thamiz vs aalywood movies

2004 அக்டோபர் இலே சன்னாசி, ( அப்போது அவர் பெயர் தமிழ்ப்பாம்பு ) , அக்கரைப்படங்களையும் இக்கரைப்படங்களையும் ஒப்பிட்டு ஒரு மேட்டர் எழுதினார். அப்பதிவுக்கு மறுமொழியாக நான் எழுதியது.

***********

//வெகு புதிய ஆசிரியர்களையும் ஆங்கிலத்தில் எடுத்துவிடுகிறேன். கீழ்க்கண்ட ஆங்கில எழுத்தாளர்களுக்கு (வார்த்தை சிக்கவில்லை) இணையாக (வார்த்தை சரியில்லை, ஆனால் புரியுமென்று நினைக்கிறேன்) எழுதும்/எழுதிய எழுத்தாளர்கள் தமிழில் உள்ளார்களா?//

அப்படி இருந்தே ஆகவேண்டுமா?

//முதலில் அந்தப் படங்கள் மாதிரியாவது எடுக்கிறோமா என்று பார்க்கவேண்டும். அல்லது, பெர்க்மன், மக்மல்பாஃப், ஓஸு, ரெனே போன்ற இயக்குனர்களே, அல்லது அட்லீஸ்ட் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் காமெரான், ஜோயல் ஷூமாக்கர் அளவுகூடத் தமிழில் இல்லை//

அதல்லாம் சும்மா. எந்தப் படமாக இருந்தாலும், அதற்குரிய உழைப்பும், பார்க்க வருகின்ற ரசிகனைப் புரிந்து கொள்ளுதலும் இருந்தால் தான் படம் வெற்றி பெறும். கலைப்படங்கள் ஓடாது. மசாலாப் படங்கள் தான் ஓடும் என்பது பழைய கதை. நம்ம ஊர் ரசனை அப்படிப் பட்டது. மற்ற ஊர்களில் இருப்பது போன்ற தீம் based விருந்து எல்லாம் நம்ம ஊரில் கிடையாது. கல்யாணம், காதுகுத்தல், மஞ்சள் நீராட்டுவிழா, சீமந்தம், காரியம் ஆகிய எந்த விசேஷமாக இருந்தாலும், சாப்பாட்டு, இனிப்பு, பருப்பில் இருந்து துவங்கி, அவியல், கூட்டு, சாம்பார், பொரியல், குழம்பு, ரசம் , இடையில் பாயாசம் என்று வந்து இறுதியில் மோர் சாதம் எலுமிச்சை ஊறுகாயில் வந்து முடியும். இந்த மனநிலையைத்தான் நம் திரைப்படங்களும் பிரதிபலிக்கின்றன. நம் ரசிகனுக்கு எல்லாம் தேவை. குதித்து ஆடவேண்டும். கட்டிப்பிடித்து அழவேண்டும். ஹீரோ வேகமாக இங்கிலீஸில் பேசவேண்டும். அடங்காப்பிடாரி ஈரோயினியை கன்னத்தில் சப்சப் என்று அறையவேண்டும். தாலி செண்டிமெண்ட், கவுண்டமணி செந்தில் நகைச்சுவை என்று எல்லா ஐட்டங்களும் ஒரே படத்தில் அவனுக்கு வேண்டும். இல்லாவிட்டால் படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே சீட்டில் நெளிவான்.

ஒரே ஒரு போன் பூத்தில் மொத்த படத்தையும் வைத்து எடுத்த படம் சத்யம் சினிப்ளெக்ஸில் நூறுநாள் ஓடலாம். ஆனால், அது katie holmes நடித்த ( சாரி … ஹீரொ பேர் தெரியாது :-)ஆங்கிலப் படமாக இருக்கும். தமிழில் அது போல எடுத்தால் ‘ போடா வெண்ணே’ என்பார்கள். தமிழ்த் திரைப்படங்களும் ஆங்கிலத் திரைப்படங்களும் வெவ்வேறு மிருகங்கள். அவற்றை ஒப்பிடமுடியாது. இதே போல இருக்கிறது என்று அதையோ, அதைப் போல இருக்கிறது என்று இதையோ சொல்வதற்கு முன்பு, இரு படங்களுக்குமான ஒற்றுமை தற்செயலாக இருக்கலாமோ என்ற சிந்தனைக்கும் கொஞ்சம் மதிப்பு கொடுங்கள். நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள படங்கள், அவற்றில் பிறமொழி மூலங்கள் பற்றி அதிகமாக ஒன்றும் தெரியாது. பேபீஸ் டே அவுட் என்ற படத்த்தின் மையக் கருத்தை , ரொம்ப நாள் முன்பு வந்த ( தேவராஜ்-மோகன் இயக்கிய ) பூந்தளிர் என்ற படத்தில் இருந்துதான் சுட்டார்களா என்று கேட்டால், உங்களுக்கு கோபம் வருமா என்று தெரிந்து கொள்ள ஆசை 🙂

//இன்னொரு சமாச்சாரம். Speed என்று ஒரு படம் வந்தது. அதற்கு வெகு காலம் முன்பு, ‘மோனா’ விலோ ‘குங்குமச் சிமி’ழிலோ அதே கதையைப் படித்திருக்கிறேன்! எழுதியவர் பெயர் நினைவில்லை. அதே பஸ், அதே உத்தி! இதற்கு என்ன சொல்வது//

அந்தக் கதையை எழுதியவர், நம் சக வலைப்பதிவாளர் சத்யராஜ்குமார்

//ஆயுத எழுத்து ஒரு டப்பா படம். அதில் எந்த சந்தேகமுமில்லை. தெலுங்கில் கோடி ராமகிருஷ்ணா எடுத்திருக்கவேண்டிய படத்தைத் தமிழில் மணிரத்னம் எடுத்துவிட்டதாகக் கொள்ளலாம்//

சுந்தர.ராமசாமியை, சுந்தரராமசாமி என்று தப்பும் தவறுமாகக் குறிப்பிடுவதாக அடிக்கடி குறை பட்டுக் கொள்வார். பெயரைக் சரியாக சொல்வது அவருக்கு நாம் காட்டும் மரியாதையைக் குறிப்பிடுகிறது . மணிரத்னமும் அது போல நினைக்கலாம். ஆதலால் இனிமேல், ஆயுத எழுத்தை, ஆய்த எழுத்து என்று குறிப்பிடுங்கள்.

//’வந்தனம்’ படத்தின் க்ளைமாக்ஸையும், அதே படத்தின் தெலுங்கு வடிவமான (தெலுங்கிலும் ‘வந்தனம்’ தான்) நாகார்ஜூனா படத்தின் க்ளைமாக்ஸையும் பார்க்கவும்! வித்தியாசம் தெரியும்//

தெலுங்கில் அந்தப் படத்தின் பெயர் நிர்ணயம்.சொன்னனே, நம் ரசிகனின் மனநிலை பற்றி… அது தெலுங்கு ரசிகனுக்கும் பொருந்தும். ‘காக்க காக்க’ படத்தில் ஜோதிகாவை சாக அடித்த அதே கெளதம் தான், அதன் தெலுங்குப் பதிப்பில் ( கர்ஷனா) க்ளைமாக்ஸில், ஈரோ, ஈரோயினியை சேர்த்து வைத்து சுபமாக முடித்து வைத்தார். பின்னே…வெங்கடேசு ரசிகர் மன்றம், கொதித்து எழுந்தால், நீங்களா வந்து தாங்கிப் பிடிப்பீர்கள் 🙂 ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s