satham pOdathEy

satham.jpg

தைரியமாப் படிங்க… No Spoilers.

ஷேக்ஸ்பியரின் கதை, ஹிட்ச்காக் ஸ்டைலில் சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும் இந்தப் படம் என்று, வஸந்த் சில இடங்களில் சொல்லி இருந்தார். நான் ஷேக்ஸ்பியர் கதைகளையும் படித்ததில்லை, ஹிட்ச்காக் படங்களையும் பார்த்ததில்லை. ஆகவே, வஸந்த் சொன்னது எவ்வளவு தூரம் உண்மை என்று படம் பார்த்த பின்பும் தெரியவில்லை.

இது ஒரு மல்ட்டிபிள்க்ஸ் திரைப்படம். மூன்று முக்கியமான கதாபாத்திரங்களைச் சுற்றிப் பின்னப்பட்ட திரைக்கதை.

நாயகன் ரவிச்சந்திரன் ( பிருத்விராஜ் ) மெலிதான நகைச்சுவை உணர்ச்சியும், புத்திசாலித்தனமும் கொண்டவன், ஒரு மென்பொருளாளன். சுந்தர.ராமசாமி , அசோகமித்திரனைப் படிப்பவன். கணவன் ஆண்மை இல்லாதவன்-கம்-மனநோயாளி என்று தெரிந்து விவாகரத்து செய்த இளம்பெண் பானுவை ( பத்மபிரியா) , விரும்பி மணம் புரிந்தவன். வழக்கமான வஸந்த் படக் கதாநாயகர்கள் போலவே அழகானவன்.

ரத்னவேலு ( நிதின் சத்யா ), மதிகெட்டவனா அல்லது மனம் பிறழ்ந்தவனா என்று ஊகிக்க முடியாத கேரக்டர். குடிப்பழக்கத்தினால் ஆண்மையை இழந்து, அதை மறைத்துத் திருமணம் செய்யும் போது கெட்டவனாக இருப்பவன், விஷயம் விவாகரத்து வரை சென்று, பின் வேறு திருமணத்தில் செட்டில் ஆகும் பானுவை, க்ரூரமாக தண்டிக்க முனையும் போது மனநோயாளியாகக் காட்டப்படுகிறான்.

இந்த இருவரையும் தூக்கிச் சாப்பிடுபவர் பானுவாக நடிக்கும் பத்மபிரியா. தன்னுடைய சம்பளத்தில் பாதியை டப்பிங் குரல் தந்தவருக்குக் கொடுத்துவிடலாம். தாம்பத்திய உறவு பற்றி கணவனுக்கு நினைவூட்டும் போதும், மருத்துவரிடம் ( சுகாசினி ) பிரச்சனையை விவரிக்கும் இடங்களிலும் நடிப்பு ஏ க்ளாஸ். புதிதாகத் திருமணமான பெண், குழந்தையைத் தத்து எடுப்பவர், ஏமாற்றப்படும் இளம் மனைவி, மறுமணம் செய்து கொள்பவர், மனநோயாளியிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படுபவர் என்று ஒரே கதாபாத்திரத்தில் பல்வேறு பரிமாணங்களைக் காட்டுகிறார்.

முதல் பாதி ஜெட்வேகத்தில் பறந்தாலும், அடுத்த பகுதி கொஞ்சம் தொங்குகிறது. என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்காமல், இன்சூரன்ஸ் அது இது என்று சுற்றிக் கொண்டு இருக்கும் கதாநாயகன் மீது எரிச்சல் வந்தாலும், க்ளைமாஸில் அதை பேலன்ஸ் செய்து விடுகிறார்.

இந்த மாதிரி திரில்லர் படங்களில், எதற்காகப் பாட்டு என்றே புரியவில்லை. இருந்தாலும் பாடல்கள் கேட்க நன்றாகத்தான் இருக்கின்றன. முதல் பாதி வரை அடுத்து என்ன நடக்கும் என்பதை ஊகிக்கவே முடியவில்லை. பிற்பகுதியில், பானுவை , ரத்னவேலு கடத்தியதும் அடச்சே என்றாகி விடுகிறது. ஜூலிகண்பதி படம் வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது.

நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.

5 thoughts on “satham pOdathEy

  1. பத்மப்ரியா சொந்தக் குரலில் பேசி நடிப்பதாக சன் டிவி ‘உங்கள் சாய்ஸி’ல் சொல்லியிருந்தார்

  2. பத்மப்ரியாவுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் அனுஹாசனா? நான் படம் பார்க்கவில்லை. ராஜ்டிவியில் திரை விமர்சனம் 10 நிமிடம் பார்த்தேன். அதில் பத்மப்ரியா பேசிய இரண்டு வரிகள் கேட்க நேர்ந்தது. படம் பார்த்து observe செய்தவர்கள் சொல்லலாம்

  3. பாலா : இல்லை. பத்மப்ரியா நிகழ்ச்சி நானும் பார்த்தேன்.காஃபி வித் அனு நிகழ்ச்சியிலும் கேட்டிருக்கிறேன். அந்தக் குரலுக்கும் படத்தில் கேட்ட குரலுக்கும் சம்மந்தமே இல்லை. 🙂

    சதீஷ் : ரொம்பல்லாம் ஒண்ணும் சொல்லலை :-). இதைத் தாண்டியும் படத்தில் ரசிக்க விஷயங்கள் இருக்கின்றன.

    ப்ளாகேஸ்வரி : எக்ஸாக்ட்லி…கொஞ்ச நேரத்துக்கு எனக்கும் அனுஹாசன் போலத்தான் தோன்றியது. போகக் போக அவர் இல்லை என்று தெரிந்துவிட்டது. கடேசில க்ரெடிட்ஸ் ஓடும் போது பார்க்கவேண்டும் என்று நினைத்து மறந்து விட்டேன் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s