peNNiyam, kaRpu & Kushbu

இரண்டு வருடங்களுக்கு முன்பு, குஷ்பு மேடம், பெண்களின் பாலியல் சுதந்திரம் பற்றி சொன்ன கருத்து,பலமான சர்ச்சைகளைக் கிளப்பியது. யாராச்சும் அசந்தர்ப்பமாக தும்மல் போட்டாலே, ஆளுக்காள் கண்டனக் குரல் கொடுக்கும் தமிழ் வலைப்பதிவு உலகம் மட்டும் சும்மா இருக்குமா? அந்தச் சமயத்திலே, வா.மணிகண்டன் பதிவில், புனைப்பெயரில் நான் இட்ட மறுமொழி ஒன்று இங்கே…

*********

மணிகண்டன் , உங்க வயசு உங்களைப் அப்படித்தான் பேச வைக்கும். வாழ்க்கை பற்றிய அனுபவம் இன்னும் கொஞ்சம் கிடைத்தால் உங்க பார்வை மாறும். உங்க பார்வையிலே, தமிழ்ப் பெண்கள் அனைவரும் கற்பின் கனலிகள், அதை இந்த வடக்கத்திப் பெண் வந்து குலைக்கிறார் என்கிற ஆவேசம் தான் தெரிகிறது. கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தீங்கன்னா, கற்புங்கறதே ஒரு தவறான கற்பிதம் னு புரியவரும். உடலளவிலே, ரெண்டு பேர் இணையும் பொழுது, அந்த இரண்டு பேர் மனசிலும் இருக்கிறவர்கள் யார் யார் என்று யாராவது கண்டுபிடிக்க முடியுமா? அப்படி வேற வேற நபர்கள் இருக்கும் பட்சத்தில், கணவனும் மனைவியும் கற்பொழுக்கத்துடன் தான் வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? முடியாது இல்லையா?

இப்ப குஷ்பூ சொன்ன விவகாரத்துக்கு வருவோம். திருமணத்துக்கு முன்பு, பெண்கள் உடலுறவு கொள்வதில் தவறில்லை. ஆனால், பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று அர்த்தம் வருகிற மாதிரி சொல்லி இருக்கிறார். நீங்க இந்த ஏமநோய்க்கு வருகிற விளம்பரங்களைப் பார்த்ததுண்டா? ஆணுறை அணிந்து கொண்டு பாதுகாப்பான உடலுறவு கொள்ளவும் என்பதுதான் அவர்கள் பிரச்சாரத்தின் சாராம்சம். யாருடன், எப்போது, திருமணத்துக்கு முன்பா, பின்பா என்பது பற்றி யாரும் ஆண்களுக்கு அறிவுறுத்துவதில்லை. குஷ்பு ஸ்தானத்தில் இருக்கும் ஆண் நடிகர், இளைஞர்கள், திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொள்வதில் தவறில்லை, ஆனால், ஜாக்கிரதையாக இருக்கவும் என்று சொல்லி இருந்தால், அதற்கு நம்மவர்களின் எதிர்வினை எப்படி இருந்திருக்கும்? முற்போக்காகச் சிந்திக்கிறார் என்று சொல்லி பாராட்டியிருப்போம். அப்படி வெளிப்படையாக இல்லாவிட்டால் கூட, இப்படி பொங்கி எழுந்திருக்க மாட்டோம். ஆம்பளைப் புள்ளைங்க வயசு காலத்திலே அப்படி இப்படின்னுதான் இருக்கும் என்று இப்போது கற்பொழுக்கம் பற்றி பேசும் பெருசுகள் கூட, ஆதரவாகப் பேசியிருக்கும். கொஞ்சம் தண்ணி ஊத்திக் கொடுத்தால், தான் செய்த மன்மதலீலைகளை எல்லாம் கூட அவிழ்த்துவிடும்.

18 வயது முடிந்த பெண், தன் வாழ்க்கையை தானே தீர்மானிக்கலாம் என்று சட்டம் சொல்கிறது. அந்தப் பெண், தனக்குப் பிடித்தவனுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தால், அதைத் தடுக்க நீங்கள் யார்? கற்பு, அது இது வென்று காரணம் சொல்லித் தடுத்தாலும், அதே காரணத்தைக் காட்டி, ஒரு ஆணைத் தடுக்க முடியுமா? இந்த நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்கள் மட்டுமல்லாமல், பெண்கள் தொடர்பான பலவிதமான குற்றங்களுக்கும், இப்படிப் பட்ட அழுத்தங்கள் தான் காரணம்.

திருமணத்துக்கு முன்பு, உடலுறவு கொண்டுவிட்டாள் என்பது, அவளைக் கட்டிக்கப் போறவன் படவேண்டிய கவலை. இதிலே என்ன இருக்கு? நான் கூட திருமணத்துக்கு முன்னாலே….இப்படித்தான் என்று புரிந்து கொள்கிறவர் கல்யாணம் பண்ணிக் கொள்கிறார். இல்லை எனக்கு பத்தரை மாத்து தங்கம் தான் வேண்டும் என்கிறவர் அதற்காகக் காத்திருந்து கல்யாணம் பண்ணிக் கொள்கிறார். இது சம்மந்தப் பட்ட ரெண்டு பேரோட பிரச்சனை. எல்லாரும் இப்படித்தான் இருக்கணும்னு சொல்ல நாம யார்?

அப்ப ஒழுக்கம், கட்டுப்பாடு, வரைமுறை… ந்னெல்லாம் கேப்பீங்க.. அதெல்லாம் ஒப்பிட்டுப் பாத்து கிடைக்கிற வார்த்தைங்க.. அதுக்கு சரியான வரையறை எல்லாம் கிடையாது. வங்காளத்துப் பக்கத்துலே ஒரு கிராமத்துலே, கணவன் இறந்து போனா, வாரிசுக்காக, அந்த விதவை, கணவனின் சகோதரியைக் கல்யாணம் செய்து கொள்ளணும்னு ஒரு சம்பிரதாயம் இருக்கு. நகர்புற நாகரீகத்துலே இருக்கிற நம்மாலே, இதை யோசிச்சுப் பாக்க முடியுமா? வங்காளம்ங்கிறது எங்க? இதோ பக்கத்துலே தான் இருக்கு…. எத்தனையோ கலாசாரத்துலேந்து மாறி மாறி, தலைமுறைகள் கடந்து வந்திருக்கிற நாம, அது போன்ற ஒரு கலாசாரத்தின் எச்ச சொச்சமாகக் கூட இருக்கலாமில்லையா? ஒரு குறைஞ்ச கால்கட்டத்தை வெச்சு, விழுமியங்களையும் மதிப்பீடுகளையும் வளத்துக்காதீங்க..

உங்களுக்கு இருக்கிற சுதந்திரங்களும், சலுகைகளும் உங்கள் வயதை ஒத்த ஒரு பெண்ணுக்கு இருக்கான்னு , உங்க நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க பாக்கலாம்….அவங்களுக்கு கிடைக்க வேண்டியது… கவனிக்க நாம தர வேண்டியது இல்லை… கிடைக்க வேண்டியது நிறைய… அதிலே பாலியல் சுதந்திரமும் ஒண்ணு….

அப்ப எல்லாப் பொம்பிளையும் அவுத்துப் போட்டுட்டு ஆடணுமான்னு கேக்காதீங்க. அவுத்துப் போட்டுட்டு ஆடணுமா வேண்டாமான்னு முடிவெடுக்கிற சுதந்திரத்தை அவங்ககிட்டவே விட்டுடுங்க

***********

One thought on “peNNiyam, kaRpu & Kushbu

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s