Rajini Fans, Japan & Badri

மூன்று வருடங்களுக்கு முன்பு, ரஜினி ரசிகர்கள் பற்றி பத்ரி, கடுமையாகக் கிண்டல் செய்து போட்ட நக்கல் பதிவுக்கு வெகுண்டெழுந்து எழுதியது.

**********

ஜப்பான் காரன் பைத்தியம் புடிச்சு அலைஞ்சா இவர் என்னங்க செய்வார்? பிற்காலத்துலே, அவர், மற்ற பலகாரணங்களால, இந்த சோ-கால்ட் மினிமம் கியாரண்டி படங்களிலே நடிச்சார்தான் என்றாலும் , ஆரம்ப காலங்களிலே நீங்க சொன்ன ரெண்டு படங்கள் தவிரவும் வேற நல்ல படங்களிலே நடிச்சிருக்கிறார். அந்த ‘அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்’ ( தில்லுமுல்லு) கேரக்டரை அவரைத் தவிர வேற யாரும் சிறப்பா செஞ்சிருக்க முடியாது. தப்புத் தாளங்கள், மூன்று முடிச்சு, அவள் அப்படித்தான், கை கொடுக்கும் கை, நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது, கதா சங்கமா ( கன்னடம்) . புவனா ஒரு கேள்விக்குறி, ஜானி, அவர்கள், அப்படின்னு இன்னும் கொஞ்சம் படங்களையும் சேர்த்துக்கலாம், தப்பில்லை. நாம இப்ப நிறைய பார்க்கிறோம். நிறைய படிக்கிறோம். நிறைய விஷயங்கள் தெரியுது. சுமார் அல்லது மோசம்னு இப்ப நினைக்கிற படங்கள் எல்லாம், அவை வந்த காலகட்டத்துலே, நாம பார்த்த போது, ஏதோ ஒரு வகையிலே நம்ம ரசனைத் தேவைகளை பூர்த்தி செஞ்சது இல்லையா? அதுதான் முக்கியம்.

நல்ல படம், நல்லா இல்லாத படம், நல்ல நடிப்பு, நல்லா இல்லாத நடிப்பு அப்படின்னு முடிவுக்கு வருவது எல்லாம்,. ஒவ்வொருத்தரோட ரசனை, படிப்பு, அறிவு ஆகியவற்றின் பின்புலத்தால வருவது. விருப்பம் இருக்கிறவர்கள் ரசனையை உசத்திக் கொள்கிறார்கள். இல்லாதவர்கள் அங்கேயே நிற்கிறார்கள். ரஜினிகாந்த் படத்தின் முதல் காட்சிக்கு,வந்து அவர் திரையில் தோன்றிய உடன் பூமாரி பொழிந்து ஆரவாரம் செய்யும் ஒரு front bencher இன் ரசனையையும், சத்யம் தியேட்டரில் அட்வான்ஸ் புக்கிங் செய்து ஹாரிபாட்டர் படம் பார்க்கிற ஒருத்தனுடைய ரசனையையும் ஒப்பிட்டு, யாருடைய ரசனை உசந்தது அல்லது தாழ்ந்தது என்று சொல்ல முடியுமா? ரஜினிகாந்த் படத்தைப் பார்க்கிற , படம் முடிந்ததும், அத்துடன் மறந்துவிட்டு, ‘தலைவரின்’ அடுத்த படம் வரும் வரை, ஆகவேண்டிய காரியத்தை பார்க்கப் புறப்பட்டுவிடுகிறான். ஆனால், நாம் தான் இதை அப்படியே நினைவில் வைத்திருந்து, ரசிக மனப்பான்மை, உளவியல் காரணங்களை எல்லாம் அனலைஸ் செய்து, இணையம் வரை இழுத்து வந்து ஒரு விவாதப் பொருளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டிற்கு இது போன்ற சினிமா ஆசாமிகளின் மீதான பித்து புதுசில்லை. எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்தில் துவங்கி, கே.ஆர்.ராமசாமி, பி.யு.சின்னப்பா, டி..ஆர்.மகாலிங்கம், சிவாஜி கணேசன், எம்ஜிஆர், கமலஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், குஷ்பூ, விஜய் வரை தொடர்கிறது. தென்னிந்தியாவில், இந்த போக்கினை அதிகமாகக் காணலாம். இது தவறுதான். ஆனால், இது அரசியல் வாதிகளின் லஞ்சம் போல, அரசு ஊழியர்களின் மெத்தனம் போல, திரைப்படங்களின் திருட்டு வீசிடி போல, நகரப் பேருந்து நிறுத்தங்களில் நடக்கும் ஈவ் டீசிங் போல, டீக்கடைகளில் இருக்கும் கசங்கிய தினத்தந்தி போல தமிழ்நாட்டின் தவிர்க்கமுடியா கலாசாரம். இதை நான் வேதனையுடன் தான் சொல்கிறேன்.

நல்ல சொக்காய் பாண்ட்டு போட்டுக் கொண்டு, தொழில் அது இது என்று என்ன கெரவத்தையோ செய்து கொண்டிருந்தாலும், என் கிட்ட வந்து கொஞ்சம் தோலுரித்துப் பார்த்தால், ரசிகர் மன்றங்களில் எல்லாம் ஈடுபடாத ஒரு ரஜினிகாந்தின் விசிறிதான் உள்ள இருப்பான். ” அப்படி என்னத்தைத் தான் கண்டார்கள் ரஜினி படத்தில்? “னு கேட்டு இருக்கீங்க. எனக்கும் தெரிலீங்க. ஆனா, குடுத்த துட்டுக்கு ·புல் என்டர்டெயின்மெண்ட். என்ன, பாபால தான் கொஞ்சம் சிலிப் ஆயிருச்சு. சரி பண்ணிக்கிடலாம்.

ரஜினி மீது அபிமானம் இருக்கிறவங்க ‘நட்டு’ கழண்டவங்க அப்படிங்கற மாதிரி என்னமோ சொல்லி இருந்தீங்க. அங்க தான் கொஞ்சம் போல இடிச்சுது. அதான் இத்தனை நீளமான பதில்.

அன்புடன்
பிரகாஷ்

One thought on “Rajini Fans, Japan & Badri

  1. பிரகாஷ்
    சொல்ல நிறைய விஷயம் இருந்தாலும், இப்போதெல்லாம் எதை சொல்லவும் ரொமப யோசிக்க வேண்டிரிஉக்கிறது. அதில் ஆர்வமே போய்விடுகிறது.
    ஒரு காலத்தில் என் சகோதரி மகனுக்கு அதிக காதுவலியும் சுரமும் வரும்போது அவன் அழுகையை நிறுத்த என் வீட்டு டிவிடியில் முத்து ஓடிக்கொண்டிருந்ததுண்டு. அதன்பிறகு எப்போது வீடியோ எடுக்க போனாலும் 3 வயது குழந்தை ரசினியின் புகைப்படத்தை மட்டும் பார்த்துவிட்டு முத்துமாமா, முத்துமாமா என்று அதை எடுக்க பிடிவாதம் பிடித்ததும் உண்டு. அதேபோல தமிழ் அதிக தெரியாத என் மகன் கூட ஷாருக்கான் அடுத்தபடி ரஜினி படங்களை சப்டைட்டிலுடன் பார்க்க விருப்பம் காட்டுவான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s