சமீபத்தில் பார்த்த படங்கள் :

தமிழ்ப்பட டிவிடிக்கள் இப்போது சல்லிசான விலையில் கிடைக்கின்றன.பார்க்குமிடமெல்லாம் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறேன். கடந்த மாதம், அந்தக் குவியலில் இருந்து தேர்ந்தெடுத்துப் பார்த்த சில படங்கள் :

நூற்றுக்கு நூறு (1967)/ தமிழ் : கே.பாலசந்தர் எடுத்த படங்களிலே, உருப்படியான சிலவற்றுள் ஒன்று. கணிதப் பேராசிரியர் ஜெய்சங்கர் மீது மூன்று இளம் பெண்கள் அபாண்டமாகக் குற்றம் சாட்டி ஜெயிலில் அடைக்க, அதில் இருந்து புத்திசாலித்தனமாகத் தப்பிப்பதே கதை. நாகேஷ் கூட சகமாணவராக , வெள்ளை பல்லி தோற்றத்திலே ஒட்டிக் கொண்டு வருபவர், ரொம்ப பழக்கமான முகம் போல இருக்கும். அவர், பின்னாளிலே பிரபலமாக ஒய்ஜி மகேந்திரன். ‘உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்’ பாடலை மட்டும் வைத்துக் கொண்டு மீத முள்ள பாடல்களை FFசெய்து விடலாம்.

ப்ரீதி ப்ரேமா ப்ரணயா (2003) / கன்னடம் : பார்த்ததும் பாய்ந்தோடி வாங்கியதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று : அனந்தநாக். இரண்டு : இயக்குனர் கவிதா லங்கேஷ். எளிமையானது போலத் தோன்றும் ஆனால், கொஞ்சம் ஆழமான, நுட்பமான உணர்வுகளைத் உசுப்பும் கதை. சீனியர் சிட்டிஸன்கள் அனந்த் நாக் மற்றும் பாரதி ஆகிய இருவருக்கிடையே தோன்றும் நட்பும், அதனால் பிள்ளைகளுக்கு ஏற்படும் தர்மசங்கடங்களைப் பற்றிய கதை. மூன்றம் தலைமுறையைச் சேர்ந்த டீனேஜ் பேரனும் பேத்தியும் ரொம்ப சிம்பிளாக எடுத்துக்கொண்டு, பெருசுகளுக்கு உதவி செய்வது கிளை சுவாரசியம். பாக்ஸ் ஆபீஸ் ரிசல்ட் பற்றி தெரியவில்லை.

கை கொடுத்த தெய்வம் (1964) / தமிழ் : படத்தை வாங்கியதற்குக் முக்கியமான மூன்று காரணங்கள். சாவித்திரி, சாவித்திரி மற்றும் சாவித்திரி. சில சமயங்களில் சிவாஜிகணேசன் உரசிய உயரங்களைக் கூட அசால்ட்டாக தாண்டிச் சென்று விடுகிறார் என்று தோன்றும். குழந்தைமை மாறாத பெண்ணான சாவித்திரியைச் சுற்றி நடக்கும் கதை. எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்து, எனக்குப் பிடித்த படங்களுள் ஒன்று. சாவித்திரியின் திருமணம் தொடர்பாக எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் நடிகர் திலகத்துக்கும் நடக்கும் உணர்ச்சிகரமான வாக்குவாதக் காட்சிதான், பின் நாட்களில், கே.எஸ்.கோபாலகிருஷ்னணின், தொடர் மெலொடிரமாக்களுக்கு அஸ்திவாரம் போட்டது என்று யாராவது சொன்னால், கேள்வி கேட்காமல் ஒத்துக் கொள்ளலாம்.

வெற்றி விழா (1987) / தமிழ்: லுட்லம் நாவலைச் சுட்டு எடுத்தால் எனக்கென்ன? படம் நல்லா இருக்கா அவ்ளோதான் :-). பிரபு , குஷ்பு, சின்னி ஜெயந்த் போன்ற பாத்திரங்களை கூடச் சேர்த்து மசாலா தாளித்துச் செய்யப்பட்ட ஜாலியான படம். லாஜிக் எல்லாம் பார்க்காமல் ஜாலியாகப் பார்க்கலாம். திரும்பப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தால் பிரபு, கமல் ஆகியோர் தோன்றும் இடங்களில் எல்லாம் ராஜாவின் பின்னணி இசையைக் கூர்ந்து கேளுங்கள். சொ(ர்க்)கம்….

ஆட்டா (2007) / தெலுங்கு: வில்லனை வித்தியாசமான முறையில் பழிவாங்கும் கதை. வில்லன் வீட்லியே டேரா அடித்து கூட இருந்தே குழிபறித்து, காதலியைக் கைப்பிடிக்கும், ஹீரோவாக பாய்ஸ், ஆய்த எழுத்து படங்களில் பப்பு வேகாமல், தெலுங்கு பக்கம் போன சித்தார்த். இவர் முதன் முறையாக ஆக்ஷன் ஹீரோவாக நடித்த படமாம். படத்தின் வேகம் மற்றும் இலியானாவுக்காக ஒரு தரம் பார்க்கலாம்.

சிஐடி சங்கர் (1970) / தமிழ்: வெளிநாட்டு அரசியல் தலைவர் ஒருவர் வருகிறார். தீவிரவாதக் கும்பல் ஒன்று,ஒரு பெண் கையில் டைம்பாம் வைத்த பூமாலை கொடுத்து, தலைவரை வரவேற்கும் இடத்தில் வைத்துக் கொல்கிறது. [ராஜீவ் காந்தி கொலைச் சம்பவம் நினைவுக்கு வருகிறதா? :-). ] இதைத் துப்பறிந்து கண்டுபிடிக்க வருகிறார் தென்னகத்து ஜேம்சுபாண்டு ஜெய்சங்கர். டிப்பிகல் மாடர்ன் தியேட்டர்ஸ் படம். ஆசுயூசுவல், இசை , வேதா. சுட்டபழம்.

கலியுகம் (1988) / தமிழ்: பள்ளி கல்லூரி நாட்களில் பார்த்து ஏதோ காரணத்துக்காக மனதில் தங்கிப் போய், பின்னர் வேறு சந்தர்ப்பங்களில் காணக் கிடைக்காத சில படங்களை, பிற்காலங்களின் பார்க்கும் போது சே.. இதைப் போயா அப்போது பார்த்தோம் என்று தோன்றும். கலியுகம் அந்த வகையிலானது. பார்த்த போது ஏன் பச்சக்கென்று மனசில் ஒட்டிக் கொண்டது என்பதற்கு விடை, சில நிமிடங்களிலேயே கிடைத்தது.

அமலா…. ஹூம்ம்ம்ம் :-).

பல வருட இடைவெளிக்குப் பிறகு, அமைதியான வேட்டி சட்டை வில்லராக நடித்த பி.எஸ்.வீரப்பா, படத்தின் saving grace. மொத்ததிலே குப்பை.

வறுமையின் நிறம் சிவப்பு (1980) / தமிழ்: ரங்கா ரங்கைய்யா எங்கே போனாலும் மனதுக்கு ரகசியம் சுமைதானே என்று நளினமாக ஆடிப்பாடும் ஸ்ரீதேவிக்காகவும், கட்டக்கடேசி காட்சியில், சில நிமிஷங்கள் மட்டுமே வந்து கலக்கும் தேங்காய் ஸ்ரீனிவாசனுக்காக மட்டுமே பார்த்தேன். எத்தனையாவது முறை என்று நினைவில்லை. இந்தாளுக்கு ( கே.பாலசந்தர் ) subtelty என்றால் என்ன என்றே தெரியாது என்று உறுதியாக முடிவுக்கு வரவைத்த படம். சாக்கடையில் இருந்து ஆப்பிளைப் பொறுக்கி, தின்ன முயல அதை நாலு பேர் , கமலிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு ஓடும் காட்சி ஒரு க்ளாசிக் உதாரணம்.

சிம்லா ஸ்பெஷல் (1982) / தமிழ்: நுனி மூக்கில் கண்ணாடி மாட்டிக் கொண்டு, அனாயசமாக நகைச்சுவை செய்யும் ஸ்ரீப்ரியாவுக்கு அர்ப்பணம். மௌலி, விசு தவிர, அந்த காலகட்டத்தின் மேடை நாடக நடிகர்கள் அனைவரும் தோன்றிய படம். வார்த்தைக்கு வார்த்தை ஜோக் அடிக்கும் க்ரேசி மோகன் டைப் வசனங்கள். சிம்பிளான கதை. வேறு வழியில்லாமல், நாடகத்துக்குக் கதையை வாங்க வரும் கமலஹாசன், சேகர் கோஷ்டியை, தேங்காய் ஸ்ரீனிவாசன் ( கௌரவ வேடம் ), ‘வித்து போச்சே, அய் வித்து போச்சே’ என்று கலாய்க்கும் காட்சி, குடுத்த துட்டுக்குப் போனஸ்.

ராஜமாணிக்கம் (2005) / மலையாளம்: இந்தப் படம் கேரளாவிலே சூப்பர் ஹிட்டாம்… சேரநாட்டு மக்களைப் புரிஞ்சுக்கவே முடியலைப்பா 🙂

யார் பையன் (1957) / தமிழ் : க்ளீன் காமெடி. சாவித்திரியை டாவடித்துக் கல்யாணம் கட்டிக் கொள்ள நினைக்கும் பொழுது, ஒரு குட்டிப்பையன், நீதான் என் அப்பா என்று ஜெமினி மாமா முன் வந்து நிற்க, குழப்பங்களைக் களைந்து சாவித்திரியைக் கைபிடிப்பதுதான் கதை. ஜெமினி கணேசனின் அம்மா அப்பாவாக என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம். சாவித்திரியை ஒரு தலையாகக் காதலிக்கும் டி.ஆர்.ராமச்சந்திரன். உன் அப்பா பேர் என்ன என்று யார் கேட்டாலும், அட்சர சுத்தமாக ‘ ஸ்ரீமான் சுந்தரராஜன்’ என்று சமய சந்தர்ப்பமில்லாமல் படுத்தி எடுக்கும் அந்த வடக்கத்திக் குழந்தை. கலாட்டாவுக்குக் கேக்கணுமா?கண்டசாலாவின் சுயநலம் பெரிதா பாடல், போனஸ் சந்தோஷம். தட்சிணாமூர்த்தியின் இசை.

இன்னும் ஏகத்துக்கு வாங்கிக் குவித்திருக்கிறேன். அவ்வப்போது, இது போல பட்டியல்கள் வரும்.

5 thoughts on “சமீபத்தில் பார்த்த படங்கள் :

 1. டிவியில் இன்றும் இந்திய தொல்லைக்காட்சியில் 100வது முறையாக நான் பார்க்கும் படங்கள்

  1. தில்லு முல்லு : அந்த Interview scene.. ஹா ஹா ஹா
  2. 16 வயதினிலே : தலைவர் : இது எப்டி இருக்கு?
  3. மூன்று முடிச்சு : வில்லத்தனமான தலைவர் Again
  4. தில்லானா மோகனாம்பாள் : நாகேஷ், பாலையா..ஹா ஹா ஹா
  5. கரகாட்டக்காரன்: Only for கவுண்டன் – செந்தில் காமெடி.. “நான் உங்கிட்ட எவ்ளோ குடுத்தேன்?” [சிரிப்பு வருதில்லா?]
  6. தில், தூள் மாதிரியான மசாலா படங்கள்
  7. கன்னத்தில் முத்தமிட்டால் : எனக்கு இந்தப் படத்தோட காமிரா, ஆர்ட் டைரக்ஷன், இசை, டப்பிங், நடிப்பு, கதை எல்லாமே பிடிக்கும்
  8. வடிவேலு- பார்த்திபன் காமெடி படங்கள்
  9. வெற்றிக்கொடி கட்டு, பொற்காலம் மாதிரியான சேரன் படங்கள்
  10. படையப்பா, பாட்ஷா, அண்ணாமலை, அருணாச்சலம், முத்து – Reason வேணுமா?

  short-ஆ சொல்லணும்னா டிவியில வர்ற எல்லா படங்களும்.. ஹி ஹி ஹி

 2. வெற்றி விழா (1987) / தமிழ்: லுட்லம் நாவலைச் சுட்டு எடுத்தால் எனக்கென்ன? படம் நல்லா இருக்கா அவ்ளோதான் 🙂
  >> Bourne Identity series பார்த்தப் பிறகுமா? நக்கல்தான் உங்களுக்கு. 🙂

  ராஜாவின் பின்னணி இசையைக் கூர்ந்து கேளுங்கள். சொ(ர்க்)கம்….
  >>உண்மை.

  டிப்பிகல் மாடர்ன் தியேட்டர்ஸ் படம். ஆசுயூசுவல், இசை , வேதா. சுட்டபழம்.
  >>வல்லவனுக்கு வல்லவன் படமும் பார்க்கலாம். அசோகன் ஹீரோ. ஜெமினி மர்மமான பாத்திரத்தில் நடித்திருப்பார். ஏதோ ஆங்கிலப் படத்தின் தழுவல் என்று நினக்கிறேன்.

  வறுமையின் நிறம் சிவப்பு (1980) /
  சாக்கடையில் இருந்து ஆப்பிளைப் பொறுக்கி, தின்ன முயல அதை நாலு பேர்
  >> அதைப் போல தன் தந்தையின் தம்புராவை விற்று அவருக்கு திராட்சைப் பழம் வாங்கி வரும் காட்சி.

  மிஸ்ஸியம்மா மற்றொரு க்ளாசிக் காமெடி.

 3. Prakash

  Thanks for the Mosar baer link.
  Seems to be content rich but poorly SEO optimized (or their marketing of this site is not up to the mark?)

  Anyway thanks for the link

  Regards
  Venkatramanan

 4. நூற்றுக்கு நூறு (1967)
  I think it came few years later, early 70s?
  யார் பையன் (1957)
  Is it Mahaganam Sriman Sundarajan Pillai.
  I think the boys’ role was played by Daisy
  Rani ( a girl child)
  We know that you are a great fan of Savithri.
  You need not prove it again and again :).

 5. //ஏன் பச்சக்கென்று மனசில் ஒட்டிக் கொண்டது என்பதற்கு விடை, சில நிமிடங்களிலேயே கிடைத்தது.

  அமலா…. ஹூம்ம்ம்ம் :-).//

  அட…. நம்மாளு ;))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s