Tamil Blogs, a forecast

பொதுவாக வலைப்பதிவு எழுதும் போது, விஷயம் கிடைக்காமல் சரக்கு தீர்ந்து போவது இயற்கைதான். இந்த வெறுமை, ‘ நீண்ட நாட்களுக்கு எதையும் எழுதாமல்’ இருந்து விட்டு மீண்டும் எழுதத் திரும்பும் போது அதிகமானது போலத் தோன்றும். போஸ்டன் பாலாஜி போல கண்டதையும் வாசித்து, கிடைக்கிற சுட்டிகளில் உருப்படியானவற்றை அரைத்து சீரணம் செய்கிற கெப்பாசிட்டி இருந்தாலாவது வலையுலகில் காலந்தள்ளலாம். அதற்கும் கொடுப்பினை இல்லை என்கிற போது, கிடைத்த ஐடியா இது. சில பல நண்பர்களும் சொல்லி இருக்கிறார்கள், நான் என் பதிவில் எழுதியதை விட, பிறர் வீட்டு மறுமொழிப் பெட்டியில் எழுதியதே அதிகமாக இருக்கும், என்று. இன்னும் சில நாட்களுக்கு, அப்படிப்பட்ட மறுமொழிகள், ( ஒற்றை / இருவரி மறுமொழிகள் தவிர்த்து ) இங்கே தொடர்ந்து பதியப்படும். மூலப்பதிவையும் சேர்த்து வைத்து வாசித்தால் தான் பதிவு விளங்கும். அப்படிச் செய்யாமல் கோணங்கி நாவல் போல குழப்பியடிக்கிறது என்று குறை சொல்லவேண்டாம். நான் எழுதியதை எல்லாம் ஒரே இடத்தில் சேகரிக்கும் முயற்சி. அவ்வளவே.

என்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், வேறு சில பெயர்களில் எழுதிய சில மறுமொழிகளும் இடம் பெறும் 🙂

*************

இனி வரும் காலத்தில் தமிழ் வலைப்பதிவுகளின் போக்கு எப்படி இருக்கும் என்று மூன்றாண்டுகளுக்கு முன்பு அகரவலை, தன் பதிவில் கேள்வி எழுப்பிய போது அளித்த பின்னூட்டம் இது.

வலைப்பதிவுகளின் எண்ணிக்கை அதிகமாகும். ஆனால், ஆரம்பித்த ஜோரில், ஒன்று இரண்டு போஸ்ட் செய்துவிட்டு, தலைமறைவாகிவிடுவார்கள். அப்போது, தமிழ் மணம் போன்ற திரட்டிகள் வலைப்பதிவுகள் ரேட்டிங் போடலாம். ரேட்டிங்கில் இடம் கிடைக்காதவர்கள், தமிழ்மணம் போல புதிய திரட்டிகளைச் செய்ய முற்படுவார்கள். வலைப்பதிகளைத் துவக்கும் போதே, என்ன genre என்பதையும் குறிப்பிட வசதி ஏற்படும். இலக்கியம்/கலை/சமூகம்/அறிவியல் என்று niche blog aggregators வரும். இப்போது, கோஷ்டியாக செயப்லடுகின்ற வலைப்பதிவாளர்கள், அனைவரும் சிதறிப்போவார்கள். உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை, வலைப்பதிவுகளில் சொந்தக் கதை, சோகக்கதைகள் அதிகமாகும். அழகியல் விஷயங்கள் பின்னுக்குப் போய், தகவல் சார்ந்த விஷயங்கள், சூடான செய்திகள், விவாதங்கள் தான் முக்கிய விஷயங்களாக இருக்கும். கதை, கவிதை, போன்ற இலக்கிய வஸ்த்துக்களுக்கு, வலைப்பதிவில் அதிக வரவேற்பு இருக்காது. வலைப்பதிவுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் இலக்கியவாதிகளும், உட்-பீ இலக்கியவாதிகளும், இதிலிருந்து கழட்டிக் கொள்ளுவார்கள். அப்படியே இலக்கியம் இருந்தாலும், இலக்கிய சர்ச்சைகளும், குடுமிபிடி சண்டைகளும் மட்டுமே நடைபெறும். வலைப்பதிகளின் pioneers எல்லாம், ஹ¥ம்ம் நாங்கல்லாம் அந்தக் காலத்துலே … என்று நாஸ்டால்ஜியா பயணம் போவார்கள். கையெழுத்துப் பத்திரிக்கைகளாக இருந்த வலைப்பதிவுகள் எல்லாம் தினமலர் குமுதம் ரேஞ்சுக்குப் போய் விட்டது என்று 2009 இலே, சுஜாதா ‘கற்றதும் பெற்றதும்’ (பாகம் எட்டு) கட்டுரையில் எழுதுவார்.

***********

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s