Blowing my own trumpet

வெங்கட்டின் அழைப்பை ஏற்று….

நானே என்னைப் பற்றிப் பெருமையாக நினைக்கும் எட்டு விஷயங்கள்.

1. நாங்கள் தொழில் தொடங்கிய புதிதில் பணத்துக்காக நிறைய அலைந்து கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் இழுத்து மூடிவிட்டு, வேறு வேலைக்குச் செல்லலமா என்று யோசித்துக் கொண்டே, அதே சமயம், சில்லறைக்காக பிற நிறுவனங்களுக்குச் சில்லறையாக வேலை செய்து கொண்டிருந்தோம். என்ன மாதிரி வேலை என்றால், அந்த காலகட்டத்தில், [2000- 2001 ஆண்டு], புதிதாக நிறைய இணையத்தளங்கள் வந்து கொண்டிருந்தன. அந்த இணையத்தளங்களுக்குத் தேவையான தரவுகளைச் சேகரித்து, சேமித்துக், முறைப்படுத்தித் தந்து, அதற்கேற்றாற் போல கூலி வாங்கிக் கொள்ளுதல். அதே சமயம் திட்ட அறிக்கையுடன் வங்கிகள் , ப்ரைவேட் இன்வெஸ்டர்கள் ஆகியோரையும் முற்றுகை இட்டுக் கொண்டிருந்தோம்.

அப்போது சாலிடேர் நிறுவனம், டிஜிவிஷன் என்ற பெயரில் ஒரு நிறுவனம் ஒன்றைத் துவக்கி, ஏகப்பட்ட முதலீட்டுடன், ஒரு மெகா இணையத்தளம் ஒன்றை நிறுவ முயற்சி செய்து கொண்டிருந்தது. அடையாறில் புதிதாக அலுவலகம் ஒன்றைத் திறந்து, மானாவாரியாக ஆட்களை வேலைக்கு எடுத்துக் கொண்டிருந்தது. சில ரெப்ஃரர்ன்ஸ்கள் மூலமாக அந்த நிறுவனத்தின் சீஈஓ வைப் பார்க்க ஏற்பாடு ஆகியிருந்தது, எங்கள் திட்டத்தின் முதலீட்டுக்காக.

அன்று அந்த அலுவலகத்தின் ஒரு அறையில் நானும் என் பார்ட்னரும் காத்திருந்த போது, ஒரு நாற்பத்தைந்து வயது மாது, கணிப்பொறியில் ரொம்ப நேரமாக முட்டிக் கொண்டிருந்தார். எட்டிப் பார்த்தோம்.

அவர் முட்டிக் கொண்டிருந்தது மைக்ரோசாஃப்ட் ஆக்ஸ்ஸ் தரவுத்தளம். எளிமையான filter , sort போன்றவற்றைக் கூட எப்படி உபயோகிப்பது என்று தெரியாமல், குழம்பிக் கொண்டிருந்தார். உதவி செய்யலாமா என்று கை துறுதுறுவென்றாலும், எதற்கு வம்பு என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், கிட்டே போய், நாங்க வேணா ஹெல்ப் செய்யட்டுமா என்று கேட்க, நாங்கள் யார், எதற்காக வந்திருக்கிறோம் என்றே தெரியாமல், சரி என்று சொல்லிவிட்டு, சுமார் இரண்டாயிரம் முகவரிகள் கொண்ட அந்த தரவுத் தளத்திலிருந்து, சென்னை முகவரிகளை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்து, மெய்ல்மெர்ஜ் மூலமாக அந்த முகவரிகளுக்கு மட்டும் கடிதம் அனுப்ப முயற்சி செய்வதாகச் சொன்னார். மிக எளிமையான வேலை. அரைமணி நேரத்தில் அதைச் செய்துவிட்டு, கூடவே, மைக்ரோசாஃப்ட் ஆக்ச்ஸ்சின் சில அடிப்படைகளைக் கற்றுக் கொடுத்தோம். ஆச்சர்யத்துடன் அவற்றைக் கற்றுக் கொண்டார். தானே சிலவற்றைச் செய்து பார்த்தார். பிறகுதான், அவர் நாங்கள் யார் என்றும், எதற்காக வந்திருக்கிறோம் என்று கேட்டார்.

சொன்னோம். அவர் சிரித்துக் கொண்டே, நான் தான் அந்த நீங்க பார்க்க வந்த அந்த சீஈஓ என்று கைகுலுக்கிவிட்டு தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றார்.

எட்டுமாதங்கள்.

பணம் கிடைத்ததா, பிசினஸ் வளர்ந்தா என்பதல்ல பிரச்சனை. அந்த எட்டுமாதங்களில் நாங்கள் கற்றுகொண்ட சங்கதிகளை, எந்த டாப் பிசினஸ் ஸ்கூலிலும், எவ்வளவு துட்டு செலவழித்தாலும் கற்றுக் கொண்டிருக்க முடியாது.

2. சுஜாதா எனக்கு எழுதிய ஒரு கடிதம்.

3. நான் நடத்தும் நிறுவனம் தொடர்பாக என்னைப் பற்றி ஆனந்த விகடனில் வந்த கட்டுரை.

4. படிப்பு விஷயத்தில் எப்போதுமே சுமாரான நான், கல்லூரிப் பட்டப்படிப்பில், கணிதத்தில் இரண்டு செமஸ்டர்களிலும் சென்டம் அடித்தது.

5. நினைவாற்றல்.

6. நினைவு தெரிந்த அல்லது இசையை உணர முடிந்த நாளாய் இளையராஜாவின் தீவிர ரசிகனாக இருப்பது.

7. முதன் முதலாக கல்கியிலே வெளிவந்த என் கட்டுரை.

8. வாசிக்கச் சுவாரசியமான அளவிலே, ஓரளவுக்கேனும் எழுத முடிவது.

இனி ஆட்டத்துக்கு அழைக்கும் எட்டு பேர்.

1. பிரேமலதா
2. விக்னேஷ்
3. சிவா
4. ஜெயஸ்ரீ
5. பாலாஜி
6. சாத்தான்
7. ப்ரியா
8. சேவியர்

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

23 thoughts on “Blowing my own trumpet

 1. //பணம் கிடைத்ததா, பிசினஸ் வளர்ந்தா என்பதல்ல பிரச்சனை. அந்த எட்டுமாதங்களில் நாங்கள் கற்றுகொண்ட சங்கதிகளை, எந்த டாப் பிசினஸ் ஸ்கூலிலும், எவ்வளவு துட்டு செலவழித்தாலும் கற்றுக் கொண்டிருக்க முடியாது.//

  இத உங்க பதிவுல எழுதினா நாஙளும் கத்துக்குவம்ல? இல்ல, அதுக்கு course fee கட்டணுமா 🙂

 2. அண்ணே நீங்க இவ்வளவு பெரிய ஆள்ன்னு தெரியாம போச்சு. உங்க தொழில் பற்றி இன்றைக்குத் தான் தெரிந்து கொண்டேன். மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

 3. பிரகாஷ்
  போன வாரம் அம்மாவிடம் உங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அபோது நாணயம் விகடனில் வந்த கட்டுரை பற்றி பேசியபோது அன்புவின் பதிவை தேடிக்கொண்டிருந்தேன். சுட்டிக்கு நன்றி.
  சுருக்கமான அழகான பதிவு.
  முட்டி மோதி தெரிந்துகொள்ளும் பிஸினெச் நுட்பங்கள் கல்லூரிகளில் கற்று தருவதில்லை, அதே ஆர்வத்துடன், டென்ஷனுடன் (வாடிக்கையாளரை குஷிப்படுத்தும்). இப்போதெல்லாம் fieldwork இருந்தாலும், வேலையில் கற்றுக்கொள்வது இன்னும் சிறந்தது. அனுபவங்களை பதிவில் எழுதுங்களேன்.

 4. கொஞ்சம் டைம் ப்ளீஸ். மேட்டருங்களையும் சொல்லிட்டு அநாமதேயத்தையும் காப்பாத்திக்கணும்ல…

 5. //premalatha… unggaLai tag paNNiyirukkeN… //

  காலேலையே பார்த்துட்டேன். நாலுதடவை பின்னூட்டம் தட்டச்சிட்டு டெலீட் பண்ணிட்டு போயிட்டேன்.

  //( ungga tag – ai honour paNNAtha pazahaya kovaththai ellam manasile vechukkama) en tag ai konjam haanar paNNungga //

  அடப்பாவி, அப்போ என் tag அவ்ளோதானா!. 🙂

  இன்னோரு tag இருக்கு என்கிட்ட. 😉

  உங்க சாதனைகளில் நிறய எனக்கு ஏற்கனவே தெரியும், சிலபல details தவிர. அதனால ஆச்சரியமாயில்லை. ஆனா business ங்கிறது மட்டும் இன்னும் பிரமிப்பாத்தான் இருக்கு. ஒரு series எழுதுங்களேன், நாங்கள்லாம் ஏதோ தெரிஞ்சுக்கிறோம்.

 6. […] Posted by பிரேமலதா on June 19th, 2007 பிரகாஷ் தன் சாதனை எப்படி தொடங்கியது, எப்படி தொடங்கியதே சாதனையாயானது என்று நினைவுகூர்கிறார். புதிதாக நிறைய இணையத்தளங்கள் வந்து கொ… […]

 7. அழைப்புக்கு நன்றி பிரகாஷ். சிறிது கால அவகாசம் மட்டும் தேவை. நன்றி

  Btw நீங்க இவ்வளவு பெரிய ஆள்னு தெரியவே தெரியாது பாஸ். தலைவரே(sujatha) பாராட்டும் தலைக்கு hats off!!!!

 8. ரவிசங்கர் : ரெண்டு மூணு தரம் முயற்சி செஞ்சு பார்த்தேன். சரியா வரலை… திரும்பவும் முயற்சி செய்கிறேன் 🙂

  பத்மா : நன்றி. அந்த கட்டுரையை நினைவு வைத்து தேடினீர்கள் என்று தெரிந்ததே ஜில்லென்று இருக்கிறது 🙂

  சாத்தான் : எழுதுங்க.. அடையாளம் காட்டிக் கொள்ளாமல் அதே சமயம் செய்த சாதனைகள் பற்றி எழுதணும் என்பது உங்களுக்கு சிரமமா என்ன? நேரம் எடுத்துக்கோங்க.. ஆனால் எழுதுங்க..

  பிரேமலதா : ஓஹோ.. பதிலுக்கு பதிலா? ஒரு நாள் டைம் குடுப்பீங்களா? அவசியம் எழுதறேன்.

  சிவராமன், சேவியர் : நன்றி.

 9. பிரகாஷ்,

  Tagகிட்டதற்கு நன்றி .. நாளைக்குள் பதிவிடுகிறேன் ..

 10. இப்போதுதான் முழுசாகப் படித்தேன். என்னைக் கேட்டால் நாலாவது, எட்டாவது ஐட்டங்கள்தான் டாப்.

 11. இரண்டு வருடங்கள் முன்பே ஆ.வி.யில் வந்திருந்த பிரகாஷ் நீங்கதானா? அப்பவே வித்யாசமான புதுமையான தொழில் என்று நண்பர்களிடம் வியந்தேன். அது தெரியாமலே ரெண்டு வருடமா உங்க பதிவு படிச்சிட்டும் இருக்கேன். ஏதோ ITES என்று் தெரியும். ச்செந்தில் அவர்களுடைய பிளாகில் என்ட்ர்பெர்னெர்ஷிப் Enterpreneurshipகுறித்து வந்ததை படித்தபோதும் புரியவில்லை.
  வாழ்த்துக்க்கள் நண்பரே!
  Vibin

 12. prakash, any eight facts or do they have to be something I am proud of? the rule says any eight facts. and in balaji’s post it specifically says that any random facts.
  I have done eight things I am proud of, but not posting yet. if it is any eight facts i would like to list out normal eight facts. I do not want to be the abnormal girl u c. 🙂

 13. உங்கள் (சுய)பெருமைகளை பார்த்து தன்நம்பிக்கை வந்தது,உங்களை பற்றிய ஆன்ந்த விகடன் கட்டுரை பார்ரத்ததும் வெற்றியே வந்ததாய் உனற்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s