில் ஒரு வரி வரலாம்//

சென்ற வாரம் நான் எழுதிய கட்டுரைக்கு, பிரபு சீனிவாசன் என்ற ஒரு அன்பர், ஏகதேசத்துக்கு பூச்சி பூச்சியாக ஹைப்பர் லிங்க்குகள் எல்லாம் கொடுத்து மறுப்புக் கடிதம் எழுதியிருந்தார். சில அன்பர்கள் தொலைபேசினார்கள். வழக்கம் போலவே அதை என் ரீசைக்க்கிள் பின்னில் சேகரம் செய்தேன். இது போன்ற தாக்குதல்கள் எனக்குப் புதிதல்ல. i provide an easy target. கணையாழி காலத்தில் இருந்தே, முடிச்சவிக்க வா என்று வெண்பா எழுதும் ராயப்பேட்டை பாலுக்களை எல்லாம் கடந்து தான் வந்திருக்கிறேன். கடிதத்தின் தொனியில் இருந்தே, இவர்களுடைய உள்நோக்கம் என்ன என்று தெரிந்துவிடுவதால், எனக்குக் கோபம் வருவதில்லை. விகடன் போன்ற ஒரு வெகுஜன இதழில் எழுதுவதால் நேரும் occupational hazard இது என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பதால், பதிலுக்கு கோபம் காட்டாமல் அமைதியாக இருக்க முடிகிறது. இலக்கிய உலகத்தில், வழிப்போக்கர்களிடம் எல்லாம் என்னளவுக்கு யாராவது தர்ம அடி வாங்கி இருப்பார்களா என்பதை, சோஷியாலஜிகல் பர்ஸ்பக்ட்டிவில் வைத்து யாராவது ஆராய்ச்சி செய்தால், அவருக்கு பி.எச்.டி பட்டத்துக்கு பரிந்துரை செய்கிறேன். விருப்பமிருப்பவர்கள் ரிப்ளைகார்டில் எனக்கு எழுதவும்.

உள்ளம் கேட்குமே படத்துக்கு ஒளிப்பதிவாளர் கம் இயக்குனர் ஜீவாவுடன் பணிபுரிந்தது ஒரு நல்ல அனுபவம் ( இவர் இயக்குனர் வஸந்தின் மைத்துனர் என்ற விஷயம் ஆருக்காவது தெரியுமோ? )…blah blah blah………

************

6 thoughts on “‘Duplicate’ sujatha

  1. பாஸு
    அது நீங்கதானா?!?!?!
    யாரோ தீவிர சுஜாதா எதிரின்னு நினைச்சுட்டிருந்தேன்!
    நல்லா கெளப்புறாங்கய்யா பீதியை!

  2. அட நீங்க தானா அது!!!
    இன்னும் வேறெங்கெல்லாம் போய் என்ன ரவுசெல்லாம் பண்ணிருக்கீங்கன்னு ஒழுங்கா சொல்லிப்போடுங்க 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s